என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது
- சென்னை, திருவள்ளூர், நாகை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், நாகை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- புயல் கரையை கடந்த பிறகும் கடலூர், மரக்காணம், விழுப்புரம் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
- டெல்லி மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.
புயல் கரையை கடந்த பிறகும் கடலூர், மரக்காணம், விழுப்புரம் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னையிலிருந்து அந்தமானின் போர்ட் பிளேயர், டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்களில் சேவை ரத்து செய்யப்பட்டது.
பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கோலாலம்பூர், சிங்கப்பூர், அபுதாபி, துபாய் உள்ளிட்ட 6 சர்வதேச விமானங்கள் உள்ளிட்ட 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 26 பன்னாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் ஆனது.
- ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
- 22 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று (நவம்பர் 30) நள்ளிரவு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், புயல் கரையை கடந்த புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது.
சில இடங்களில் சூறைக் காற்றும் வீசுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புயல் கரையை கடந்த பிறகும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போதும் உள் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
- வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது.
- சிலிண்டர் விலையில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் இருக்கும்.
சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் இந்திய பணத்தின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் கியாஸ் சிலிண்டர் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். சர்வதேச சந்தைக்கு ஏற்பட்ட தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகிறது. கியாஸ் சிலிண்டர்கள் விலை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் கடந்த பல மாதங்களாக மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது.
சிலிண்டர் விலையில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் இருக்கும்.
இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
கடந்த மாதம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.61.50 விலை அதிகரித்து இருந்த நிலையில், இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக நிர்வாகம் அறிவித்திருந்தது.
- நள்ளிரவிலேயே புயல் கரையை கடந்து மழை குறைந்தது
சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்துள்ளது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.
இதற்கிடையே நேற்று காலை முதல் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது சென்னை விமான நிலைய ஓடு தளத்திலும் தண்ணீர் தேங்கி நின்றது. மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்திருந்தது.
அடுத்து இன்று [நவம்பர் 1] அதிகாலை 4 மணிக்கு மீண்டும் சேவைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நள்ளிரவிலேயே புயல் கரையை கடந்து மழை குறைந்ததால் விமான சேவை அறிவிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் மூன்று மணி நேரம் முன்னதாக நள்ளிரவு 1 மணிக்கே தொடங்கியுள்ளது. சுமார் 13 மணி நேரங்கள் கழித்து விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.
- சென்னையில் 56 சமையல் கூடங்களில், உணவு தயாரிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- 143 முகாம்களில் 4,990 நபர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சந்தித்தார்.
அப்போது அவர், ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிகள் குறித்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வருவதால் சென்னையில் காற்று மற்றும் மழையின் வேகம் குறைந்துள்ளது.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை, வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
சென்னையில் 56 சமையல் கூடங்களில், உணவு தயாரிக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
143 முகாம்களில் 4,990 நபர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 3.20 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கி உள்ளோம். மழையில் தாக்கம் குறையும் வரை உணவு உள்ளிட்டவை வழங்கப்படும்.
சென்னையில் மின்சாரம் பாய்ந்து 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீர் இன்று இரவே வெளியேற்றப்படும். சென்னையில் 2904 மோட்டார் பம்புகளை கொண்டு மழைநீர் அகற்றப்பட்டு வருகிறது.
மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கு இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் வந்துள்ளது. மின்சாரம் துண்டிப்பு புகார்கள் பெறப்பட்டு உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது.
இயற்கையை மீறி யாரும் ஒன்றும் செய்ய முடியாது. பொது மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
- ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்னும் 3 அல்லது 4 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலையில் மழை நீர் தேங்கி நின்றது.
இதில், மின்சாரம் தாக்கி இதுவரை மூன்று பேர் உயிரிழிந்துள்ளனர்.
இந்நிலையில், வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் என்பவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாவட்டம், வேளச்சேரி விஜயநகர் முதல் பிரதான சாலை, இரண்டாவது குறுக்குத் தெருவில் சக்திவேல், த.பெ.விநாயகம், வயது 47 என்பவர் இன்று (30.11.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் பெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழையால் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
சக்திவேலின் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மின்சார வாரியம் சார்பாக ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 50 எச்.பி. மோட்டாரை இயக்கியபோது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
- சென்னையில் மின்சாரம் பாய்ந்து இன்று ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னை:
சென்னையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில், சென்னை வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இசைவாணன் என்பவர் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்து உள்ளார். கொளத்தூரை சேர்ந்த அவர், 50 எச்.பி. மோட்டாரை இயக்கியபோது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
அவருடைய உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. இதனால், சென்னையில் மின்சாரம் பாய்ந்து இன்று ஒரே நாளில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
இதேபோல் சென்னை வேளச்சேரியில் விஜயநகர் 2-வது தெருவில் புயல் மற்றும் மழை எதிரொலியாக, மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் அந்த வழியே நடந்து சென்ற சக்திவேல் (வயது 45) என்பவர் மீது அந்த கம்பி விழுந்துள்ளது. இதில், அவர் உயிரிழந்து உள்ளார்.
இதுபற்றி அறிந்ததும் உடனிருந்தவர்கள் உடனடியாக அவருடைய உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிராட்வே பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர் இன்று காலையில், ஏ.டி.எம். மையத்துக்கு சென்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில், வேளச்சேரியில் மற்றொரு நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து உள்ளார்.
- தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை.
- 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்னும் 3 அல்லது 4 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செல்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் 10ம் தேதி வரை மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
- வங்கக்கடலில் நிலவி வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.
- அடுத்த 3 அல்லது 4 மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் நிலவி வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 அல்லது 4 மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது.
- அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது.
இதன் எதிரொலியால், ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது.
மணிக்கு அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும், அடுத்த 3- 4 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
- 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
சென்னை:
வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.






