தெலுங்கானாவில் கல்லூரி விழாவில் நடனமாடிய மாணவி திடீர் பலி

கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளுக்காக கல்லூரி சார்பில் வரவேற்பு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தனர்.கலை நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டில் புதியதாக சேர்ந்த மாணவிகள் பாடலுக்கு ஏற்றவாறு ஆட்டம் பாட்டம் என குதுகலத்துடன் நடனம் ஆடினர்.
தெலுங்கானாவில் கல்லூரி விழாவில் நடனமாடிய மாணவி திடீர் பலி
Published on

தெலுங்கானா மாநிலம், கங்காதர மண்டலம், வெங்காய பள்ளியை சேர்ந்தவர் பிரதீப்தி (வயது 17). இவர் நியல கொண்ட பள்ளியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் படித்து வந்தார்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளுக்காக கல்லூரி சார்பில் வரவேற்பு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தனர்.

கலை நிகழ்ச்சியில் 3-ம் ஆண்டில் புதியதாக சேர்ந்த மாணவிகள் பாடலுக்கு ஏற்றவாறு ஆட்டம் பாட்டம் என குதுகலத்துடன் நடனம் ஆடினர்.

அப்போது பிரதீப்தாவும் சக மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மாணவியை மீட்டு கரீம் நகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரதீப்தி பரிதாபமாக இறந்தார்.

கல்லூரியில் நடனம் ஆடிய போது மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com