என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது மனு.
    • தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீடு மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

    முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கினார்.

    இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த மனு மீது இன்று விசாரணைக்கு ஏற்கப்படவில்லை.

    மேலும், தவெக தாக்கல் செய்த வழக்கில் இடையீடு மனுவாக தாக்கல் செய்தால் தான் விசாரிக்க முடியும் எனவும் உயர்நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

    • விஜய் பேசியபோது மின்தடை ஏற்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என குற்றச்சாட்டு.
    • மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்ற தவெகவினரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

    கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    இந்நிலையில், கரூரில் விஜய் பேசியபோது மின்தடை ஏற்பட்டதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என குற்றச்சாட்டுக்கு மின்சாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய தலைமை பொரியாளர் ராஜலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் கூறுகையில்," கரூரில் விஜய் பிரசாரத்தின் போது மின்தடை ஏற்பவில்லை.

    கரூரில் விஜய் உரையாற்றும்போது தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

    நிகழ்ச்சி ஏற்பட்டாளரின் ஜெனரேட்டர் பயபன்படுத்தி எரியவிட்ட விளக்குகள்தான் அணைந்தன. மின்தடை செய்யவில்லை.

    மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்ற தவெகவினரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை, நிராகரிக்கப்பட்டது.

    சிலர் மரத்தில் ஏறியபோது மின்தடை செய்து போலீஸ் உதவியுடன் அவர்கள் இறங்கிய பின்பு மீண்டும் மின் விநியேகாம் செய்யப்பட்டது.

    விஜய் வந்து பிரசாரம் செய்தபோது மின்தடை செய்யப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தவெகவினரிடம் கலந்தாலோசித்த பின்னர் தான் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டது.
    • கரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு சிகிச்சை அளித்தனர்.

    கரூர் தமிழக வெற்றிக் கழக கூட்ட நெரிசலில் 40 பேரை பலி கொண்ட கூட்ட நெரிசல் தொடர்பாக ஆட்சியர் தங்கவேலு விளக்கம் அளித்துள்ளார்.

    கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டாக செய்தியாள்களை சந்தித்தனர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்ட நெரிசல் குறித்த தகவலறிந்ததும் முதலமைச்சர் உத்தரவுப்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    39 பேர் உயிரற்ற சடலங்களாவே மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டன.

    கரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு சிகிச்சை அளித்தனர்.

    செய்தியை கேள்விபட்டதும் முதலமைச்சர் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இறந்தவர்கள் அனைவரின் உடல்களும் கூராய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

    கரூரை சுற்றியுள்ள ஊர்களிலிருந்து 114 மருத்துவர்கள், 23 செவிலியர்கள், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் விரைந்தனர்.

    கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிர்காக்கும் சிகிச்சை அளித்தனர்.

    தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

    தவெகவினர் மனு அளித்தனர். தவெகவினர் குறுகலான பகுதிகளில் அனுமதியை கோரினர்.

    23-ம் தேதி அளித்த முதல் மனுவில் தவெகவினர் பெட்ரோல் பங்க் உள்ள ரவுண்டானா பகுதிக்கு அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டது.

    தவெகவினரிடம் கலந்தாலோசித்த பின்னர்தான் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டது.

    வேலுசாமிபுரத்தில் முன்னதாக வேறு கட்சியினர் கூட்டம் நடந்ததால் அதனை சுட்டிக்காட்டி அப்பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நேற்று காலை, தெற்கு ஒரிசாவின் உள் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு திசையில் நகர்ந்து,

    இன்று காலை, 08.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேற்கு விதர்பா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், அடுத்த 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழக்கக்கூடும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    30-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    28-ந்தேதி தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    29-ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
    • மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும்.

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இன்று காலை சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூரில் நேற்று இரவு நடந்த சம்பவம், மிகவும் வருந்தத்தக்கது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனால் இந்த சம்பவம் நடந்துவிட்டது.

    அந்தக் கூட்ட நெரிசலில் பல பேர், தங்களது இன்னுயிரை இழந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று இரவு உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்.

    அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து, இந்த கரூர் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் விளக்கம் ஒன்று கேட்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கேட்ட விளக்கத்திற்கு, தமிழக அரசு பதில் கொடுக்க வேண்டும். அவ்வாறு பதில் கொடுத்த பிறகு, அதைப்பற்றி விவரமாக பேசலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.

    கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்.

    முதற்கட்டமாக 39 பேரின் குடும்பங்களுக்கும் மொத்தமாக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.
    • எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    கரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.

    இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நேரில் ஆறுதல் கூறுவதற்கும், நிதி உதவி வழங்குவதற்கும் எப்போது கரூர் செல்வது என்பது தொடர்பாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அதன் அடிப்படையில் பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், இழப்பீடு வழங்குவதற்காகவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

    விஜய் கரூர் செல்வதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போலீசில் மனு கொடுக்க உள்ளனர்.

    • இப்படி ஒரு குறுகலான நெரிசல் மிகுந்த இடத்தை தேர்தல் பிரசாரத்திற்கு ஒதுக்கியது ஏன்?
    • போலீசார் தடியடி நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உயிர் பலிகளுக்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர்.

    கரூர் கூட்ட நெரிசலில் 40 உயிர்கள் பலியானதற்கு அரசு உரிய பதில் கூற வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், குறுகலான பாதை, நெரிசல் மிகுந்த பாதை என நான் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கூறுகின்றனர்.

    இப்படி ஒரு குறுகலான நெரிசல் மிகுந்த இடத்தை தேர்தல் பிரசாரத்திற்கு ஒதுக்கியது ஏன்?

    போலீசார் தடியடி நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உயிர் பலிகளுக்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர்.

    பெரிய மைதானம் போன்ற இடத்தில் தான் விஜய் பிரசாரத்திற்கு இடம் ஒதுக்கியிருக்க வேண்டும். இது யாருடைய தவறு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  

    • முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது
    • அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார்.

    கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார். 

    • பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
    • பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது.

    கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தாரையும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    * திருச்சியில் என்னுடைய நடைபயணத்திலும் மின் தடை ஏற்பட்டது.

    * கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

    * பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.

    * பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது. நடிகர்களை பார்க்க சென்று உயிரை விடுவதா?

    * பொதுமக்களும், த.வெ.க.வும் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும் என்றார். 

    • இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
    • மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    இதில் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த கவின் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

    • ஹேமலதாவுக்கு சாய்லெட்சனா (8), சாய்ஜீவா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
    • ஹேமலதா தனது 2 குழந்தைகளையும் விஜய் பிரசார கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.

    கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் நெஞ்சை உருக்கும் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தஜோதி இவரது மனைவி ஹேமலதா (வயது 30). அவர்களின் குழந்தைகள் சாய்லெட்சனா (8), சாய்ஜீவா (4). ஹேமலதா தனது 2 குழந்தைகளையும் விஜய் பிரசார கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.

    பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஹேமலதா, குழந்தைகள் சாய்லெட்சனா,சாய்ஜீவா ஆகியோர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

    ×