என் மலர்
அரியலூர்
- அரியலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க திட்டம்
- மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தகவல்
அரியலூர்,
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட, கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா இது குறித்து கூறும்போது, அரியலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டிற்கு 7,57,000 நடவுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரியலூர் வனக்கோட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலமாக 4,28,034 (போக்கு செடிகள் உட்பட) மூன்று நாற்றங்கள்களில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2023-24 ஆண்டு நடவு பணிகள் காப்பு காடுகள், அரசு பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள் வளாகம், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் வளாகம், தொழிற்சாலைகள் வளாகம், மருத்துவமனை வளாகங்கள், விவசாயிகள் நிலங்கள் போன்ற பல்வேறு இடங்களில் வனத்துறை மூலம் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று அவர் கூறினார்.
- பிளாஸ்டிக்கால் ஆண்டுக்கு 10 லட்சம் உயிரினங்கள் உயிரிழப்பு
- அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் அறிவுறுத்தல்
அரியலூர்,
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அகல்யா கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது.உலகம் முழுவதும் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதால் உயிரினங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன . இந்நாளில் நாம் ஒவ்வொருவரும் நெகிழி பொருள்கள் இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும். தற்போது 50,000 கோடி நெகிழி பைகள் பயன்படுத்தப்படுகின்றன .ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் பொருள்கள் கடலில் மாசுபடுத்துகின்றன. ஆண்டொன்றுக்கு 10 லட்சம் உயிரினங்கள் நெகிழிப் பொருள்களால் இறந்து விடுகின்றன .பாட்டிலில் குடிக்கின்ற குடிநீரிலும், குழாய்களில் வருகின்ற குடிநீரிலும் நெகிழி துகள்கள் உள்ளன .எனவே ஒவ்வொரு மனிதனும் இனி வாழ்நாளில் நெகிழிப் பொருள்களை தவிர்க்க வேண்டும். மாணவர்களும், பொது மக்களும் துணிப்பை பயன்படுத்த வேண்டும் . அன்றாட பயன்பாட்டிற்காக செல்லும் பொழுது எப்பொழுதும் துணிப்பையுடன் செல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதரும் குறைந்தபட்சம் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றார். பின்னர் அவர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, மாணவ,மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் துணிப் பைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் கார்த்திகேயன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 14-ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்:
அரியலூர் நகர் பகுதியான பெரிய அரண்மனை தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவர் அப்பகுதி நாட்டாண்மையாக இருந்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன் (38). இவருக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கார்த்திகேயன் அரியலூரை அடுத்த சிறுவளூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். முதலில் வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு இணங்க அதற்கான முன்னேற்பாடு பணிகளை கவனித்து வந்தார்.
ஆனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போய் உள்ளது. அதேபோல் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவைகளையும் பள்ளிக்கு சென்று பார்த்துக்கொண்டார்.
இதற்கிடையே நேற்று காலை முதல் கார்த்திகேயன் மிகுந்த விரக்தியில் இருந்தார். அவரது மனைவி காரணம் கேட்டபோது, எதுவும் இல்லை என்று கூறி மறுத்துவிட்டார். அப்போது வீட்டின் தனி அறைக்கு சென்ற அவர் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தவாறு திடீரென்று மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு அருகிலேயே பூச்சி மருந்து பாட்டில் கிடந்துள்ளது. இதையடுத்து அவரை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் இன்று காலை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் கார்த்திகேயன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14-ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட செங்கராயன்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 70). இவர் புற்றுநோயால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவர் நாள்தோறும் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த மருதமுத்து விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மருதமுத்து நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தா.பழூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- காயமடைந்த பார்த்திபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அமிர்தராயன் கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பார்த்திபன் (வயது 34), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர்கள் 2 பேரின் குடும்பத்துக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு பார்த்திபனை செல்வராஜ் மகன் சவுந்தரராஜன் (25) தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். மேலும், அவரது தம்பி செல்வகுமார் (19) தான் வைத்திருந்த கத்தியால் பார்த்திபனை குத்தியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தகராறை விலக்கி விட்டு காயமடைந்த பார்த்திபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கத்தியால் குத்தியதாக செல்வகுமார் மற்றும் சவுந்தரராஜனை கைது செய்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 13 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் விளாங்குடி சிவன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையிலான போலீசார் விளாங்குடி சிவன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் சென்ற வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மூட்டையில் 13 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் சிறுவளூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜரத்தினம் (வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக கொண்டு சென்ற புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
- வீட்டின் முன் நின்ற இருசக்கர வாகனம் திருட்டுபோனது
- போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன பைக்கை தேடி வருகின்றனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் ஜமீன் குளத்தூர் ரவிச்சந்திரன் மகன் குமார்(வயது26).இவர் கயர்லாபாத் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி கட்டுமான பணி சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது இருசக்கர வாகனம் இல்லாததை கண்டுஅதிர்ச்சியடைந்ார். இச்சம்பவம் தொடர்பாக கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பைக்கை தேடி வருகின்றனர்.
