மற்றொரு பெண்ணுடன் உல்லாசம்- கணவரை கையும் களவுமாக பிடித்த முன்னாள் அழகி

இருவரும் 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.தன் மீது நக்‌ஷத்ரா வேண்டுமென்றே பழி சுமத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மற்றொரு பெண்ணுடன் உல்லாசம்- கணவரை கையும் களவுமாக பிடித்த முன்னாள் அழகி
Published on

மிஸ் வைசாக் அழகிப் போட்டியின் முன்னாள் அழகி நக்ஷத்ராவும், திரைப்பட நடிகர் திரிபுரானா வெங்கட சாய் தேஜாவும் கடந்த 2013ம் ஆண்டில் ஒரே படத்தில் நடித்ததை தொடர்ந்து காதல் வயப்பட்டு இருவரும் 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

கடந்த சில வருடங்களாக தேஜாவிற்கு மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வருவதாக நக்ஷத்ரா குற்றம் சாட்டி வந்தார். ஆனால் தேஜா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

தன் மீது நக்ஷத்ரா வேண்டுமென்றே பழி சுமத்தி வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில், தேஜா மற்றொரு பெண்ணுடன் இருக்கும் தகாத உறவை ஊடகத்திற்கு வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும் என்று, நக்ஷத்ரா தேஜாவின் இருப்பிடத்திற்கே சென்றுள்ளார்.

அங்கு, மற்றொரு பெண்ணுடன் இருந்த தேஜா நக்ஷத்ராவிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், 2021ம் ஆண்டு முதல் இருவரும் விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும் அதனால், புதிதாக வழக்கு எதுவும் பதிய செய்யப்படவில்லை என்றும் நகர வட்ட ஆய்வாளர் பரதசாரதி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com