என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வான்கோழி கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வான்கோழி கறி - அரை கிலோ
    பச்சை மிளகாய் - 4
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    சீஸ் - 2 டீஸ்பூன்
    பொரித்த வெங்காயம் - ஒரு கைப்பிடி
    துளசி இலை - 10
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    எண்ணெய், உப்பு -  தேவையான அளவு

    வான்கோழி கபாப்

    செய்முறை :

    துளசி இலை, ப. மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வான்கோழியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    அத்துடன், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், ஏலக்காய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள், சீஸ், பொரித்த வெங்காயம், பொடியாக நறுக்கிய துளசி இலை அனைத்தும் சேர்த்து நன்றாக கலவ்து இரண்டு கத்திகளைக் கொண்டு நன்றாக கொத்திக் கொள்ளவும்.

    இறுதியாக உப்பு, குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.

    தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், கலவையில் இருந்து கொஞ்சமாக எடுத்து தவாவில் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

    சுவையான வான்கோழி கபாப் ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஜவ்வரிசியில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஜவ்வரிசியை வைத்து அருமையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - 100 கிராம்
    சர்க்கரை - 100 கிராம்
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
    முந்திரி - 200 கிராம்
    நெய் - தேவையான அளவு

    ஜவ்வரிசி லட்டு

    செய்முறை:

    முதலில் ஜவ்வரிசியை தண்ணீரில் சுமார் 8 மணி நேரம் ஊறவிடவும்.

    முந்திரியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து ஜவ்வரிசியை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். சுமார் 5 நிமிடங்களுக்கு கிளறிக் கொண்டே இருந்தால் வெந்து உதிரியாக மாறும்.

    பின்னர் இதில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேகவிடவும்.

    அத்துடன், தண்ணீரில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து நன்றாக கிளறி விடவும். அவ்வப்போது நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

    ஜவ்வரிசி நன்றாக வெந்து வாணலியில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் பொடித்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

    சூடு ஓரளவுக்கு தணிந்ததும், கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று உருண்டைகள் செய்து வைக்கவும்.

    சுவையான ஜவ்வரிசி லட்டு ரெடி..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய அத்தோ என்னும் பர்மீஸ் உணவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள்:

    நூடுல்ஸ் - 200 கிராம்
    பூண்டு - 10
    பெரிய வெங்காயம் - 2
    முட்டைக்கோஸ் - ஒரு கப்
    கேரட் - ஒரு கப்
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
    புளி கரைசல் - ஒரு டேபிள் ஸ்பூன்
    கேசரி பவுடர் - ஒரு சிட்டகை
    காய்ந்த மிளகாய் துகள் - தேவையான அளவு
    தட்டை - 2
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    அத்தோ

    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டை கோஸ், கேரட்டை மெல்லிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு போட்டு வேகவிடவும். வெந்ததும் தண்ணீர் முழுவதையும் வடித்து விட்டு அதில் எண்ணெய்விட்டு கிளறி தனியாக வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

    அதேபோல் பாதி வெங்காயத்தை வறுத்து தனியாக வைக்கவும்.

    ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், :எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், புளி கரைசல், காய்ந்த மிளகாய் துகள், உப்பு, உடைத்த தட்டு வடை, கொத்தமல்லித்தழை, பொரித்த பூண்டு, வறுத்த வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்.

    சுவையான அத்தோ ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சாக்லேட் வைத்து அருமையான பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள்:

    முட்டை - 1
    காய்ச்சிய பால் - ஒரு கப்
    உருக்கிய வெண்ணெய் - கால் கப்
    வெண்ணிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்
    மைதா மாவு - ஒரு கப்
    கோகோ பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
    பொடித்த சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
    சாக்லேட் சிப்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை

    சாக்லேட் பணியாரம்

    செய்முறை:

    முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.

    இதனுடன் பால், வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

    இந்த கலவையுடன் மைதா மாவு கலவையை சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்துக் கொள்ளவும்.

    மற்றொரு கிண்ணத்தில் மைதா, கோகோ பவுடர், பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இந்த கலவையை முட்டை, மைதா கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இறுதியாக சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து இட்லி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

    பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் ஒவ்வொரு கரண்டி சாக்லேட் மாவு எடுத்து அதில் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.

