என் மலர்
இந்தியா

தெலுங்கானாவில் கனமழை: தெருக்களில் ரசாயன நுரை வெள்ளம்
- தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் வெளியேறியதால் நுரை பொங்கி வெள்ளமாக வந்தது.
- கால்வாய்களில் ரசாயன கழிவுகளை திறந்து விட்ட தொழிற்சாலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
குக்கட்பள்ளியில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள சாக்கடை கால்வாய்களில் தொழிற்சாலை கழிவுகளை திறந்து விட்டனர்.
தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் வெளியேறியதால் நுரை பொங்கி வெள்ளமாக வந்தது. கனமழை வெள்ளத்துடன் ரசாயன நுரை அங்குள்ள தரணி நகர் சீரடி நகர் பகுதி தெருக்களில் வெள்ளமாக சென்றது.
இது பனிக்கட்டிகள் போல தெருக்கள் முழுவதும் நிறைந்து கிடந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த உள்ளாட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கால்வாய்களில் ரசாயன கழிவுகளை திறந்து விட்ட தொழிற்சாலைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






