என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கலைஞர் மு.கருணாநிதி புறவழி சாலையில், காரைக்கால் நகர போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் காரைக்காலில் அண்மையில் திருட்டு போன வாகனம் என்று தெரியவந்தது.

    தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், அவர் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(வயது38) என்றும், இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேலும் 7 மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதனை அடுத்து போலீசார் அவரிடம் இருந்த 8 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • இறந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் சிற்பம் உருவாக்கப்பட்டு இருந்தது.
    • இன்று அதிகாலை பெய்த மழையினால் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் கலைந்து விட்டது.

    புதுச்சேரி:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் புதுவையில் 2 நாட்கள் நடக்கிறது.

    வாக்காளர் திருத்த முகாம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மணல் சிற்பம் வடிவமைத்தனர். வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.

    இதில் இறந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் சிற்பம் உருவாக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேர்தல்துறை அதிகாரிகள் யானை பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் என்பதால் யானை மணல் சிற்பம் இடம் பெறக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

    இதையடுத்து 9 மணி நேரமாக உருவாக்கப்பட்ட லட்சுமி யானையின் மணல் சிற்பம் நள்ளிரவே கலைக்கப்பட்டு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு சிற்பங்கள் மட்டுமே இடம்பெற்றது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த மழையினால் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் கலைந்து விட்டது.

    யானை மணல் சிற்பம் கலைக்கப்பட்ட இடத்தில் தேர்தல் துறை என்ற வாசகம் எழுதப்பட்டது.

    • காரைக்காலில் சமூக வலைத்தளம் மூலம் 3-ம் நம்பர் லாட்டரி விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • லாட்டரி விற்பனை செய்வதாக காரைக்கால் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் புதிய பஸ் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர், சமூக வலைதளம் மூலம் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 3 -ம் நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக காரைக்கால் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில், காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி தெருவை சேர்ந்த செல்வம்(வயது33) என்ற வாலிபர், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரியை விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அந்த நபரை கைது செய்து. அவரிடம் இருந்த செல்போன், 3 நம்பர் லாட்டரி எண்கள் மற்றும் ரூ.300 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த கால ஆட்சியில் புதுவையை சேர்ந்த 95 சதவீதம் பேர் அரசு வக்கீல்களாக சென்னை மற்றும் புதுவை கோர்ட்டுகளில் நிரப்பப்பட்டுள்ளது.
    • கோவில், குடியிருப்பு, பள்ளி அருகில் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளில் அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி அனுமதி அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ்தான் தான் புதுவையில் முதன்மையான கட்சி என்றும் மதசார்பற்ற கூட்டணி நடத்தும் போராட்டங்களுக்கு காங்கிரஸ் தான் தலைமை தாங்கும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    இதற்கு புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. கூறும்போது, நாங்கள் கொள்கையை கூறியே கட்சியை வளர்க்கிறோம். தி.மு.க.வுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க முடியாது என்றார். இது கூட்டணி கட்சிகளுக்கிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குப்பை டெண்டரில் இமாலய ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு வைத்தேன். பெங்களூரு ஒப்பந்ததாரருக்கு 2 ஆண்டு காலம் உள்ள நிலையில் அவசர அவசரமாக டெண்டர் வைக்க காரணம் என்ன? குப்பை அள்ளும் டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சர் அலுவலகம் தலையிடவில்லை என்றால் நீதி விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

    நிறுத்தப்பட்ட டெண்டருக்கு மேல் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்துக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

    கடந்த கால ஆட்சியில் புதுவையை சேர்ந்த 95 சதவீதம் பேர் அரசு வக்கீல்களாக சென்னை மற்றும் புதுவை கோர்ட்டுகளில் நிரப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 35 பேரில் 15 பேர் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளிமாநிலத்தை சார்ந்தவர்கள். கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    முதலமைச்சரின் பரிந்துரை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த நியமனத்தில் கவர்னர் தனக்கு பங்கு இல்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது. இதற்கு கவர்னர் பதில் சொல்ல வேண்டும்.

    கோவில், குடியிருப்பு, பள்ளி அருகில் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி அனுமதி அளித்துள்ளார். மனு கொடுக்க வந்த மக்களிடம் கூடுதலாக 100 மதுபான கடைகள் வைக்கப்போகிறது என பேசியிருக்கிறார்.

    பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் எதற்கும் வாய் திறப்பதில்லை. மணக்குள விநாயகர் கோவில் யானைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம். யானை உயிரிருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

    பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தபோது கடந்த கால ஆட்சியில் தகுந்த பாதுகாப்பு கொடுத்தோம். மக்கள் அனைவரின் எண்ணம் கோவிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என்பதுதான்.

    தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு தி.மு.க. தான் தலைமை. ஆனால் புதுவையில் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடைபெற்றது. எந்த கட்சியும் பெரியது, சிறியது இல்லை. எல்லா கட்சிகளுக்கும் பலம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூத்த பெண் வாணிஸ்ரீக்கு கும்பகோணத்தில் திருமண ஆகி, விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
    • கணவரிடம் விசாரித்தபோது, அவரும் கடந்த 3 தினங்களாக வீட்டுக்கு வரவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி குப்புசெட்டி ச்சாவடி தெருவை சேர்ந்த வர் முருகேசன். கூலி வேலை செய்துவரும் இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் வாணிஸ்ரீக்கு கும்பகோணத்தில் திருமண ஆகி, விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இதனால், வாணிஸ்ரீ, தாய் வீட்டுக்கு வந்துள்ளார். தாய் வீட்டு பீரோவில், தனது தாலி செயின், நெக்லஸ், தங்ககாசு உள்ளிட்ட சுமார் 6.50 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தார். சம்பவத்தன்று , சீதாலட்சுமி வீட்டை பூட்டி சாவியை தனது கணவர்வசம் ஒப்படைத்துவிட்டு, காரைக்கால் அருகே அம்பகரத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு வந்து, கணவரிடம், சாவியை வாங்கி வீட்டை திறந்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6.50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரிடம் விசாரித்தபோது, அவரும் கடந்த 3 தினங்களாக வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து, சீதாலட்சுமி கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்க நகைகளை திருடிசென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

    • காரைக்காலில் வீட்டில் மின்சாதன பொருட்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • வீரபிரபுவை கைது செய்து, பொருட்களை மீட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு பிடாரி கோவில் தெருவைச்சேர்ந்தவர் புவனேந்திரன். இவர், காரைக்கால் எஸ்.எஸ்.கார்டன் ஏவி.நகரில் புதிய வீடு கட்டும் சிவில் காண்டிராக்டர் எடிசன் என்பவரிடம் கட்டிட ஆசாரி மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். தினசரி வேலை முடிந்தவுடன், ஆசாரி வேலை தொடர்பான எலெக்டிரிக்கல்ஸ் பொருட்களை, கட்டிடத்தின் உள்ளேயே வைத்துவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கட்டர், கிரைண்டிங் மிஷன் உள்ளிட்ட எலெக்டி ரிக்கல்ஸ் பொருட்களை வைத்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது, அவை அனைத்தும் திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர், எடிசனிடம் இதைபற்றி கூறினார். அவர் அருகில் உள்ள வீடுகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, காரைக்கால் அம்முகுட்டி சந்தில் வசிக்கும் வீரபிரபு(வயது33) என்பவர் மோட்டார் சைக்களில் வந்து மேற்கண்ட வீட்டில் எலெக்ட்ரிக்கல்ஸ் பொருட்களை திருடி ச்செல்வது தெரியவந்தது. தொடர்ந்து, இது குறித்து, புவனேந்திரன் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவுச் செய்து, வீரபிரபுவை கைது செய்து, பொருட்களை மீட்டனர்.

    • யானை லட்சுமி காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்
    • யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று மரணம் அடைந்தது. இன்று காலை 6.15 மணியளவில் வழக்கமான நடைபயிற்சிக்கு யானையை பாகன் அழைத்துச்சென்றார். கல்வே பள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது. அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர். பின்னர் யானை லட்சுமியின் உடல், கிரேன் மூலம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின் யானை லட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் மற்றும் எம்எல்ஏக்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதிச்சடங்கிற்கு பிறகு யானையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, பின்பு அடக்கம் செய்யப்பட்டது.



    இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது. 5 வயதாக இருந்தபோது, 1996ல் தொழிலதிபர் ஒருவர் கோவிலுக்கு யானையை பரிசாக அளித்தார். வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். இந்த யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது. இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பாக பழகிவந்தது. காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். யானையைப் பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பேர் வருவார்கள். யானை லட்சுமியின் மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • டிரைவரிடம் வாகன ஆவணங்களை கேட்டபோது, அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று, மது போதையில் இருப்புதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால், சப்.இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், திருநள்ளாறு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக வெளி மாநில பதிவு எண் கொண்ட கிரேன் வாகனம் ஒன்று வேகமாக வந்தது. உடனே அதை நிறுத்தி டிரைவரிடம் வாகன ஆவணங்களை கேட்டபோது, அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில், மத்திய பிரதேசம், கந்த்வாணி மாவட்டம், ஜூவான் வெல் பெக்ல்யா மகன் ரமேஷ் முஜ்ஹஸ்டா சிங் (வயது39) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று, மது போதையில் இருப்புதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர். பின்னர், அவரை, காரைக்கால் கேர்ட்டில் ஆஜர்படுத்தினர். குற்றவியல் நீதிபதி லிசி, மது போதையில் கிரேன் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    • யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. மணக்குள விநாயகரை நாட்டின் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருவார்கள். இந்த கோவிலுக்கு 1996ல் தொழிலதிபர் ஒருவர் யானையை பரிசாக அளித்தார். 5 வயதான பெண் யானைக்கு லட்சுமி என பெயர் சூட்டப்பட்டது. வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். ஆனால் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது.

    இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பை பெற்றது. கோவில் வாசலில் நிற்கும் யானை லட்சுமியுடன் கோவிலுக்கு வருகிற பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு பிறகு போட்டோ எடுத்துக்கொள்வது, ஆசி பெறுவதும் வழக்கம். யானை லட்சுமிக்கு ஈஸ்வரன் கோவிலுக்கு பின்புறம் கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்குதான் இரவில் யானை லட்சுமி ஓய்வெடுக்கும். வழக்கம்போல் நேற்று இரவும் யானை லட்சுமி கொட்டிலில் ஓய்வெடுத்தது.

    இன்று காலை 6.15 மணியளவில் நடைபயிற்சிக்கு பாகன் அழைத்துச்சென்றார். கல்வேபள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது.

    அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர்.

    பின்னர் யானை லட்சுமி பொதுமக்கள் அஞ்சலிக்காக மணக்குள விநாயகர் கோவில் முன்பு வைக்கப்பட்டது. அங்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழகத்தில் இருந்து கால்நடைத்துறை டாக்டர்கள் வந்து யானை லட்சுமியை உடற்கூராய் செய்கிறார்கள். அதன்பின்னர் யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிழை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"யானை லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது. தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி செல்வார் யானை லட்சுமி. யானை லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

    • கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    • திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

    புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.

    லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றுள்ளது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் யானை லட்சுமி இன்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது.

    அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தனது மனைவி யுடன் சண்டை போட்டு க்கொண்டி ருந்தபோது, ஊர்க்கா ரர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
    • தடுக்கவந்த மகன் இருதயராஜையும் செந்தில்குமார் கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கோட்டுச்சேரி கீழகாசா குடியைச்சேர்ந்தவர் ஜேம்ஸ்மேரி (வயது60). இவரது மகன் இருதயராஜ். இருதயராஜ் பந்தல்வேலை செய்துவருகிறார். கடந்த 26ந் தேதி ஜேம்ஸ்மேரி வசிக்கும் பகுதியில், செந்தில்கு மார் என்பவர் தனது மனைவி யுடன் சண்டை போட்டு க்கொண்டி ருந்தபோது, ஊர்க்கா ரர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். அந்த இடத்தில், ஜேம்ஸ்மேரியும் இருந்தார். கடந்த 27-ந் தேதி செந்தில்குமார் ஜேம்ஸ் மேரி வீட்டு வாசலுக்கு சென்று, எங்கள் குடும்ப பிரச்சனையில் ஏன் தலையிடுகிறீர்கள் என கேட்டு, கையில் வைத்திருந்த கட்டையால் ஜேம்ஸ்மேரியை தாக்கினார்.

    இதனை தடுக்கவந்த மகன் இருதயராஜையும் செந்தில்குமார் கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 2 பேரும் கோட்டுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி பெற்று, தொடர் சிகிசைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு ஜேம்ஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நடராஜன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
    • ஊஞ்சல் கயிற்றில், மீனா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு அத்திபடுகை மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 37). இவர், காரைக்கால் பொதுப்ப ணித்துறையில், என்.எம்.ஆர். ஆக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (35). இவர்களுக்கு வேதிகா (5) ஹர்சிதா (1) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.நடராஜன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் நடராஜனின் மனைவி மீனா, தினசரி மது அருந்திவிட்டு வந்தால், எப்படி குடும்பம் நடத்துவது? இப்படியே நீ செய்தால் ஒரு நாள் தற்கொலை செய்து கொள்வேன் என கண்டி த்துள்ளார்.

    சம்ப வத்தன்று பகல் வழக்கம் போல், நடராஜன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவி மீனா நடராஜனை கண்டி த்துள்ளார். அதை கண்டு கொள்ளாத நடராஜன் சாப்பி ட்டுவிட்டு உறங்கிவிட்டார்.மா லையில் நடரா ஜனுக்கு, மீனா டீ போட்டு கொடுத்து ள்ளார். அதை குடிக்க மறுத்து வெளியில் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறை உள் பக்கமாக தழ்பாழ்போ ட்டு இருந்தது. நடராஜன் கதவை தட்டினார் ஆனால் திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த நடராஜன், கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ஊஞ்சல் கயிற்றில், மீனா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த நடராஜன் சப்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்த்தினர் ஓடிவந்தனர்.

    அவர்கள் உதவியுடன், மீனாவை மீட்டு திருநள்ளாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்கர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து, நடராஜன் திருநள்ளாறு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×