search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "GI tag"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது.

  புவனேஸ்வர்:

  ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

  அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

  புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள இந்த சட்னி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. மேலும் சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது.

  புவிசார் குறியீடு அங்கீகாரமானது அந்தப் பொருளின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அப்பொருளை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு உதவுகிறது.

  • வேலூர் முள்ளு கத்தரிக்காயை சுடலாம், பார்பிக்யூட் செய்யலாம், வறுக்கவும், வேகவைக்கவும் அல்லது ஊறுகாய்களாகவும் செய்யலாம்.
  • ராமநாதபுரம் குண்டு மிளகாய் இலங்கை, நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

  தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக விளையும் வேலூர் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு (ஜி.ஐ) புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

  இதன் மூலம், புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து, மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 46 அதிகபட்ச புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளது. கேரளா 36 தயாரிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

  தமிழில் இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய, முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும்.

  இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக காணப்படும். ஒரு கத்தரிக்காயின் சராசரி எடை 40 கிராம் ஆகும், மேலும் அறை வெப்பநிலையில் 3 நாட்களும், குளிரூட்டப்பட்ட சுற்றுப்புறத்தில் சுமார் 8 நாட்களும் இருக்கும்.

  புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது மற்ற கத்தரி வகைகளை விட சுவையாக இருக்கும்.

  பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இதற்கு உண்டு. செடியின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் முட்கள், பயிரை மிகவும் தனித்துவமாகவும், அடையாளம் காணக்கூடியதாகவும் ஆக்குகின்றன.

  இது மென்மையாகவும், சதைப்பற்றுள்ளதாகவும் உள்ளது. மேலும் இது கொத்தாகத் தொங்கும் இது 140-150 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 40-45 டன்கள் மகசூல் தரும்.

  வேலூர் முள்ளு கத்தரிக்காயை சுடலாம், பார்பிக்யூட் செய்யலாம், வறுக்கவும், வேகவைக்கவும் அல்லது ஊறுகாய்களாகவும் செய்யலாம்.

  இது பிரியாணி, பிரிஞ்சி சேர்வா, சாம்பார், பொரியல் மற்றும் மாலை நேர சிற்றுண்டிகளுடன் விருப்பமான உணவாகும்.

  இது அதிக வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்டது.

  "முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வேலூர் உழவர் சந்தை தொடங்கி வைக்கும் போது, குறிப்பாக வேலூர் முள்ளங்கி கத்தரிக்காயை குறிப்பிட்டு, அதன் அரிய குணங்களை விவரித்தார்.

  ராமநாதபுரம் குண்டு மிளகாய் தமிழில் 'கொழுப்பு மற்றும் உருண்டை' என்று பொருள்படும், கேபிசுமன்னம் இனத்தைச் சேர்ந்தது.

  இது தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமான ஒரு குண்டு வடிவ மிளகாய். இது கருமையான பளபளப்பான மற்றும் அடர்த்தியான தோலைக் கொண்டுள்ளது.

  திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான சாகுபடி செய்து வருகின்றனர். அதன் செழுமையான சுவை நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

  ராமநாதபுரம் குண்டு மிளகாய் இலங்கை, நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

  • ஈரோடு கவுந்தபாடி பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • ராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணிப் பகுதிகளில் சித்திரைகார் நெல்வகை சாகுபடி செய்யப்படுகிறது.

  சென்னை:

  உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் பாரம்பரியப் பண்புகள், தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு, தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றை பிற பகுதியினர் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

  உலக வர்த்தக மையத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் பொருட்களுக்கு இங்கு விண்ணப்பித்து புவிசார் குறியீடு பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் கீழ் செயல்படும் இதற்கான அலுவலகத்தின் தலைமையகம் சென்னை கிண்டியில் இருக்கிறது.

  இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பொருளுக்கான உரிமை மற்றும் தொழில் பாதுகாப்பை பெற முடியும். டெல்லியிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ ஒரு பட்டுப் புடவையை நெய்து, அதனை 'காஞ்சிப் பட்டு' என்று விற்க முடியாது. தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கும்பகோணம் வெற்றிலை, மதுரை மல்லி, கொடைக்கானல் வெள்ளைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் என ஏராளமான பொருட்களுக்கு 'புவிசார் குறியீடு' கிடைத்துள்ளது.

  தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பாக கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை, ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி மற்றும் சேலம் கண்ணாடி கத்திரி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கேட்டு சென்னையில் உள்ள புவியியல் குறியீடுகள் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

  இந்தப் பொருட்கள் உற்பத்தியாகும் உள்ளூர் சங்கங்கள் இணை விண்ணப்பதாரர்களாகவும், நபார்டு மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் பார்ம் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன. வக்கீல் சஞ்சய் காந்தி மூலம் இந்த விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

  ஈரோடு கவுந்தபாடி பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக நாட்டுச் சர்க்கரை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள், தங்களுக்கென சொந்தமாக உள்ள நிலத்தில் கரும்பு பயிரிட்டு, அந்த கரும்பை தங்களின் சொந்த ஆலையிலேயே ஆட்டி, அந்த கரும்பு பாலில், தூய கலப்படமில்லாத நாட்டுச் சர்க்கரையை தயாரிக்கின்றனர். பழனி பஞ்சாமிர்தம் ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்ற நிலையில் அந்த பஞ்சாமிர்தத்தை ருசிக்க செய்வது கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரையே.

  ராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணிப் பகுதிகளில் சித்திரைகார் நெல்வகை சாகுபடி செய்யப்படுகிறது. இதுவே ஆரம்பகால சிவப்பு அரிசி வகை என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தின்போது நெல் வகை முற்றிலும் அழிந்த நிலையில் அதன்பின், அருகில் உள்ள சிக்கல் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை அரிசி கஞ்சி பல மணி நேரம் பசியைத் போக்குகிறது.

  சேலம் கண்ணாடி கத்திரிக்கு விண்ணப்பித்த சேலம் விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

  சேலம், ஈரோடு பகுதிகளில், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படுகிறது. அது பளபளப்பாகவும் ஊதா நிறமாகவும் இருந்தது. இந்த குறிப்பிட்ட கத்திரிக்காய் மெல்லிய தோல் மற்றும் அதிக அளவு சதை கொண்டது. அதிக விதைகள் இருந்தாலும், அவை மென்மையாகவும், உணவில் சுவையை கூட்டுவதாகவும் உள்ளது.

  • உடன்குடி கருப்பட்டி என்று சொன்னாலே உதடும், உள்ளமும் இனிக்கும்.
  • பனை மரத்தை அழிப்பவர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும்.

  உடன்குடி:

  உடன்குடி கருப்பட்டி என்று சொன்னாலே உதடும், உள்ளமும் இனிக்கும். ஊர் பெயரோடு ஊர்ஊராய் சென்று விற்பனை செய்வதுதான் உடன்குடி கருப்பட்டி.

  சர்க்கரை நோய் வராது

  பனைமரத்தின் இயற்கை பானமான பதநீரை எடுத்து, அதில் பக்குவமாய் சுண்ணாம்பு கலந்து குடித்தால் சர்க்கரை நோயே வராது.

  பனை மரத்தில் தினசரி காலை, மாலை என 2 முறை ஏறி இறங்குவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. பல வகையான எந்திரங்கள் வந்தாலும், அவை அனைத்தும் ஒரு சில நாளில் செயல் இழந்து விடுகிறது.

  கயிறு மூலம் பனை மரத்தில் தடுப்பு அமைத்து ஏறி இறங்குவதும், காலில் நார் மாட்டிக்கொண்டு பனைமரத்தை சேர்த்து கட்டிப்பிடித்து ஏறி இறங்குவதும் தான் இப்போது நிலைத்து நிற்கிறது. பனை மரத்தில் ஏறி பதநீர் தரும் பாளைகளை இடுக்கி, அரிவாளால் சீவி பக்குவப்படுத்தி பதநீர் போட வைப்பது எல்லோருக்கும் தெரிந்த கலை அல்ல.

