என் மலர்
தெலுங்கானா
- தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் வெளியேறியதால் நுரை பொங்கி வெள்ளமாக வந்தது.
- கால்வாய்களில் ரசாயன கழிவுகளை திறந்து விட்ட தொழிற்சாலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
குக்கட்பள்ளியில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள சாக்கடை கால்வாய்களில் தொழிற்சாலை கழிவுகளை திறந்து விட்டனர்.
தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் வெளியேறியதால் நுரை பொங்கி வெள்ளமாக வந்தது. கனமழை வெள்ளத்துடன் ரசாயன நுரை அங்குள்ள தரணி நகர் சீரடி நகர் பகுதி தெருக்களில் வெள்ளமாக சென்றது.
இது பனிக்கட்டிகள் போல தெருக்கள் முழுவதும் நிறைந்து கிடந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கால்வாய்களில் ரசாயன கழிவுகளை திறந்து விட்ட தொழிற்சாலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது ஒரே மகன் ஆத்திரத்தில் தெரியாமல் தவறு செய்து விட்டதாக கூறி அவரது தாயும் உறவினர்களும் சேர்ந்து கொலையை மறைத்துவிட்டனர்.
- சங்கவி பள்ளிப் பருவம் முதல் ஒன்றாக பழகியதால் உன்னை நண்பனாக தான் கருதுகிறேன் என தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், எல்.பி.நகரை சேர்ந்தவர் சிவக்குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சங்கவி. அவரது சகோதரர் பிருத்வி. இவர்கள் 3 பேரும் பள்ளி பருவம் முதல் ஒன்றாக படித்து வந்தனர்.
இதனால் 3 பேரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் படித்த சிவகுமார் கடந்த 2018-ம் ஆண்டு பட்டப் படிப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
பிறகு டாக்டருக்கு படிக்க விரும்பிய சிவகுமார் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்ற பிறகும் தேர்வில் போதிய மதிப்பெண் பெற முடியவில்லை. இதனால் ஹோமியோபதி டாக்டருக்கு படித்தார். சினிமா மீது ஆர்வம் கொண்ட சிவகுமார் தமிழ் படம் ஒன்றில் நடித்தார். அதன்பின் சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் ஊர் சுற்றி வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்ததால் அவரை சுத்தியலால் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சில நாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் இறந்தார்.
தனது ஒரே மகன் ஆத்திரத்தில் தெரியாமல் தவறு செய்து விட்டதாக கூறி அவரது தாயும் உறவினர்களும் சேர்ந்து கொலையை மறைத்து விட்டனர்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக சங்கவியை சந்தித்த சிவகுமார் அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு சங்கவி பள்ளிப் பருவம் முதல் ஒன்றாக பழகியதால் உன்னை நண்பனாக தான் கருதுகிறேன் என தெரிவித்தார்.
இருப்பினும் சிவகுமார் தன்னை காதலிக்கும்படி சங்கவியிடம் வற்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் சங்கவி வீட்டிற்கு சென்ற சிவகுமார் மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் தான் தயாராக எடுத்து வந்த கத்தியை எடுத்து சங்கவியை வெட்டினார்.
இதனைக் கண்ட அவரது சகோதரர் பிருத்வி சிவகுமாரை தடுத்து நிறுத்தினார். அவரை சிவகுமார் வெட்டினார். படுகாயம் அடைந்த பிருத்வி ரத்த வெள்ளத்தில் துடித்துடுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனைக் கண்ட சங்கவி கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிவகுமாரை பிடித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிவகுமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பெண்கள் பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
- பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வருகிற 18-ந் தேதி 22-ந் தேதி வரை நடக்கிறது.
ஐதராபாத்:
எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க கோரி தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவின் மகளும், பி.ஆர்.எஸ். கட்சியின் (பாரத் ராஷ்ட்ரிய சமீதி), தலைவர்களில் ஒருவருமான கே.கவிதா குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தி அவர் 47 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினரான அவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கு இதை வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பெண்கள் பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் தலைவர்களுக்கு தனித்தனியாக அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வருகிற 18-ந் தேதியிலிருந்து 22-ந் தேதி வரை நடக்கிறது.
