என் மலர்
தமிழ்நாடு
X
இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
Byமாலை மலர்30 Nov 2024 7:56 PM IST
- வங்கக்கடலில் நிலவி வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.
- அடுத்த 3 அல்லது 4 மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் நிலவி வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 அல்லது 4 மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இரவு 10 மணி வரை 10 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X