என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முகமது ஷோயப் இளம்பெண்ணின் பெற்றோரின் கண்ணில் படாமல் இருப்பதற்காக மறைவான பகுதிக்கு ஓடினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத் போர பண்டாவை சேர்ந்தவர் முகமது சவுகத் அலி. இவரது மகன் முகமது ஷோயப் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    தினமும் காலையில் வேலைக்கு செல்லும் முகமது ஷோயப் நள்ளிரவு ஒரு மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை முகமது ஷோயப் காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வேலையில் இருந்து வந்த முகமது ஷோயப் காதலியை ரகசியமாக சந்திக்க முடிவு செய்தார். முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு காதலி வீட்டில் 3-வது மாடிக்கு சென்றார்.

    அங்கு வந்த காதலியுடன் சுவாரிசியமாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இளம் பெண்ணின் பெற்றோர் திடீரென மாடிக்கு வந்தனர்.

    இதனை கண்ட முகமது ஷோயப் இளம்பெண்ணின் பெற்றோரின் கண்ணில் படாமல் இருப்பதற்காக மறைவான பகுதிக்கு ஓடினார்.

    அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கால் தடுக்கி 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக முகமது ஷோயாப்பின் தந்தை முகமது சவுகத் அலிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அலறியடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த முகமது சவுகத் அலி மற்றும் அவரது உறவினர்கள் முகமது ஷோயப்பை மீட்டு சிகிச்சைக்காக உஸ்மானியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போர பண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு விரைவு ரெயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.
    • தெலுங்கானா மாநிலம் பேலம்பள்ளி அருகே வந்தபோது ஏசி பெட்டியின் சக்கரத்தில் தீப்பிடித்தது.

    ஐதராபாத்:

    தலைநகர் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு விரைவு ரெயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.

    தெலுங்கானா மாநிலம் பேலம்பள்ளி அருகே வந்தபோது ஏ.சி. பெட்டியின் சக்கரத்தில் திடீரென தீ பிடித்தது.

    பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்பானைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது. இதையடுத்து, ரெயில் மீண்டும் புறப்பட்டது.

    தீ விபத்து காரணமாக ரெயில் தாமதமாக வந்துகொண்டிருக்கிறது

    • மாரியம்மாவுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது.
    • 17 கிலோ மீட்டர் தூரம் மகளை தோளில் சுமந்து சென்று ஒடிசா மாநிலம் ராயகடாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கொரமடாவை சேர்ந்தவர் மாரியம்மா (வயது 7). பழங்குடியின சிறுமி.

    நேற்று முன்தினம் மாரியம்மாவுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. இதனை கண்ட மாரியம்மாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகளை எப்படியாவது ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றால் தெலுங்கானா மாநில எல்லைக்கும் ஒடிசா மாநில எல்லைக்கும் நடுவில் உள்ள நாகவலி ஆற்றை கடந்து செல்ல வேண்டும்.

    ஆனால் தற்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றைக் கடந்து செல்ல படகு வசதி இல்லை.

    இருப்பினும் தனது மகளின் உயிரை காப்பாற்ற முடிவு செய்து அவரது பெற்றோர் மூங்கிலை வெட்டி எடுத்து வந்து படகு செய்தனர். தனது மகளை மடியில் வைத்துக்கொண்டு கடும் வெள்ளத்திலும் போராடியபடி அக்கரையை அடைந்தனர்.

    பின்னர் 17 கிலோ மீட்டர் தூரம் மகளை தோளில் சுமந்து சென்று ஒடிசா மாநிலம் ராயகடாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒரு மேசையில் 7 பெண்களும் மற்றொரு மேசையில் 5 பெண் தொழிலதிபர்கள் சீட்டு கட்டுகள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மதுர நகரில் சாய் கணேஷ் ரெசிடென்சி என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசதி படைத்த ஏராளமான தொழிலதிபர்கள் வசித்து வருகின்றனர்.

    குடியிருப்பில் வசிக்கும் 50 வயது முதல் 75 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரவு நேரங்களில் சூதாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

    கடந்த 2 மாதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    சூதாட்டம் நடப்பது குறித்து குடியிருப்பை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலீல் பாஷா தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்புகள் நுழைந்தனர்.

