என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நர்சு என்.கே.நேமாவதி.
    • 2 தளங்களை கொண்ட புதிய மாடி வீட்டை கட்டினார்.

    திருமலை :

    தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நர்சு என்.கே.நேமாவதி. இவர் சமீபத்தில் சொந்தமாக 2 தளங்களை கொண்ட புதிய மாடி வீட்டை கட்டினார். அந்த வீட்டின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். அவர் தனது பெற்றோரின் நினைவாக அந்த வீட்டை நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானத்திடம் காணிக்கையாக வழங்கினார்.

    திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்துக்கு வந்த பக்தர் என்.கே.நேமாவதி தேவஸ்தான சொத்துப் பாதுகாப்புத்துறை சிறப்பு அதிகாரி மல்லிகார்ஜுனாவிடம் தன்னுடைய ரூ.70 லட்சம் மதிப்பிலான புதிய 2 அடுக்கு மாடி வீட்டுக்கான ஆவணங்கள் மற்றும் சாவிகளை ஒப்படைத்தார்.

    • 10 நாள்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • இன்று காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் இன்று காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரி அணில்குமார் சிங்கால் திருமலையில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது: வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜனவரி 1ந் தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். 10 நாட்களுக்கு தொடர்ந்து டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் எதிரே விஷ்ணுநிவாசம், ரெயில் நிலையம் பின்புறம் உள்ள சத்திரங்கள், பேருந்து நிலையம் எதிரே சீனிவாசம் வளாகம், இந்திரா மைதானம், ஜீவகோனா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி, பைராகிப்பட்டேடாவில் ராமநாயுடு நகராட்சி உயர்நிலைப்பள்ளி, எம்.ஆர். பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி ராமச்சந்திர புஷ்கரணி ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீசைலம் கோவிலை உலகத் தர வழிபாட்டுத் தலமாக மாற்ற நடவடிக்கை.
    • வாகன நிறுத்துமிடங்கள், உணவு வசதி, வங்கி வசதி ஏற்படுத்தப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலில் 43 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய சுற்றுலா அமைச்சகம் இந்த நிதியை வழங்கி உள்ளது.

    ஆன்மீகம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான பிரஷாத் திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடைபெறுகின்றன. ஸ்ரீசைலம் கோவிலை உலகத் தரத்திலான வழிபாட்டுத் தலமாகவும், சிறந்த சுற்றுலா மையமாகவும் மாற்றும் நோக்கில் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. 


    திறந்தவெளி வட்ட அரங்கங்கள், ஒலி-ஒளி காட்சி அமைப்புகள், வாகன நிறுத்துமிடங்கள், சிறந்த உணவுக்கான வசதிகள், பரிசுப் பொருட்களுக்கான கடைகள், வங்கி வசதி மற்றும் ஏடிஎம் வசதிகள், கழிப்பறை வசதிகள் போன்ற பல வசதிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண் ரெட்டி, சுற்றுலாத்துறை இணை மந்திரி ஸ்ரீபத் நாயக், ஆந்திர துணை முதலமைச்சர் கோட்டு சத்யநாராயணா, ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஜனவரி 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.
    • நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதை முன்னிட்டு 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. இதனால், 27-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    எனவே இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
    • நாளை விஐபி பிரேக் தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி 11 நாட்களுக்கு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகைகள் 2.20 லட்சம் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    இதேபோல் ஜனவரி 2-ந் தேதி முதல் முதல் 11 ஆம் தேதி வரை தினமும் இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதியில் 9 இடங்களிலும், திருமலையில் தேவஸ்தான நிர்வாக கட்டிடத்திலும் டைம் ஸ்லாட் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.

    திருப்பதியில் பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம், ராமா நாயுடு பள்ளி, ராமச்சந்திர புஷ்கரணி, எம்.ஆர். பள்ளி போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு பள்ளி மற்றும் ஜீவகோணா உள்ளிட்ட 9 இடங்களில் இலவச டைம் ஸ்லாட் தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி என்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

    தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்று கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்காததால் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வைகுண்ட ஏகாதசி ஒட்டி நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனால் சுமார் 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை விஐபி பிரேக் தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வைகுண்ட ஏகாதசி தினத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அசோக் சிங்கால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று பக்தர்களின் தரிசன வரிசையை ஆய்வு செய்தனர்.

