என் மலர்
அரியலூர்
அரியலூர் அருகே கடைகளில் விற்பனைக்காக மற்றும் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர்:
அரியலூர் நகரில் பல இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் காந்தி மார்க்கெட், சின்னக்கடை தெரு, பெரிய கடைத்தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது ஒருசில கடைகளில் விற்பனைக்காக மற்றும் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறுவதற்கு ஏதுவாக, மாவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வரை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது.
அரியலூர்:
அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.
அரியலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட,
கால்நடை வளர்ப்பினை உபதொழிலாக கொண்டுள்ள விவசாயிகளுக்கு, மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், அரசுடைமை வங்கிகள் மூலம் கால்நடைகள் பராமரிப்பிற்காக கிசான் கடன் அட்டை வழங்கி கடனுதவி செய்யப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறுவதற்கு ஏதுவாக, மாவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வரும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி வரை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது.
இதற்காக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வருகின்றன.
எனவே, கிசான் கடன் அட்டை மூலம் பயன்பெற ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர்கள், தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், சமீபத்திய இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் தங்களிடம் உள்ள கால்நடைகள் எண்ணிக்கை விவரம் (ம) நில உடைமை அளவு ஆகிய விவரங்களுடன் விண்ணப்பிக்கவும்.
பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு மூலமாக பரிசீலிக்கப்பட்டு, கால்நடை வளர்ப்போர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் தற்போது 15 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 2 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.
தற்போது 15 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 593 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 6,151 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

பலத்த மழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வயல்கள் தண்ணீரில் மூழ்கின.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. குடியிருப்புகளுக்குள்ளும் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின.
டெல்டா பகுதியான மஞ்சமேடு ஊராட்சியை சேர்ந்த முடிகொண்டான் கிராமத்தில் உள்ள வடிகாலில் போதுமான அளவு நீர் வடிய வசதி இல்லாமல் வாய்க்காலில் பெருமளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள முடிகொண்டான் செல்லும் பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு அந்த பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டபோது, அதிகாரிகள் பாலம் கட்டித்தருவதாக உறுதியளித்தும் நடவடிக்கை இல்லாததால் வெள்ள நீர் மீண்டும் விவசாய நிலங்களை பாதித்து, குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். மேலும் அந்த பாலத்தை அகற்றி புதிய உயர்மட்ட பாலமாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். முடிகொண்டான் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கணேசன், கண்ணதாசன், கோவிந்தராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அங்கு வந்த திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சகாயம் அன்பரசு மற்றும் மஞ்சமேடு ஊராட்சி கிராம நிர்வாக அதிகாரி மகேசுவரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டருக்கு மனுவாக வழங்கினர்.

ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்றது தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு(பயிற்சி) சங்கர் கணேஷ் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கீழக்குடியிருப்பு விருத்தாசலம் ரோட்டிற்கு அருகே தனியார் திருமண மண்டபத்திற்கு பின்புறம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கு 3 பேர் மறைத்து வைத்து கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஜெயங்கொண்டம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் செந்தில்(வயது 32) மற்றும் தலா 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.18 ஆயிரத்து 180 மதிப்புள்ள ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியன், அவர்கள் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

வீட்டின் பின்புறம் பதுக்கப்பட்ட 309 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் அருகே உள்ள செங்குழி பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்குழி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த சிற்றரசன்(வயது 50) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த 309 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிற்றரசனை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தா.பழூர் அருகே இடப்பிரச்சினையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மேலசிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரமணி(வயது 56), வைத்திலிங்கம்(83). இவர்களுக்கு இடையே இடப்பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இடப் பிரச்சினை காரணமாக வைத்திலிங்கத்தை வீரமணி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த அருள்(25), காமராஜ்(54), தருமன்(28), அய்யப்பன்(42) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.
இதேபோல் வீரமணியை வைத்திலிங்கம் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த ஜெயபால், பாலுசாமி, சுதா, வெண்ணிலா, அனு ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வைத்திலிங்கம் மற்றும் வீரமணி ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வைத்திலிங்கம் மற்றும் வீரமணி ஆகியோர் தனித்தனியாக தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், இருதரப்பை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 11 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தா.பழூர் கடைவீதியில் நடத்தப்பட்ட சோதனையில் 16 கடைகளில் இருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ் மற்றும் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து தா.பழூர் கடைவீதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளதா? என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின்போது 16 கடைகளில் இருந்து 500 கிலோ எடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என்றும், பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது என்றும் கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.
மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு அபராதமாக ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், சத்யராஜ், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 33) என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி தனது தாயுடன் கடலை பறித்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை வீட்டில் விடுவதாக அழைத்து சென்றுள்ளார். வழியில் உணவு பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்ற அவர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறினார். இதனைகேட்டு அதிா்ச்சி அடைந்த அவர் ஜெயங்கொண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும், சிறுமியை வீட்டில் அடைத்து வைத்த குற்றத்திற்காக ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.

