search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா- 47 கட்சிகளுக்கு பி.ஆர்.எஸ். தலைவர் கவிதா கடிதம்
    X

    பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா- 47 கட்சிகளுக்கு பி.ஆர்.எஸ். தலைவர் கவிதா கடிதம்

    • அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பெண்கள் பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வருகிற 18-ந் தேதி 22-ந் தேதி வரை நடக்கிறது.

    ஐதராபாத்:

    எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க கோரி தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவின் மகளும், பி.ஆர்.எஸ். கட்சியின் (பாரத் ராஷ்ட்ரிய சமீதி), தலைவர்களில் ஒருவருமான கே.கவிதா குரல் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தி அவர் 47 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினரான அவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோருக்கு இதை வலியுறுத்தியுள்ளார்.

    அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பெண்கள் பிரதிநிதித்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் தலைவர்களுக்கு தனித்தனியாக அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வருகிற 18-ந் தேதியிலிருந்து 22-ந் தேதி வரை நடக்கிறது.

    Next Story
    ×