என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மூத்த குடிமக்கள் கவுண்டரை அடைய பார்க்கிங் பகுதியில் இருந்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவை செய்துள்ளது.
- தரிசனத்திற்குத் தகுதிபெற, ஒருவர் புகைப்பட அடையாளத்துடன் வயது சான்றிதழை சமர்ப்பித்து, அதை எஸ்-1 கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் தரிசனம் செய்ய வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு இலவச தரிசனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மூத்த குடிமக்கள் இலவச தரிசனத்திற்காக தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 3 மணிக்கு 2 இடங்களை தேவஸ்தானம் ஒதுக்கியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் இந்த வசதிக்கு தகுதியுடையவர்கள்.
மூத்த குடிமக்கள் 30 நிமிடங்களுக்குள் சாமி தரிசனம் செய்ய முடியும்.
மூத்த குடிமக்கள் தரிசனம் செய்யும் போது மற்ற அனைத்து வரிசைகளும் நிறுத்தப்படும், இதனால் மூத்த குடிமக்கள் அமைதியான மற்றும் தொந்தரவு இல்லாத தரிசனத்தை பெற முடியும்.
மூத்த குடிமக்கள் கவுண்டரை அடைய பார்க்கிங் பகுதியில் இருந்து பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவை செய்துள்ளது.
இந்த தரிசனத்திற்குத் தகுதிபெற, ஒருவர் புகைப்பட அடையாளத்துடன் வயது சான்றிதழை சமர்ப்பித்து, அதை எஸ்-1 கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தரிசனத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் அடையாளச் சான்றுடன் தட்சிண மட தெருவில் உள்ள திருமலை நம்பி கோவிலுக்கு அருகில் உள்ள நுழைவு வாயிலில் பதிவு செய்ய வேண்டும்.
தரிசனத்தின் போது அவர்களுக்கு சாம்பார், தயிர் சாதம் மற்றும் சூடான பால் இலவசமாக வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு 2 லட்டுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 08772277777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
- சாமி தரிசனத்துக்கு 24 மணி நேரமானது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அங்குள்ள உண்டியலில் தங்கம், வெள்ளி, பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
கடந்த மே மாதம் ரூ.108.36 கோடி உண்டியல் பணம் வசூலாகி உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் கடந்த ஜனவரி மாதம் ரூ.116.46 கோடியும், பிப்ரவரி மாதம் ரூ.11.71 கோடியும், மார்ச் மாதம் ரூ.118.49 கோடியும், ஏப்ரல் மாதம் 101.63 கோடியும் உண்டியல் வருவாய் வசூலாகி சாதனை படைத்துள்ளது.
திருப்பதியில் நேற்று 67,873 பேர் தரிசனம் செய்தனர். 33,532 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.93 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. சாமி தரிசனத்துக்கு 24 மணி நேரமானது.
- இருவரும் 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.
- தன் மீது நக்ஷத்ரா வேண்டுமென்றே பழி சுமத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மிஸ் வைசாக் அழகிப் போட்டியின் முன்னாள் அழகி நக்ஷத்ராவும், திரைப்பட நடிகர் திரிபுரானா வெங்கட சாய் தேஜாவும் கடந்த 2013ம் ஆண்டில் ஒரே படத்தில் நடித்ததை தொடர்ந்து காதல் வயப்பட்டு இருவரும் 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
கடந்த சில வருடங்களாக தேஜாவிற்கு மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வருவதாக நக்ஷத்ரா குற்றம் சாட்டி வந்தார். ஆனால் தேஜா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.
தன் மீது நக்ஷத்ரா வேண்டுமென்றே பழி சுமத்தி வருவதாகவும் கூறினார்.
இந்நிலையில், தேஜா மற்றொரு பெண்ணுடன் இருக்கும் தகாத உறவை ஊடகத்திற்கு வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும் என்று, நக்ஷத்ரா தேஜாவின் இருப்பிடத்திற்கே சென்றுள்ளார்.
அங்கு, மற்றொரு பெண்ணுடன் இருந்த தேஜா நக்ஷத்ராவிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், 2021ம் ஆண்டு முதல் இருவரும் விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும் அதனால், புதிதாக வழக்கு எதுவும் பதிய செய்யப்படவில்லை என்றும் நகர வட்ட ஆய்வாளர் பரதசாரதி தெரிவித்துள்ளார்.
