என் மலர்
தெலுங்கானா
- கடந்தா 13-ம் தேதி,பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தால் மனமுடைந்த சரண்யா, பூச்சி மருந்தை குடித்தார்.
- ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
ஐதராபாத்:
தெலங்கானா மாநிலம், எல்லாரம் கிராமத்தை சேர்ந்தவர் மல்லி கார்ஜுன ராவ் (31). இவரது மனைவி சரண்யா (29).
கடந்தா 13-ம் தேதி,பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தால் மனமுடைந்த சரண்யா, பூச்சி மருந்தை குடித்தார்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மல்லிகார் ஜூனராவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், ஆம்புலன்ஸில் சரண்யாவின் உடலை ஏற்றிவிட்டு, பின்னால், பைக்கில் சென்றார்.
அப்போது, எதிரே வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தில் மல்லிகார்ஜுன ராவ் சம்பவ இடத்திலேயே பலியானார். தாயும், தந்தையும் இறந்ததால் இவர்களின் 2 பிள்ளைகளும் கதறி அழுதனர். இது அனைவரின் மனதையும் கலங்கச் செய்தது.
- 7 லட்சம் ரூபாயை கொள்ளையடித்ததுடன், பலமாக தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.
- திருட்டு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐதராபாத் அருகே, ஏடிஎம் மையத்தில் பணத்தை டெபாசிட் செய்தவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஹிமாயத் நகர் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் மையத்தில், கடந்த 3ம் தேதி பணத்தை டெபாசிட் செய்துகொண்டிருந்த நபரின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மர்ம கும்பல், அவரிடம் இருந்த 7 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர். மேலும் அவரை பலமாக தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து திருட்டு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த நான்கு பேரை ஐதராபாத்தில் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கார், ஒரு பைக்கை பறிமுதல் செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.
- சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் பேசினார்.
- மருத்துவர் இசிஜி பார்ப்பது போல, இந்த வரைபடங்களைப் பார்க்கிறோம்.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் ஐஐடியின் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துக் கொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ராக்கெட்டுகளை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன் என்று கூறினார்.
சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் பேசினார்.
இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது:-
முதல் கட்டமாக சந்திரயான் -3ன் ஏவப்பட்டதை மிகவும் ரசித்தேன். அதே நேரத்தில் அவர் முழு தரவுகளையும் ஆராய்ந்து ராக்கெட் எவ்வளவு அழகாக இருந்தது.
பொறியாளர் மற்றும் விஞ்ஞானி என்ற முறையில் எனக்கு ராக்கெட்டுகள் மீது பிரியம் உண்டு. ராக்கெட்டின் பிறப்பு, வளர்ச்சி, பிரச்சனைகள் ஆகியவற்றைப் பார்த்து, ராக்கெட்டை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன். வளர்ச்சி, அதன் உணர்ச்சிகள் மற்றும் அதன் இயக்கவியல் மற்றும் அதன் வாழ்க்கைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்ப்பது ஆகும்.
கடந்த சந்திரயான் ராக்கெட்டில், கிட்டத்தட்ட 2,000 அளவீடுகள் இருந்தன. இறுதியாக அவை வரைபடங்கள் மற்றும் வளைவுகளாக நம்மிடம் வந்தன. ஒரு மருத்துவர் இசிஜி பார்ப்பது போல, இந்த வரைபடங்களைப் பார்க்கிறோம்.
அந்த வளைவுகளுடன் நாங்கள் ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளோம். வரைபடங்கள், மற்றும் ஏற்ற தாழ்வுகளைப் பார்ப்பதன் மூலம் அதன் வேகம் என்ன... எப்படிப் போகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு இயந்திரத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
- பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.
- மாணவனின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரி மூலம் அவர் ஆபாச படம் பதிவிறக்கம் செய்வதை கண்டுபிடித்தனர்.
தெலுங்கானா மாநிலம், மெஹபூபாத்தை சேர்ந்த மாணவர் ராமானந்தபூரில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். சிறுமிகளின் ஆபாச படங்களை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து வந்தார்.
மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.
மாணவனின் இந்த செயல்களை அமெரிக்காவில் உள்ள சிறுவர் ஆபாச பதிவிறக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்காணித்தது.