    அட்டகாசமான சுவையில் சாக்லேட் பணியாரம் ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காஜு கத்லியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சாக்லேட் சேர்த்து காஜு கத்லியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முந்திரி - 2 1/4 கப்
    சர்க்கரை - 1 கப்
    தண்ணீர் - 100 மில்லி
    டார்க் சாக்லேட் - 1 கப்

    சாக்லேட் காஜு கத்லி

    செய்முறை


    முந்திரியை நன்கு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை மிதமான சூட்டில் வைத்திருக்கவும்.

    சர்க்கரை பாகு ஒரு நூல் பதத்திற்கு வரும்வரை அதனை காய்ச்சி, 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும்.

    அரைத்து வைத்த முந்திரியை சர்க்கரை பாகுடன் சேர்த்து 4-5 நிமிடங்கள் வரை கெட்டியாக வரும்வரை கிளறி கொண்டே இருக்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஆற வைக்கவும்.

    பின் கைகளில் நெய் தடவி கொண்டு இந்த மாவை மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

    ஒரு பட்டர் ஷீட்டில் இந்த மாவை வைத்து ரோல் செய்து 5-6 மிமீ வரை உருட்டி கொள்ளவும்.

    ஒரு சாஸ்பேனில் பௌல் வைத்து அதில் டார்க் சாக்லேட் சேர்த்து உருகும் வரை கிளறவும். .

    சாக்லேட் உருகியதும் காஜூ கத்லி மாவில் இதனை சேர்த்து சமமாக பரப்பி கொள்ளவும்.

    ஆறியபின் இதனை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.

    சூப்பரான சாக்லேட் காஜு கத்லி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹோட்டலில் கிடைக்கும் சிக்கன் பாப்கார்ன் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - கால் கிலோ
    கார்ன் ஃப்ளார் -  2 மேஜைக்கரண்டி
    முட்டை -  1
    பிரெட் தூள் -  1 கப்
    உப்பு - தேவையான அளவு
    இஞ்சி பூண்டு விழுது - 3/4 மேஜைக்கரண்டி
    மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு

    சிக்கன் பாப்கார்ன்

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    ஒரு பௌலில் மிளகாய் தூள், மிளகு துள், இஞ்சு பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    வெட்டி வைத்த சிக்கனை கலந்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அத்துடன் கார்ன் மாவு சேர்த்து சிக்கன் மேல் தடவி கொள்ளவும்.

    மேலும் அதில் முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    ஒவ்வொரு சிக்கன் துண்டையும் இந்த பிரெட் துளில் தொட்டு எடுக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும். மொத்தமாக போடாமல் ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும். பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும்.

    பின் சூடாக எடுத்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. இன்று சூப்பரான சார்மினார் பிரியாணியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசிக்காக:


    நீளமான அரிசி - 2 கப்
    பிரிஞ்சி இலை - 3
    ஏலக்காய் - 2-3
    கிராம்பு - 2-3
    நெய் - 1 தேக்கரண்டி
    புதினா - 1/2 கப்
    அன்னாட்சி பூ - 1
    பட்டை - 1 துண்டு

    தண்ணீருக்கு தேவையானது

    உப்பு - தேவையான அளவு
    மட்டன் - 600 கிராம்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    நெய் - 250 கிராம்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    பட்டை - 2
    கிராம்பு - 4-5
    பட்டை - சிறிய துண்டு
    சீரகம் - 1 தேக்கரண்டி
    மிளகு - 2 டீஸ்பூன்

    ஊறவைக்க

    உப்பு - தேவையான அளவு
    மிளகாய்த்தூள் - 2 மேஜைக்கரண்டி
    கொத்தமல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தே - 1/2 தேக்கரண்டி
    தயிர் - 1 கப்
    இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
    பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் (கீறியது) - 2
    பால் - 1/4 கப்
    குங்குமப்பூ - 5-6
    புதினா - 1/2 கப்
    லெமன் ஜுஸ் - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    லேயரிங்

    வறுத்த வெங்காயம்
    வறுத்த பூண்டு
    குங்குமப் பூ ஊறவைத்த பால் - 1 கப்
    கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு கைப்பிடி
    நெய் - 1/2 கப்

    சார்மினார் பிரியாணி

    செய்முறை

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் மட்டனை ஊறவைக்கத் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். 3-4 மணி நேரம் ப்ரிஜ்ஜில் எடுத்து வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 10-15 நிமிடம் ஊறவைக்கவும்.

