search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு போட்டி
    X

    ஜல்லிக்கட்டு போட்டி

    • 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
    • ஜெயங்கொண்டம் அருகே பூவாயிகுளம் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயிகுளம் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆலயத்தின் முன்பாக நடைபெற்றது. போட்டியில் தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகை, திருச்சி, பெரம்பலூர், சேலம், மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு சீறி பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர்.மாடுபிடி வீரர்கள் 25,25 வீரர் சுழற்சிமுறையில் களம் இறக்கப்பட்டனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் சில்வர் அண்டா, சில்வர் குவளை, பீரோ, கட்டில், சைக்கிள், டேபிள்,கட்டில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், 5 ஆயிரம் 10 ஆயிரம் ரொக்கம் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழா ஜல்லிக்கட்டு போட்டியை உடையா ர்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் உள்ளிட்ட 100-க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.முன்னதாக ஒவ்வொரு காளைகளும், மாடுபிடி வீரர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.வீரர்கள், பொதுமக்கள் காளைகளால் காயம் அடைந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூவாயிகுளம் புனித வனத்து அந்தோணியார் ஆலய விழா குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். இதில் மாடுபிடி வீரர்கள் 33பேர் காயமடைந்தனர் 3 பேர்பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் மருத்துவமனை கொண்டு சென்றனர் அங்கே அமைக்கப்பட்டிருந்த சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    Next Story
    ×