என் மலர்
ஆந்திர பிரதேசம்
- கருட பஞ்சமியையொட்டி இன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருட சேவை நடக்கிறது.
- உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருமலை:
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட பஞ்சமியையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருட சேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) நடக்கிறது.
உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- லண்டனுக்கு சென்ற சிறிது நாட்களில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்தனர்.
- ஷிரிஷாவின் குடும்பத்தினர் திருமணத்திற்காக ஐதராபாத் வந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், தராபாத், மியாபுர் கோகுல் அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் அனுமந்த ராவ். இவரது மனைவி உமா மகேஸ்வரி.
இவர்களது மகள் ஷிரிஷா. டாக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் சாப்ட்வேர் என்ஜினீயரான அசோக்குமாருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் லண்டனுக்கு சென்று வேலை செய்து வந்தனர்.
லண்டனுக்கு சென்ற சிறிது நாட்களில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்தனர்.
மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் இருந்த அசோக் குமார் மனைவி மற்றும் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொல்ல வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி தன்னிடம் வேலை செய்த வினோத்குமாரை அணுகி ஆலோசனை கேட்டார்.
இந்த நிலையில் ஷிரிஷாவின் குடும்பத்தினர் திருமணத்திற்காக ஐதராபாத் வந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அசோக் குமார் முடிவு செய்தார்.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி 3 நபர்களை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய அனுப்பி வைத்தார். அந்த முயற்சி தோல்வி அடைந்தது.
இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியின் மகன் ரமேஷ் மூலம் மசாலா பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவைகளில் மெதுவாக கொள்ளும் விஷத்தை கலந்து மனைவியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
விஷம் கலந்த மசாலா பொருட்களில் சமையல் செய்து சாப்பிட்டதால் ஷிரிஷாவின் தந்தை, தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் என 6 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கை கால்கள் செயலிழந்தன.
மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷிரிஷாவின் தாய் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சோதனை முடிவில் மசாலா பொருட்களில் மெதுவாக கொல்லும் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஷிரிஷா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் காவலாளி மகன் ரமேஷ் மசாலா பொருட்கள் கொடுத்தது தெரியவந்தது. போலீசார் ரமேஷை பிடித்து விசாரணை செய்ததில் அசோக்குமார் கூறியபடி பூர்ணேந்திர ராவ் விஷம் கலந்த மசாலா பொருட்களை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது.
போலீசார் இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர். மேலும் லண்டனில் உள்ள ஷிரிஷாவின் கணவர் அசோக் குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- கணவன் மனைவி இருவரும் யானையிடமிருந்து உயிர் பிழைக்க அலறி அடித்தபடி தப்பி ஓடினர்.
- கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெத்தகாணி மண்டலம், முடி ரெட்டி பள்ளியை சேர்ந்தவர் மார்கொண்டைய்யா (வயது52). விவசாயி.
இவரது மனைவி அருணம்மா. மார்கொண்டைய்யாக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.
நேற்று காலை கணவன் மனைவி இருவரும் நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை செய்தனர். பின்னர் பணிகள் முடிந்து மாலை இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை ஒன்று இருவரையும் வழிமறித்து துரத்தியது. கணவன் மனைவி இருவரும் யானையிடமிருந்து உயிர் பிழைக்க அலறி அடித்தபடி தப்பி ஓடினர்.
ஆக்ரோஷத்துடன் இருந்த யானை இருவரையும் விடாமல் துரத்திச் சென்றது. அப்போது மார்கொண்டைய்யா கால் தவறி கீழே விழுந்தார்.
ஆவேசமாக இருந்த யானை அவரை காலால் மிதித்து கொன்றது. பின்னர் துதிக்கையால் தூக்கி வீசியது. இதனைக் கண்ட அருணம்மா பதறி அடித்தபடி கிராமத்திற்கு சென்று தகவல் தெரிவித்தார்.
கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தபோது மார்கொண்டைய்யா இறந்து கிடந்தார். அவரை மிதித்து கொன்ற யானை வனப்பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மார்கொண்டைய்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெத்தகாணி மண்டலத்தில் இதுவரை 3 பேரை யானைகள் மிதித்து கொன்று உள்ளன. வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையின நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக அனுப்பப்பட்டது.
- தற்போது விக்ரம் லேண்டர் பாதை குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஸ்ரீஹரிகோட்டா:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14-ம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியது.
சந்திரயான்-3 விண்கலம் 40 நாள் பயணமாக புவி சுற்றுவட்டப்பாதையை கடந்து, நிலவு சுற்றுவட்டப்பாதையின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
நிலவை நெருங்கிய நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் பாதை குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சந்திராயன் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தற்போது சந்திரயான் 3 விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் 25x134 கி.மீ. தூரத்தில் உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதையடுத்து, திட்டமிட்டபடி 23-ம் தேதி புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
- திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவில் அமைந்துள்ள மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
மலையின் கீழ் இருந்து பல கிலோமீட்டர் சென்றால் தான் கோவிலை சென்றடைய முடியம். அங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இதனால் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை மலைபாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கோவில் அருகே உள்ள வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரடி ஒன்று சுற்றி திரிந்தது. இதனைக் கண்ட பக்தர்கள் இதுகுறித்து ஸ்ரீசைலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் கரடியை பிடிக்க கோவில் அருகே வனப்பகுதியில் 3 கூண்டுகளை வைத்து சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி ஒன்று சிக்கியது.
இதையடுத்து வனத்துறையினர் கரடியை அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். ஏற்கனவே திருப்பதி மலைபாதையில் சிறுத்தை ஒன்று 6 வயது சிறுமியை கடித்துக் கொன்றது.
இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தது.
- பீகார் வாலிபர்கள் 10 பேர் சாதாரண டிக்கெட்டில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தது தெரிய வந்தது.
திருப்பதி:
பெங்களூர்-டானாப்பூர் இடையே சங்கமித்ரா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று மதியம் பெங்களூரில் இருந்து டானப்பூர் நோக்கி சங்கமித்ரா ரெயில் சென்றது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தது.
இந்த ரெயிலில் ஆந்திராவை சேர்ந்த சுதீர் என்பவர் டிக்கெட் பரிசோதகராக இருந்தார்.ரெயிலில் உள்ள முன்பதிவு பெட்டியில் சுதீர் பயணிகளின் டிக்கெட்டை பரிசோதனை செய்தார்.
அப்போது பீகார் வாலிபர்கள் 10 பேர் சாதாரண டிக்கெட்டில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தது தெரிய வந்தது.
முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பீகார் வாலிபர்களை சாதாரண பெட்டிக்கு செல்லுமாறு சுதீர் தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பீகார் வாலிபர்கள் சுதீரை சரமாரியாக தாக்கி அவரது சட்டையை கிழித்தனர். மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தையும் பறித்தனர்.
இதுகுறித்து சுதீர் அருகில் உள்ள ஓங்கோல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.ரெயில் ஓங்கோல் ரெயில் நிலையத்தில் நின்றபோது பீகார் வாலிபர்கள் 6 பேர் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.
இதையடுத்து தயார் நிலையில் இருந்த ரெயில்வே போலீசார் 4 வாலிபர்களை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்துறையின் கடுமையான சட்டங்களால் மலைப்பாதைகளில் உடனடியாக இரும்பு வேலி அமைக்க முடியவில்லை.
- பஸ், கார் போன்ற வாகனங்களில் அதிக பக்தர்கள் சென்று வருகின்றனர்.
திருமலை:
திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 மலைப்பாதைகள் வழியாக தங்கள் குடும்பத்துடன் நடந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
ஆனால் சமீப காலமாக, அலிபிரி பாதையில் சிறுவர்களை குறி வைத்து சிறுத்தைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த வாரம் நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா (6) என்ற சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றதால் பக்தர்களின் பீதி மேலும் அதிகரித்துள்ளது.
