என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
- மாநாட்டில் ஆண்கள், பெண்கள் அமருவதற்கு தனித்தனி வரிசை, இருக்கை அமைக்கப்படுகிறது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாடு தொடர்பாக மாவட்ட தலைவர்களை சந்தித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மாநாட்டுக்கு மாவட்ட வாரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்காக மாவட்டம், வட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாநாட்டுக்கு தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, மீண்டும் பாதுகாப்பாக அனுப்பி வைக்க கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பதிவெண் விவரங்கள் கட்சி தலைமை சேகரித்து வருகிறது.
இந்த நிலையில், மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாநாட்டு பந்தல் கால் நடும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் விஜய் பங்கேற்க இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும், மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி, மேடை அமைக்கும் பணிகள் தொடங்குகிறது.
மாநாட்டில் ஆண்கள், பெண்கள் அமருவதற்கு தனித்தனி வரிசை, இருக்கை அமைக்கப்படுகிறது. போதுமான அளவு கழிவறை, உணவருந்தும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படுகிறது. மாநாட்டில் 3 வழிப்பாதைகள் அமைக்கப்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவுடன் கூடிய வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையில் நல்ல உறவை உருவாக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.
- அவருடைய செயல்பாடுகளை பார்ப்போம் என்றால் ஆன்லைன் ரம்மிக்கு ஒரு பிராண்ட் தூதர் போல் உள்ளது.
காந்தி மண்டபத்தில் மதுபாடடில் கண்டெடுக்கப்பட்டதாகவும், அது மிகுந்த வருத்தம் அளிக்கிறது எனவும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்திருந்தார்.
அதற்கு தி.மு.க. அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-
ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையில் நல்ல உறவை உருவாக்கக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் நடவடிக்கைகள் எல்லாம் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவை எப்படியெல்லாம் துண்டிக்கலாம் என்ற வகையில் அமைந்திருக்கின்றன.
இன்றைய அவருடைய செயல்பாடுகளை பார்ப்போம் என்றால் ஆன்லைன் ரம்மிக்கு ஒரு பிராண்ட் தூதர் போல், நீட் தேர்வுக்கு ஒரு பி.ஆர்.ஓ. போல் இருந்தால் எப்படி நடவடிக்கை இருக்குமோ, அப்படிப்பட்ட நடவடிக்கைகளைதான் ஆளுநர் மேற்கொண்டு இருக்கிறார்.
காந்தி மண்டபத்திற்குள் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. அது மிகுந்த வருத்தம் அளிக்கிறது எனக் கூறியிருக்கிறார். காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடம் போன்றவை எல்லாம் பணியாளர்கள் கொண்டு சுத்தம் செய்து வழக்கம்.
தி.மு.க. அரசு மது விலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு. மதுவை ஒழிக்க வேண்டுமென்றால் எல்லா மாநிலங்களும் அதை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசுதான் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கும் முதல்வராக மு.க. ஸ்டாலின் இருப்பார்.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.
- மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.
- மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.
மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது:-
மாநாடு தொடங்கியதும் மழை வரும் என்று பயந்தேன். இயற்கை நம் பக்கமே உள்ளது. மது ஒழிப்பு மாநாட்டிற்கு லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த மாநாடு அரசியலுக்காகவோ, தேர்தலுக்காகவோ இல்லை. மது வேண்டாம் எனக்கூறும் அனைவரின் ஆதரவும் நமக்கு தேவை.
மது ஒழிப்பு ஒற்றைக் கொள்கை- கவுதம புத்தரின் முழக்கம் அது. புத்தர் மட்டுமல்ல உலகில் எந்த மகானும் மதுவை ஆதரிக்கவில்லை.
மது ஒழிப்பு மட்டுமே இன்றைய மாநாட்டின் ஒரே கோரிக்கை. இந்த மாநாடு, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மாநாடு.
மதுகடைகள் நாளை மூடுவதாக இருந்தால், இன்றே மதுபாட்டில்களை 2 மடங்கு வாங்கி வைக்கிறார்கள். இந்தியா முழுவதும் 7 அல்லது 8 நாட்கள் மட்டுமே மதுக்கடைகள் மூடப்படுகிறது. மற்ற நாட்களில் மது ஆறாக ஓடுகிறது.
