search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா கட்டுப்பாடா?: தேவஸ்தானம் விளக்கம்
    X

    திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா கட்டுப்பாடா?: தேவஸ்தானம் விளக்கம்

    • நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
    • நாளை விஐபி பிரேக் தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி 11 நாட்களுக்கு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகைகள் 2.20 லட்சம் ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    இதேபோல் ஜனவரி 2-ந் தேதி முதல் முதல் 11 ஆம் தேதி வரை தினமும் இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் வகையில் திருப்பதியில் 9 இடங்களிலும், திருமலையில் தேவஸ்தான நிர்வாக கட்டிடத்திலும் டைம் ஸ்லாட் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.

    திருப்பதியில் பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம், ராமா நாயுடு பள்ளி, ராமச்சந்திர புஷ்கரணி, எம்.ஆர். பள்ளி போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு பள்ளி மற்றும் ஜீவகோணா உள்ளிட்ட 9 இடங்களில் இலவச டைம் ஸ்லாட் தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி என்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

    தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்று கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்காததால் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வைகுண்ட ஏகாதசி ஒட்டி நாளை காலை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனால் சுமார் 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை விஐபி பிரேக் தரிசனத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வைகுண்ட ஏகாதசி தினத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அசோக் சிங்கால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று பக்தர்களின் தரிசன வரிசையை ஆய்வு செய்தனர்.

    அப்போது பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படாமல் தரிசனத்திற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    திருப்பதியில் நேற்று 70,373 பேர் தரிசனம் செய்தனர். 32,954 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.5.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×