வனத்துறையின் கடுமையான சட்டங்களால் மலைப்பாதைகளில் உடனடியாக இரும்பு வேலி அமைக்க முடியவில்லை. இதனால் தற்போதைக்கு நிலைமையை சமாளிக்க நடந்து செல்லும் பக்தர்களுக்கு தடிகளை தேவஸ்தானம் கொடுத்து வருகிறது.
இதனை பலரும் விமர்சித்த போதிலும் இத்திட்டத்தை கைவிட மாட்டோம் என தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கடந்த 50 நாட்களாக திருப்பதி வனப்பகுதிகளில் ஆங்காங்கே கூண்டுகள் அமைத்து இதுவரை 3 சிறுத்தைகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். ஆனாலும் இன்னும் 20-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. மேலும் கரடிகளும் யானைகளும் சுற்றித் திரிகின்றன.
கைத்தடிகள் கொடுத்து அனுப்பினாலும், பக்தர்கள் பீதி காரணமாக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதைகளில் தைரியமாக செல்ல முன்வரவில்லை. இதனால் இவ்விரு மலைப்பாதைகளிலும் நேற்று பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது.
சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை செல்லும் மலைப்பாதைகளில் தற்போது 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை மட்டுமே செல்கின்றனர். மாறாக, பஸ், கார் போன்ற வாகனங்களில் அதிக பக்தர்கள் சென்று வருகின்றனர்.
- 3 சிறுத்தைகளையும் வனவிலங்கு சரணாலயத்தில் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
திருப்பதி:
திருப்பதி மலைபாதையில் கடந்த வாரம் தங்களது பெற்றோருடன் நடந்து சென்ற லக்சிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி சென்று கடித்து கொன்றது.
இதையடுத்து சிறுமி இறந்து கிடந்த லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில், காளிகோபுரம் 35 வது வளைவு ஆகிய இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டது.
மறுநாள் நள்ளிரவு 6 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கிய நிலையில் அதற்கு அடுத்த நாள் மீண்டும் நடைபாதை அருகே சிறுத்தை ஒன்று நடமாடியதால் அதனை பிடிக்க மீண்டும் கூண்டு வைக்கப்பட்டு இருந்தது.
அதற்கு அடுத்த நாள் மீண்டும் ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதேபோல் கடந்த மாதம் பெற்றோருடன் திருப்பதி நடை பாதையில் நடந்து சென்ற 4 வயது சிறுவனை திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை கவ்வி இழுத்துச் சென்றது. இதனை பக்தர்கள் கூச்சலிட்டபடி கற்களை வீசியதால் சிறுவனை விட்டுவிட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.
அப்போது வனத்துறையினர் வைத்த கூண்டில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்றும் சிக்கியது.
50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டில் சிக்கி பிடிக்கப்பட்டன. கூண்டில் சிக்கிய 3 சிறுத்தைகளும் திருப்பதியில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
பராமரிக்கப்பட்டு வரும் சிறுத்தைகளை சிறிது நாட்கள் கழித்து மீண்டும் வனப்பகுதியில் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிடிபட்ட சிறுத்தைகளை வனப்பகுதியில் விட்டால் மீண்டும் மலைப்பாதைக்கு வந்து பக்தர்களை தாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எனவே பிடிப்பட்ட சிறுத்தைகளை வனப்பகுதியில் விட பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 3 சிறுத்தைகளையும் வனவிலங்கு சரணாலயத்தில் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர்ரெட்டி கூறியதாவது:-
நடைபாதையில் அச்சமின்றி செல்ல அவர்களுக்கு கைத்தடி வழங்கப்படும். நடைபாதை முழுவதும் அதிக வெளிச்சத்தை தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்படும்.
வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல் நடைபாதையில் ஆங்காங்கே சிறுத்தைகளை பிடிக்க கூண்டுகள் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.
