என் மலர்
ஒடிசா
- இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
- வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும்.
பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பரம்பரை அரசியலுக்கு சவால் விட்டதாகவும், இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, 'முதலில் தேசம்' என்ற சித்தாந்தத்திற்குக் கிடைத்த மரியாதை" என்று கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
எல்.கே. அத்வானி ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பிடியில் இருந்து விடுவிக்க தொடர்ந்து போராடினார். அனைவருக்கும் வழிகாட்டினார். அவர் பரம்பரை அரசியலை சவால் செய்தார். இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், நாட்டின் ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும். மோடியின் உத்தரவாதம் எல்லா நம்பிக்கைகளும் சரியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
- பிரதமர் மோடி அசாம் செல்கிறார்.
புவனேஸ்வர்:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று ஒடிசா சென்றார். அங்கு அவர் ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெறும் விழாவில் ரூ.68,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பின்னர் பிரதமர் மோடி அசாம் செல்கிறார்.
- தேர்தலில் வாக்களிக்க இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு என்றார்.
- இதன்பின் வாக்களிக்க தேர்தல் இருக்காது என கார்கே தெரிவித்தார்.
புவனேஷ்வர்:
பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் காங்கிரஸ் கட்சியின், முதல் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் தெலுங்கானாவில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, பல மாநிலங்களில் நடக்க இருக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கான தேதியை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது, சர்வாதிகாரம் மட்டுமே இருக்கும்.
அமலாக்கத்துறை அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புகிறது. அவர்கள் அனைவரையும் சீண்டிப் பார்க்கின்றனர். பயத்தின் காரணமாக சிலர் நட்பை பிரிகின்றனர், சிலர் கட்சியை பிரிகின்றனர், சிலர் கூட்டணியில் இருந்து பிரிகின்றனர்.
தேர்தலில் வாக்களிக்க இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு, இதன்பின் வாக்களிக்க தேர்தல் இருக்காது. ஜனநாயகத்தைக் காப்பது மக்களின் பணியாகும் என தெரிவித்தார்.
- ஆகாஷ் என்.ஜி. ஏவுகணை இன்று காலை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
- இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசாவின் சண்டிபூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை எல்லையில் இருந்து ஆகாஷ்-என்ஜி ஏவுகணை இன்று காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சுமார் 80 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இது வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணை அமைப்பாகும். இன்றைய சோதனையின்போது, ஆகாஷ்-என்ஜி ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஏவுகணையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை கண்டறியும் கருவி, லாஞ்ச்சர், ரேடார், கட்டுப்பாடு மற்றும் தொலைதொடர்பு அமைப்புகள் ஆகியவை உள்ளது.
இந்நிலையில், ஆகாஷ் என்.ஜி. ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ, இந்திய விமானப்படை மற்றும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
- ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.
புவனேஸ்வர்:
ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள இந்த சட்னி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. மேலும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது.
புவிசார் குறியீடு அங்கீகாரமானது அந்தப் பொருளின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அப்பொருளை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது.
- அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும்.
- முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது தட்டச்சு செய்யப்பட்ட வடிவத்தில் வழங்க வேண்டும் என்றார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநில ஐகோர்ட்டில் ஒருவர் தனது மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் கருணைத் தொகை கேட்டு மனுதாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாக, புரிந்துகொள்ளும்படியாக இல்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி, அந்த டாக்டரை ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து பாம்புக்கடி வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியதாவது:
அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.
அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து, முடிந்தால் பெரிய எழுத்துகளில் அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தரவேண்டும் என ஒடிசா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.
- ஏரியில் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு மந்திரி படகில் பயணம்.
- சேர வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் படகு சேராததால் அதிகாரிகள் பதற்றம்.
பீகார் மாநிலத்தில் ஏரியில் பயணம் செய்த மத்திய மந்திரி வழி தெரியாமல் படகோட்டி படகை ஓட்டியதால் இரண்டு மணி நேரம் பரிதவித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு- பால்பண்ணை துறை மந்திரியாக இருப்பவர் பர்ஷோத்தம் ரூபாலா. இவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள சிலிகா ஏரியில் குர்தா மாவட்டத்தின் பர்குல் என்ற இடத்தில் புரி மாவட்டம் சதாபடா என்ற இடத்திற்கு படகில் சென்றார். இவருடன் பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவும் உடனிருந்தார்.
