என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கவுண்டம்பாளையத்தில் 830 ஓட்டுகள் காணவில்லை என பா.ஜ.க.வினர் புகார் கூறியுள்ளனர்.
- உள்ளாட்சி தேர்தலில் 1353 ஓட்டு இருந்தன, தற்போது 523 ஓட்டு மட்டுமே இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கவுண்டம்பாளையம்:
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு 51.41 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கோவை தொகுதியில் 50.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கவுண்டம்பாளையத்தில் 830 ஓட்டுகள் காணவில்லை என பா.ஜ.க.வினர் புகார் கூறியுள்ளனர்.
அங்கப்பா பள்ளி பூத் எண் 214-ல் 523 ஓட்டு மட்டுமே உள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலில் 1353 ஓட்டு இருந்தன, தற்போது 523 ஓட்டு மட்டுமே இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே எஞ்சியோரையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமென தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுத்தார்.
- ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது.
- கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன்.
சென்னை:
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அதன்படி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், விஜய் ஆண்டனி, அரவிந்த் சாமி, ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு, நடிகைகள் குஷ்பு, ஆண்ட்ரியா, திரிஷா, அதிதி, இயக்குனர்கள் சங்கர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலரும் தனது வாக்கினை பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மனைவியின் பெயர் உள்ளது.
ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததென தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.
எல்லோரும் வாக்களியுங்கள்? pic.twitter.com/Yw6Xk0Hgsn
— Actor Soori (@sooriofficial) April 19, 2024
- நாமக்கல்லில் 57.67 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
- சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளனர்.
காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நீன்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது.
அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர். மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 57.67 சதவீத வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
4. ஆரணி- 56.73
5. கரூர் - 56.65
6. பெரம்பலூர்- 56.34
7. சேலம்- 55.53
8. சிதம்பரம்- 55.2
9. விழுப்புரம்- 54.43
10. ஈரோடு- 54.13
11. அரக்கோணம்- 53.83
12. திருவண்ணாமலை- 53.72
13. விருதுநகர்- 53.45
14. திண்டுக்கல்- 53.43
15. கிருஷ்ணகிரி- 53.37
16. வேலூர்- 53.17
17. பொள்ளாச்சி- 53.14
18. நாகப்பட்டினம்- 52.72
19. தேனி- 52.52
20. நீலகிரி- 52.49
21. கடலூர்- 52.13
22. தஞ்சாவூர்- 52.02
23. மயிலாடுதுறை- 52.00
24. சிவகங்கை- 51.79
25. தென்காசி- 51.45
26. ராமநாதபுரம்- 51.16
27. கன்னியாகுமரி- 51.12
28. திருப்பூர்- 51.07
29. திருச்சி- 50.71
30. தூத்துக்குடி- 50.41
31. கோவை- 50.33
32. காஞ்சிபுரம்- 49.94
33. திருவள்ளூர்- 49.82
34. திருநெல்வேலி- 48.58
35. மதுரை- 47.38
36. ஸ்ரீபெரும்புதூர்- 45.96
37. சென்னை வடக்கு- 44.84
38. சென்னை தெற்கு- 42.10
39. சென்னை மத்தி- 41.47
- தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது.
- காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, திருநெல்வேலி 48.58, மதுரை 47.38, ஸ்ரீபெரும்புதூர் 45.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு 51.41 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. விளவங்கோடு இடைத்தேர்தலில் 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 41.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக காணப்படுகிறது. தமிழகத்தின் மற்ற தொகுதிகளை ஒப்பிடுகையில் சென்னை மக்களிடம் வாக்களிக்கும் ஆர்வமில்லை.
குறைந்த வாக்குப்பதிவு கொண்ட தொகுதிகளாக வட, மத்திய, தென் சென்னை தொகுதிகள் உள்ளன. தென்சென்னையில் 42.10 சதவீதமும், வடசென்னையில் 44.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
பொது விடுமுறை அளித்தும் சென்னை மக்கள் வாக்களிக்க வராமல் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் 31 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, திருநெல்வேலி 48.58, மதுரை 47.38, ஸ்ரீபெரும்புதூர் 45.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
- காட்டுத் தீயால் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள மரம், செடிகள், கொடிகள் எரிந்து நாசமாகி வருகின்றது.