- அமித்ஷா தனது மனைவியுடன் மகா துவாரகம் வழியாக விஐபி பிரேக் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
- அமித்ஷா வருகையை ஒட்டி திருப்பதி மற்றும் திருப்பதி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்பதி:
மத்திய மந்திரி அமித்ஷா நேற்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு தனது மனைவி சோனல் ஷாவுடன் வந்தார்.
பின்னர் சாலை மார்க்கமாக திருப்பதி மலைக்கு வந்தார். அமித்ஷாவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். திருப்பதி மலையில் உள்ள வகுள மாதா விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு அமித்ஷா தங்கினார்.
இன்று காலை அமித்ஷா தனது மனைவியுடன் மகா துவாரகம் வழியாக விஐபி பிரேக் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அமித்ஷாவிற்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பட்டு வஸ்திரம் மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.
இதையடுத்து இன்று மதியம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகின்றனர்.
பின்னர் விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். அமித்ஷா வருகையை ஒட்டி திருப்பதி மற்றும் திருப்பதி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
#WATCH | Andhra Pradesh: Union Home Minister Amit Shah along with his wife Sonal Shah, offers prayers at the Tirupati Balaji Temple.
— ANI (@ANI) May 31, 2024
(Source: Tirumala Tirupati Devasthanams Board) pic.twitter.com/h3ij9Vhlbo
- சம்பவம் குறித்து இளம்பெண் ஸ்ரீஹரிகோட்டா போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால் அவரது காதலன் காதலியை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள பிலிகாட் ஏரியில் காதலியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். இளம்பெண்ணின் காதலனை தாக்கி கை கால்களை கட்டி போட்டனர்.
இதனைக் கண்ட இளம்பெண் கத்தி கூச்சலிட்டார். அப்பபகுதியில் யாரும் இல்லாததால் இளம்பெண்ணை காப்பாற்ற யாரும் வரவில்லை.
பின்னர் 2 வாலிபர்களும் காதலன் கண்முன்னே அவரது காதலியை பலாத்காரம் செய்தனர்.
இதனை தடுக்க முடியாமல் காதலன் கடும் வேதனை அடைந்தார். வாலிபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து இளம்பெண் ஸ்ரீஹரிகோட்டா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிகப்பெரிய தக்காளி மார்க்கெட்டான மதனப்பள்ளிக்கு குறைந்த அளவிலேயே தக்காளி வரத்து உள்ளது.
- தற்போது வேலூரில் தக்காளி கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்தது. இந்த ஆண்டு சுட்டெரிக்கும் வெயில் காரணமாக தக்காளி பயிர்கள் வாடி பழங்கள் உருவாகாமல் பிஞ்சிலேயே உதிர்கின்றன.
இதன் காரணமாக தக்காளி விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள பெரிய மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் மொத்த விலையில் கிலோ ரூ.40 முதல் 50 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
மிகப்பெரிய தக்காளி மார்க்கெட்டான மதனப்பள்ளிக்கு குறைந்த அளவிலேயே தக்காளி வரத்து உள்ளது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே தற்போது தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் தக்காளி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது வேலூரில் தக்காளி கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏற்றுமதி முழுவதுமாக நிறுத்தப்பட்டால் தக்காளி விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் சிறிதளவு குறைந்து உள்ளது.
- திருப்பதியில் நேற்று 73,811 பேர் தரிசனம் செய்தனர். 34,901 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் சிறிதளவு குறைந்து உள்ளது.
சிறப்பு தரிசன டிக்கெட்டில் வரும் பக்தர்கள் 4 மணி நேரமும், ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,811 பேர் தரிசனம் செய்தனர். 34,901 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- ரகு சாய் தேஜா தான் லட்டு கவுண்டரில் வேலை செய்வதாகவும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.
- தேவஸ்தான ஊழியர்கள் சீனிவாஸ் கொண்டு சென்ற டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்தபோது ஸ்கேன் ஆகவில்லை.
திருப்பதி:
திருப்பதி கோவிலில் இலவச நேரடி தரிசனத்திற்கு காத்திருக்க முடியாத பக்தர்கள் தரிசன டிக்கெட் பெறுவதற்காக புரோக்கர்களை நாடி செல்கின்றனர்.