திடீரென மந்திரி சென்ற படகு ஏரியின் நடுப்பகுதியில் நின்றதாக தெரிகிறது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அவரை வரவேற்க இருந்த அதிகாரிகள், படகு வரவேண்டிய நேரத்தில் வராமம் நீண்ட நேரமாகியதால் பதற்றம் அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மற்றொரு படகு மூலம் ஏரியில் மந்திரி பயணம் செய்த படகை தேடிச் சென்றனர். அப்போது படகு நடுப்பகுதியில் நின்றிருந்தது தெரியவந்தது.
பின்னர், இரண்டு படகுகளும் கரை சேர்ந்தன. புரி மாவட்டத்தில் உள்ள குருஷ்னபிரசாத் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்த கொள்ள மந்திரி படகு மூலம் சென்றார். இந்த சம்பவத்தால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக படகில் தத்தளித்த மந்திரி இரவு 10.30 மணியளவில் புரி சென்றடைந்துள்ளார்.
மீன்வளையில் மோட்டார் சிக்கி படகு செயல்படாமல் இருந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், இரவு நேரம் ஆகியதால் வழி தெரியவில்லை. மாற்றுப்பாதையில் படகு ஓட்டுபவர் சென்றதால் கரை சேர முடியாத நிலை ஏற்பட்டது என மந்திரி தெரிவித்தார்.
- சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை ஒடிசா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
- டிரைவர்களிடையே தூக்கம், சோர்வு அதிகரிக்கும்போது டீ இலவசமாக வழங்கப்பட உள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசாவில் இரவு நேரங்களில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையே, சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நெடுஞ்சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக இரவு நேர டிரைவர்களுக்கு இலவச டீ வழங்கும் திட்டத்தை அம்மாநில போக்குவரத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் இத்திட்டம் ஜனவரி 7-ம் தேதி வரை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் டிரைவர்களுக்கு இலவச டீ வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் டிரைவர்களிடையே தூக்கம் அல்லது சோர்வு அதிகரிக்கையில் இலவசமாக டீ வழங்கப்பட உள்ளது.
- குறைந்த கட்டணத்தில் அதி நவீன பஸ் சேவையினை தொடங்க ஒடிசா அரசு முடிவு.
- கோரபுத் மாவட்டத்தில் உள்ள 234 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 13 லட்சம் பேர் பயன் பெறும் வகையில் 63 பேருந்துகள் இயக்கம்
ஒடிசா மாநிலத்தில் கிராம புறங்களில் இருந்து நகர் பகுதிகளை இணைக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் அதி நவீன பஸ் சேவையினை (லட்சுமி பேருந்து சேவை) தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்காக 623 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இதன் முதல்கட்டமாக கோரபுத் மாவட்டத்தில் இந்த சேவையினை ஒடிசா முதல்- மந்திரி நவீன் பட்நாயக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கிராமப்புற பகுதியில் இருந்து அந்தந்த மாவட்டத்தின் தலைநகரங்களுக்கு பெண்கள், மாணவ- மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5 ரூபாய் குறைந்த கட்டணத்தில் பஸ்சில் பயணம் செய்யலாம். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த பஸ் சேவையால் கோரபுத் மாவட்டத்தில் உள்ள 234 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 13 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
- வருமான வரித்துறையினர் சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது.
- 50 அதிகாரிகள், 40 மெஷின் மூலம் பணம் எண்ணப்பட்டன.
ஒடிசாவின் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹூ குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள், நிறுவனத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்படுகிறது.
ஒடிசாவில் புவனேஸ்வர், சம்பல்பூர், ரூர்கேலா கந்தர்கர் மற்றும் மேற்கு வங்காளம், ஜார்க்கண்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குறிப்பிட்ட மதுபான நிறுவனத்துடன் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் மேல்சபை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு தொடர்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த புதன்கிழமை சோதனை தொடங்கியதில் நாள்தோறும் நடத்தப்பட்ட சோதனையில் பணக்குவியல்கள் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற சோதனையில் வருமானவரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 225 கோடி பணம் போலங்கிரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது. அதை தொடர்ந்து நாளுக்கு நாள் பணத்தின் எண்ணிக்கை உயர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
நேற்று முன்தினம் வரை ரூ.290 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டில் வருமானவரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மிக அதிக தொகை இதுவாகும்.