- 62 தாலுகாக்கள் மட்டுமே வறட்சி பாதிக்கப்பட்டதாக அறிவிக்க தகுதி பெற்றுள்ளன.
- மக்களுக்கு கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை வழங்க உறுதி செய்துள்ளோம்.
பெங்களூரு:
கர்நாடக மாநில வருவாய்த்துறை மந்திரி பைரேகவுடா தலைமையில் இயற்கை பேரிடர்களுக்கான அமைச்சரவை துணைக்குழு கூட்டம் நடந்தது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பருவமழை காலத்தில் செப்டம்பர் 4-ந் தேதி வரை கர்நாடகாவில் 26 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இதனால் தெற்கு கர்நாடகா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மழை இல்லாததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆகஸ்டு 19-ந் தேதி வரை மாநிலத்தில் உள்ள 237 தாலுகாக்களில் 113 தாலுகாக்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக 62 தாலுகாக்கள் மட்டுமே வறட்சி பாதிக்கப்பட்டதாக அறிவிக்க தகுதி பெற்றுள்ளன.
இருப்பினும் ஆகஸ்டு 19-ந் தேதி முதல் செப்டம்பர் 4-ந் தேதிக்குள் நிலைமை மோசமடைந்து உள்ளதால் கூடுதலாக 134 தாலுகாக்களில் மேலும் பயிர் சேதம் பதிவாகி உள்ளது. தற்போதைய கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் 196 தாலுகாக்களில் வறட்சி நிலவுவது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகள் இன்னும் 4 நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் எத்தனை தாலுகாக்கள் பாதிக்கப்பட்டு உள்ளது என்பது சரியாக தெரியும். தொடர்ந்து வறட்சி பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு மனுதாக்கல் செய்வோம். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் முதல் மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்த உள்ளார்.
வறட்சி பாதித்த தாலுகாக்கள் அதிகார பூர்வமாக கண்டறியப்பட்டதும், ஒவ்வொரு தாலுகாவிலும் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் அரசு பணிக்குழு அமைத்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும். வறட்சி பாதித்த தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை வழங்க உறுதி செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலால் அதிகாரிகள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சரூர் நகர் என்ற பகுதியில் மட்டும் மதுக்கடைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.
தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள 2,620 மதுக்கடைகள் ஏலம் விடுவதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது.
விண்ணப்பபடிவத்திற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் எனவும், விண்ணப்பத்திற்கு செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப பெற முடியாது எனவும் அறிவித்தனர்.
அதன்படி மது கடை ஏலம் எடுப்பதற்காக 1.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான பெண்களும் மதுக்கடை ஏலம் கேட்டு விண்ணப்பித்தனர்.
விண்ணப்ப படிவம் மூலம் ஒரு சொட்டு மது கூட விற்பனை செய்யாமல் தெலுங்கானா அரசுக்கு ரூ.2,639 கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில மதுக்கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் விண்ணப்பம் செய்தவர்கள் கலந்து கொண்டனர் .
இந்த ஏலத்தில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் 100 கடைகளை பெண்கள் ஏலம் எடுத்தனர். இது கலால் அதிகாரிகள் இடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நகரப் பகுதிகளில் உள்ள கடைகள் பெண்கள் வசம் வந்துள்ளது. சரூர் நகர் என்ற பகுதியில் மட்டும் மதுக்கடைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அதிகபட்சமாக சரூர்நகர் 14, ஐதராபாத் 13, கேதராபாத் 8, ஷம்ஷாபாத் 7 கடைகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முந்தைய காலங்கள் போல் இல்லாமல் இந்த ஆண்டு அதிக அளவில் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். நல்ல எண்ணிக்கையிலான பெண்கள் ஏலத்திலும் கலந்து கொண்டனர்.
