என் மலர்
ஆந்திர பிரதேசம்
- அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணி அனுபவம்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கான மாத ஊதியம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் மற்றும் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,139 மாத ஊதியம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு கண்டிஷன். வைஷ்ண பிராமணர்கள் மட்டுமே ஆகம விதிப்படி விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிறுமி தலைமை ஆசிரியரிடம் இருந்து தப்பி வீட்டிற்கு ஓடிச்சென்றார்.
- மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளிக்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், பெட கொத்தப்பள்ளியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஓங்கோல் அடுத்த காலாவுப்பேட்டையை சேர்ந்த சுந்தர்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற சுந்தர் பாபு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
சிறுமி தலைமை ஆசிரியரிடம் இருந்து தப்பி வீட்டிற்கு ஓடிச்சென்றார்.நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.
மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளிக்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.
மேலும் தலைமை ஆசிரியரை போலீசில் ஒப்படைத்தனர். சுந்தர் பாபு ஏற்கனவே சில பள்ளி குழந்தைகளிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
குற்றச்சாட்டில் சிக்கிய சுந்தர்பாபு இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆட்டோக்குள் இருந்த 8 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- விபத்தின் சிசிடிவி காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கம் சரத் தியேட்டர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று லாரி மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாலையின் சந்திப்பில் அதிவேகமாக வந்த ஆட்டோ எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில், ஆட்டோக்குள் இருந்த பள்ளி மாணவ- மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர். ஆட்டோக்குள் இருந்த 8 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில், இரண்டு மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- தேர்தலில் இக்கட்சிகளை 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- எம்.ஐ.எம். கட்சியின் 12 வேட்பாளர்களில் 6 பேருக்கு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில் இக்கட்சிகளை 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் 226 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தேர்தல் பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில், ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதியின் 119 வேட்பாளர்களில் 58 பேர், பா.ஜ.க.வின் 111 வேட்பாளர்களில் 78 பேர், காங்கிரஸின் 118 வேட்பாளர்களில் 84 பேர், எம்.ஐ.எம். கட்சியின் 12 வேட்பாளர்களில் 6 பேருக்கு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.
- பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- மாணவர்கள் சந்து மீது பெயிண்ட் ஆயிலை ஊற்றி தீ வைத்தனர்.
திருப்பதி:
திருப்பதி வடமலை சாகாளி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சந்து (வயது 15).
திருப்பதி அலிபிரியில் தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் விடுதியுடன் கூடிய காது கேளாதோர் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். விடுதியில் மாணவர்களுக்கு 4 கழிவறைகள் மட்டுமே உள்ளன.
இந்த நிலையில் நேற்று மாலை சந்து உள்ளிட்ட மாணவர்கள் கழிவறைக்கு செல்ல வந்தனர். அப்போது யார் முதலில் செல்வது என வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பை சேர்ந்த மாணவர்கள் சந்துவிடம் பெயிண்ட் ஆயிலை கொடுத்து குடிக்க வேண்டும் என வற்புறுத்தினர். இதற்கு சந்து மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து மாணவர்கள் சந்து மீது பெயிண்ட் ஆயிலை ஊற்றி தீ வைத்தனர். இதில் தீ அவரது உடல் முழுவதும் பரவியது. வலியால் அலறி துடித்தார். மற்ற மாணவர்கள் சந்து மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைக்காக ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 70 சதவீத காயங்களுடன் சந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் ரூயா ஆஸ்பத்திரியில் தனது மகனுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனவும் தரமான சிகிச்சை அளித்து மகனை காப்பாற்ற வேண்டும் என சந்துவின் பெற்றோர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
- ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ந்தேதி அன்று சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அவர் உடல் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட தொடங்கியது. மேலும், கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. எனவே, இதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமின் கோரியிருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ந்தேதி அன்று அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதால் இடைக்கால ஜாமினை சாதாரண ஜாமினாக மாற்ற கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இன்று அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் சாதாரண ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- 3 தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், சுரங்கலை சேர்ந்தவர் சீனிவாஸ். இவருக்கு அதே பகுதியில் தனியார் உள் விளையாட்டு அரங்கம், மாநாட்டு மைதானம் உள்ளது.
