என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 6 வயது சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது.
    • சிறுத்தை குழந்தையை கொன்றதா என்பதை உறுதி செய்ய மரபணு ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை கடித்து கொன்றது. இதனையடுத்து நடைபாதை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.

    வனத்துறையினர் சிறுமி பிணம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டு வைத்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 6 வயது சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது.

    கூண்டில் சிக்கிய சிறுத்தை ஆவேசத்துடன் தனது கால்களால் கூண்டை தாக்கியது. இதில் சிறுத்தைக்கு லேசான காயம் ஏற்பட்டதால் வன உயிரியல் பூங்காவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிறுத்தை குழந்தையை கொன்றதா என்பதை உறுதி செய்ய மரபணு ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூண்டில் சிறுத்தை சிக்கிய அன்றே லட்சுமி நரசிம்மர் சாமி கோவில், காளி கோபுரம் பகுதிகளில் மற்றொரு சிறுத்தை சுற்றி திரிந்தது.

    நடைபாதை அருகே சுற்றி திரிந்த சிறுத்தையை பிடிக்க மொகாலி மெட்டு, லட்சுமி நரசிம்மர் சாமி கோவில் மற்றும் 35-வது வளைவு ஆகிய இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.

    லட்சுமி நரசிம்மர் சாமி கோவில் அருகே வைக்கப்பட்டு இருந்த கூண்டில் நேற்று இரவு மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    கடந்த 50 நாட்களில் நடைபாதையில் இதுவரை 3 சிறுத்தைகள் சிக்கி உள்ளன.

    நடைபாதை அருகே அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்களின் வருகை பாதியாக குறைந்து உள்ளது.

    இதற்கு முன்பு தினமும் நடைபாதையில் 10 முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை வந்தனர். நடைபாதையில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆயிரமாக குறைந்து உள்ளது.

    திருப்பதியில் நேற்று 75,776 பேர் தரிசனம் செய்தனர். 22,700 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பக்தர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும்.
    • அலிபிரி வழியாக மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது.

    திருமலை:

    திருப்பதி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது. இதையடுத்து ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது.

    ஆனால் சில மணி நேரத்தில் மீண்டும் வேறு ஒரு சிறுத்தை அதே இடத்திற்கு வந்தது. இந்நிலையில் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் துறை கட்டிடம் எதிரே வனப்பகுதியில் இருந்து திடீரென ஒரு சிறுத்தை வந்தது.

    இதனை கண்டு அங்கிருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது மாணவர்கள் சிலர் சிறுத்தையை மறைந்திருந்த புகைப்படமும் எடுத்துள்ளனர்.

    மேலும் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர்.

    தொடர்ந்து சிறுத்தை வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பதி மலைப்பாதையில் கடந்த 3 நாட்களாக சுற்றிவந்த சிறுத்தை, தற்போது கீழே இறங்கி மலையடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்ததால் பொதுமக்கள், பக்தர்கள் பீதியில் உள்ளனர்.

    பக்தர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும்.

    நடைபாதையில் இரவு நேரங்களில் அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி அலிபிரி வழியாக மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது.

    தேவஸ்தான பாதுகாவலர்கள் பக்தர்களுக்கு கைத்தடிகளை வழங்கினர். இந்த கைத்தடிகள் ஏழுமலையான் கோவில் அருகே மீண்டும் சேகரிக்கப்படுகிறது.

    • பலாத்கார வீடியோவை நண்பர் ஹரி என்பவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தனர்.
    • மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கல்யாண் துர்க் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் நேற்று அனந்தபூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் 5 பேர் என்னை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    அப்போது பலாத்காரம் செய்ததை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மிரட்டினர். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து பலாத்காரம் செய்தனர். உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர்.

    பலாத்கார வீடியோவை அவரது நண்பர் ஹரி என்பவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தனர். அவரும் வீடியோவை காட்டி என்னை வரவழைத்து பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து கல்யாண் துர்க் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

    இதுகுறித்து டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்துக்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர்.
    • பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    திருமலை:

    திருப்பதி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது. இதையடுத்து ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது.

    ஆனால் சில மணி நேரத்தில் மீண்டும் வேறு ஒரு சிறுத்தை அதே இடத்திற்கு வந்தது. இந்நிலையில் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் துறை கட்டிடம் எதிரே வனப்பகுதியில் இருந்து திடீரென ஒரு சிறுத்தை வந்தது.

    இதனை கண்டு அங்கிருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது மாணவர்கள் சிலர் சிறுத்தையை மறைந்திருந்து புகைப்படமும் எடுத்துள்ளனர்.

    மேலும் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர்.