    அப்போது ஒரு மேசையில் 7 பெண்களும் மற்றொரு மேசையில் 5 பெண் தொழிலதிபர்கள் சீட்டு கட்டுகள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    இதனைக் கண்ட போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் மற்றும் சூதாட்டம் நடத்திய 52 வயது பெண் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கட்டுகட்டாக ரூ.1.12 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் 5 பேர் பெண் தொழிலதிபர்கள் 7 பேர் குடும்ப தலைவிகள் என தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவர்களின் அனுமதியோடு இவர்கள் சூதாட்டத்தில் ஈடபட்டது தெரியவந்தது. சூதாட்டத்தில் பெண்கள் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
    • அடித்துச் செல்லப்பட்ட 12 பேரில் நான்கு பேர் உயிர் தப்பினர்.

    தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக, முலுகு மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசித்து வந்த 12 பேர் நேற்று பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் உயிர் தப்பினர்.

    காணாமல் போன 8 பேரின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன.

    இதற்கிடையே, ஜூலை 22 முதல் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் எட்டு பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • இரண்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்ததால் வெள்ளம்
    • 10 ஆயிரம் மக்கள் நிவாரண முகாமில் தஞ்சம்

    தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பயிர்கள் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இன்று பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. முலுகு மற்றும் பூபாலபள்ளி மாவட்டங்களில் மேகவெடிப்பு (cloudburst) காரணமாக மழை கொட்டி தீர்த்ததில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    ஐதராபாத்தில் நேற்றில் இருந்து மழை இல்லை என்றபோதிலும், வாரங்கல் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் பேர் மீட்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ''பிரதமர் மோடி மீட்பு பணிக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். இரண்டு ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. ஐந்து தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது'' என்றார்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நேற்று மும்பை மற்றும் ரெய்காட் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. கனமழை காரணமாக மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 6 வழிச்சாலையில் ஒரு வழியில் போக்குவரத்து தடைபட்டது.

    • தெலுங்கானா மாநிலத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • இதனால் தெலுங்கானாவில் நாளை, நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத்:

    இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதற்கிடையே, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன்படி தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத், ரங்கா ரெட்டி, மேட்சல், விகாராபாத், சங்கரெட்டி, மேடக், காமரெட்டி, மெஹபூப்நகர், நாகர்கர்னோல், சித்திபேட், ஜங்கான், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் கரீம்நகர் ஆகிய இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் ஜூலை 27-ம் தேதி வரை தெலுங்கானாவில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஐதராபாத்துக்கு நாளையும், நாளை மறுநாளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தெலுங்கானாவில் மாநிலம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கான்கிரீட் வேலை நடந்து கொண்டிருக்கும்போது விபத்து
    • பீகார் மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    தெலுங்கானா மாநிலத்தின் சூர்யபெட் மாவட்டத்தில் மெல்லச்செருவு கிராமத்தில் உள்ளது "மை ஹோம்" சிமென்ட் தொழிற்சாலை.

    இன்று அந்த தொழிற்சாலையில் அங்கு நடைபெற்று வந்த கான்கிரீட் அமைக்கும் பணியின்போது திடீர் விபத்து ஏற்பட்டது. கான்கிரீட் கலவையை எடுத்துச்செல்லும் இரும்பு குழாய்கள் உடைந்து ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் சிலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பத்திரமாக அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து தற்போது வரை 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரின் சடலங்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சிலர் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

    பலியானவர்கள் உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மை ஹோம் நிர்வாகம், எந்த கருத்தும் கூறவில்லை. வேறு எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

    • காளானில் வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் இருக்கின்றன.
    • காளான்களில் விஷத்தன்மை உள்ளதா என்பதை கண்டறிந்த பிறகு தான் உணவில் சேர்க்க முடியும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் வனப்பகுதியில் காவால் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனத்தை ஒட்டிய காடுகளில் அடிக்கடி வனத்துறையினர் ரோந்து சென்று வருகின்றனர்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு வனக்காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காட்டில் நீல நிற காளான்கள் இருப்பதைக் கண்டனர்.

