என் மலர்
மத்தியப்பிரதேசம்
- திருமணமான பெண்ணின் வீட்டுக்கு, அவரது கணவர் இல்லாத நேரத்தில் வாலிபர் ஒருவர் சென்று வந்ததை கிராம மக்கள் பார்த்தனர். அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.
- அதன்பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அவர்களை கையும்,களவுமாக பிடிக்க கிராமத்தினர் திட்டமிட்டனர்.
தேவாஸ்:
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் போர்பதேவ் கிராமத்தில் திருமணமான இளம்பெண், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இவர்களின் வீட்டுக்கு அருகே வாலிபர் ஒருவர் குடியிருந்தார். பக்கத்து வீடு என்பதால், அந்த வாலிபருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது.
இதனால் அந்த பெண்ணின் கணவர், வேலைக்கு சென்ற பின்னர், வாலிபரை வீட்டுக்கு அழைத்து அந்த பெண் உல்லாசமாக இருந்தார்.
திருமணமான பெண்ணின் வீட்டுக்கு, அவரது கணவர் இல்லாத நேரத்தில் வாலிபர் ஒருவர் சென்று வந்ததை கிராம மக்கள் பார்த்தனர். அவர்கள் இருவரையும் கண்டித்தனர்.
அதன்பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அவர்களை கையும்,களவுமாக பிடிக்க கிராமத்தினர் திட்டமிட்டனர்.
அதன்படி, அந்த பெண்ணின் வீட்டை கண்காணித்து வந்த கிராமத்தினர். சம்பவத்தன்று அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அங்கு கிராம மக்கள் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணின் கணவரை வரவழைத்து அவரை பெண்ணின் தோளில் ஏற்றி கிராமத்தை சுற்றிவரும்படி கூறினர்.
இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி அறிந்த தேவாஸ் மாவட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் நடந்த பகுதியை கண்டறிந்த போலீசார், போர்பதேவ் கிராமத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
- இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரப்பப்பட்டது.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போபால் :
மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் பொர்படவ் கிராமத்தை சேர்ந்த நபர் மங்கிலால். இவரது மனைவிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மங்கிலால் தனது மனைவியை உறவினர்களுடன் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார். அந்த பெண்ணை கடுமையாக தாக்கி, உடைகளை கலைந்து மானபங்கம் செய்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணை அவரது கணவர் மங்கிலாலை தோளில் சுமக்க வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரை தோளில் சுமந்தபடி ஊர் முழுவதும் சுற்றவைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரப்பப்பட்டது.
இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் கணவன் மங்கிலால் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அதிகாரிகள் நிலத்தை மீட்டு கொடுத்ததையடுத்து கொலை முயற்சி
- 3 பேர் சேர்ந்து தன்னை எரித்துக்கொல்ல முயன்றதாக கணவரிடம் ராம்பியாரி கூறி உள்ளார்.
போபால்:
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியினப் பெண் ஒருவரை, நில அபகரிப்பாளர்கள் எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குணா மாவட்டத்தில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.
குணா மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராம்பியாரி சகாரியா (வயது 38) என்ற பெண்ணின் குடும்பத்திற்கு, அரசு நலத்திட்டத்தின்கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பின்னர் சமீபத்தில் அந்த நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு சகாரியாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராம்பியாரி சகாரியா, தனது நிலத்தில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடினார். அப்போது அங்கு சென்ற அவரது கணவர் அர்ஜூன் சகாரியா, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 பேர் சேர்ந்து தன்னை எரித்துக்கொல்ல முயன்றதாக கணவரிடம் ராம்பியாரி கூறி உள்ளார்.
இதுதொடர்பாக பிரதாப், ஹனுமத், ஷியாம் கிரார் ஆகியோர் மீது ராம்பியாரியின் கணவர் அர்ஜூன் சகாரியா புகார் அளித்துள்ளார். தன் மனைவியைத் தேடி நிலத்திற்கு சென்றபோது, பிரதாப், ஹனுமத், ஷியாம் கிரார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் டிராக்டரில் ஏறிச் சென்றதாக புகார் மனுவில் கூறி உள்ளார். மேலும், தன் மனைவி துடிப்பதை அந்த 3 பேரும்வீடியோ எடுத்ததாகவும், அது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதாகவும் போலீசாரிடம் கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, 2 பேரை கைது செய்துள்ளனர்.
- சிறுவன் திபேந்திரயாதவ் நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டு அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.
- ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பேரிடர் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டினார்கள்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டம் நாராயண்புரா பதர்பூர் கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் திபேந்திரயாதவ். இவன் நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டு அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.
