search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
    X
    குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

    பலத்த மழை- குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

    பலத்த மழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வயல்கள் தண்ணீரில் மூழ்கின.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. குடியிருப்புகளுக்குள்ளும் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின.

    டெல்டா பகுதியான மஞ்சமேடு ஊராட்சியை சேர்ந்த முடிகொண்டான் கிராமத்தில் உள்ள வடிகாலில் போதுமான அளவு நீர் வடிய வசதி இல்லாமல் வாய்க்காலில் பெருமளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள முடிகொண்டான் செல்லும் பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

    கடந்த ஆண்டு அந்த பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டபோது, அதிகாரிகள் பாலம் கட்டித்தருவதாக உறுதியளித்தும் நடவடிக்கை இல்லாததால் வெள்ள நீர் மீண்டும் விவசாய நிலங்களை பாதித்து, குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.  மேலும் அந்த பாலத்தை அகற்றி புதிய உயர்மட்ட பாலமாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். முடிகொண்டான் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கணேசன், கண்ணதாசன், கோவிந்தராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அங்கு வந்த திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சகாயம் அன்பரசு மற்றும் மஞ்சமேடு ஊராட்சி கிராம நிர்வாக அதிகாரி மகேசுவரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டருக்கு மனுவாக வழங்கினர்.

    Next Story
    ×