- இதில் கலெக்டர் கலந்து கொள்கிறார்
- ஆண்டிமடம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 4 தாலுக்கா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. உடையார்பாளையம் வட்டாட்சியர்அலுவலகத்தில் வரும் 13ம் தேதி மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் துவங்குகின்றது. இருகையூர், காரைகுறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், தா.பழுர், கோடங்குடி, நாயகனைப்பிரியாள், இடங்கன்னி, உதயநத்தம், அனைக்குடம், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புக்குடி ஆகிய கிராமங்களில் 13ந்தேதியும், 14ம் தேதி மணகெதி, உல்லியக்குடி, வெண்மாண்கொண்டான், பருக்கல், கோவிந்தபுத்தூர், நடுவலூர், சுத்தமல்லி, கீழநத்தம். ஆம்பாபூர். உடையவரிதியனூர், கடம்பூர், சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களிலும், 15ம் தேதி பாப்பாக்குடி, தர்மசமுத்திரம், இளையபெருமாள்நல்லூர், குண்டவெளி, முத்துசேர்வைமடம், காட்டாகரம், குலோத்துங்கநல்லூர், தழுதாயமேடு, குருவாலப்பர்கோவில் ஆகிய கிராமங்களுக்கும், 16ம் தேதி தேவமங்கலம், அங்குராயநல்லூர், சூரியமணல், இடையார், வாணதிரையான்பட்டிணம். புpலிச்சைகுழி, உடையார்பாளையம், கோழங்குறிச்சி, தத்னூர் ஆகிய கிராமங்களுக்கும், 20ம் தேதி எரவாங்குடி, தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சோரி, பிச்சனூர், வெட்டியர்வெட்டு, ஆமணக்கம்தோண்டி, உட்கோட்டை, பெரியவளையம், ஜெயங்கொண்டம் ஆகிய கிராமங்களிலும் நடைபெறுகிறது.
ஆண்டிமடம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. 13ம் தேதி ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், ஆண்டிமடம், விளந்தை, வரதராஜன்பேட்டை, பெரியகிருஷ்ணாபுரம், திருகளப்பூர், அணிக்குதிச்சான் ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி சிலம்பூர், இடையக்குறிச்சி, அய்யூர், கூவத்தூர், காட்டாத்தூர், குவாகம், கொடுக்கூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், மேலூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.
செந்துறை தாலுக்கா அலுவலகத்தில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. 13ம் தேதி ஆணந்தவாடி, உஞ்சினி,மருவத்தூர், பெரியகுறிச்சி, வஞ்சினாபுரம், நமங்குணம், நக்கம்பாடி, செந்துறை ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி சிறுகளத்தூர், பொண்பரப்பி, நாகல்குழி, பரணம், கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, கீழமாளிகை, பிலாக்குறிச்சி, சிறுகனூர் ஆகிய கிராமங்களுக்கும், 15ம் தேதி சன்னாசிநல்லூர், தளவாய், ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, மணக்குடையான், அயன்தத்னூர், மணப்பத்தூர், அசாவீரன்குடிக்காடு, தொளார் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.