மது ஒழிப்பில் திமுகவுக்கும் உடன்பாடு உள்ளது. நடைமுறையில் சிக்கல் இருப்பதாகவே திமுக நினைக்கிறது. மது ஆலைகள் வைத்திருப்பவர்கள் திமுகவினர், அவர்கள் எப்படி மாநாட்டிற்கு வருவார்கள் என்றும் கேட்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வைத்து, மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பில் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.
- தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து போராடுகின்றவர் திருமாவளவன்.
தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.

இந்த மாநாட்டில் அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு மது விலக்கைத் தேசியக் கொள்கையாக வரையறுக்கவும் சட்டமியற்றவும் வேண்டும் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாநாட்டில் ரவிக்குமார் எம்.பி. பேசியதாவது:- ஒடுக்கப்பட் மக்களின் கோரிக்கைகளை மட்டும் முன்வைக்கும் கட்சியல்ல விடுதலை சிறுத்தைகள். தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து போராடுகின்றவர் திருமாவளவன். இந்தியா முழுவதும் மது அருந்தும் ஆண்களின் சதவீதம் 22 சதவீதமாக இருக்கையில், தமிழ்நாட்டில் 32 சதவீதமாக உள்ளது என்றார்.
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
- முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் சில புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.
இதையடுத்து, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ததுணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- பரங்கிமலை துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம்.
- தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம்.
சென்னை:
தமிழ்நாட்டில் 4 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்விவரம்:-
* திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமனம்.
* சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹடிமானி நியமனம்.
* பரங்கிமலை துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம்.
* தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம்.
- ஆக்கிரமிப்பு என்று கூறி ஏழைகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தை யூனியன் பிரதேசமாக குறைக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?
சென்னை :
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் மோடி மற்றும் அவரது அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பார் என்று காந்தியின் குடும்பத்தில் ஒருவரின் அறிக்கையைப் படித்தேன்.
அதைப் படித்துவிட்டு என்னையே நான் கேட்டுக்கொள்ளும் கேள்விகள்...
சாதி, மதங்களைக் கடந்து திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர்கள் மீதான தாக்குதல்களை காந்தி அங்கீகரித்திருப்பாரா?
ஆக்கிரமிப்பு என்று கூறி ஏழைகளின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?
விரும்பாத மக்கள் மீது பொது சிவில் சட்டத்தை திணிக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?
இந்தியாவின் மக்கள்தொகையில் மேலே உள்ள 1 சதவீதத்தினருக்கும் கீழ்மட்டத்தில் உள்ள 10/20 சதவீதத்தினருக்கும் இடையிலான சமத்துவமின்மையை விரிவுபடுத்தும் கொள்கைகளை காந்தி அங்கீகரித்திருப்பாரா?
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தை யூனியன் பிரதேசமாக குறைக்க காந்தி ஒப்புதல் அளித்திருப்பாரா?
இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது... என்று பதிவிட்டுள்ளார்.
- சாலை மோசமாக உள்ளதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது.
- சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சென்னை :
மத்திய சென்னை தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (NH 48) நீண்ட நாட்களாக நடக்கும் விரிவாக்காப் பணிகளாலும், மிக சோமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
சாலை மோசமாக உள்ளதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது. சாலையை முறையாக பராமரித்த பிறகே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
- ஆளுநருக்கு காந்தி மண்டபத்தில் மது பாட்டில் தெரிந்திருக்கிறது.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவை துண்டிப்பதாக ஆளுநரின் செயல்பாடு உள்ளது.
ஆளுநருக்கு காந்தி மண்டபத்தில் மது பாட்டில் தெரிந்திருக்கிறது.
காந்தி மண்டபம் உள்ளிட்ட இடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. திமுக அரசு மது விலக்கிற்கு எப்போதும் ஆதரவான அரசு.
மதுவை ஒழிப்பது மத்திய அரசின் கையில் தான் உள்ளது. மதுவை தமிழக அரசால் மட்டும் ஒழித்து விட முடியாது.
மது விலக்கு தொடர்பாக ஒட்டுமொத்த தேசத்திற்குமான கொள்கையை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சந்திரா பாய் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத் ராவ், முன்னாள் ராணுவ வீரர்.
