search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியபோது எடுத்தபடம்.
    X
    தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியபோது எடுத்தபடம்.

    மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது- திருமாவளவன் பாராட்டு

    மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    அரியலூர்:

    அரியலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நீதிச் சமுகங்களின் ஒற்றுமை எனும் தலைப்பில் கருத்தரகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களி டம் கூறியதாவது:-

    தொடர் மழையினால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகளவில் உள்ளது. பொது மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. தமிழக முதல்வரே களத்தில் இறங்கி பணியாற்றி வருவது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

    வரும் காலங்களில் இது போன்று சென்னையில் மழை தண்ணீர் தேங்குவதை தவிர்க்க தனியாக ஒரு ஆணையம் அமைத்து அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மத்திய அரசு விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டும்.

    மழை


    சசிகலாவின் செயல்பாடு அ.தி.மு.க. தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதில் பொது மக்களைப் போன்றே நானும் ஒரு பார்வையாளராக இருக்கிறேன். மழை வெள்ளத்தின் போது எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க. செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றே சொல்லவேண்டும். ஆட்சியை குறை கூறுவதிலேயே குறியாக உள்ளனர்.

    இவ்வகையான முரண் பாடுகளை களைந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×