என் மலர்
கேரளா
- வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார்.
- மீட்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை பிரதமர் மோடி நடத்தினார்.
திருவனந்தபுரம்:
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார். அங்கு நிலச்சரிவால் பாதிப்பு அடைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஆய்வுசெய்த பிரதமர் மோடி, மீட்புப்பணி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இந்நிலையில், ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி கூறியதாவது:
நிலச்சரிவு மீட்புப் பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், தன்னார்வலர்கள், டாக்டர்கள் என அனைவரும் ஈடுபட்டனர்.
இந்தப் பேரிடர் சாதாரணமானது அல்ல. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கானோரின் கனவுகளை தகர்த்துள்ளது.
சூழ்நிலையை நேரில் பார்த்தேன். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களையும், காயம் அடைந்தவர்களையும் சந்தித்தேன்.
பேரிடர் குறித்து அறிந்ததும் முதல்வரை தொடர்பு கொண்டு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தேன்.
கேரளாவுக்கு மத்திய அரசு தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவி வந்தது. அது தொடரும்.
இறந்தவர்களின் உறவினர்கள் தனித்துவிடப்பட மாட்டார்கள் என அவர்களுக்கு உறுதி அளிக்கிறேன். இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவர்களுடன் துணை நிற்கிறோம்.
கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும். பணப்பற்றாக்குறையால் எந்த பணியும் நிறுத்தப்படாது என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார்.
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம் நிதியுதவி
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் நிலச்சரிவால் இழுத்துச் செல்லப்பட்டன. மேலும், மணல் சேற்றால் மூழ்கின. இதில் சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் நன்கொடை அளித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சமும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சமும், நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் வழங்கினர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர்.
அது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், "சென்னையைச் சேர்ந்த சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் வயநாடு பேரிடர் நிவாரணத்திற்காக 1 கோடி ரூபாய் வழங்கினோம். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினோம்.
ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், ஸ்ரீப்ரியா, மணிரத்னம், குஷ்பு சுந்தர், மீனா சாகர், ஜி ஸ்கொயர், கல்யாணி பிரியதர்சன், கோமளம் சாருஹாசன், லிஸ்ஸி லட்சுமி, மைஜோ ஜார்ஜ், ஷோபனா, ரஹ்மான் ஆகியோருக்கு நன்றி. வயநாடு மக்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வயநாடு நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு.
- பிரதமர் மோடி இன்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந்தேதி அதிகாலை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் வீடுகள் நிலச்சரிவால் இழுத்துச் செல்லப்பட்டன. மேலும், மணல் சேற்றால் மூழ்கின. இதில் சுமார் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நிலச்சரிவால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியை பிரதமர் மோடி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் பறந்தவாறு ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பள்ளி முகாமிற்கு சென்று, அங்குள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆகியொர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கேரள மாநில முதல்வரான பினராயி விஜயன் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, வயநாடு செல்லும் பிரதமர் மோடி நிலச்சரிவு பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிப்பார் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
- நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார்.
- ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் மற்றும் கேரள முதல்வரும் இருந்தனர்.
கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார்.
இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார்.
நிலச்சரிவால் சேதமடைந்த பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாறு பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.
ஹெலிகாப்டரில் பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் மற்றும் கேரள முதல்வரும் இருந்தனர்.
சூரல்மலை, வெள்ளிமலை, முண்டகைப் பகுதிகளில் பாதிகப்புகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டடார்.
சூரல்மலையில் ராணுவத்தால் கட்டப்பட்ட பெய்லி பாலத்தையும் பிரதமர் மோடி பார்வையிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மேப்பாடி தனியார் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபியும் உடன் செல்கிறார்.
ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தபோது, நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பினராயி விஜயன் எடுத்துரைத்தார்.
- வயநாடு நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
- வயநாட்டில் மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் மாயமாகிவிட்டனர். மீட்புப் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா சென்றடைந்தார்.
- குடும்பங்களில் பெரியவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ.300 நிதி உதவி வழங்கப்படும்.
- நிதி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவர 400க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து உடல்களும், உடல் பாகங்களும் கிடைத்து வருகின்றன.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
வருவாய் ஆதாரங்களை இழந்துள்ள குடும்பங்களில் பெரியவர்களுக்கு (18 வயதுக்கு மேல்) நாள் ஒன்றுக்கு தலா ரூ.300 நிதி உதவி வழங்கப்படும் என்றும், இந்த நிதி அதிகபட்சம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவி 18 வயது முடிந்த 2 பேர் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
- வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும்.
வயநாடு:
நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் வனத்துறை மந்திரி சசீதரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழுவிடம் மறுசீரமைப்பு பணிகளுக்காக உடனடியாக நிதி தேவை என கோரிக்கை வைத்திருக்கிறோம். நிலச்சரிவு பாதித்த பகுதிகளை மறுசீரமைப்பதற்காக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம்' என தெரிவித்தனர்.
நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை வீடுகளில் குடியமர்த்தும் பணி விரைவில் தொடங்கும் என கூறிய அவர்கள், இதற்காக அரசு குடியிருப்பு உள்பட 125 வீடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்தனர்.
வயநாட்டில் தூய்மைப்பணிகள் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், இதற்கு மட்டுமே 90 நாட்கள் ஆகும் என்றும் அவர்கள் கூறினர்.
- ஹெலிகாப்டரில் பறந்தபடியே நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவார் என்றும் கூறப்படுகிறது.
- வயநாடு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் 405-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவு பாதிப்பு பகுதிகளை பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று வயநாடு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்படும் அவர், கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் செல்கிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் வயநாட்டுக்கு சென்று ஹெலிகாப்டரில் பறந்தபடியே நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடுவார் என்றும் கூறப்படுகிறது.
பின்னர் நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் பிழைத்தவர்கள் சிலருடன் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
பிரதமரின் இந்த பயணத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கண்ணூரில் இருந்து இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து வயநாடு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் மாநில எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
- முன்னதாக இன்று காலை கேரளாவின் மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி இத்துறவி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதிகளில் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியர்மலை, மூரிக்காப்பு, கொம்பு அம்பு குத்தி மலை போன்ற பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன, இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இந்த நில அதிர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக இன்று காலை கேரளாவின் மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாகப் பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அம்சபாவிதம் தவிர்க்கப்பட்டது.
- கேரளாவில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது.
- நிலச்சரிவு காரணமாக பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன.
கேரளா மாநிலத்தின் மூனாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் அம்சபாவிதம் தவிர்க்கப்பட்டது.
முன்னதாக கடந்த 30 ஆம் தேதி கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மீட்பு பணிகள் கூட முழுமை பெறாத நிலையில், மீண்டும் கேரளா மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.
- வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ கடந்தது.
வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து இந்திய ராணுவம், துணை ராணுவ படைகள், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டோர் மீட்பு-தேடுதல் பணியில் கடந்த ஒன்பது நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினர் திருப்பி அனுப்பப்பட்டனர். ராணுவ அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
மீட்பு பணிகளில் ஈடுபட்டு திரும்பும் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு வாசிகள் கைத்தட்டி உற்சாகம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- சிறப்பு குழுவினர் இன்று காலை பள்ளத்தாக்கு பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி இன்று 10-வது நாளை எட்டியிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டியதால் கடந்த 30-ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக அழிந்தது.
அட்டமலை, புஞ்சிரி மட்டம், வெள்ளரி மலை ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நிலச்சரிவு மற்றும் காட்டாற்றுவெள்ளம் காரணமாக வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.
இந்த பயங்கர சம்பவத்தில் மண்ணுக்குள் உயிரோடு புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். மேலும் பலர் காணாமல் போனார்கள். அவர்களை தேடும் பணியில் ராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள், மருத்துவ குழுவினர் என 11 பிரிவுகளை சேர்ந்தவர்கள் பல குழுக்களாக பிரிந்து ஈடுபட்டார்கள்.
இந்த தேடுதல் பணி நேற்று 9-வது நாளாக நீடித்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. மேலும் மாயமாகியிருக்கும் நூற்றுக்கும் அதிகமானவர்களை தேடும் பணி தொடர்ந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள், சாலியாறு மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் முழுமையாக தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் பள்ளத்தாக்கு பகுதியிலும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள், வனத்துறையினர், மீட்பு குழுவினர் என 12 பேர் அடங்கிய சிறப்பு குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள்.
அவர்கள் பள்ளத்தாக்கு பகுதியில் 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தேடினார்கள். அதில் மேலும் சில உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. இதனால் வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்தது.
பள்ளத்தாக்கு பகுதியில் மேலும் பல உடல்கள் கிடக்கலாம் என்று கருதப்படுவதால் அங்கு 3-வது நாளாக தேடுதல் பணி இன்றும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிறப்பு குழுவினர் இன்று காலை பள்ளத்தாக்கு பகுதிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் கடந்த 2 நாட்களாக தேடிய இடங்களை தவிர, பிற பகுதிகளுக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். அவர்கள் இன்று மோப்ப நாய்களையும் அழைத்துச் சென்று வனப்பகுதியில் தேடினர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி இன்று 10-வது நாளை எட்டியிருக்கிறது.
சிறப்பு குழுவினர் பள்ளத்தாக்கு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், மீட்பு குழுக்களை சேர்ந்த மற்றவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள், சாலியாறு மற்றும் வனப்பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களின் பட்டியலை கேரள அரசு நேற்று வெளியிட்டது.
அதில் 138பேர் இடம்பெற்றிருந்தனர். காணாமல் போயிருப்பவர்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்களது பெயர், முகவரி மற்றும் புகைப்படம் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