- இறந்து கிடந்த பெண் சிறுத்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
- ஆண் மற்றும் பெண் சிறுத்தையை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டம், மேலவை மண்டலம், காக்கலகுண்டா அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அப்பகுதியை சேர்ந்த சிலர் வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்குள்ள கால்வாய் ஓடையில் பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை மாவட்ட வன அலுவலர் ரவீந்திர ரெட்டி, பெனுகொண்டா வன அலுவலர் ஆனந்த், ரேஞ்சர் சீனிவாச ரெட்டி, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அமர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இறந்து கிடந்த பெண் சிறுத்தையை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது சிறிது தூரத்தில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனைக் கண்ட வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்து கிடந்த ஆண் மற்றும் பெண் சிறுத்தையை நேற்று வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்தனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் விஷம் வைத்து சிறுத்தைகளை கொன்றார்களா அல்லது வனவிலங்குகளிடையே ஏற்பட்ட மோதலில் சிறுத்தைகள் இறந்ததா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 2 சிறுத்தைகள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவி மீதுள்ள காதலால், அளவுக்கு அதிகமான அன்பையும் கொட்டி பழகி வந்தனர்.
- சாய்குமார் லாட்ஜ் அறையில் வைத்து மாணவிக்கு தாலி கட்டினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சாய்குமார் (வயது 23). இவரது நண்பர் சூரிய பிரகாஷ் (25).
அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நண்பர்கள் இருவரையும் தனித்தனியாக சந்தித்து வந்தார். நாளடைவில் இருவருக்கும் மாணவி காதல் வலை வீசினார்.
இதனையெடுத்து சாய்குமார், சூரியபிரகாஷ் இருவரும் மாணவியிடம் தங்களது காதலை வெளிப்படுத்தினர்.
இவர்கள் இரண்டு பேரையுமே மாணவி காதலித்து வந்தார். ஒருவருக்கு தெரியாமல், இன்னொருவரை காதலித்து வந்துள்ளார். இதனால், அந்த 2 பேருமே, மாணவி தன்னை மட்டுமே உயிருக்குயிராக நேசிப்பதாக நினைத்தனர்.
மாணவி மீதுள்ள காதலால், அளவுக்கு அதிகமான அன்பையும் கொட்டி பழகி வந்தனர்.
சாய்குமாரும், சூரியபிரகாஷூம் நண்பர்கள் என்றாலும், மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லி கொள்ளவில்லை. இதுதான் மாணவிக்கு ரொம்ப வசதியாகிவிட்டது.
அவர் 2 வாலிபர்களுடனும் உல்லாசமாக சுற்றித்திரிந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, மாணவி சாய்குமார் இருவரும் அந்த பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
அப்போது சாய்குமார் லாட்ஜ் அறையில் வைத்து மாணவிக்கு தாலி கட்டினார். இதனை செல்போனில் வீடியோ, போட்டோ எடுத்துக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சாய்குமார் மாணவிக்கு தாலி கட்டிய வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
தன்னுடைய காதலிக்கு நண்பன் சாய்குமார், தாலி கட்டும் வீடியோக்களை பார்த்து சூரியபிரகாஷ் பெருத்த அதிர்ச்சி அடைந்தார்.
இதனால், நேரடியாகவே அந்த மாணவியிடம் இது பற்றி கேட்டார் அப்பட்டமாக வீடியோ வந்துவிட்டதால், அந்த மாணவி உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சூரியபிரகாஷ், நேராக சாய்குமாரிடம் சென்றார்.
சூரியபிரகாஷ் மாணவி தன்னையும் காதலித்து நடித்தது பற்றி புட்டு புட்டு வைத்தார். இதைக்கேட்டு, சாய்குமாருக்கு தலையே கிறுகிறுத்து போய்விட்டது.
இதற்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என இருவரும் முடிவு செய்தனர்.