    அப்போது பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படாமல் தரிசனத்திற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    திருப்பதியில் நேற்று 70,373 பேர் தரிசனம் செய்தனர். 32,954 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.5.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கஞ்சா சாகுபடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
    • ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்டு வருவதாக டி.ஐ.ஜி. ஹரிகிருஷ்ணா தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர், அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜூ, பார்வதிபுரம் மான்யம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கஞ்சா செடிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மொத்தம் 7,500 ஏக்கரில் பயிரிடப்பட்ட 10 ஆயிரத்து 424 கிலோ கஞ்சா, 133 கிலோ எடையுள்ள திரவ எண்ணெயாக தயார் செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமாக 929 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை தீயிட்டு எரிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி விசாகப்பட்டினம் டி.ஐ.ஜி ஹரி கிருஷ்ணா தலைமையில் குண்டூர் அருகே உள்ள மைதானத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கீழே கொட்டி அதன் மீது கட்டைகளை அடுக்கி போலீசார் தீயிட்டு எரித்தனர். தீயிட்டு எரிக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.240 கோடி என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து டி.ஐ.ஜி. ஹரிகிருஷ்ணா கூறுகையில்:-

    கஞ்சா சாகுபடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்டு வருவதாக தெரிவித்தார். 

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆமோஸ் திடீரென காணாமல் போனார்.
    • கணவர் காணாமல் போனது குறித்து ஆமோஸ் மனைவி அருணா சைதராபாத் போலீசில் புகார் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அல்வா பகுதியை சேர்ந்தவர் காடிப்பன்டி ஆமோஸ் (வயது 26). பட்டதாரி வாலிபரான இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் அருணாவை காதலித்து வந்தார். இவரது காதலுக்கு அருணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் அதோணி பகுதியில் எமிகாணுரிலும் வசித்து வந்தனர். தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக கர்னூல் அடுத்த கல்லூர் எஸ்டேட் பகுதியில் தங்கி இருந்து சிட்டி ஸ்கொயர் மாலில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆமோஸ் திடீரென காணாமல் போனார். கணவர் காணாமல் போனது குறித்து அவரது மனைவி அருணா சைதராபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஹந்திரீனா ஆற்றங்கரையோரம் உள்ள அடர்ந்த முள் புதரில் ஆமோஸ் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சைதராபாத் டிஎஸ்பி மகேஷ் இன்ஸ்பெக்டர் சங்கர் அய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி சோதனை செய்தபோது, ஆமோசை மர்மநபர்கள் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து முள் புதரில் வீசி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாற்று சமூக பெண்ணை காதல் திருமணம் செய்ததால் ஆமோஸ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பதி வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
    • மலைப்பாதையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிறுத்தை குட்டி மீது மோதியது.

    திருப்பதி:

    திருப்பதி வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதைக்கு வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை அலிப்பிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் அதிகாலை 4 மணிக்கு 3 மாத சிறுத்தை குட்டி சாலையை கடந்துள்ளது. அப்போது மலைப்பாதையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிறுத்தை குட்டி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுத்தை குட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து திருப்பதி வனத்துறை அலுவலர் சதி ஷெட்டிக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த சிறுத்தை குட்டியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு அதிகாலை நேரத்தில் திருமலைக்கு பைக்கில் மலை பாதையில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் மற்றும் பக்தர் மீது அங்கு பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து தாக்கியது. இதில் பைக்கில் சென்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    வன உயிரியல் பூங்கா அருகில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து அங்கிருந்த நாயை அடித்துக் கொன்றது.

