search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு
    X

    ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு

    • சிறுவன் திபேந்திரயாதவ் நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டு அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.
    • ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பேரிடர் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டினார்கள்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டம் நாராயண்புரா பதர்பூர் கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் திபேந்திரயாதவ். இவன் நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டு அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.

    அப்போது அவன் திடீரென்று 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையறிந்த அக்கம்பத்தினர் போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சிறுவனை மீட்பதற்காக உடனடியாக அம்மாநில பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கினார்கள்.

    ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பேரிடர் மீட்பு குழுவினர் பள்ளம் தோண்டினார்கள். அதன் மூலம் சிறுவன் இருக்கும் இடத்தை நெருங்கினார்கள்.

    சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பேரிடர் மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். உடனடியாக சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    Next Story
    ×