அதன் உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.
இந்த பணியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை தூண்கள் இல்லாமல் அலுமினிய சட்டத்தலான உயரமான மேற்கூரை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர் இடிந்து வெல்டிங் மற்றும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த 3 தொழிலாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இறந்தவர்களில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பப்லு (வயது 35), பீகாரை சேர்ந்த சுனில் (36) என தெரியவந்தது. மற்றவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
- வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 7 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளது.
- ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியான 1 மணி நேரத்திற்குள் தீர்ந்து விடுகின்றன. இதில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது :-
வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
பக்தர்கள் சிரமம் இன்றி விரைவாக தரிசனம் செய்வதற்காக 2.25 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
சாதாரண பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக சாமியை தரிசிக்க டிசம்பர் மாதம் 22-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்களுக்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மையங்களில் வழங்கப்பட உள்ளது.
காலை 6 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நித்திய அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 7 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார், தன்னார்வலர்களை பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 67,198 பேர் தரிசனம் செய்தனர். 22,452 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியான 1 மணி நேரத்திற்குள் தீர்ந்து விடுகின்றன. இதில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பக்தர்களுக்கு எளிதில் ஆன்லைன் டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- 40 படகுகள் முழுமையாக எரிந்தது. 20 படகுகள் தீ விபத்தில் சேதம் அடைந்தன.
- படகு விற்பனை தொடர்பாக அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
40 படகுகள் முழுமையாக எரிந்தது. 20 படகுகள் தீ விபத்தில் சேதம் அடைந்தன.
இந்த தீபத்து காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 மீனவ குடும்பத்தினர். இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இந்நிலையில் தீ விபத்துக்கு காரணமான யூடியூபர் நானி என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நானி என்பவருக்கு சொந்தமாக 2 மீன்பிடி படகுகள் உள்ளன. இவர் லோக்கல் பாய் நானி என்ற பெயரில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவதுடன் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
கடலில் மீன் பிடித்தல் உட்பட பல குறும்படங்களை தயாரித்து வெளியிட்டு பிரபலமாக உள்ளார்.
இந்நிலையில் நானியின் மனைவிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வளைகாப்பு நடந்தது. இதனைத் தொடர்ந்து நானி துறைமுகத்தில் உள்ள அவரது படகில் வைத்து நண்பர்களுக்கு மது விருந்து அளித்தார்.
அப்போது படகு விற்பனை தொடர்பாக அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த மோதலில் ஒரு படகில் தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கும் தீ வேகமாக பரவி எரிந்து நாசமாகி உள்ளன.
தீ விபத்து ஏற்பட்டதும் யூடியூபர் நானி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி வெளியே வந்துள்ளனர். விபத்தில் படகுகள் கொழுந்து விட்டு எரிந்த நேரத்தில் அங்கே இருந்த நானி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மத்தியில் இருந்தபடி வீடியோ பதிவு செய்தார்.
மேலும் தங்கள் படகுகள் எரிவதை பார்த்து கூக்கிரலிட்டு கண்ணீர் விட்டு அழுத மீனவர்களையும் படம்பிடித்தார். இந்த வீடியோவை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலாக பரவியது. விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பண விஷயம் தொடர்பாக யூடியூபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகி சாம்பல் ஆகின. இந்த தீ விபத்திற்கு இளம் யூடியூபர் தான் காரணம் என்றும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சிலருடன் பண விஷயம் தொடர்பாக யூடியூபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், யூடியூபருக்கு எதிரான சிலர் அவருக்கு சொந்தமான படகு ஒன்றில் தீ வைத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படகு தீப்பிடித்து எரிவதை பார்த்த உள்ளூர் வாசிகள், அதன் நங்கூர கயிறை அறுத்து நீரில் தள்ளினர்.