மாணவனின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரி மூலம் அவர் ஆபாச படம் பதிவிறக்கம் செய்வதை கண்டுபிடித்தனர்.
அந்நாட்டு நோடல் ஏஜென்சி மூலம் இந்தியாவில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு மாணவர் குறித்த தகவல்களை தெரிவித்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் தெலுங்கானா மாநில போலீசாருக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பு அனுப்பிய மாணவரின் தகவல்களை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து தெலுங்கானா போலீசார் மாணவனின் செல்போன் டவர் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் இதனை ஒப்புக்கொள்ள தவறி விட்டனர்.
- மாநிலத்தின் உரிமையான நிதி பங்கு பறிக்கப்படுகிறது.
திருப்பதி:
தெலுங்கானா மாநில ஆளுங்கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர் ஹரிஷ் ராவ் அங்குள்ள ஜாகிராபாத் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார்.
அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
தெலுங்கானா மாநில வளர்ச்சிக்காக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அயராது உழைத்து வருகிறார். தெலுங்கானா மாநிலம் அவரது ஆட்சியில் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் நகரம் மாபெரும் வளர்ச்சி அடைந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் இதனை ஒப்புக்கொள்ள தவறி விட்டனர்.
தெலுங்கானாவை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. மாநிலத்தின் உரிமையான நிதி பங்கு பறிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் தங்கள் தலைமையை மாற்றினாலும் சரி, அல்லது காலாவதியான தலைவர்களை பிரச்சாரத்திற்கு அனுப்பினாலும் சந்திரசேகர ராவ் கட்சியை வீழ்த்த முடியாது.
அவர் 3-வது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த என் டி ராமராவ் நூற்றாண்டு விழாவில்சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
அவர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் தான் ஐதராபாத் நகரம் மாபெரும் வளர்ச்சி அடைந்ததாக பேசினார்.
ரஜினிகாந்த் பேசியதை தெலுங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சி அமைச்சர் தங்களுக்கு சாதகமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- படிக்கும் வயதில் காதல் தேவை இல்லை என பெற்றோர் அறிவுரை வழங்கினர்.
- பகீரத் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை பார்க்க அவரது காதலி தோட்லானே வீட்டிற்கு வந்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், துபாக்கா மண்டலம் லச்சப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பகீரத் (வயது 17). இவர் டுப்பாக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார்.
இவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் தோட்லானே (16) என்ற மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
படிக்கும் வயதில் காதல் தேவை இல்லை என பெற்றோர் அறிவுரை வழங்கினர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி விரக்தியில் இருந்தனர்.
நேற்று பகீரத்தின் பெற்றோர் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.
பகீரத் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை பார்க்க அவரது காதலி தோட்லானே, வீட்டிற்கு வந்தார்.
அங்கு காதலர்கள் 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
ஊருக்கு சென்ற பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது, 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலையும் மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- சிறுவன் சேவலை திருடி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிறுவனையும், சேவலையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
- சிறுவனுக்கு 18 வயது நிரம்பாத நிலையில், அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டான்.
தெலுங்கானா மாநிலம் மகபூப நகர் மாவட்டத்தில் உள்ள பூரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் சேவல் ஒன்றை கையில் பிடித்து சென்றான். அந்த சிறுவன் சேவலை திருடி செல்வதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சிறுவனையும், சேவலையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
சிறுவனுக்கு 18 வயது நிரம்பாத நிலையில், அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்கப்பட்டான். அதே நேரம் அந்த சேவல் யாருடையது என தெரியாததால் போலீசார் அதை பாதுகாப்பதற்காக முடிவு செய்து சேவலை போலீஸ் நிலைய சிறையிலேயே அடைத்து வைத்து அதற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்தனர்.
இந்த செய்தி அப்பகுதியில் பரவ தொடங்கியதும் மக்கள் பலரும் போலீஸ் நிலையம் சென்று சிறையில் இருக்கும் சேவலை பார்த்து வருகிறார்கள்.
- தெலுங்கானா மக்களின் பலம் இந்தியாவுடன் பலத்தை எப்போதும் அதிகரித்து இருக்கிறது.
- உலகம் முழுவதும் முதலீடு செய்ய இந்தியா வரும் போது தெலுங்கானாவுக்கு பல வாய்ப்புகள் உள்ளன.
