என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    6 சர்வதேச விமானங்கள் உள்ளிட்ட 12 விமானங்கள் ரத்து
    X

    6 சர்வதேச விமானங்கள் உள்ளிட்ட 12 விமானங்கள் ரத்து

    • புயல் கரையை கடந்த பிறகும் கடலூர், மரக்காணம், விழுப்புரம் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
    • டெல்லி மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.

    புயல் கரையை கடந்த பிறகும் கடலூர், மரக்காணம், விழுப்புரம் பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    சென்னையிலிருந்து அந்தமானின் போர்ட் பிளேயர், டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்களில் சேவை ரத்து செய்யப்பட்டது.

    பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கோலாலம்பூர், சிங்கப்பூர், அபுதாபி, துபாய் உள்ளிட்ட 6 சர்வதேச விமானங்கள் உள்ளிட்ட 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய 26 பன்னாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் ஆனது.

    Next Story
    ×