- காட்டுத்தீயை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு தாளவாடி, ஆசனூர், தலமலை, ஜீர்கள்ளி, கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், பவானிசாகர், சத்தியமங்கலம், விளாமூண்டி மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு யானைகள், சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகள் தற்போது கடும் வறட்சி நிறைந்த பகுதியாக மாறி உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது.
இதனால் வன விலங்குகள் போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் புகுவது தொடர்கதை ஆகி வருகிறது. வன விலங்குகள் தண்ணீர் இருக்கும் பகுதியான மாயாறு பகுதிக்கு செல்ல தொடங்கி விட்டன.
இந்நிலையில் தலமலை வனச்சரகத்திக்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத் தீயால் வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் பற்றி எரிந்து வருகிறது. பல அபூர்வ மூலிகை செடிகளும் எரிந்து நாசமானது. அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், மலை உச்சியில் இருப்பதாலும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாமலும் சம்பவ இடத்துக்கு இடத்துக்கு செல்ல முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்த காட்டுத் தீயால் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள மரம், செடிகள், கொடிகள் எரிந்து நாசமாகி வருகின்றது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக வனப்பகுதியில் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. சம்பவ இடத்திற்கு இன்று வனத்துறையினர் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
- திடீரென வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் 1745 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கே.என்.பி., காலனி பகுதியில் வாக்குச்சாவடி 222ல் வாக்களிக்க மாநகராட்சி மேயரும் திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க. செயலாளருமான தினேஷ் குமார் காலை 6:50 மணிக்கு வந்தார்.
இந்தநிலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் முறையான ஆவணங்களை காண்பித்து கையில் மை வைத்து வாக்குப்பதிவு செலுத்த சென்றார். திடீரென வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் வரை காத்திருந்த மேயர் தினேஷ்குமார் வாக்குப்பதிவு எந்திரம் சரிபார்க்கப்பட்டு சோதனை செய்த பிறகு மீண்டும் தனது வாக்கினை பதிவு செய்தார்.
- கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கோரிக்கை நிறைவேற்றும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
- வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.
பாலக்கோடு:
தருமபுரி பாராளுமன்ற தொகுதி பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதி அள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரெயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கோரிக்கை நிறைவேற்றும் வரை தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை கூட நடத்தவராததால் திட்டமிட்டபடி ஒட்டுமொத்த கிராம மக்களும் இன்று பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

வெறிச்சோடி காணப்படும் வாக்குசாவடி மையம்.
இதனால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. இக்கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆண் வாக்காளர்கள் 768 பேரும், பெண் வாக்காளர்கள் 668 பேரும் என மொத்தம் ஆயிரத்து 436 வாக்குகள் உள்ள நிலையில் இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகாதது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை எந்த ஒரு தேர்தல் அதிகாரியும் கிராமத்துக்கு வரவில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
- நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சிக்குட்பட்டது சீரங்கம்பட்டி கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- சீரங்கம்பட்டியில் இருந்து எட்டையம்பட்டிக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி டி.கே.என். புதூர் 2-வது வார்டு பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து சென்ற நிலையில் இன்று தாங்கள் யாரும் வாக்களிக்க செல்ல மாட்டோம் என கூறி ஊரின் முன்பு தேர்தல் புறக்கணிப்பு பதாகையை வைத்தனர். மேலும் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி தாங்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
யாரும் ஊருக்குள் வர வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.
நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சிக்குட்பட்டது சீரங்கம்பட்டி கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 450 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை என கூறி பேனர்கள் வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில்.
சீரங்கம்பட்டியில் இருந்து எட்டையம்பட்டிக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதை சரி செய்ய மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இன்னும் சாலை வசதி அமைத்து தரவில்லை. மேலும் கிராம மந்தைக்கு வண்ணக்கல் பதிக்க கோரிக்கை வைத்தோம். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. எங்கள் பகுதிக்கு பகுதி நேர ரேசன் கடை கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை கடை அமைத்து தரவில்லை. மேலும் எங்கள் பல கோரிக்கைகளை நிறைவேற்றாததால் இந்த தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட சின்ன அய்யன்குளம் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என கூறி அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா, கார்த்தி, பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
- விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற மக்களவை தேர்தலானது ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதே போல் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அதன்படி, நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா, கார்த்தி, பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
இதையடுத்து நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
வாக்களிக்க வந்த விஜயால் வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதையடுத்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) April 19, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம் pic.twitter.com/SboEtwyt83
- கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அரசு பள்ளி மற்றும் முருகன்புதூர் பகுதி அரசு பள்ளி வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க காத்திருந்தனர்.