புரோக்கர்கள் பக்தர்களிடம் பல்லாயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தரிசன டிக்கெட் கொடுத்து ஏமாற்றி வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் பெறுவதற்காக தனது நண்பரின் மூலம் திருப்பதியை சேர்ந்த ரகு சாய் தேஜா என்ற புரோக்கரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். தனக்கு 4 வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வேண்டுமென தெரிவித்தார்.
அப்போது ரகு சாய் தேஜா தான் லட்டு கவுண்டரில் வேலை செய்வதாகவும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார். கடந்த 26-ந் தேதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் சீனிவாசிடமிருந்து ரூ.17 ஆயிரத்தை பெற்றுக் கொண்டார்.
பின்னர் பழைய வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டை ஸ்கேன் செய்து பெயர் மற்றும் தேதிகளை மாற்றி போலி டிக்கெட் தயார் செய்தார். அதை வாட்ஸ் அப் மூலம் சீனிவாசிற்கு அனுப்பினார். அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு நேற்று சீனிவாஸ் தரிசனம் செய்ய சென்றார்.
தேவஸ்தான ஊழியர்கள் சீனிவாஸ் கொண்டு சென்ற டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்தபோது ஸ்கேன் ஆகவில்லை. இதனால் தேவஸ்தான ஊழியர்கள் போலி தரிசன டிக்கெட் என சீனிவாசை திருப்பி அனுப்பினர்.
இதுகுறித்து சீனிவாஸ் திருப்பதி விஜிலென்ஸ் பிரிவு அதிகாரியிடம் புகார் செய்தார்.
அவர்கள் அளித்த புகாரின்பேரில் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+2
- 8 முக்கிய குற்றவாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- விசாரணையில் பல்வேறு இடங்களில் குழந்தைகளை கடத்தி கும்பல் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகளை விலைக்கு வாங்கியும் கடத்தி சென்றும் கும்பல் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த 22-ந்தேதி ஆந்திர மாநிலம் பிர்ஜாதி குடா ஆஸ்பத்திரியில் ஏழை பெண் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் அதன் தாயார் திணறினார்.
இதனை அறிந்த அந்த ஆஸ்பத்திரி ஊழியர் சோபா ராணி என்பவர் நைசாக குழந்தையின் தாயிடம் பேசி அதனை விற்பனை செய்து விடலாம் என தெரிவித்தார்.
இதனையடுத்து ரூ.4.5 லட்சம் பேரம் பேசி குழந்தையை விஜயவாடாவை சேர்ந்த தம்பதியிடம் விற்பனை செய்தனர். சோபா ராணி குழந்தையை விற்பனை செய்த சம்பவம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது விஜயவாடாவை சேர்ந்த கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குழந்தைகள் விற்பனை செய்த 11 பேரை மடக்கிப் பிடித்தனர். இதில் 8 முக்கிய குற்றவாளிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
விசாரணையில் பல்வேறு இடங்களில் குழந்தைகளை கடத்தி கும்பல் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கும்பல் விற்பனை செய்த 16 குழந்தைகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மீட்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் ஆண் குழந்தைகள் மற்றவை அனைத்தும் பெண் குழந்தைகள். மீட்கப்பட்ட குழந்தைகள் அரசு குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் நாடு முழுவதும் செயல்படுவது தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும் புனேவில் அதிக அளவில் புரோக்கர்கள் உள்ளனர்.
அவர்கள் மாநிலங்கள் வாரியாக குழந்தை விற்பனை செய்ய கும்பல்களை நிறுவி உள்ளனர்.
அந்த கும்பல்கள் குழந்தை இல்லாத பெற்றோர்களை அணுகி பேரம் பேசுகின்றனர். பின்னர் டெல்லி மற்றும் புனேவில் உள்ள புரோக்கர்களை தொடர்பு கொள்கின்றனர். அவர்கள் குழந்தைகளின் புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி விடுகின்றனர்.