    இதனால் பல்கலைக்கழக வளாக விடுதியில் தங்கி இருக்கும் மாணவர்கள் இரவு 7 மணிக்கு மேல் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    பல்கலைக்கழகத்திற்குள் வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டுமென மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறுத்தையை பிடிக்க பல்கலைக்கழக வளாகத்தில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திராவில் வரிச்சுமையை அதிகரித்து மக்களை ஜெகன் மோகன் கொள்ளையடிக்கிறார்.
    • அடுத்த தேர்தலில் ஜெகனை வங்கக்கடலில் துாக்கி வீச ஆந்திர மக்கள் தயாராக இருக்கின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

    இந்த ஆட்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சாலை பேரணி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

    ஸ்ரீகாகுளம் மாவட்டம் பொண்டுரு மற்றும் விஜியாநகரம் வாசிம் ஆகிய இடங்களில் நடந்த பொதுக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

    ஆந்திராவில் வரிச்சுமையை அதிகரித்து மக்களை ஜெகன் மோகன் கொள்ளையடிக்கிறார். ஆந்திரா முழுவதையும் ஜெகன் அழித்து விடுவார். அடுத்த தேர்தலில் ஜெகனை வங்கக்கடலில் துாக்கி வீச ஆந்திர மக்கள் தயாராக இருக்கின்றனர்.

    கொள்ளை அடித்த பணத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கொடுக்க ஜெகன் மோகன் முடிவு செய்துள்ளார்.

    அந்த பணத்தை மக்கள் வாங்கினால், அவர்களுக்கு அவர்களே பள்ளம் தோண்டிக்கொள்வதாக அர்த்தமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    தொற்று பரவல் குறைந்ததையடுத்து குறைந்த அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் கொரோனா 2-வது அலை தொடங்கியதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, இலவச தரிசனம், ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மற்றும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை, சுப்ரபாத சேவை உள்ளிட்ட சேவைகள் மூலம் தினமும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    எப்போதும் இல்லாத அளவுக்கு திருப்பதி தேவஸ்தானத்திற்கு மாதத்திற்கு ரூ.120 கோடி முதல் 130 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.

    இந்த நிலையில் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்க கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    இதனால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.

    மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று வைத்திருக்க வேண்டும் அல்லது தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 62, 055 பேர் தரிசனம் செய்தனர்.23, 044 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.99 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதியை மையமாக கொண்டு செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.
    • கடந்த 2 ஆண்டுகளில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 228 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷாசல காடுகளில் அதிக அளவில் செம்மரங்கள் வளர்கின்றன. இந்த செம்மரங்களை வெட்டி, அதன் கட்டைகளை சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர்.

    இதைத் தடுக்க கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதியை மையமாக கொண்டு செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.

    இந்த பிரிவு தொடங்கப்பட்டதிலிருந்து தினமும் ரோந்து பணியில் ஈடுபடுதல், மரம் வெட்ட வருபவர்களுக்கு வேறு வகையில் வாழ்வாதாரத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்துரையாடுதல், கடத்தல் குறித்த தகவல்களை அளிக்க வாட்ஸ்-அப் செயலி என பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த 228 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 392 பேர், கர்நாடகத்தை சேர்ந்த 12 பேர் என மொத்தம் 641 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து 4,171 செம்மரக்கட்டைகளும், கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 102 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை அஜய் வாங்கினார்.
    • அஜய் வாங்கிய லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஜிகித்யாலா மண்டலம், துங்கடி பகுதியை சேர்ந்தவர் ஓகுலா அஜய். இவர் கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை வாங்கினார். அஜய் வாங்கிய லாட்டரி சீட்டு குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது.

    இதில் அவர் வாங்கிய ஒரு லாட்டரி சீட்டுக்கு ரூ.30 கோடி முதல் பரிசாக விழுந்தது.

    லாட்டரியில் ரூ 30 கோடி பரிசு விழுந்த தகவல் அறிந்து அஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குடும்ப வறுமை காரணமாக துபாயில் வேலைக்குச் சென்ற அஜய்க்கு லாட்டரியில் ரூ.30 கோடி கிடைத்ததால் அவரது குடும்பம் வறுமையில் இருந்து மீண்டுவிடும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    ×