அரியலூர் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையில் 13ம் தேதி ஜமாபந்தி துவங்குகின்றது. பொட்டவெளி, இலுப்பையூர், இராயம்புரம், சென்னிவணம், ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், அமீனாபாத், அரியலூர் வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரியநாகலூர், தேளுர், காவனூர், விளாங்குடி ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி நாகமங்கலம். ரெட்டிபாளையம், புதுபாளையம், சிறுவளுர், கருப்பூர்சேனாபதி, இடையத்தான்குடி, பெரியதிருக்கோணம், ஆலந்துறையார்கட்டளை, கருப்பிலாகட்டளை, அருங்கால், ஆண்டிபட்டாக்காடு, புங்கங்குழி, ஓரியூர் ஆகிய கிராமங்களுக்கும், 15ம் தேதி மல்லூர், வாரணவாசி, பார்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுர், கீழப்பழுர், கீழையூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர், பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழக்காவாட்டாங்குறிச்சி, வெற்றியூர் ஆகிய கிராமங்களுக்கும், 16ம் தேதி கோவில்எசனை, எலந்தைகூடம், குலமாணிக்கம், கண்டிராதீத்தம், திருமழப்பாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம் ஆகிய கிராமங்களுக்கும், 20ம் தேதி விழுப்பணங்குறிச்சி, கீழகொளத்தூர், சின்னபட்டாக்காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகியமணவாளம், காமரசவல்லி, தூத்தூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.
- டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது செய்யபட்டார்
- போலீசார் அவரிடமிருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கயர்லாபாத் சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலூர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் பின்புறம், செட்டி குழி பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த பாலையா மகன் சக்திவேல் (வயது 37) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடமிருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- உடையார்பாளையம் அருகே போலி சான்றிதழ் கொடுத்தவர் கைது செய்யபட்டார்
- போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உடையார்பாளையம்,
உடையார்பாளையம் சார்பதிவாளர் (பொ) அலுவலகத்தில் சார்பதிவாளராக சாந்தகுமார் (வயது 44) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி வாளரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மலர்கொடி, இவர்களது மகளும் வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ் மனைவியுமான வினிதா ஆகியோருக்கு தேளூர் காலனி தெருவை சேர்ந்த சேகர் (50) என்பவர் அவர் அனுபவித்து வந்த இடத்தை விற்பனை செய்ய இரு ஆவணங்கள் முறையே ஆவண எண்ணாக பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இடத்தை வாங்கிய மலர்கொடி மற்றும் அவரது மகள் வினிதா அங்கிருந்த முட்களை அகற்றினர். இதையரிந்த கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இந்த இடத்தை வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த ஆவணங்களை சரிபார்த்த போது அரியலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் ஆவணத்தில் இணைக்கப்பட்ட தடையின்மை சான்று போலியாக தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கயர்லாபாத் காவல்நிலையத்தில் சார்பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சேகர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- அரியலூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- சுற்றுச்சூழல் கலந்துரையாடலில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது
அரியலூர்,
அரியலூரில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லயன்ஸ் பெனிடிக்ட் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன பயிற்றுநர் ராஜேஸ்வரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணியானது திருச்சி சாலை, பிரதான கடைவீதி, ஜெயங்கொண்டம் சாலை வழியாக சென்று அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நிறைவடைந்து. அங்கு அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் பேரணியை முடித்து வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். பின்னர் அவர் சுற்றுச்சூழல் கலந்துரையாடலில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
- தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது
- நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. காலையில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ தெய்வங்களான வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருமுறைகள் உள்ளிட்ட பதிகங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க மங்கல வாத்தியங்கள் ஆராதனைகளுடன் சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தா.பழூர் பிள்ளைமார் சமூகத்தினர் செய்திருந்தனர்.