உடனடியாக நண்பர்கள் இருவரும் மாணவியின் வீட்டுக்கு போனார்கள். அந்த பெண்ணின் வீட்டில், பெற்றோர்களும், குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர். அனைவரது முன்னிலையிலும் மாணவியிடம் இதுகுறித்து 2 காதலர்களும் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த முக்கோண காதல் விவகாரத்திற்கு, ஒரு முடிவை சொல்லுமாறும் கேட்டார்கள். இப்படி 2 பேருமே திடுதிப்பென்று வீட்டுக்குள் வந்து, கேள்வி எழுப்புவார்கள் என்று மாணவி கொஞ்சமும் நினைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியும், அவமானமும் கலந்து கூனிக்குறுகி நின்றார்.
தினம் தினம் அவமானத்தில் தவித்தார். 2 காதலின் குட்டு வெளிப்பட்டதுடன், வீடியோவும் கசிந்துவிட்டதே என்று மனம் கலங்கி போனார். கடைசியில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சூரியபிரகாஷ் பயந்துவிட்டார். எங்கே தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ? என்று நினைத்து, ஓடும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மைனர் பெண்ணுக்கு தாலி கட்டியதாக சாய்குமார் மீது, வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
2 பேரை காதலிப்பதாக 12-ம் வகுப்பு மாணவி நடித்து மோசடி செய்ததன் விளைவு, 2 உயிர்கள் பறிபோயிருக்கிறது.
ஒருவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஒரே மாதிரி உடை அணிதல், ஒன்றாக சாப்பிடுவது என இருந்து வந்தனர்.
- நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இருக்கலாம் என நாகேஸ்வரராவ் ஆசை வார்த்தை கூறினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கிருஷ்ண லங்கா பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர். ஒரே மாதிரி உடை அணிதல், ஒன்றாக சாப்பிடுவது என இருந்து வந்தனர்.
இந்த நெருக்கம் இருவரிடையே தன்பாலின ஈர்ப்பை ஏற்படுத்தியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டனர்.
இருவரும் வெவ்வேறு பெண்களை திருமணம் செய்து கொண்டால் தனித்தனியாக பிரிந்து விடுவோம் என எண்ணினர்.
இதனால் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இருக்கலாம் என நாகேஸ்வரராவ் ஆசை வார்த்தை கூறினார். அதன்படி நண்பர்களில் யாராவது ஒருவர் பெண்ணாக மாற வேண்டும் என்றபோது நாகேஸ்வர ராவின் நண்பர் பெண்ணாக மாற ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து நாகேஸ்வரராவின் நண்பர் அறுவை சிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார். பின்னர் நாகேஸ்வரராவிடம் வந்து நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.
அப்போது நாகேஸ்வர ராவ் நீ அழகாக இல்லை அதனால் உன்னை திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகேஸ்வரராவின் நண்பர் பெண்ணாக மாறினால் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கிருஷ்ண லங்கா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து நாகேஸ்வரராவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க நாளை காலை 9 மணிக்கு 150 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
- நேரடி தரிசனத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூ.1000 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம்.
திருப்பதி:
திருப்பதி, திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதம் வரும் 25-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 25-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தன மண்டபத்தில் வரலட்சுமி விரதம் நடைபெறும். மாலை 6 மணிக்கு பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் மாட வீதிகளில் உலா வருகிறார்.
வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் நேரடியாக பங்கேற்க நாளை காலை 9 மணிக்கு 150 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
இதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பக்தர்களுக்கு பத்மாவதி தாயார் கோவிலில் உள்ள குங்கும அர்ச்சனை கவுண்டரில் வரும் 24-ந்தேதி நேரடியாக 150 தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.
நேரடி தரிசனத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூ.1000 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். ஒரு தரிசன டிக்கெட்டுக்கு 2 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் வரும் 26-ந் தேதி முதல் 90 நாட்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
வரலட்சுமி விரதம் நடைபெறும். நாளில் அபிஷேகம், கல்யாண உற்சவம், வஸ்திர அலங்கார சேவை, அபிஷேக தரிசனம், லட்சுமி பூஜை, ஊஞ்சல் சேவை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் வேத ஆசீர்வசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.