    குங்குமப் பூ ஊறவைத்த தண்ணீரில் அரிசிக்காக கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து பாதி வெந்ததும் அரிசியை வடித்து வைக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும நறுக்கிய தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் சூட்டை குறைத்து பாலை சேர்க்கவும்

    மசாலா பொடி சேர்த்து கலக்கவும் பால் திரியாமல் பார்த்துக் கொள்ளவும்.

    இதனுடன் ஊறவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    இப்போது பிரியாணி மசாலாவை சேர்த்து தீயைக் குறைத்து வைத்து வேகவைக்கவும்.

    மட்டன் முழுவதுமாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    பிரியாணியை தயார் செய்ய, பெரிய அகலமான பாத்திரத்தை எடுக்கவும்.

    நெய் சாதத்தை ஒரு லேயராக வைத்து, அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, நெய், மற்றும் குங்குமப் பூ பால் ஊற்றி, அதன் மேல் வேகவைத்த கறியை வைக்கவும்.

    இதேபோல் லேயரை சாதம் மற்றும் கறி தீரும் வரை வைக்கவும்.

    பின் பாத்திரத்தை மூடி அதன்மேல் கனமான பாத்திரத்தை வைக்கவும். மீடியம் ஹீட்டில் 20-25 நிமிடம் வேகவைக்கவும். பின் அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடங்களுக்கு மூடியை திறக்கவும்.

    10 நிமிடங்களுக்குப் பின் அரிசி உடையாமல் கிளறி விடவும்.

    தயிர் பச்சடியுடன் பரிமாறவும்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் விசேஷம் என்றாலே எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு என்றால் அது கீர் தான். இன்று சேமியாவில் கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சேமியா - 1 கப்
    நெய் - 25 கிராம்
    லிட்டர் பால் -     400 மில்லி
    சர்க்கரை - 5டி கிராம்
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 2
    பாதாம் -  20 கிராம்
    உலர் திராட்சை - தேவையான அளவு

    சேமியா கீர்

    செய்முறை

    சேமியாவை கைகளால் உடைத்துக் கொள்ளவும்.

    பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து வைக்கவும்.

    சூடான தண்ணீரில் உலர் திராட்சையை ஊற வைக்கவும்.

    நெய்யில் கிராம்பு, ஏலக்காய் வறுக்கவும்.

    அடுத்து அதில் சேமியாவை சேர்த்து வறுக்கவும். பிரவுன் நிறத்தில் வறுக்க வேண்டியது அவசியம்.

    அடுத்து அதில் பாலை ஊற்றி கொதிக்கவைக்கவும்..
        
    கொதி வந்தவுடன் சிம்மில் வைத்து வேகவைக்கவும். பால் திக்காக்கும் வரை வேக வைக்க வேண்டியது அவசியம்

    சர்க்கரை மற்றும் உலர் திராட்சையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கவும்.

    சூடு ஆறிய பின் பரிமாறவும்.

    சூப்பரான சேமியா கீர் ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டில் எளிய முறையில் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 3,
    நெய் - 100 கிராம்,
    சர்க்கரை- 1/2 கப்,
    ஏலக்காய் தூள்- 2 டீஸ்பூன்,
    முந்திரி - 10,
    பாதாம் - 5.

    ஆப்பிள் அல்வா

    செய்முறை :

    ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நீர் சேர்க்காமல் நன்கு அரைக்கவும். அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    நெய்யில் பாதாம், முந்திரியை போட்டு வறுத்து எடுக்கவும்.

    அதே கடாயில் மேலும் சிறிது நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள ஆப்பிள் கலவையை போட்டு நன்றாக கிளறவும்.

    அடுத்து அதில் பிறகு சர்க்கரை, நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

    அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது பாதாம், முந்திரி சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான ஆப்பிள் அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பிரெட், முட்டை சேர்த்து உப்புமா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பிரெட் - 6,
    முட்டை - 2,
    வெங்காயம் - 1,
    கடுகு - சிறிதளவு,
    உளுந்து - 1ஸ்பூன்,
    கடலை பருப்பு - 1ஸ்பூன்,
    முந்திரி - 5,
    ப. மிளகாய் - 3,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு.