    தொடர்ந்து சிறுத்தை வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பதி மலைப்பாதையில் கடந்த 3 நாட்களாக சுற்றிவந்த சிறுத்தை, தற்போது கீழே இறங்கி மலையடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்ததால் பொதுமக்கள், பக்தர்கள் பீதியில் உள்ளனர்.

    இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரவு 7 மணிக்கு பிறகு யாரும் வெளியே வரவேண்டாம் தனியாக யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பேருந்து மூலமாக செல்ல சாலைகளும் உள்ளன
    • திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

    இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ளது திருப்பதி.

    இந்துக்களுக்கு மிக முக்கிய புனித தலமாக கருதப்படும் திருப்பதியில் உள்ள திருமலை எனும் மலையில் உள்ள உலக புகழ் பெற்ற கோயிலில், இந்துக்கள் வழிபடும் தெய்வமான திருமாலின் சன்னதி உள்ளது.

    இவரை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி அங்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலின் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) எனும் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

    திருப்பதியில் இருந்து மலை மீது உள்ள திருமலைக்கு பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பேருந்து மற்றும் 2 அல்லது 4 சக்கர வாகனங்கள் மூலமாக செல்வதற்கு சாலைகளும் உள்ளன. படிக்கட்டுகள் வழியாக மேல் திருப்பதிக்கு செல்ல சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

    சென்ற வாரம் அங்கு படிக்கட்டு மார்க்கமாக திருமலைக்கு சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த லக்ஷிதா எனும் 6-வயது சிறுமி பெற்றோரிடமிருந்து சற்று விலகி நடந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மலைப்பகுதியிலுள்ள காடுகளில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று அச்சிறுமியை தாக்கியதில், அச்சிறுமி உயிரிழந்தாள்.

    இச்சம்பவத்திற்கு பிறகு திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்தே செல்ல விரும்பும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.

    வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:

    "நடந்து செல்ல விரும்பும் பக்தர்கள் உணவு பண்டங்களை வழியில் இரைக்க கூடாது. நடைபயணமாக படிக்கட்டில் ஏறிச்செல்லும் பக்தர்கள் இனி 100 பேர் கொண்ட ஒரு குழுவாக ஒன்றாக இணைந்துதான் செல்ல வேண்டும். தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்படும்," இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    திருமலையிலுள்ள காடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுக்களின் பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் வாரியம் தெரிவிக்கிறது.

    • கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகர் அடுத்த தேயநகர் காலனி சேர்ந்தவர் பிரவீன் (வயது 50). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி லாவண்யா (42). டெய்லர் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் உள்ளார். இவர் கரீம் நகரில் உள்ள விடுதியில் தங்கி இருந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பிரவீன் குடும்பத்தினர் கீழ்த்தளத்திலும், அவரது பெற்றோர் முதல் தளத்திலும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரவீன் வீட்டில் இருந்த கல்லை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் லாவண்யா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வீட்டில் மறைத்து வைத்தார்.

    நேற்று முன்தினம் காலை கரீம் நகர் வந்த பிரவீன் விடுதியில் தங்கி இருந்த மகளை பார்த்துவிட்டு நலம் விசாரித்தார். பின்னர் வீட்டிற்கு வந்த பிரவீன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தற்கொலைக்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதினார்.

    அந்த கடிதத்தில் எங்களுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களது சடலங்களை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குங்கள். சடங்குகள் எதுவும் செய்ய வேண்டாம். யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது. பிறப்பைப் போலவே இறப்பும் இயற்கையானது என கூறியிருந்தார்.

    இதனையடுத்து பிரவீன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பிரவீனின் நண்பர்கள் பலமுறை போன் செய்தோம் பிரவீன் எடுக்காததால் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது மனைவி ரத்த வெள்ளத்திலும், பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பிரவீனின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடைப்பாதையில் மீண்டும் மனிதர்களை சிறுத்தை வேட்டையாட வாய்ப்புள்ளது.
    • பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை கல்வி சென்று கடித்துக் கொன்றது.

    இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அலிப்பிரி நடைபாதையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    மேலும் சிறுத்தைகளைப் பிடிக்க வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    நேற்று பெரிய சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது. இந்த சிறுத்தை சிறுமியை கொன்றிருக்க வாய்ப்பில்லை என வனத்துறை தெரிவித்தனர்.

    இதனால் பிடிப்பட்ட சிறுத்தையின் கால் நகங்கள், ரத்தம் ஆகியவற்றை மரபணு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இதன் மூலம் இந்த சிறுத்தை சிறுமியை கொன்றதா இல்லையா என்பது உறுதிபடுத்தப்படும்.

    ஒருவேளை இந்த சிறுத்தை சிறுமியை கொன்றிருந்தால் இதனை வனப்பகுதியில் விட முடியாது.