- பெருந்துறை அடுத்த பட்டக்காரன் பாளையம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை வாக்குப்பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டது.
சித்தோடு:
பாராளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் காலை முதலே ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. ஆனால் இன்று காலை ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது.
ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தோடு அடுத்த மேட்டு நாசுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு காலை தொடங்கியது. இங்கு அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 23-ல் பொதுமக்கள் வாக்களிக்க காத்திருந்தனர்.
அப்போது அங்கு சோதனை வாக்குப்பதிவு முடிந்த உடன் 5 வாக்காளர்கள் மட்டுமே வாக்கு பதிவு செய்தனர் இதையடுத்து இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுது ஏற்பட்டது.
இதையடுத்து அடுத்த கட்டமாக எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதைதொடர்ந்து வாக்குப்பதிவு எந்திர பழுது சரி செய்யப்பட்டு ஓட்டுப்பதிவு மீண்டும் தெடங்கியது.
இதே போல் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 6 மணி முதலே மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அரசு பள்ளி மற்றும் முருகன்புதூர் பகுதி அரசு பள்ளி வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க காத்திருந்தனர்.
அப்போது அந்த 2 பகுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு எற்பட்டது. இதையடுத்து பணியாளர்கள் சரி செய்தனர். இதையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
இதேபோல் கோபிசெட்டி பாளையம் அடுத்த நாமக்கல்பாளையம் பகுதியில் இன்று காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு பூத்தில் காலை 8.20 மணிக்கு பழுது ஏற்பட்டது. இதையடுத்து பணியாளர்கள் வந்து பழுதை சரி செய்தனர். இதைதொடர்ந்து 8.40 மணிக்கு சரி செய்யப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் 20 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் மீண்டும் வாக்களித்து சென்றனர்.
பெருந்துறை அடுத்த பட்டக்காரன் பாளையம் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை வாக்குப்பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் பணியாளர்கள் வந்து சரி செய்தனர். இதையடுத்து மக்கள் நீண்ட வரிசையில் காதிருந்து வாக்களித்தனர். இதனால் இந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
- அலவந்தான்குளம் செயின்ட் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 93-ல் மொத்தம் 997 வாக்குகள் உள்ளன.
- பொதுக்கிணற்றில் குடிநீர் எடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.
நெல்லை:
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
இதில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர் அருகே உள்ள அலவந்தான்குளம் செயின்ட் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண் 93-ல் மொத்தம் 997 வாக்குகள் உள்ளன. ஆனால் காலை 10.30 மணி வரையிலும் அங்கு 12 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
மானூர் அருகே பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து அம்மன்கோவில் தெரு மக்கள், கிருஷ்ணன் கோவில் தெரு மக்கள், தெற்கு தெரு மக்கள் மற்றும் அயல்நாடு வாழ் வாக்காளர்கள் இங்கு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
அலவந்தான்குளம் பகுதியில் உள்ள பொதுக்கிணற்றில் குடிநீர் எடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என்று கூறி நெல்லை திருத்து மற்றும் பல்லிக்கோட்டை கிராம மக்கள் அங்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். பூத் வெறிச்சோடி காணப்பட்டது.
- ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது.
- மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். எனினும் ஒரு சில வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது காரணமாக ஓட்டுப்பதிவு சற்று தாமதமானது.
நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த கீரைக்காரன்தட்டு டி.டி.றி.ஏ. நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எந்திர கோளாறால் 45 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் எந்திர கோளாறு காரணமாக பெட்டைக்குளம் காதர் மீராசாகிப் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில்15 நிமிடமும், நவ்வலடி பள்ளியில் 10 நிமிடமும் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
களக்காட்டில் உள்ள கோமதி அருள்நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பேட்டரியில் சார்ஜ் இல்லாததால் வாக்குப்பதிவு எந்திரம் இயங்கவில்லை. இதனால் மாதிரி வாக்குப்பதிவு தாமதமானது. பின்னர் மாற்று பேட்டரிகள் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
நெல்லை மாநகரில் தச்சநல்லூர் அருகே ஊருடையான் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகின. உடனடியாக அந்த பழுது சரிபார்க்கப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், பொன்னம்பாறை, அரசூர், புதுக்குளம், தச்சன்விளை ஆகிய 5 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறால் ஓட்டுப்பதிவு சிறிது நேரம் தாமதமானது.






