என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • மரபணுக்களின் பிறழ்வு காரணமாக ஹார்மோன்கள் போதுமான அளவு வெளிப்படுவதில்லை.
    • அரிய வகை மனிதர்கள் உலகம் முழுவதிலும் 300 பேரும், இந்தியாவில் 20 பேரும் உள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மஞ்சேரியலை சேர்ந்தவர் 40 வயது ஆண். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது.

    இதனால் செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார். அவரை பரிசோதித்த போது அவருக்கு ஆண், பெண் இனப்பெருக்க உறுப்பு இருந்தது தெரியவந்தது.

    அரிதான இதுபோன்ற நபர்களுக்கு கருப்பை இருக்கும் சிலருக்கு கருவில் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இருக்கும்.

    சில ஹார்மோன்கள் தாக்கத்தால் ஒன்று மட்டுமே எஞ்சி இருக்கும். அப்போது அவர் பிறப்பிலேயே ஆணா பெண்ணா என்பது முடிவு செய்ய முடியும்.

    மரபணுக்களின் பிறழ்வு காரணமாக ஹார்மோன்கள் போதுமான அளவு வெளிப்படுவதில்லை. இது போன்ற அரிய வகை மனிதர்கள் உலகம் முழுவதிலும் 300 பேரும், இந்தியாவில் 20 பேரும் உள்ளனர்.

    அத்தகைய மனிதர்கள் சாதாரணமாக தெரிவார்கள். தாடி மீசை இருக்கும். ஆண்குறி சாதாரணமாக இருக்கும். விந்து உற்பத்தி இருக்காது என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பரிசோதனைக்கு வந்த நபருக்கு டாக்டர்கள் லிப்ரோஸ் அறுவை சிகிச்சை மூலம் அவரது ஆண் உறுப்பை அகற்றி சிகிச்சை அளித்தனர்.

    தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் முதுகலை கவுன்சிலிங்கில் திருநங்கைகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற எனது மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது என்று ரூத் கூறியுள்ளார்.
    • தெலுங்கானாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் தடைகளை எதிர்கொண்டார்.

    ஐதராபாத்:

    தெலுங்கானாவை சேர்ந்த 29 வயதான ரூத் ஜான் கொய்யாலா. திருநங்கைகள் பிரிவில் மருத்துவத்தில் முதுகலை படிப்புக்கு தகுதி பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

    நீட் முதுகலை கவுன்சிலிங்கில் திருநங்கைகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற எனது மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது என்று ரூத் கூறியுள்ளார்.

    தற்போது ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பொது மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். திருநங்கைகள் பெரும்பாலும் சமூக ரீதியாக பாகுபாடு காட்டப்பட்டு ஏளனம் மற்றும் அவமதிப்புக்குள்ளாகிறார்கள்.

    ரூத் ஜான் கொய்யாலாவால் அந்த ஏளனங்கள் உடைக்கப்பட்டுள்ளது. அவர் திருநங்கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளார்.

    இந்தியாவில் உள்ள பிற மாற்றுத்திறனாளி மருத்துவர்கள் மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றிருந்தாலும், அவர்கள் பொதுவாக ஆண், பெண் ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை பெறுவார்கள். ஆனால் இவர் 3-ம் பாலினத்தவராக இருந்து சேர்க்கை பெற்றுள்ளார். 2022-ல் நீட் முதுகலை சேர்க்கைக்கு தகுதி பெற்றிருந்தாலும், அவருக்கு பெண் இருக்கை ஒதுக்கப்பட்டதால் அவர் வாய்ப்பை மறுத்து விட்டார். ரூத் திருநங்கைகள் பிரிவின் கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த நேரத்தில் தெலுங்கானாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் தடைகளை எதிர்கொண்டார்.

    திருநங்கைகளுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், மகளிர் மருத்துவ நிபுணராகவும், மகப்பேறு மருத்துவராகவும் பணியாற்ற வேண்டும் என்பது அவரின் கனவாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

    • ஸ்ரீகாந்த் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை சரி பார்த்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், கபுதர் கானா பகுதியில் மாநில சிறப்பு காவல் தலைமை அலுவலகம் உள்ளது.