விக்கிரமங்கலம் பகுதியில் மழையால் ஏரிகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழையால் பாசன ஏரிகளும், குளம், குட்டைகளும் நிரம்பி வழிகின்றன. இதில் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராமத்தில் உள்ள ஆதியான் ஏரியை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் நடுவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழையால் அந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விக்கிரமங்கலம் அம்பாபூர் இடையே உள்ள புற்றேரி கால்நடைகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரியாக உள்ளது. இந்த ஏரியும் மழையால் நிரம்பி வழிகிறது.
மேலும் இப்பகுதியில் உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய ஏரிகளும், குளம், குட்டைகளும் நிரம்பியுள்ளன. இதனால் இப்பகுதியில் ஏரியை நம்பியே விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அரியலூர்:
அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நீதிச் சமுகங்களின் ஒற்றுமை எனும் தலைப்பில் கருத்தரகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களி டம் கூறியதாவது:-
தொடர் மழையினால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகளவில் உள்ளது. பொது மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. தமிழக முதல்வரே களத்தில் இறங்கி பணியாற்றி வருவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
வரும் காலங்களில் இது போன்று சென்னையில் மழை தண்ணீர் தேங்குவதை தவிர்க்க தனியாக ஒரு ஆணையம் அமைத்து அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மத்திய அரசு விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டும்.

சசிகலாவின் செயல்பாடு அ.தி.மு.க. தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதில் பொது மக்களைப் போன்றே நானும் ஒரு பார்வையாளராக இருக்கிறேன். மழை வெள்ளத்தின் போது எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க. செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றே சொல்லவேண்டும். ஆட்சியை குறை கூறுவதிலேயே குறியாக உள்ளனர்.
இவ்வகையான முரண் பாடுகளை களைந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்பவர்கள் மீது தெறிப்பதால் அவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரியலூரில் இருந்து செந்துறை, ஜெயங்கொண்டம், அயன் ஆத்தூர், பொய்யூர், தூத்தூர், திருமழபாடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலைகள் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சாலைகளின் இருபுறமும் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.
அரியலூர் நகரில் மார்க்கெட் தெரு, வெள்ளாழத் தெரு, மேல அக்ரஹாரம், ஆஸ்பத்திரி ரோடு, செந்துறை ரோடு ஆகிய பகுதியில் உள்ள சாலைகள் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. நகரில் பல இடங்களில் சாலை ஓரம் மழைநீர் தேங்காமல் இருக்க பாதை அமைக்கப்பட்டது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள் தங்கள் கடைகளுக்கு முன்பு கான்கிரீட் தளம் அமைத்து உள்ளதால் பல இடங்களில் நீர் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. சில இடங்களில் குப்பைகள் அடைத்துள்ளது.
இதனால் பல இடங்களில் மழைநீர் சாலையோரங்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நெடுஞ்சாலை துறையில் உள்ள சாலை பணியாளர்கள் மாவட்டத்தில் உள்ள எந்த சாலைகளையும் பராமரிப்பதில்லை என்று சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்படுகிறது. வாகனங்கள் வேகமாக செல்லும்போது தேங்கியுள்ள மழைநீர் நடந்து செல்பவர்கள் மீது தெறிக்கிறது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வெளியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மீது சேறும், சகதியும் பட்டு உடைகள் வீணாகின்றன. எனவே நெடுஞ்சாலை துறையினர் சாலையோரத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றி, சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.