என் மலர்
இந்தியா

கைது செய்யப்பட்ட அர்ஜூன் பாக்
மனைவியை கொன்று தலையுடன் சென்று போலீசில் சரணடைந்த வாலிபர்
- தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பானிகோச்சா போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
- கொலை நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தலை இல்லாத தரித்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் நாயகர் மாவட்டம் பிடாபாஜூ கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன்பாக். கூலி தொழிலாளி. இவரது மனைவி தரித்ரி (வயது30).
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் அர்ஜூன் பாக் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். தான் வேலைக்கு சென்ற நேரங்களில் மனைவி வேறு வாலிபரை அழைத்து உல்லாசமாக இருந்ததாக கருதினார்.
இதுபற்றி மனைவிடம் கேட்டார். அதற்கு தரித்ரி மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இந்த பிரச்சனை தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அர்ஜூன்பாக் கோடரியால் தரித்ரியின் தலையை துண்டித்து கொன்றார். பின்னர் தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பானிகோச்சா போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு நடந்த விவரத்தை கூறி சரணடைந்தார். போலீசார் அந்த பையை கைப்பற்றி அர்ஜூனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து கொலை நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தலை இல்லாத தரித்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