வாரங்கல்:
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு விமானம் மூலம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு சென்றார்.
இன்று காலை அவர் வாரங்கல் சென்றார். அங்குள்ள பிரபல பத்ரகாளி கோவிலில் மோடி வழிபாடு மேற்கொண்டார். அவருடன் மத்திய சுற்றுலாத்துறை மந்திரியும், புதிதாக நியமிக்கப்பட்ட தெலுங்கானா மாநில பா.ஜனதா தலைவருமான கிஷன் ரெட்டி மற்றும் தலைவர்களும் இணைந்து வழிபாடு மேற்கொண்டனர்.
பின்னர் நெடுஞ்சாலை முதல் ரெயில்வே வரை வெவ்வேறு துறைகளை சேர்ந்த சுமார் ரூ.6,100 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்றைய புதிய இந்தியா, ஆற்றல் நிறைந்த இளம் இந்தியாவாகும். 21-ம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில் நமக்கு ஒரு பொற்காலம் உள்ளது. ஒவ்வொரு வினாடியும் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
இன்று உலகமே இந்தியாவில் முதலீடுசெய்ய முன் வருகிறது.
தெலுங்கானா மக்களின் பலம் இந்தியாவுடன் பலத்தை எப்போதும் அதிகரித்து இருக்கிறது. இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கும் போது இதில் தெலுங்கானா மக்களுக்கு பெரும் பங்கு உள்ளது.
உலகம் முழுவதும் முதலீடு செய்ய இந்தியா வரும் போது தெலுங்கானாவுக்கு பல வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு மோடி பேசினார்.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய மந்திரி நிதின் கட்காரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் புறக்கணித்தார்.
- சந்திராயன் 2-க்கு பிறகு, சந்திரயான்-3 என்பது இந்தியாவின் மூன்றாவது நிலவுப் பணியாகும்.
- சந்திரனில் சூரிய உதயம் இருக்கும்போது விண்கலம் தரையிறங்கும் தேதி தீர்மானிக்கப்படுகிறது.
பெங்களூரு:
இந்திய நாடே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலவு திட்டமான சந்திரயான்-3 விண்கலம் வருகிற (ஜூலை) 14-ந்தேதி அன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது. இதனை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நேற்று அறிவித்தது.
ஜி-20 விண்வெளி பொருளாதார தலைவர்கள் கூட்டத்திற்கு பிறகு இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திரயான்-3 விண்கலம் ஏவுகணையானது, மார்க்-III (எல்விஎம்3) மூலம் ஏவப்படும். இதற்காக ஜூலை 12 மற்றும் 19-ந்தேதிக்கு இடைப்பட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2-க்கு பிறகு, சந்திரயான்-3 என்பது இந்தியாவின் மூன்றாவது நிலவுப் பணியாகும். இது சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரை இறங்குவதற்கும், உலாவுவதற்கும் இறுதி வரை தனது திறனை இந்த விண்கலம் வெளிப்படுத்தும்.
சந்திரயான்-3, உள்நாட்டிலேயே தரையிறங்கும் தொகுதி, உந்துவிசை தொகுதி மற்றும் கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் மற்றும் நிரூபிக்கும் நோக்கத்துடன் ஒரு ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவல்படி, லேண்டர் ஒரு குறிப்பிட்ட சந்திர தளத்தில் மென்மையாக தரையிறங்கும் மற்றும் ரோவரை நிலைநிறுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இது அதன் இயக்கத்தின் போது சந்திரன் மேற்பரப்பில் உள்ள இடத்திலேயே ரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை மேற்கொள்ளும் வகையிலி லேண்டர் மற்றும் ரோவரில் அறிவியல் தரவுகளை கொண்டுள்ளன.
எனவே திட்டமிட்டபடி ஜூலை 14-ந்தேதி சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட்டால் வருகிற ஆகஸ்ட் மாதம் 23 அல்லது 24-ந்தேதி சந்திரனின் மேற்பரப்பில் விண்கலம் தரையிறங்கும்.
சந்திரனில் சூரிய உதயம் இருக்கும்போது விண்கலம் தரையிறங்கும் தேதி தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறு தரையிறங்கும் போது, சூரிய ஒளி இருக்க வேண்டும். எனவே ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று தரையிறங்கும்.