    பிரெட் முட்டை உப்புமா

    செய்முறை:

    பிரெட்டை உதிர்த்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு, உளுந்து, கடலை பருப்பு, முந்திரி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப. மிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அடித்து வைத்த முட்டையை ஊற்றி கிளறவும்.

    முட்டை நன்றாக உதிரியாக வந்தவுடன்  அதில் உதிர்த்து வைத்த பிரெட்டை போட்டு கிளறவும்.

    முட்டை, பிரெட் இரண்டும் நன்றாக சேர்ந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பிரெட் முட்டை உப்புமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாக்லேட், ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து செய்யும் இந்த சாக்லேட் சமோசா வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகளில் ஒன்று. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாவு தயாரிக்க:


    ரிஃபைண்டு ப்ளோர் -    1 கிலோ
    நெய் -  தேவையான அளவு
    ஏலக்காய் - சிறிதளவு

    ஸ்டஃப் செய்ய:

    சாக்லேட் - 500 கிராம்
    பாதாம் -     250 கிராம்
    முந்திரி -     250 கிராம்
    பிஸ்தா - 100 கிராம்
    சர்க்கரை -     1 கிலோ
    கரம் மசாலா பொடி -  கால் டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு

    சாக்லேட் சமோசா

    செய்முறை


    பாதாம், முந்திரியை வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ரிஃபைண்டு ப்ளோர் மாவு, சிறிதளவு நெய் மற்றும் ஏலக்காய் விதை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.

    இந்த மாவில் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    சமோசா உள்ளே ஸ்டஃப் செய்ய முதலில் சாக்லேட்டை உருக்கி வைத்து கொள்ளவும். பின் அதில் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸை சேர்த்து கொள்ளவும்.

    மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து அதனை முக்கோன வடிவில் சுருட்டி கொள்ளவும்.

    அதனுள் உருக்கி வைத்த சாக்லேட் கலவையை போட்டு சமோசாவில் ஓரங்களில் தண்ணீர் கொண்டு அதன் முனைகளை ஒட்டி வைக்கவும்.

    அனைத்து ஓரங்களையும் நன்றாக மூடி வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சமோசா பாதி அளவு வெந்தபின் வெப்பத்தை அதிகரித்து மொறுமொறுப்பாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூடான சாக்லேட் சமோசா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு உணவை கலர்புல்லாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மூவர்ண புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆரஞ்சு நிறத்திற்கு:

    பாஸ்மதி அரிசி - 1 கப்
    நெய் - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 1/4 தேக்கரண்டி
    இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
    தக்காளி விழுது - 1/4 கப்
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் - 8
    உப்பு - சுவைக்க

    வெள்ளை நிறத்திற்கு:

    பாஸ்மதி அரிசி - 1 கப்

    பச்சை நிறத்திற்கு:

    நெய் - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 1/4 தேக்கரண்டி
    இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி
    கீரை சாறு - 1/2 கப்
    உப்பு - சுவைக்கு

    மூவர்ண புலாவ்

    செய்முறை

    அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி பொரிந்ததும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் அதில் சாதம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    மற்றொரு பேனில் அதே போல நெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் மிளகாய் தூள், மிளகாய்  சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி விழுது, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாதம் வேகும்வரை மூடி வைக்கவும்.

    மற்றொரு கடாயில் மஞ்சள் தூள் மற்றும் சாதம் சேர்க்கவும்.

    அதில் பச்சை மிளகாய் விழுது, இஞ்சி விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

    அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கீரை சாறு சேர்த்து கிளறி மூடி வைத்து வேகவிடவும்.

    ஒரு தட்டில் ரிங் மோல்ட் வைத்து அதில் பச்சை நிற புலாவ் வைத்து அழுத்தம் கொடுக்கவும்.

    அடுத்து அதன் மேல் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற புலாவ்களை ஒன்றன்மீது ஒன்று வைத்து அழுத்தம் கொடுக்கவும்.

    ரிங் மோல்டை மெதுவாக எடுத்து ஒரு தட்டில் இந்த திரங்கா புலாவை சூடாக பரிமாறவும்.

    அருமையான திரங்கா புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×