ஒரு சில கடைகள் பெண்கள் பெயரில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் விண்ணப்பித்துள்ளனர் என கலால் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராடிவரும் நிலையில் 100 கடைகள் பெண்கள் வசமாகி இருப்பது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ஒய்.எஸ். ஆர். கட்சியை இணைக்க போவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
- சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
தெலுங்கானா மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் ஒய்.எஸ். ஷர்மிளா.ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான இவர் காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கானா ஒய்.எஸ். ஆர். கட்சியை இணைக்க போவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
காங்கிரசுடனும் அவர் நெருக்கம் காட்டி வந்தார். கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே. சிவக்குமாரையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில் அவர் இன்று டெல்லியில் சோனியாகாந்தியை திடீரென சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின் போது ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது காங்கிரசுடன் கட்சியை இணைத்து செயல்படுவதா? என்பது தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது. தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் ஷர்மிளா சோனியாவை சந்தித்த பேசி உள்ளது. தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
- படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
தெலுங்கில் ஹிட் பட சீரிஸ்களை இயக்கியவர் சைலேஷ் கொலனு. இவர் அடுத்ததாக சைந்தவ் என்கிற தெலுங்கு படத்தை பான் இந்தியா முறையில் எடுத்து வருகிறார்.
இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிக்கிறார். விக்டரி வெங்கடேஷின் 75-வது படமான சைந்தவ்-ஐ மறக்க முடியாத ஒன்றாக மாற்றும் நோக்கில், தலைசிறந்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.

ஹிட்வெர்ஸ் புகழ்பெற்ற சைலேஷ் கொலானு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் கதை எட்டு முக்கிய நடிகர்களை சுற்றி நடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏழு கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மற்றொரு மிக முக்கிய கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்ற நடிகராக வலம்வரும் ஆர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் பெயர் மனாஸ். மெல்லிய தோற்றம், ஸ்டைலிஷ் லுக்கில் மிஷின் கன்னை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஆர்யா, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அனைவரையும் கவர்கிறார்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பை கேரி பி.ஹெச்., தயாரிப்பு டிசைன் அவினாஷ் கொல்லா, இணை தயாரிப்பாளராக கிஷோர் தல்லூர் இருக்கிறார்.
பான் இந்தியா திரைப்படமாக சைந்தவ் உருவாகி வருகிறது. இந்த படம் அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழியில் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.
- தெலுங்கானாவில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று அமித் ஷா கூறினார்.
- பாஜக இங்கு ஒற்றை இலக்கத்தை தாண்ட முடியாது என்று பி.ஆர்.எஸ் பதிலடி.
தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அப்போது, பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, கே. சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். மேலும் தெலுங்கானா மாநிலத்தில் கே. சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை வெளியேற்றி, பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகள் குடும்ப அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி குடும்பத்தையும், பி.ஆர்.எஸ். கட்சி கல்வகுன்ட்லா குடும்பத்திற்கும் சேவையாற்றி வருகின்றன. வரவிருக்கும் தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை தழுவும். பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
அமித் ஷாவின் இந்த கருத்துக்கு பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் ரவுலா ஸ்ரீதர் ரெட்டி பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வரும் என அமித் ஷா பகல் கனவு காண்கிறார். ஆட்சிக்கு வருவதை மறந்துவிடுங்கள். (பாஜக) இங்கு ஒற்றை இலக்கத்தை தாண்ட முடியாது" என்றார்.
- அடுத்த தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை தழுவும் என்று அமித் ஷா கருத்து.
- கே.சி.ஆர். ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, கே சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். மேலும் தெலுங்கானா மாநிலத்தில் கே சந்திரசேகர ராவ் அரசாங்கத்தை வெளியேற்றி, பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தி இருக்கிறார்.
காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகள் குடும்ப அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி குடும்பத்தையும், பி.ஆர்.எஸ். கட்சி கல்வகுன்ட்லா குடும்பத்திற்கும் சேவையாற்றி வருகின்றன. வரவிருக்கும் தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி தோல்வியை தழுவும். பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

விரைவில் தெலுங்கானாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். மக்கள் கே சந்திரசேகர ராவ் ஆட்சியின் மீது நம்பிக்கையை இழந்து வருகின்றனர். இதனால் அடுத்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவுவார் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதோடு காங்கிரஸ் மற்றும் பிரதமர் மோடியின் ஆட்சியை ஒப்பிட்டு, விவசாயிகளுக்கு அதிக நன்மை ஏற்படுத்தியது பா.ஜ.க. ஆட்சி தான் என்று பல்வேறு நலத்திட்டங்களை அமித் ஷா எடுத்துரைத்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில், மத்திய கலாசார மற்றும் சுற்றுலா துறை மந்திரி ஜி. கிஷன் ரெட்டி, பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் பண்டி சஞ்சய் குமார், எம்.பி., பா.ஜ.க. ஒ.பி.சி. மோர்சா தேசிய தலைவர் டாக்டர் கே. லக்ஷமன், எம்.பி., டி.கே. அருணா, பா.ஜ.க. தேசிய துணை தலைவவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இந்தியா கூட்டணி செயல் திட்டம் என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.