எந்த குழந்தை பிடிக்கிறதோ அந்த குழந்தைகளுக்கு ஏற்றபடி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்துள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 50 பச்சிளம் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்துள்ளதாக பிடிபட்ட கும்பல் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஆந்திர மாநில போலீசார் அந்த குழந்தைகளை மீட்க தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். டெல்லி, புனேவைச் சேர்ந்த கும்பல் சிக்கினால் நாடு முழுவதும் கடத்தி விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளை மீட்க முடியும்.
இதனால் அவர்களை தேடி தனிப்படை போலீசார் டெல்லி மற்றும் புனேயில் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
முதலில் குழந்தை விற்பனை என்பதை சாதாரணமாக தான் பார்த்தோம். ஆனால் விசாரணையில் அது நீண்டு கொண்டே சென்றது.
இதுவரை 16 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். டெல்லி, புனேவை சேர்ந்த கும்பல்கள் நாடு முழுவதும் குழந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பிடிபட்டால் மேலும் பல குழந்தைகள் மீட்கப்படுவார்கள்.
மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்த அடையாளங்கள் மூலம் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
- ரோபோ யார் எந்த கேள்வி கேட்டாலும் கைகளை அசைத்து சைகைகளை காட்டி பதிலளிக்கிறது.
- மாயா ரோபோ பதில் அளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல் ஆய்வாளர்கள் கூட இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தற்போது திணறி வருகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்களில் மறைந்திருக்கும் உண்மை என்ன? வாக்காளர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் அந்த மாநில மக்கள் ஆட்சி அமைக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதனிடையே துபாய் சென்ற ஆந்திர நபர் ஒருவர் ரோபோவிடம் இது பற்றி கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
துபாயில் உள்ள ஆப் பியூச்சர் என்ற இடம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இங்குள்ள மியூசியம் ஒன்றில் மாயா ரோபோ உள்ளது.
இந்த ரோபோ யார் எந்த கேள்வி கேட்டாலும் கைகளை அசைத்து சைகைகளை காட்டி பதிலளிக்கிறது. உலகில் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல ஒரு கணம் கூட யோசிப்பதில்லை.
இந்த ரோபோ அருகில் சென்ற ஆந்திர நபர் ஒருவர் ஆந்திராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போவது யார்? என கேள்வி எழுப்பினார்.
இதனை கேட்டதும் ரோபோ ஒரு கணம் அப்படியே அசையாமல் நின்றது. இந்த கேள்விக்கு பதில் தெரிந்தாலும் சொல்ல முடியாது என ரோபோ கைகளை காட்டி பதில் அளித்தது. இதனைக் கேட்டதும் ஆந்திர நபர் திகைத்து போனார்.
மாயா ரோபோ பதில் அளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனிதர்கள் மட்டுமின்றி மனிதர்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் கூட தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து ஆந்திரா தேர்தல் குறித்து அசத்தலாக பதில் அளித்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- சாலையின் தடுப்பில் மோதி எதிர் திசையில் கார் சென்றது. அப்போது எதிரே வந்த லாரியில் கார் நேருக்கு நேர் மோதியது.
- அதிகாலையில் 2 விபத்துகளில் 8 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்து இன்று அதிகாலை காரில் புறப்பட்டு வந்தனர். கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு என்ற இடத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது.
சாலையின் தடுப்பில் மோதி எதிர் திசையில் கார் சென்றது. அப்போது எதிரே வந்த லாரியில் கார் நேருக்கு நேர் மோதியது.
இதில் கார் முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கோபி (வயது 23), ராதா பிரியா (16), ராகேஷ் (12) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். சாமிநாதனின் மனைவி படுகாயமடைந்தார்.
அவரை மீட்டு விஜயவாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் பலியான 4 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல திருப்பதி மாவட்டத்தில் நெல்லூர் - வேலூர் சாலையில் இன்று காலை சாலை தடுப்பில் கார் மோதியதில் 4 பேர் இறந்தனர்.
அதிகாலையில் 2 விபத்துகளில் 8 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருப்பதி தேவஸ்தானம் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது.
- லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற நேரங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது.
மேலும், கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் திருமலைக்கு அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர். இதனையொட்டி திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்ததுடன் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது. ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருப்பதியில் நாளை காலை வரை இலவச தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் ஜூன் 30ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் விஜபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தான்ம் அறிவித்துள்ளது.
மேலும், எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