    இங்குள்ள 12-வது பட்டாலியனில் ஸ்ரீகாந்த் என்பவர் பாதுகாப்பு படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஸ்ரீகாந்த் நள்ளிரவு 1 மணி முதல் 1-30 மணி வரை போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    பின்னர் அவுட் போஸ்டில் உள்ள ஓய்வு அறைக்கு சென்றார். ஸ்ரீகாந்த் ஓய்வு அறைக்கு சென்ற ஒரு சில நிமிடங்களில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்ட சக போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஸ்ரீகாந்த் இருந்த ஓய்வு அறைக்கு சென்ற போது நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரை மீட்ட சக போலீஸ்காரர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சையத் ஜஹாங்கீர் கூறுகையில்:-

    ஸ்ரீகாந்த் துப்பாக்கியில் உள்ள குண்டுகளை சரி பார்த்தபோது எதிர்பாராத விதமாக வெடித்து உள்ளது. அப்போது ஸ்ரீகாந்த் நெற்றிப்பொட்டில் குண்டு பாய்ந்து இறந்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சந்திரசேகர ராவ் வெளியிட்டார்
    • ஏழு மாற்றங்கள் மட்டுமே இடம் பிடித்திருந்ததால், ஏற்கனவே உள்ளவர்களுக்கு வாய்ப்பு

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ஏழு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, கிடைக்காததால் தலைவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழும் காட்சி வெளியாகியுள்ளது.

    ஸ்டேசன் கான்புர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, தட்டிகோண்டா ராஜையா விண்ணப்பத்திருந்தார். ஆனால், அவருக்கு பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. வாய்ப்பை கிடைக்காததை பொறுத்துக் கொள்ள முடியாத அவர், மண்டியிட்டு கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது பாரத ராஷ்டிய சமிதி) தோற்கடிக்க முயற்சி செய்தன. ஆனால் மகா கூட்டணிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

    சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒவைசி கட்சி 7 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

    • வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியையும் அவரது சகோதரரையும் தட்டி எழுப்பினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ரங்கப்பேட்டை மாவட்டம், மீர் பேட்டையை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவருக்கு 18 வயதில் அண்ணன் உள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை அவரது தாயை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்

    இதனால் மனம் உடைந்த சிறுமியின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமி மற்றும் அவரது சகோதரர் ஆதரவு இன்றி தவித்து வந்தனர்.

    சிறுமியின் சகோதரர் கூலி வேலைக்கு சென்று சிறுமியை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் பெற்றோர்கள் குடியிருந்த வீட்டிற்கு வாடகை அதிகம் என்பதால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீர்பேட்டை, நந்தவன பகுதியில் உள்ள சிறிய வீட்டிற்கு இருவரும் குடியேறினர்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 8 பேர் கொண்ட கும்பல் அவர்களது வீட்டிற்குள் நுழைந்தனர்.

    வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியையும் அவரது சகோதரரையும் தட்டி எழுப்பினர்.

    அவர்கள் சிறுமியின் அண்ணனை தாக்கினர். தங்களிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரை வீட்டின் ஓரத்தில் அமர வைத்தனர். அண்ணன் எதிரிலேயே சிறுமியை 8 பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். பின்னர் இது குறித்து யாரிடமாவது கூறினால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    சிறுமியை 8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    நேற்று காலை சிறுமியை அவரது சகோதரர் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து டாக்டர்களிடம் தெரிவித்தார். டாக்டர்கள் ரச்சகொண்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    சினிமா பாணியில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் அறிவிப்பு
    • சந்திரசேகர ராவ் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார்

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும், சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி 119 இடங்களில் 115 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளையும் ஆச்சர்யத்திற்குள் ஆழ்த்தும் வகையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நர்சாபுர், நம்பல்லி, கோஷமஹால், ஜன்கயோன் ஆகிய நான்கு இடத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

    வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சந்திரசேகர ராவ், ''நாங்கள் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே இருந்த பட்டியலில் ஏழு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் போட்டியிடுகிறார். அத்துடன் தற்போது கமரெட்டி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த கட்சியை சேர்ந்த கம்பா கோவர்தன் தொடர்ந்து நான்கு முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்களவை தேர்தலில் ஓவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். அந்த கூட்டணி தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிதான், பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. தற்போது, வேட்பாளர்களுக்கான விண்ணபத்தை வினியோகம் செய்துள்ளது. கடந்த 18-ந்தேதி முதல் ஆகஸ்ட் 25-ந்தேதி வரை போட்டியிட விரும்புவோம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது பாரத ராஷ்டிய சமிதி) தோற்கடிக்க முயற்சி செய்தன. ஆனால் மகா கூட்டணிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

    சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒவைசி கட்சி 7 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

    • மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த 4-ந் தேதி தொடங்கியது.

    விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்கான விண்ணப்பத்தை 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தெலுங்கானா மாநிலத்தின் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஏராளமானவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தவர்கள் மட்டுமின்றி ஆந்திராவை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்ப படிவம் மூலம் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் வழங்கிய போது 69 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதன் மூலம் ரூ.1.370 கோடி வசூலானது. கடை உரிமை கட்டணம் மூலம் ரூ.3,500 கோடி வருவாய் கிடைத்தது.

    தற்போது தலைநகர் ஐதராபாத்தில் மட்டும் 615 கடைகள் உள்ளது. ஐ.டி கார்டரில் உள்ள செரிலிங்கம், விமான நிலையம் அமைந்துள்ள ஷம்ஷாபாத் பகுதியில் உள்ள கடைகளுக்கு கடும் கிராக்கி நிலவியது.

    சரூர் நகர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு மட்டும் 10,908 பேர் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் ரூ.2,639 கோடி அள்ளியுள்ளனர்.

    • சர்மிளா தனது தொண்டர்களுடன் வீட்டின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபவர்களை சந்திக்க எனக்கு உரிமை உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் தலித் மக்கள் பயன் பெறும் வகையில் தலித் பந்து என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தகுதி உள்ள நபர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என தலித் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொகுதியான கஜ்வெல்லில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா ஆதரவு தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்திக்கநேற்று தனது இல்லத்தில் சர்மிளா புறப்பட்டார்.

    அப்போது வீட்டுக்கு வெளியே தயார் நிலையில் இருந்த போலீசார் சர்மிளாவை தடுத்து நிறுத்தினர். போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து சர்மிளா தனது தொண்டர்களுடன் வீட்டின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மேலும் தன்னை தடுத்து நிறுத்திய போலீசாருக்கு கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து வரவேற்றார்.அவர்களுக்கு ஞானமும், சன்மார்க்கமும் கிடைக்க இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன். போலீசார் அரசியல் சாசனத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் சர்மிளாவை வீட்டு காவலில் வைத்தனர் இது குறித்து சர்மிளா கூறுகையில் :-

    எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அடக்கு முறையை பயன்படுத்துகிறார்.

    எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபவர்களை சந்திக்க எனக்கு உரிமை உள்ளது. மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பக் கூடாதா.

    என்னை குறி வைத்து வீட்டு காவலில் வைப்பது வெட்கக்கேடானது என கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீட்டில் புகுந்த திருடனை எதிர்த்து பெண் சண்டையிட்டு போராடிய காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள வேமுலவாடா நகரில் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    இதனை நோட்டமிட்டு திருடன் முகமூடி அணிந்த படி கையில் இரும்பு கம்பியுடன் அந்த வீட்டு சுற்றுச்சுவர் ஏறி உள்ளே குதித்தான்.