    அவ்வாறுவிட்டால் இந்த சிறுத்தை மீண்டும் நடைபாதையில் வந்து பக்தர்களை வேட்டையாடும் .இந்த நிலையில் நேற்று அலிப்பிரி பாதையில் சிறுத்தை ஒன்றும், கரடி ஒன்றும் நடமாடியது.

    அந்த சிறுத்தை சிறுமியை கொன்றதாக இருக்கலாம் என்று பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடைப்பாதையில் மீண்டும் மனிதர்களை சிறுத்தை வேட்டையாட வாய்ப்புள்ளது.

    எனவே பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி கூறுகையில்:-

    பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நடை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும்.

    நடைபாதையில் இரவு நேரங்களில் அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்படும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • ஆந்திராவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரையும் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கட்டைகள் மட்டுமே விளைகின்றன. செம்மரங்களை வெட்டி கடத்துவது கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    இதனை தடுப்பதற்கு அரசு எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக விலை காரணமாக இந்த கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.

    ஆனால் சேஷாசலம் வனப்பகுதியின் பல இடங்களில் செம்மரங்களை வெட்டி கடத்தும் பணியில் ஏராளமான கடத்தல்காரர்கள் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 கூலித்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் ஆந்திராவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரையும் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    • நடைபாதை அருகில் சுற்றித்திரிந்த சிறுத்தையை பார்த்து பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
    • சிறுத்தை எந்த ஒரு அசைவும் இன்றி பயமுறுத்தியபடி நின்றது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அலிபிரி நடைபாதையில், சிறுமியை சிறுத்தை கொன்றது. இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்ட கூண்டில் பெரிய சிறுத்தை ஒன்று சிக்கியது.

    இது குழந்தையை கவ்வி சென்றிருந்தால் முழுவதுமாக சாப்பிட்டிருக்கும். குழந்தையை கொன்றது இதைவிட சிறிய சிறுத்தையாகத்தான் இருக்க முடியும்.

    எனவே மேலும் ஒரு கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சிறுமியை கொன்ற சிறுத்தை அலிபிரி நடைபாதையில் நடமாடியது.

    நடைபாதை அருகில் சுற்றித்திரிந்த சிறுத்தையை பார்த்து பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சிறுத்தையின் மீது பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் பொருட்களை தூக்கி வீசி எறிந்தனர்.

    ஆனால் சிறுத்தை எந்த ஒரு அசைவும் இன்றி பயமுறுத்தியபடி நின்றது. பக்தர்கள் கூச்சலிட்டபடி அங்குமிங்கும் சிதறி ஓடியதால் பதட்டமான சூழல் நிலவியது. தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து அங்கிருந்த சிறுத்தை வனப்பகுதிக்கு ஓடியது.

    சிறுத்தையின் நடமாட்டத்தால் நடைபாதையில் சென்றவர்கள் ஆங்காங்கே பயத்துடன் கூட்டம், கூட்டமாக நின்றனர்.

    அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது சுற்றி தெரியும் சிறுத்தை தான் குழந்தையை கொன்றது என தெரிய வந்துள்ளது.

    இதனால் நடைபாதை வழியாக பக்தர்கள் செல்ல அச்சம் அடைந்தனர்.

    • ருஷிகொண்டா விவகாரத்தில் பவன் கல்யாண் தொடர்ந்து ‘பொய்களை’ உமிழ்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது.
    • கோழி மற்றும் காளை கதைகளை சொல்வதில் பவன் கல்யாண் கில்லாடி.

    திருப்பதி:

    ஆந்திர மாநில ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் வருகிற தேர்தலில் அழுத்தமாகத் தனது முத்திரையைப் பதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

    கடந்த சில காலமாகவே அவர் தொடர்ச்சியாக அரசியல் சார்ந்து புயலைக் கிளப்பி வருகிறார்.

    நேற்று முன்தினம் பவன் கல்யாண் ருஷி கொண்டா சென்றிருந்தார். அங்குச் செல்ல அவருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதையும் தாண்டி அங்குச் சென்ற பவன் கல்யாண் அங்குள்ள மக்களை நேரில் சந்தித்தார்.

    ருஷிகொண்டாவில் பெரிய விதிமீறல்கள் அரங்கேறுகிறது. இங்கு ஜெகன் மோகன் ரெட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் என குற்றம்சாட்டினார்.

    இதற்கு அமைச்சர் ரோஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ருஷிகொண்டா விவகாரத்தில் பவன் கல்யாண் தொடர்ந்து 'பொய்களை' உமிழ்ந்து வருவது வருத்தம் அளிக்கிறது. அந்த நிலம் சுற்றுலாத் துறைக்கு சொந்தமானது.