லேண்டரும், ரோவரும் சூரிய ஒளி இருக்கும் வரை 14 நாட்கள் வரை நிலவில் இருக்கும். சூரிய ஒளி இல்லாத போது, ரோவரில் இருக்கும் ஒரு சிறிய சோலார் பேனல் அடுத்த 14 நாட்களுக்கு ஒளி வரும் வரை பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான சக்தியை உருவாக்கும்.
அங்குள்ள வெப்பநிலை மைனஸ் 40 டிகிரிக்கு கீழே செல்கிறது. அத்தகைய சூழலில் பேட்டரி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்ந்து செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் நாங்கள் சில சோதனைகள் செய்தோம். அதன் மூலம் கடுமையான சூழ்நிலையிலும் பேட்டரி செயல்படுவதற்கான வழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில் சென்றபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு பெட்டியில் பிடித்த தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவ தொடங்கியது.
- ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐதராபாத்:
மேற்கு வங்காள மாநிலம் அவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இன்று பகலில் ஐதராபாத் அருகே பொம்மைபள்ளி, பகிடிபள்ளி இடையே ரெயில் சென்றபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு பெட்டியில் பிடித்த தீ மற்ற பெட்டிகளுக்கும் பரவ தொடங்கியது.
இதையடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.
இந்த ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கேரளாவின் பினராயி விஜயன், தமிழகத்தின் மு.க. ஸ்டாலின் போன்ற முதல்வர்களும் அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர்க்கொள்கிறார்கள்.
- ஜனநாயகத்திற்குத் தேவையான அரசியல் கலாச்சாரம் அதுதான்.
பிரதமர் மோடி நாளை தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில்வே வேகன் உற்பத்தி பிரிவு உள்பட ரூ.6100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடியின் இந்நிகழ்ச்சிக்கு அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்நிகழ்ச்சிக்கு கேசிஆர் கலந்துக் கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை கேசிஆர் புறக்கணிப்பது இது முதல் முறையல்ல.
இதுகுறித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ராம்சந்தர் ராவ் கூறுகையில், " பிரதமர் நரேந்திர மோடி 14 மாதங்களில் 5 முறை தெலுங்கானா வந்துள்ளார். ஆனால், அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒரு முறை கூட அவரை வரவேற்க வந்ததில்லை.
தெலுங்கானா முதல்வர் அந்தஸ்துக்கு ஏற்ப நடந்து கொள்வதில்லை. மாநிலத்தின் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. கேரளாவின் பினராயி விஜயன், தமிழகத்தின் மு.க. ஸ்டாலின் போன்ற முதல்வர்களும் அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர்க்கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் பணிவுடன் உள்ளனர். பிஜேபியை அரசியல் ரீதியாக எதிர்த்தாலும், நெறிமுறையின்படி பிரதமர் மோடியை வரவேற்கின்றனர்.
முன்பு ராஜீவ் காந்திக்கும், என்டிஆருக்கும் இடையே கசப்பான அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தும், என்.டி.ராமாராவ் ராஜீவ் காந்தியை வரவேற்க வந்தார்.
ஜனநாயகத்திற்குத் தேவையான அரசியல் கலாச்சாரம் அதுதான். இன்று முதல்வரின் நடத்தை வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. தெலுங்கானா மக்கள் முதல்வர் கே.சி.ஆரால் அவமதிக்கப்படுகிறார்கள். தெலுங்கானா மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார்.
- ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக சென்றபோது தன்னை கைது செய்ததாக எம்எல்ஏ தெரிவித்தார்.
- இரு சமூகங்களைச் சேர்ந்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் கஜ்வேல் நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையின் பீடத்தின்மீது கடந்த திங்கட்கிழமை இரவில் ஒரு நபர் போதையில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுநீர் கழித்த நபரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் அவரை அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு சமூகத்தினரும் தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். பதற்றம் அதிகரித்ததையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் இன்று கஜ்வேல் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அல்வால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்வதற்காக கஜ்வேல் சென்றபோது தன்னை தடுப்பு காவலில் வைத்திருப்பதாக எம்எல்ஏ தெரிவித்தார்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கஜ்வேலில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இரு குழுக்களைச் சேர்ந்த 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள்' என்றார்.






