search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirupati"

    • 10 நாள்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • இன்று காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் இன்று காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஜனவரி 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரி அணில்குமார் சிங்கால் திருமலையில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது: வைகுண்ட வாசல் தரிசனத்திற்காக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே ஆன்லைனில் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜனவரி 1ந் தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி தொடங்கும். 10 நாட்களுக்கு தொடர்ந்து டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் எதிரே விஷ்ணுநிவாசம், ரெயில் நிலையம் பின்புறம் உள்ள சத்திரங்கள், பேருந்து நிலையம் எதிரே சீனிவாசம் வளாகம், இந்திரா மைதானம், ஜீவகோனா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி, பைராகிப்பட்டேடாவில் ராமநாயுடு நகராட்சி உயர்நிலைப்பள்ளி, எம்.ஆர். பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி ராமச்சந்திர புஷ்கரணி ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×