    வீட்டில் தனியாக இருந்த பெண் வெளியே வரும் வரை வாசலுக்கு அருகே சுவர் ஓரமாக பதுங்கி இருந்தான்.அவனைக் கண்டதும் வீட்டில் கட்டி போட்டிருந்த நாய் குறைத்தது.

    சத்தம் கேட்டு வீட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு பெண் வெளியே வந்தார். அப்போது இரும்பு கம்பியுடன் காத்திருந்த திருடன் பெண்ணை தாக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடனை தாக்க விடாமல் எதிர்த்து தாக்கினார் .

    மேலும் திருடன் தள்ள முயன்ற போது வீட்டின் வாசலில் தொங்கவிடப்பட்டிருந்த துணியை பிடித்து சுதாரித்து கொண்டார்.

    மேலும் பெண் கூச்சலிட்ட படியே திருடனை எதிர்த்து போராடினார். அப்போது திருடன் அவரது வாயை மூட முயற்சி செய்தான். அதுவும் முடியவில்லை.இறுதியாக பெண்ணின் எதிர் தாக்குதலால் திருடன் தப்பி ஓடி விட்டான்.

    அவனை ஒரு தடியை எடுத்துக் கொண்டு பின்னால் பெண் விரட்டிச் சென்றார். ஆனாலும் அவன் தப்பி ஓடிவிட்டான். அவன் செல்லும்போது 7 பவுன் தங்கச்செயினை பறித்து சென்று விட்டதாக பெண் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் புகுந்த திருடனை எதிர்த்து பெண் சண்டையிட்டு போராடிய காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளது.

    இது தெலுங்கானா மாநிலத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க ஷர்மிளா டெல்லி சென்றார்.
    • தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.

    ஐதராபாத்:

    ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலுங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஷர்மிளா தனது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் கருத்துக்களை கேட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க ஷர்மிளா டெல்லி சென்றார்.

    அங்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை அவர் சந்தித்து பேசினார். மேலும் அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

    எந்தவித நிபந்தனையும் இன்றி ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை காங்கிரசுடன் இணைக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பாலேரு தொகுதியில் ஷர்மிளா போட்டியிடுவார் எனவும், காங்கிரஸ் கட்சிக்காக தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் தெரிகிறது.

    இந்த வாரம் சோனியா காந்தி முன்னிலையில் ஷர்மிளா காங்கிரசில் கட்சியை இணைக்க உள்ளார்.

    • கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளுக்காக கல்லூரி சார்பில் வரவேற்பு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தனர்.
    • கலை நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டில் புதியதாக சேர்ந்த மாணவிகள் பாடலுக்கு ஏற்றவாறு ஆட்டம் பாட்டம் என குதுகலத்துடன் நடனம் ஆடினர்.

    தெலுங்கானா மாநிலம், கங்காதர மண்டலம், வெங்காய பள்ளியை சேர்ந்தவர் பிரதீப்தி (வயது 17). இவர் நியல கொண்ட பள்ளியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் படித்து வந்தார்.

    கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளுக்காக கல்லூரி சார்பில் வரவேற்பு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தனர்.

    கலை நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டில் புதியதாக சேர்ந்த மாணவிகள் பாடலுக்கு ஏற்றவாறு ஆட்டம் பாட்டம் என குதுகலத்துடன் நடனம் ஆடினர்.

    அப்போது பிரதீப்தாவும் சக மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவியை மீட்டு கரீம் நகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரதீப்தி பரிதாபமாக இறந்தார்.

    கல்லூரியில் நடனம் ஆடிய போது மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • ஜக்தியால் மாவட்டத்தில் பீர்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து தான் ஓட்ட வேண்டும். ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அங்குள்ள ஜக்தியால் மாவட்டத்தில் பீர்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் அதன்பிறகு அந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் இவ்வாறு ஹெல்மெட் அணிந்து வேலை பார்ப்பதாக கூறுகின்றனர்.

    இந்த கட்டிடம் வாடகையில் இயங்கி வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையிலும், உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் அங்கு அலுவலகத்தை மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×