  புவிசார் குறியீடு

  தினசரி 2 முறை பதனீர் தரும் பாளையை சீவி விட வேண்டும். இப்படி தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது இத்தொழிலில்ஈடுபட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

  மேலும் இத்தொழிலை மேம்படுத்த அரசு பல்வேறு வகையான மானியங்கள் வழங்க வேண்டும் என்றும், பனை மரங்களை வளர்ப்பதற்கும் மானியம் கொடுக்க வேண்டும் என்றும் தொழிலில் ஈடுபட்டவர்கள் கூறுகிறார்கள்.

  இது பற்றி தாண்டவன்காடு தமிழ்ராஜ் என்பவர் கூறியதாவது:-

  கற்பகதரு என்று சொல்லக்கூடிய பனைமரம் மட்டும்தான் வேர் பகுதியில் இருந்து தலை ஓலை வரை அதாவது அடி முதல் உச்சி வரை 100 வகையில் மக்களுக்கு பயன்தருகிறது.

  இந்த பனை மரத்தை அழிப்பவர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். வேறு எந்த மரமும் 100 வகையில் மக்களுக்கு பயன்தருவதில்லை. பணந்தும்பு, கால் மிதி, தும்பு மூலம் பல வகையான பொருட்கள் பனமரக்கட்டை. பனை ஓலை பெட்டி, பனை ஓலைக்கு வண்ணம்பூசி பலவகையான வண்ண வண்ண பெட்டிகள், நுங்கு, பணம்பழம், பனங்கிழங்கு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

  நிலத்தடி நீர்

  கூரைகள் அமைப்பதற்கு பனைமர கட்டை, பனைமர ஓலை அதை கட்டுவதற்கு பனைமர நார் இப்படி 100 வகையான பயன்களை சொல்லலாம். அப்படிப்பட்ட பனை மரத்தை அழிக்கவே கூடாது. தோட்டங்களில் கரைகளிலும், வேலிகளின் கரைகளிலும் பனை மரத்தை வளர்த்தால், அது பலனும் தரும்.

  நிலத்தடி நீரையும் பாதுகாக்கும். இப்படிப்பட்ட பனைமரம் முன்பெல்லாம் மக்களோடும் மக்களாய் இணைந்து இருந்தது. தற்போது மக்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் செழுமை குறைந்து வறுமை அதிகரித்துவிட்டது. அதனால் பனைமரம் மீண்டும் மக்களோடு, மக்களாய் இணைவதற்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

  சிறுநாடார் குடியிருப்பு ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், முன்னாள் உடன்குடி யூனியன் கவுன்சிலருமான பிரபாகர்முருகராஜ் கூறியதாவது:-

  உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும் என்பதில் நானும் மிகுந்த ஆவலாய் உள்ளேன். உடனடியாக புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும். கோவில்பட்டி என்றால் கடலை மிட்டாய். நெல்லை என்றால் அல்வா, மணப்பாறை என்றால் முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பால்கோவா, திண்டுக்கல் என்றால் பூட்டு.

  இந்த வரிசையில் உடன்குடி என்றால் கருப்பட்டி. இப்படி ஊர் பெயரோடு ஊர் ஊராய் பவனி வரும் உடன்குடி கருப்பட்டிக்கு மேலும் சிறப்பு சேர்க்கையில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்.

  பனைமரச் தொழிலை பாதுகாப்பதும், அதில் இருந்து கிடைக்கும் 100 வகையான பொருட்களை தயாரிப்பதிலும், பனைமரம் என்ற கற்பக தெரு எவ்வளவுக்கு வளர்ச்சி அடைகிறதோ அவ்வளவுக்கு அதிகமாக மக்களின் தரமும் உயரும் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. பனைத் தொழிலை போற்றுவோம் பனை மரத்தை வளர்ப்போம், பனை மரத்தினால் பயன்பெறுவோம் என்று கூறினார்.

  ×