நேற்று நடத்தப்பட்ட 5-வது நாள் சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்டியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். 3 வங்கிகள், 50 அதிகாரிகள், 40 மெசின்கள் மூலம் பணம் எண்ணப்பட்டது.
நேற்று நள்ளிரவிலும் பணத்தை எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒடிசாவில் இந்த பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தம் ரூ. 353.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
- தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பானிகோச்சா போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
- கொலை நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தலை இல்லாத தரித்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் நாயகர் மாவட்டம் பிடாபாஜூ கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன்பாக். கூலி தொழிலாளி. இவரது மனைவி தரித்ரி (வயது30).
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் அர்ஜூன் பாக் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். தான் வேலைக்கு சென்ற நேரங்களில் மனைவி வேறு வாலிபரை அழைத்து உல்லாசமாக இருந்ததாக கருதினார்.
இதுபற்றி மனைவிடம் கேட்டார். அதற்கு தரித்ரி மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இந்த பிரச்சனை தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அர்ஜூன்பாக் கோடரியால் தரித்ரியின் தலையை துண்டித்து கொன்றார். பின்னர் தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பானிகோச்சா போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு நடந்த விவரத்தை கூறி சரணடைந்தார். போலீசார் அந்த பையை கைப்பற்றி அர்ஜூனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து கொலை நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தலை இல்லாத தரித்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுபான நிறுவனத்துக்குச் சொந்தமான பிற இடங்களில் சுமார் ரூ.50 கோடி சிக்கியது.
- ஒடிசாவில் இதுவரையில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் பிடிபட்ட அதிகமான தொகை இதுதான்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் உள்ள பெரிய நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனம் பால்தியோ சாகு. இந்த நிறுவனத்துக்கு அதன் வினியோகஸ்தர்கள், விற்பனை முகவர்கள் பெருந்தொகையை செலுத்தியுள்ளதாகவும், அது கணக்கில் காட்டப்படவில்லை என்றும் வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து குறிப்பிட்ட மதுபான நிறுவனத்தின் ஆலை, அலுவலகம் மற்றும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த புதன்கிழமை திடீர் அதிரடி சோதனையை தொடங்கினர். ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
நேற்று 3-வது நாளாக தொடர்ந்த சோதனையில், ஒடிசா சுதபாடா நகரில் உள்ள அந்த மதுபான நிறுவனத்தின் அலுவலகத்தில், ரூ.200 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது.
மதுபான நிறுவனத்துக்குச் சொந்தமான பிற இடங்களில் சுமார் ரூ.50 கோடி சிக்கியது.
அங்கெல்லாம் அலமாரிகளில் செங்கற்களை போல கட்டு கட்டாக அடுக்கப்பட்டிருந்த பணத்தை பார்த்து வருமான வரி அதிகாரிகளே மலைத்துப் போயினர்.
அவற்றை பெரிய பெரிய பைகளில் எடுத்து அடுக்க அடுக்க, அந்த பணி நீண்டுகொண்டே போனது.
சுமார் 160 பைகளில் அடுக்கப்பட்ட ரொக்கத்தொகை ரூ.250 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் பைகளில் இருந்த ரூ.20 கோடி பணம்தான் நேற்று எண்ணி முடிக்கப்பட்டது. மொத்தம் 36 பணம் எண்ணும் எந்திரங்களை நிறுத்தாமல் பயன்படுத்தியும், பணக்கட்டுகளை எண்ணி முடிக்க இயலாமல் வருமான வரி அதிகாரிகள் திணறிப்போயினர்.
ஒடிசாவில் இதுவரையில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளில் பிடிபட்ட அதிகமான தொகை இதுதான். இந்த சோதனை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குறிப்பிட்ட மதுபானம் நிறுவனமும் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
அந்த மதுபான நிறுவனத்துடன் ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தள அரசியல்வாதிகளுக்கும், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வருமான வரி சோதனை தொடர்பான செய்தியை இணைத்து 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'நாட்டு மக்கள், குவிந்து கிடக்கும் இந்த பணத்தை பார்த்துவிட்டு, பின்னர் 'நேர்மை' குறித்து அந்த தலைவர்கள் பேசுவதை கேட்க வேண்டும். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு காசும் மீட்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்' என்று கூறியுள்ளார்.
மதுபான நிறுவன இடங்களில் பிடிபட்ட தொகை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என ஒடிசா மாநில பா.ஜனதாவும் வலியுறுத்தியுள்ளது.