- உபா சட்டத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது.
ஐதராபாத்:
அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மாற்று அல்ல. நாட்டை சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. கிட்டத்தட்ட பா.ஜனதா கூட்டணி 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது.
தேசத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத 3-வது அரசாங்கம் தற்போது தேவைப்படுகறது. அப்போது தான் இந்த நாட்டில் நல்லது நடக்கும்.
இந்தியா கூட்டணி என்பது உயரடுக்கு மக்களின் கிளப் ஆக உள்ளது. உண்மையில் அவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. இந்தியா கூட்டணி செயல் திட்டம் என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.
உபா சட்டத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சிறையில் வாடுகிறார்கள்.
இந்தியா கூட்டணிக்கு நாங்கள் செல்லமாட்டோம். நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம்.
தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. முதல்-மந்தரி சந்திரசேகரராவ் திறமையானவர். தொலை நோக்கு பார்வை கொண்டார். அவரது அரசியல் சாதுரியத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் ஓவைசி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் பா.ஜனதாவின் பி அணியாக செயல்படுகிறது என்று இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
- கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல அவசரப்பட வேண்டாம்.
திருப்பதி:
தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் இன்று அதிகாலை 4.43 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
வாரங்கலுக்கு கிழக்கே சுமார் 127 கிலோ மீட்டர் தொலைவில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இது லேசான அளவில் பதிவாகியுள்ளது என்பதால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இருப்பினும் மக்கள் இந்த நிலநடுக்கத்தால் சற்று பீதியடைந்துள்ளனர்.
3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டால் ஒருவர் எப்பொழுதும் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் மற்றவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும்.
நிகழ்வின் போது, ஒருவர் எப்போதும் பாதுகாப்பான இடத்தைத் தேட வேண்டும்.
வீட்டற்குள் இருப்பவர்கள், மக்கள் மேசை, மேசை அல்லது படுக்கைக்கு அடியில் மூடிக்கொண்டு கண்ணாடிப் பலகைகள், ஜன்னல்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல அவசரப்பட வேண்டாம்.
வெளியில் இருந்தால், கட்டிடங்கள் மற்றும் பயன்பாட்டு கம்பிகளை விட்டு விலகி, நகரும் வாகனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
அனைத்து செல்லப்பிராணிகளையும் வளர்ப்பு விலங்குகளையும் விடுவிப்பதை மனதில் கொள்ள வேண்டும், இதனால் அவை ஓடிவிடும் மற்றும் அதிர்வுகள் நிற்கும் வரை திறந்த வெளியில் இருக்க வேண்டும்.
மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் மற்றும் தீயை அணைக்க வேண்டாம் என்று அதிகரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- தேவேந்தர் கயான் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.
- துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மதின குடாவில் தனியார் ஓட்டல் உள்ளது. இதில் தேவேந்தர் கயான் என்பவர் பொது மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு மியா போரில் உள்ள பஜாரில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தேவேந்தர் கயானை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக்க தேவேந்திர் கயான் பஜாரில் அங்கும் இங்குமாக ஓடினார்.
இருப்பினும் மர்ம நபர்கள் விடாமல் துரத்திச் சென்று துப்பாக்கியில் சுட்டனர்.
இதில் தேவேந்தர் கயான் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
இதனால் பஜார் முழுவதும் பதற்றமாக காணப்பட்டது. அங்கிருந்த சிலர் தேவேந்தர் கயானை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மடப்பூர் டிசிபி சந்தீப் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
மேலும் அப்பகுதியில் இருந்த 6 துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றினர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.