அப்போது அவன் திடீரென்று 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையறிந்த அக்கம்பத்தினர் போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சிறுவனை மீட்பதற்காக உடனடியாக அம்மாநில பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கினார்கள்.
ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பேரிடர் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டினார்கள். அதன் மூலம் சிறுவன் இருக்கும் இடத்தை நெருங்கினார்கள்.
சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உடனடியாக சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
- சீன ஆக்கிரமிப்பை தடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன்.
- நீங்கள் அனைவரும் அரசியல் சக்தியாக வரவில்லை என்றால் இங்கு எதுவும் மாறாது.
மத்தியப் பிரதேசத்தில் விரைவில் மாநகராட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சியினர் (ஏஐஎம்ஐஎம்) சில பகுதிகளில் போட்டியிடுகிறது.
இதையொட்டி, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி நேற்று தனது கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக பறை சாற்றும் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டில் காங்கிரஸ் வீணான சக்தியாக மாறிவிட்டது. அது அதன் இருப்பை இழந்துவிட்டது. அதனால் காங்கிரசுக்காக உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்.
இந்திய நிலத்தை சீன நாடு ரகசியமாக அத்துமீறி ஆக்கிரமித்து வருவதால், எல்லையில் கவனம் செலுத்தி சீன ஆக்கிரமிப்பை தடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். இதற்கு யார் காரணம் என்று காங்கிரசையும், பாஜகவையும் நான் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அரசியல் சக்தியாக வரவில்லை என்றால் இங்கு எதுவும் மாறாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- இன்று காலையில் நடந்த என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
- இவர்களது 3 பேர் தலைக்கு மொத்தம் ரூ.30 லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் பாகல்காட் மாவட்டம் பகலொ போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலையில் நடந்த என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
மராட்டிய எல்லையையொட்டி நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டுகளான நாகேஷ், மனோஜ், பெண் நக்சலைட்டு ராமே ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்கள் 3 பேர் தலைக்கு மொத்தம் ரூ.30 லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
- திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக 42 பேர் மினி லாரியின் சென்றனர்.
- ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் சிறுவன் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து பியோஹாரி காவல் நிலையத்தின் பொறுப்பாளர் கதிர் சோனி கூறியதாவது:-
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக 42 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி ஒன்று டிகாஹி கிராமத்தில் உள்ள ஒரு தாபா அருகே திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 36 பேர் விபத்தில் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இறந்தவர்கள் 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். படுகாயமடைந்த 10 பேர் ஷாதோல் மருத்துவக் கல்லூரியிலும், மற்றவர்கள் பியோஹாரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வயல் பகுதிக்கு சென்ற ப்ரீத்தி கிணற்றி தவறி விழுந்து உயிரிழந்தார்.
- ப்ரீத்தியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தான் வசிக்கும் பகுதியில் இருந்து 430 கிலோமீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்து வந்துள்ளார்.
போபால்:
மத்திய பிரதேசம் மாநிலம் சாஹர் மாநிலம் மஞ்குவா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி (21). இவர் கடந்த வியாழக்கிழமை மாலை வயல்பகுதிக்கு சென்றுவிட்டு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரை தேடினர். அப்போது அவர், வயல்பகுதியில் இருந்த கிணற்றுக்குள் பிணமாக கிடந்துள்ளார்.
அவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உடலை மீட்ட குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு செய்து சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையில், ஜோதியின் மரணம் குறித்து தகவலறிந்த அவரின் உறவுக்கார இளைஞனான கரண் என்ற 21 வயது இளைஞர். ப்ரீத்தியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தான் வசிக்கும் பகுதியில் இருந்து 430 கிலோமீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்து வந்துள்ளார்.
சுடுகாட்டில் ஜோதியின் உடலை எரியூட்டுவதை பார்த்த கரண், ஜோதியின் இழப்பை தாங்க முடியாமல் தானும் அந்த எரியும் சிதையிலேயே குதித்தார். இதை பார்த்த பொதுமக்கள், கரணை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டு, தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், படுகாயமடைந்த கரண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கரண், ப்ரீத்தியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
- 125 கிலோ எடையுடன் இருந்த அனில் பிரோஜியா தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
- அனில் பிரோஜியா உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறார்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் மால்வா பகுதியில் ரூ.5,772 கோடி மதிப்பிலான 11 சாலை திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.
அப்போது, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பா.ஜ.க. உறுப்பினர் அனில் பிரோஜியாவிடம், உடல் எடையை குறைத்தால், ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என நிதின் கட்கரி நகைச்சுவையாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனில் பிரோஜியா தனது தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அவருக்கு நான் ஒரு நிபந்தனை விதித்துள்ளேன். 135 கிலோவாக இருந்த எனது உடல் எடையை இப்போது 93 கிலோவாக குறைத்து உள்ளேன்.