இவரது மனைவி சந்திராபாய் (வயது 75). தம்பதியினருக்கு ரமேஷ் ராவ், சீனிவாச ராவ் என்ற மகன்களும், லட்சுமிபாய் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஸ்வநாத்ராவ் கடந்த 2016-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து சந்திராபாய், மகள் லட்சுமி பாய் கட்டிய வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமி பாய் வழக்கம் போல் தனது தாய் சந்திரா பாய்க்கு இன்று காலை 7 மணி அளவில் போன் செய்தார்.
அப்போது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமிபாய் உடனடியாக, அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் அண்ணன் ரமேஷ் ராவ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி ரமேஷ் ராவ் மற்றும் உறவினர்கள் உடனடியாக சென்று பார்த்தனர்.
அப்போது சந்திரா பாய் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுவற்றில் ரத்த காயங்கள் இருந்தது. அவரது ஆடைகளும் கலைந்து கிடந்தது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் உடனடியாக வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கீர்த்தி, மங்கையர்கரசி, பேபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணை குறித்து அவர்கள் கூறியதாவது:-
மூதாட்டி தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்ட மர்மகும்பல் திட்டமிட்டு, மூதாட்டியின் தலையை சுவற்றில் மோதி கொலை செய்துள்ளனர். இறந்தகிடந்த சந்திராபாயின் பின்பக்க தலையில் ரத்தக்காயம் இருப்பதோடு, வீட்டின் சுவற்றில் ரத்தக்கரைகளும் படிந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பிரமாண்டமான முறையில் மாநாடு முகப்புகள், பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெற்றது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில துணை செயலாளர்கள் செஞ்சோலை, சிற்றரசி, மங்கையற்கரசி, அமுதா பொற்கொடி உள்பட பலர் முன்னிலை வகிக்கின்றனர். மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் நற்சோனை வரவேற்று பேசுகிறார்.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அய்யாவைகுண்டர் இயக்கத்தின் தலைவர் பால.பிரஜாபதி அடிகளார், பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ., துரை.ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணை தலைவர் வாசுகி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனிராஜா, காங்கிரஸ் எம்.பி.சுதா, ம.தி.மு.க. துணைபொதுச்செயலாளர் ரொஹையா ஷேக் முகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலசெயலாளர் பாத்திமா முசபர், மனிதநேய மக்கள் கட்சி மகளிர் அணி பொருளாளர் ஷான் ராணி ஆலிமா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன் ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர். முடிவில் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில பொருளாளா் மல்லிகையரசி நன்றி கூறுகிறார்.
மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க தலைமையிடத்து பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உள்ளனர்.
இதையொட்டி பிரமாண்டமான முறையில் மாநாடு முகப்புகள், பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நேற்று முதலே உளுந்தூர்பேட்டைக்கு வரத்தொடங்கி உள்ளனர். இன்று மதியம் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் இந்த மாநாடு பொதுமக்கள் மட்டுமின்றி சக கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநாட்டையொட்டி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மகாளய அமாவாசையில் இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவார்கள்.
- விரதம் மேற்கொள்பவர்கள் ஆண்கள் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.
திருச்செந்தூர்:
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமானவர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மாதம்தோறும் அமாவாசை திதி வரும் அந்த திதிகளில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதில் சிலர் தை மாதம் வரும் அமாவாசை, ஆடி மாத அமாவாசை நாட்களில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இந்த நாட்களில் வரும் அமாவாசைக்கு திதி கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அவ்வாறு செய்தால் ஒரு வருட அமாவாசையில் திதி கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாளய அமாவாசையில் இறந்து போன தங்கள் முன்னோர்கள் தங்கள் வீடுகளுக்கு வருவார்கள். அவ்வாறு வரும் அவர்களை நினைத்து விரதம் மேற்கொண்டு கடல், ஆறு ஆகிய பகுதிகளில் நீராடி எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்தால் நம் வீட்டிற்கு வந்த மூதாதையர்கள் அகம் மகிழ்ந்து நம்மை வாழ்த்திப் செல்வார்கள் என்பது ஐதீகம்.
அதேபோல் விரதம் மேற்கொள்பவர்கள் ஆண்கள் மட்டுமே திதி கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகம்.






