என் மலர்
அரியலூர்
- உதயநத்தம் கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
- ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்றது
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த உதயநத்தம் கிராமத்தில் கோடைகால வெயிலின் தாக்கத்தை தணிக்க நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஆம் ஆத்மி கட்சியின் தா பழூர் ஒன்றிய செயலாளர் பிஎம் ஜீவா தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா மேரி, மண்டல பொறுப்பாளர் டாக்டர் தேவகுமார், மாநில தலைவர் வசிகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். இவ்விழாவில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது
- சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 324 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அரியலூர் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டது.இதன்படி மாவட்ட அளவில் 2021-22 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த மக்கள் அமைப்புகளுக்கு ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான இரண்டு கூட்டமைப்புகளுக்கு தலா ஒரு லட்சம் ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் ஒரு ஊராட்சி கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு ரூ.50,000 ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும், ஐந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ..25,000 ரொக்கம் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்க ப்பட்டது. மேலும்,சர்வதேச மகளிர் தின விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் மகளிர் தினவிழாப் போட்டிகள் மற்றும் விழாவில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் கலெக்டர் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, இணை இயக்குநர்ரூபவ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறைஅரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- சிறப்பு வழிபாட்டில் பல்வேறு அபிஷேகங்கள்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள பெரியநாயகி உடனுறை ஏழுமலைநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் நந்திக்கு பால், தயிர், மோர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரித்து வதிவாதரனை காட்டப்பட்டது. பிரதோஷ வழிபாட்டுக்கு ஜெயங்கொண்டம் சுற்று பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டு சென்றனர்.
- தீவிர வாகன சோதனை நடைபெற்றது
- அபராதம் விதித்து, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க போலீசார் அறிவுரை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் ஆலோசனையின் பேரில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகிராபானு தலைமையிலான போக்குவரத்து போலீசார் சிதம்பரம் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்தவர்கள், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், இலகு ரக வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள், வாகனங்களின் இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
- ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளியில் நடைபெற்றது
- கற்றலை கொண்டாடுவோம் என்ற பெயரில் கண்காட்சி
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற கண்காட்சி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். தலைமை ஆசிரியை பிரபா வரவேற்புரையாற்றினார். ஆசிரியர் வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.
- மீன் லோடு ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற போது விபத்து
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
அரியலூர்,
ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டம், கொண்டிபாலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பித்தானி(வயது 40). சைதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பமன்ஜி ராஜா(39). இவர்கள் 2 பேரும் ஆந்திராவிலிருந்து தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு மீன்களை ஏற்றிக்கொண்டு வருவது வழக்கம். அதேபோல் கீழப்பழுவூர் வழியாக தஞ்சை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரியில் மீன்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது ஏலாக்குறிச்சி பிரிவு பாதை அருகே சென்று கொண்டு இருந்தபோது, எதிரே விழுப்புரம் மாவட்டம் காட்டுராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் சுரேஷ்(39) என்பவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் அதிவேகத்தில் பயங்கர சத்தத்துடன் மோதிக்கொண்டன. இதில் ரமேஷ்பித்தானியும், பமன்ஜிராஜாவும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, கோரைக்குழி நடுத்தெருவை சேர்ந்த மோகன்தாஸ்(வயது 23) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து மோகன்தாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்ணன் தப்பி ஓட்டம்-தம்பிக்கு அடிஉதை
- தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் மகன் குணசீலன் (வயது 26). படிப்பை பாதியில் நிறுத்திய குணசீலன் கிடைத்த கூலி வேலைக்கு சென்று வந்தார். வேலைக்கு செல்லாத நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, கிட்டிப்புல் விளையாடுவது என்று பொழுதை கழித்து வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலையில் தாமதாக தூங்கி எழுந்த குணசீலன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மாலையில் சந்தைதோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிட்டிப்புல் விளையாட சென்றார். அங்கு ஏராளமானோர் திரண்டு விளையாடிக்கொண்டு இருந்தனர்.இதற்கிடையே இந்த கிட்டிப்புல் விளையாட்டில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான மார்ட்டின்குமார் (23), ஆரோக்கியதாஸ் (27) ஆகியோரும் விளையாடினர். அப்போது திடீரென்று குணசீலனுக்கும், மார்ட்டின்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி சண்டையை விலக்கி விட்டனர்.