இது தொடர்பான எனது புகைப்படத்தை அவரிடம் காண்பித்து நீங்களும் உங்கள் எடையைக் குறைத்துக் கொண்டால் நிதி வழங்கப்படும் என அவரிடம் கூறினேன். ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து 125 கிலோ எடையுடன் இருந்த அனில் பிரோஜியா தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தினமும் உடற்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு 6 கிலோ எடையை குறைத்தார். இதற்காக 2 மணி நேரம் செலவிடுகிறார். அத்துடன் உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, "மத்திய மந்திரி நிதின்கட்கரியின் அறிவுரைப்படி உடல் எடையை குறைத்து வருகிறேன். இதுவரை ரூ.6 ஆயிரம் கோடி நிதி பெற்றுள்ளேன். மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது அவரை சந்தித்து, வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நினைவுப்படுத்த உள்ளேன்" என்றார்.
- சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்தவர் விபோர் சாஹூ. அவரது மனைவி ரிது (23). ஓட்டுனராக வேலைப் பார்த்து வந்த விபோர் சாஹூ கடந்த 15 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனால், ரிது மற்றும் விபோர் சாஹூ இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ரிது, விபோர் சாஹூவை வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்துமாறும் பலமுறை தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சண்டை முற்றியதில் ஆத்திரமடைந்த விபோர் சாஹூ கத்திரியைக் கொண்டு ரிதுவை பலமுறை குத்திக் கொன்றுள்ளார். பின்னர், விபோர் சாஹூ தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இருவரும் நேற்று ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த விபோர் சாஹூவின் தாய் மற்றும் சகோதரர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியை வாலிபர் ஒருவர் செல்போனில் லைவ் ஆக காட்டிய அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
- காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
போபால்:
குவாலியூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கும் 20 வயது வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர். மேலும் மாலை நேரங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். காதலன் மீது இருந்த நம்பிக்கையில் அவள் தன்னையே அவனிடம் ஒப்படைத்தாள். இது தான் அவளுக்கு வினையாக முடிந்தது. ஒருநாள் அந்த வாலிபர் காதலியை ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றான். அவனுடன் நண்பன் ஒருவனும் சென்றான்.
நண்பனுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு காதலன் வற்புறுத்தினான். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதற்கு உடன்பட மறுத்தாள். இதனால் 2 பேரும் சேர்ந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உனது தந்தையையும், சகோதரரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். இதனால் பயந்து போன அந்த பெண் இதுபற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் மனசுக்குள்ளேயே வைத்து இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 2 பேரும் கடந்த ஒரு ஆண்டாக அவளை பாலியல் சித்ரவதை செய்து வந்தனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்தனர்.
அதில் ஒருவன் அந்த பெண்ணை காதலன் கற்பழிப்பதை தனது நண்பர்களுக்கு செல்போனில் 'லைவ்' ஆக காட்டினான். இதனை அவர்கள் பார்த்து ரசித்து வந்தனர்.
அதை அறிந்த அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தாள். ஆனால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட போவதாக மிரட்டி தங்களது ஆசைக்கு இணங்க வைத்தனர். இதனால் பயந்து போய் அவள் பெற்றோருக்கு கூட இதை சொல்லாமல் மறைத்து விட்டாள். இந்தநிலையில் அவளுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
மாப்பிள்னை பார்த்து நிச்சயமும் செய்தனர். இந்த சூழ்நிலையில் இதை அறிந்த காதலனும் அவனது நண்பரும் இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
அதன் பிறகுதான் இளம்பெண்ணின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தது. இதுதொடர்பாக அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பி.ஆர். நிறுவனத்தின் உரிமையாளரான அணிரூத் பிம்ப்லபுரே போலீசில் புகார் அளித்தார்.
- அதில் தங்கள் நிறுவனம் மீதான நடவடிக்கையை தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
சாகர்:
மத்தியபிரதேச மாநிலத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் மண்டல கமிஷனராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார்.
இவருக்கு எதிராக பி.ஆர். நிறுவனத்தின் உரிமையாளரான அணிரூத் பிம்ப்லபுரே போலீசில் புகார் அளித்தார். அதில் தங்கள் நிறுவனம் மீதான நடவடிக்கையை தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்ற போலீசார் வருங்கால வைப்பு நிதி அதிகாரி சதீஷ்குமாரை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை அவர் வாங்கினார். அப்போது மறைந்து இருந்த போலீஸ்காரர்கள் அவரை வீட்டில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.