    இதுவரை எங்கும் பார்த்திடாத வகையில் அறிய காளான்களாக காட்சியளித்தன. இதுகுறித்து முழுகுவில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ஜெகதீஸ் பத்துலா தலைமையிலான குழுவினர் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காடுகளில் குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்ட நீல நிறத்திலான காளான்களை எடுத்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆராய்ச்சி நிறுவன உதவி பேராசிரியர் ஜெகதீஷ் பத்துலா கூறுகையில்:-

    காளான்கள் மருத்துவ குணம் கொண்டது. காளானில் வயிற்று புண்ணை எதிர்க்கும் குணங்கள் இருக்கின்றன.

    தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற காளான் ஸ்கை ப்ளூ மஸ்ரூம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காளான்களின் செவுள்களில் இளஞ்சிவப்பு முதல் ஊதா நிறங்கள் உள்ளன.

    காளான்களில் விஷத்தன்மை உள்ளதா என்பதை கண்டறிந்த பிறகு தான் உணவில் சேர்க்க முடியும். இந்த நீல நிற காளான்களில் நச்சுத்தன்மை உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் .

    தொற்று நோய்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் தொடர்பான நிலைமைகள் உட்பட பல்வேறு நோய்களுக்கான புதிய மருந்துகளை இதன் மூலம் உருவாக்க முடியுமா மருந்துகள் தயாரிப்பதற்கு இது மூலகாரணியாக அமையுமா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

    மேலும் காடுகளில் நீல நிற காளான்கள் தென்பட்டால் அவற்றை பொதுமக்கள் உடனடியாக சமையல் செய்து சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

    • அப்பாவி பொதுமக்களை யூடியூப் மற்றும் முகநூல் மூலம் தொடர்பு கொண்டது இந்த கும்பல்,
    • சீனாவை சேர்ந்த 3 பேர் இதில் தொடர்புடையவர்கள்.

    ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சிவா ஆன்லைனில் ரூ.28 லட்சம் இழந்ததாக போலீசிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக, ஐதராபாத் போலீசின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், சீனாவை பின்புலமாக கொண்டு இயங்கும் ஒரு கும்பல் செய்த ரூ.700 கோடி அவரை மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இது சம்பந்தமாக 9 பேரை கைது செய்திருக்கிறது. இந்த மோசடியின் ஒரு பகுதி பணம் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பிற்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், சீனாவை மையமாக கொண்டு செயல்பட்ட கெவின் ஜுன், லூ லேங்க்ஷோ மற்றும் ஷாஷா எனும் 3 பேரின் தொடர்பில் இந்தியாவில் சிலரின் துணையோடு இந்த கும்பல் செயல்பட்டிருக்கிறது. அப்பாவிகளுக்கு இணையதளத்தில் சில சிறு சிறு வேலைகளை முடித்து கொடுக்க சொல்லி அதன் மூலம் மோசடியை செயலாக்கியிருக்கிறது.

    கைது செய்யப்பட்டவர்களில் பிரகாஷ் பிரஜாபதி மற்றும் குமார் பிரஜாபதி எனும் அகமதாபாத் நகரை சேர்ந்த இருவர்தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டிருக்கிறார்கள்.

    பல போலி நிறுவனங்களின் பெயரில், 48 வங்கி கணக்குகளில் ரூ.584 கோடி செலுத்தப்பட்டுள்ளது. தொடர் விசாரணையில் மேலும் ரூ.128 கோடி பல வங்கி கணக்குகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டதும் தெரிய வந்தது. சுமார் ரூ.700 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த மோசடியில் அப்பாவி பொதுமக்களை யூடியூப் மற்றும் முகநூல் மூலம் தொடர்பு கொண்ட இந்த கும்பல், சில எளிதான இணைய வேலைகளை செய்து தந்தால் நிறைய பணம் கிடைக்கும் என நம்ப வைத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு சிறிய அளவில் பணத்தையும் கொடுத்திருக்கின்றனர். பகுதி நேர ஊதியமாக கருதி பலர் இதில் இறங்கியுள்ளனர். சிறு அளவில் பணத்தை முதலீடு செய்தால் மிக நல்ல வருவாய் வரும் என ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பிய பலரும் பணத்தைச் செலுத்தியுள்ளனர். குறைந்த பட்சமாக ரூ.5 லட்சம் தொடங்கி பல லட்சம் மோசடி செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக மேலும் பலரை ஐதராபாத் காவல்துறை தேடி வருகிறது என தெரிவித்தனர்.