    அரசு தனது நிலத்தில் கட்டிடங்கள் கட்டுவதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணுக்கு என்ன ஆட்சேபனை என்று எனக்கு புரியவில்லை.

    அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    கோழி மற்றும் காளை கதைகளை சொல்வதில் பவன் கல்யாண் கில்லாடி.

    அவருக்கு யாரும் சமமாக முடியாது. சந்திரபாபு நாயுடுவுக்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கிறார். பவன் கல்யாண் அரசு நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதை வீடியோ எடுத்துள்ளார்.

    அவர் மீது நாங்கள் வழக்கு பதிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிராம மக்கள் வரிசையாக முட்டி போட்டபடி மண் சோறு சாப்பிட்டனர்.
    • தங்களது பிரார்த்தனையை ஏற்று குலதெய்வம் மழையை கொட்டி தீர்த்ததாக கிராம மக்கள் பரவசம் அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மான்யம், சாலூர் பகுதியில் மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டது.

    இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இன்றியும் விவசாயம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.

    கூர்ம ராஜபேட்டையை சேர்ந்த கிராம மக்கள் மழை பெய்வதற்காக தங்களது குல வழக்கப்படி குலதெய்வத்திற்கு பூஜை, மண் சோறு சாப்பிட செய்ய முடிவு செய்தனர். மண் சோறு சாப்பிட்டால் மழை பெய்யும் என்பது அவர்களது நம்பிக்கை.

    அதன்படி கூர்ம ராஜ பாளையத்தை சேர்ந்த மக்கள் கிராமத்தின் அருகே வடக்கு பகுதியில் உள்ள மலைக்கு சென்றனர்.

    அங்கு தங்களது குலதெய்வமான ஜக்கம்மாவுக்கு பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை செய்தனர்.

    பின்னர் சாமிக்கு படைத்த பிரசாதத்தை மண்ணில் வரிசையாக வைத்தனர். கிராம மக்கள் வரிசையாக முட்டி போட்டபடி மண் சோறு சாப்பிட்டனர்.

    இதை தொடர்ந்து திரும்பி பார்க்காமல் கிராமத்திற்கு வந்தனர். பூஜை செய்துவிட்டு கிராமத்திற்கு வந்த 2 மணி நேரத்தில் சாலூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    தங்களது பிரார்த்தனையை ஏற்று குலதெய்வம் மழையை கொட்டி தீர்த்ததாக கிராம மக்கள் பரவசம் அடைந்தனர்.

    • வனத்துறையினர் நரசிம்ம சுவாமி கோவில் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.
    • குழந்தையை கொன்றது இதைவிட சிறிய சிறுத்தையாகத்தான் இருக்க முடியும்.

    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி நடைபாதையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா என்ற 6 வயது சிறுமி தனது பெற்றோருடன் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    நரசிம்ம சாமி கோவில் அருகே பெற்றோரை விட்டு சிறுமி முன்னாள் ஓடினார். மகள் படியேறி செல்வதை பெற்றோர் ரசித்தனர். அவர்கள் கண்பார்வையில் இருந்து சிறுமி தனியாக படிக்கட்டுகளில் ஓடினார்.

    அப்போது புதரில் இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுமியை கவ்வி சென்று விட்டது.

    மறுநாள் காலை நரசிம்ம சாமி கோவில் அருகே சிறுமி முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அப்பகுதியில் சுற்றி தெரியும் சிறுத்தை சிறுமியை கொன்றது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து நரசிம்ம சாமி கோவில், காளி கோபுரம் உள்ளிட்ட இடங்களில் சிறுத்தை சுற்றி திரிந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் தெரிந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் நரசிம்ம சுவாமி கோவில் அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். கூண்டின் அருகே கண்காணிப்பு கேமராவை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

    நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது.

    பிடிபட்ட சிறுத்தை மிகப்பெரியது. இது குழந்தையை கவ்வி சென்றிருந்தால் முழுவதுமாக சாப்பிட்டிருக்கும். குழந்தையை கொன்றது இதைவிட சிறிய சிறுத்தையாகத்தான் இருக்க முடியும்.

    எனவே மேலும் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.

    கூண்டில் சிக்கிய சிறுத்தையை திருப்பதியில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் வைத்து பராமரிப்பதா அல்லது அடர்ந்த வனப்பகுதியில் விடுவதா என வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மலைப்பாதை அருகே உள்ள வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன.

    நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடை பாதையில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் அடர்ந்த வனப்பகுதியில் செல்லும்போது கோவிந்தா கோஷம் எழுப்பியபடியே நடக்க வேண்டும்.

    இரவு நேரங்களில் பைக்கில் மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நடைபாதையில் கூண்டு வடிவிலான பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். மத்திய மாநில அரசின் வனத்துறையினர் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

    ×