ஆனால் தொடர்ந்து நடந்த வாக்குவாதம் முற்றியதால் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின்குமார், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசீலனை சரமாரியாக குத்தினார். இதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே குணசீலன் பரிதாபமாக இறந்தார்.இதைப்பார்த்த அங்கு விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே மார்ட்டின்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் அவரது சகோதரர் ஆரோக்கியதாசும் தப்ப முயன்றார். ஆனால் அப்பகுதியினர் ஒன்று சேர்ந்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு ஆண்டிமடம் போலீசார் விரைந்து வந்தனர்.அவர்கள் கொலையுண்ட குணசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமறைவான மார்ட்டின் குமாரை தேடி வருகிறார். கிட்டிப்புல் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி காலனி தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் குமார்(42)விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது.அதை பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் வலி தீரவில்லை. இதனால் மனமுடைந்த குமார் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்த பெண்ணுடன் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டதால் ஆத்திரம்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உடையார்பாளையம்
உடையார்பாளையம் கீழ ஜமுக்காளகார தெருவை சேர்ந்தவர் செல்லதுரை மகன் சதீஷ்குமார்(32)கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் வெங்கடேஷனுடைய(36). மச்சினி ரஞ்சினி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணமான ரஞ்சினியிடம் சதீஷ்குமார் போனில் பேசுவதை தெரிந்து கொண்ட வெங்கடேஷன் நேற்று முன்தினம் உடையார்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு ஹோட்டல் முன்பு சதீஷ்குமாரை திட்டி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் எஸ்ஐ திருவேங்கடம் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- கிட்டிப்புல் விளையாட்டில் சகோதரர்களான மார்ட்டின்குமார், ஆரோக்கியதாஸ் ஆகியோரும் விளையாடினர்.
- ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின்குமார், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசீலனை சரமாரியாக குத்தினார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் மகன் குணசீலன் (வயது 26). படிப்பை பாதியில் நிறுத்திய குணசீலன் கிடைத்த கூலி வேலைக்கு சென்று வந்தார்.
வேலைக்கு செல்லாத நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, கிட்டிப்புல் விளையாடுவது என்று பொழுதை கழித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலையில் தாமதாக தூங்கி எழுந்த குணசீலன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, மாலையில் சந்தைதோப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிட்டிப்புல் விளையாட சென்றார். அங்கு ஏராளமானோர் திரண்டு விளையாடிக்கொண்டு இருந்தனர்.
இதற்கிடையே இந்த கிட்டிப்புல் விளையாட்டில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான மார்ட்டின்குமார் (23), ஆரோக்கியதாஸ் (27) ஆகியோரும் விளையாடினர்.
அப்போது திடீரென்று குணசீலனுக்கும், மார்ட்டின்குமாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அருகில் விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி சண்டையை விலக்கி விட்டனர்.
ஆனால் தொடர்ந்து நடந்த வாக்குவாதம் முற்றியதால் ஒருவரையொருவர் கைகளால் தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மார்ட்டின்குமார், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசீலனை சரமாரியாக குத்தினார். இதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே குணசீலன் பரிதாபமாக இறந்தார்.
இதைப்பார்த்த அங்கு விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே மார்ட்டின்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் அவரது சகோதரர் ஆரோக்கியதாசும் தப்ப முயன்றார். ஆனால் அப்பகுதியினர் ஒன்று சேர்ந்து அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு ஆண்டிமடம் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் கொலையுண்ட குணசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமறைவான மார்ட்டின் குமாரை தேடி வருகிறார்.
கிட்டிப்புல் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
- ஜெயங்கொண்டம் அருகே பூவாயிகுளம் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆலயத்தின் முன்பாக நடைபெற்றது. போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு சீறி பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர்.மாடுபிடி வீரர்கள் 25,25 வீரர் சுழற்சிமுறையில் களம் இறக்கப்பட்டனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் சில்வர் அண்டா, சில்வர் குவளை, பீரோ, கட்டில், சைக்கிள், டேபிள்,கட்டில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், 5 ஆயிரம் 10 ஆயிரம் ரொக்கம் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழா ஜல்லிக்கட்டு போட்டியை உடையா ர்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் உள்ளிட்ட 100-க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.முன்னதாக ஒவ்வொரு காளைகளும், மாடுபிடி வீரர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.வீரர்கள், பொதுமக்கள் காளைகளால் காயம் அடைந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூவாயிகுளம் புனித வனத்து அந்தோணியார் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். இதில் மாடுபிடி வீரர்கள் 33பேர் காயமடைந்தனர் 3 பேர்பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் மருத்துவமனை கொண்டு சென்றனர் அங்கே அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.






