search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dynasty politics"

    • இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
    • வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும்.

    பா.ஜ.க., மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பரம்பரை அரசியலுக்கு சவால் விட்டதாகவும், இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

    ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது, 'முதலில் தேசம்' என்ற சித்தாந்தத்திற்குக் கிடைத்த மரியாதை" என்று கூறினார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

    எல்.கே. அத்வானி ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பிடியில் இருந்து விடுவிக்க தொடர்ந்து போராடினார். அனைவருக்கும் வழிகாட்டினார். அவர் பரம்பரை அரசியலை சவால் செய்தார். இந்தியாவின் ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்தார்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், நாட்டின் ஏழை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.

    கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் அதே வேகத்தில் தொடரும். மோடியின் உத்தரவாதம் எல்லா நம்பிக்கைகளும் சரியும் இடத்தில் இருந்து தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். #DynastyPolitics
    மதுரை:

    வேட்புமனுகள் குறைபாடு தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், வேட்பாளர்கள் மனு தாக்கலின்போது தேர்தல் வாக்குறுதியை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் பெற்ற பிறகும் உரிய பதில் அளிக்காத கட்சிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை, போரில் உயிரிழந்த வீரர்களுக்கான நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக தெரிவித்தனர். பாஜக, கம்யூனிஸ்ட் தவிர பிற கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக தெரிவித்தனர்.

    அதன்பின்னர், நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அபராதத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #DynastyPolitics
    ×