துபாய் லாட்டரியில் தெலுங்கானா வாலிபருக்கு ரூ.30 கோடி பரிசு

கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை அஜய் வாங்கினார்.அஜய் வாங்கிய லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்தது.
துபாய் லாட்டரியில் தெலுங்கானா வாலிபருக்கு ரூ.30 கோடி பரிசு
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், ஜிகித்யாலா மண்டலம், துங்கடி பகுதியை சேர்ந்தவர் ஓகுலா அஜய். இவர் கடந்த 4 ஆண்டுகளாக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

கடந்த வாரம் துபாயில் விற்பனை செய்யப்படும் ஜாக்பாட் 2 லாட்டரி சீட்டுகளை வாங்கினார். அஜய் வாங்கிய லாட்டரி சீட்டு குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் அவர் வாங்கிய ஒரு லாட்டரி சீட்டுக்கு ரூ.30 கோடி முதல் பரிசாக விழுந்தது.

லாட்டரியில் ரூ 30 கோடி பரிசு விழுந்த தகவல் அறிந்து அஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குடும்ப வறுமை காரணமாக துபாயில் வேலைக்குச் சென்ற அஜய்க்கு லாட்டரியில் ரூ.30 கோடி கிடைத்ததால் அவரது குடும்பம் வறுமையில் இருந்து மீண்டுவிடும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com