    • 10ம் வகுப்பில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை. அதன்பிறகு படிப்பில் நாட்டமில்லாமல் விவசாயத்தில் ஈடுபட்டார்.
    • ஒரு மாதத்தில் சுமார் 8,000 தக்காளி பெட்டிகளை விற்று ரூ.1.8 கோடி சம்பாதித்துள்ளார்.

    விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டமடைந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவ்வருட தக்காளி விலையேற்றம் ஒரு சில விவசாயிகளை கோடீசுவரராக்கியுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் உள்ள கவுடிபள்ளி கிராமத்தில் வசிப்பவர் மகிபால் ரெட்டி, விவசாயி. சிறு வயதில் அவரது மனம் படிப்பில் ஈடுபடவில்லை. அவரால் 10ம் வகுப்பில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை. அதன்பிறகு படிப்பில் நாட்டமில்லாமல் விவசாயத்தில் ஈடுபட்டார்.

    தக்காளியுடன் ரெட்டி நெல் சாகுபடியும் செய்தார். ஆனால் நெல் சாகுபடியில் லாபம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தக்காளி சாகுபடியை தொடங்கினார்.

    இவர் 8 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டார். விளைச்சல் அறுவடைக்கு தயாரானதும் ஜூன் 15ல் சந்தைக்கு கொண்டு வந்தார். அங்கு தக்காளியை விற்று கோடீசுவரரானார்.

    ஒரு மாதத்தில் சுமார் 8,000 தக்காளி பெட்டிகளை விற்று ரூ.1.8 கோடி சம்பாதித்துள்ளார். சீசன் முடிவதற்குள் சுமார் ரூ.2.5 கோடி வருமானம் ஈட்டப்போவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    அப்போது ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் சந்தையில் தக்காளி வரத்து போதுமான அளவு இல்லை. அதனால் ஐதராபாத்திற்கு தக்காளியை அனுப்ப ஆரம்பித்தார். அங்கு தக்காளியை கிலோ ரூ.100க்கு விற்று 15 நாட்களில் சுமார் ரூ.1.25 கோடி சம்பாதித்துள்ளார்.

    ரெட்டி ஒரு ஏக்கர் பயிரில் ரூ.2 லட்சம் செலவழித்து, தனது பயிரை தரமானதாக மாற்றினார். மொத்த சாகுபடிக்கு ரூ.16 லட்சம் செலவானதாக தெரிவித்தார். 40% பயிர் இன்னும் வயலில் எஞ்சியுள்ளது என்றும் அதுவும் விரைவில் சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று ரெட்டி கூறினார்.

    பட்டதாரிகள் பலர் வேலை தேடி அலைவது குறித்து செய்திகள் வெளிவரும் நிலையில், 10ம் வகுப்பு கூட தேர்ச்சியடையாத மகிபால் ரெட்டி, விவசாயம் செய்து கோடீசுவரராகி இருப்பது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • தெலுங்கானா தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமராவை சந்தித்தனர்.
    • தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான விரிவான கொள்கைகள் குறித்து தமிழக குழுவினர் கேட்டறிந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நாட்டிலேயே தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கி வருகிறது.

    தெலுங்கானா உருவான பிறகு ஐதராபாத்தில் தகவல் தொழில் நுட்பதுறை புதிய வேகத்தை எட்டியுள்ளது.

    தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் 3 நாள் சுற்றுப் பயணமாக ஐதராபாத் சென்றனர்.

    பின்னர் தெலுங்கானா தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி. ராமராவை சந்தித்தனர்.

    அப்போது தெலுங்கானாவில் ஒரு வலுவான தகவல் நுட்பத்தை உருவாக்க உதவிய கொள்கைகள் மற்றும் உத்திகள் குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனிடம் விளக்கம் அளித்தனர்.

    மேலும் கிராமப்புற தொழில்நுட்ப மையங்கள், கண்டுபிடிப்புகள், மின்னணுவியல், கேமிங், மற்றும் அனிமேஷன், சைபர் பாதுகாப்பு, புதுமையான கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

    தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான விரிவான கொள்கைகள் குறித்து தமிழக குழுவினர் கேட்டறிந்தனர்.

    ஐதராபாத் போல சென்னையில் தகவல் நுட்ப துறையில் புதிய மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக இந்த ஆய்வு நடந்ததாக தெரிவித்தனர்.

    ×