படிக்கும் வயதில் காதலுக்கு எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி தற்கொலை

படிக்கும் வயதில் காதல் தேவை இல்லை என பெற்றோர் அறிவுரை வழங்கினர்.பகீரத் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை பார்க்க அவரது காதலி தோட்லானே வீட்டிற்கு வந்தார்.
பகீரத்- தோட்லானே
பகீரத்- தோட்லானே
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், துபாக்கா மண்டலம் லச்சப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பகீரத் (வயது 17). இவர் டுப்பாக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார்.

இவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் தோட்லானே (16) என்ற மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

படிக்கும் வயதில் காதல் தேவை இல்லை என பெற்றோர் அறிவுரை வழங்கினர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி விரக்தியில் இருந்தனர்.

நேற்று பகீரத்தின் பெற்றோர் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

பகீரத் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை பார்க்க அவரது காதலி தோட்லானே, வீட்டிற்கு வந்தார்.

அங்கு காதலர்கள் 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

ஊருக்கு சென்ற பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது, 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலையும் மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com