எனினும், பலத்து காற்று வீசியதால் தீப்பிடித்த படகு மற்ற படகுகளுடன் உரசியதால் கிட்டத்தட்ட 40-க்கும் அதிக படகுகள் சேதமடைந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட படகுகள் அனைத்திலும் டீசல் முழுமையாக நிரப்பப்பட்டும், கடலில் சமைக்க பயன்படுத்துவதற்காக கியாஸ் சிலிண்டர்களும் வைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக தீ மளமளவென பரவியது.
தீ விபத்தை தொடர்ந்து தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்தது. இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை அமைச்சர் சீதிரி அபல்ராஜூ தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பிறகு பேசிய அமைச்சர், "துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன. 9 படகுகள் சேதமடைந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு படகுக்கான முழு தொகையில் இருந்து 80 சதவீதம் வரை இழப்பீடாக படகுகளின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டு விடும். இது முதலமைச்சரின் முடிவு."
"இந்த துறைமுகத்தை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ. 150 கோடியை ஒதுக்கீடு செய்தோம், இது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துறைமுகம் உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது வரை எந்த அரசாங்கமும் இந்த துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது அரசாங்கம் தான் இதனை நவீன வசதிகளுடன் மேம்படுத்த நிதி ஒதுக்கி இருக்கிறது," என்று தெரிவித்தார்.
- கடந்த செப்டம்பர் மாதம் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்
- பொது கூட்டங்களில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ள தடை
ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு (73), தெலுகு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர சட்டசபை எதிர்கட்சி தலைவருமாவார்.
கடந்த ஆட்சி காலத்தில் ஆந்திர பிரதேச திறன் மேம்பாட்டு கழகத்தில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இது குறித்து தீவிர விசாரணைக்கு சி.ஐ.டி. பிரிவினருக்கு தற்போதுள்ள ஆந்திர அரசு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
அந்த விசாரணையை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 10 அன்று, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.
சிறையில் அவர் உடல் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட தொடங்கியது. மேலும், அவருக்கு கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது.
எனவே, இதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமின் கோரியிருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31 அன்று அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதால் இடைக்கால ஜாமினை சாதாரண ஜாமினாக மாற்ற கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.
இன்று அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் சாதாரண ஜாமின் வழங்கியது.
இதனை வழங்கிய ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி, இடைக்கால ஜாமினில் விதிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை அவர் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
- அறியாமை காரணமாக நான் இப்படி இரும்பு பெட்டியில் பணத்தை சேமித்து நஷ்டம் அடைந்துவிட்டேன்.
- என்னுடைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்தவர் ஆதி மூலம் லக்ஷ்மணா. விவசாயி.
இவர் தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்வதற்காக சுமார் ரூ. 2 லட்சம் பணத்தை இரும்பு பெட்டி ஒன்றில் பத்திரப்படுத்தி சேமித்து வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணம் மொத்தம் எவ்வளவு இருக்கிறது என்று எண்ணிப் பார்ப்பதற்காக இரும்பு பெட்டியைத் திறந்து பார்த்தார்.
அப்போது இரும்பு பெட்டியில் இருந்த பணம் கரையான் அரிக்கப்பட்டு துண்டு துண்டாக இருந்தது. இதை கண்ட ஆதி மூலம் லக்ஷ்மணா அதிர்ச்சடைந்தார்.
பெட்டியை தலைகீழாக கவிழ்த்துப் பார்த்த போது உள்ளே வைத்திருந்த சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை கரையான்கள் கடித்து துண்டு துண்டாக சேதப்படுத்தியிருந்தது தெரிய வந்தது.
இதனால் மனவேதனை அடைந்துள்ள ஆதிமூலம் லக்ஷ்மணா, அறியாமை காரணமாக நான் இப்படி இரும்பு பெட்டியில் பணத்தை சேமித்து நஷ்டம் அடைந்துவிட்டேன்.
என்னுடைய மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். என்னுடைய நிலையைக் கருத்தில் கொண்டு அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.






