search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும்
    X

    பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும்

    • பிளாஸ்டிக்கால் ஆண்டுக்கு 10 லட்சம் உயிரினங்கள் உயிரிழப்பு
    • அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் அறிவுறுத்தல்

    அரியலூர்,

    உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அகல்யா கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது.உலகம் முழுவதும் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதால் உயிரினங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன . இந்நாளில் நாம் ஒவ்வொருவரும் நெகிழி பொருள்கள் இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும். தற்போது 50,000 கோடி நெகிழி பைகள் பயன்படுத்தப்படுகின்றன .ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி டன் பிளாஸ்டிக் பொருள்கள் கடலில் மாசுபடுத்துகின்றன. ஆண்டொன்றுக்கு 10 லட்சம் உயிரினங்கள் நெகிழிப் பொருள்களால் இறந்து விடுகின்றன .பாட்டிலில் குடிக்கின்ற குடிநீரிலும், குழாய்களில் வருகின்ற குடிநீரிலும் நெகிழி துகள்கள் உள்ளன .எனவே ஒவ்வொரு மனிதனும் இனி வாழ்நாளில் நெகிழிப் பொருள்களை தவிர்க்க வேண்டும். மாணவர்களும், பொது மக்களும் துணிப்பை பயன்படுத்த வேண்டும் . அன்றாட பயன்பாட்டிற்காக செல்லும் பொழுது எப்பொழுதும் துணிப்பையுடன் செல்ல வேண்டும். ஒவ்வொரு மனிதரும் குறைந்தபட்சம் 10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றார். பின்னர் அவர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, மாணவ,மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் துணிப் பைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×