என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 50 கிராம்  
    கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
    சமையல் சோடா - ஒரு சிட்டிகை
    உப்பு சேர்க்காத வெண்ணெய் - 75 கிராம்
    கிராம்பு, முட்டை - 2
    சர்க்கரை - 100  கிராம்
    சர்க்கரை - 20 கிராம் (கேரமல் செய்ய)
    காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு
    பேரீச்சை - 30 கிராம்
    டூட்டி ஃப்ரூட்டி- 30 கிராம்
    உலர்திராட்சை, முந்திரி - 30 கிராம்
    பாதாம், வால்நட் - தலா 20 கிராம்
    ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் துருவல் - கால் டீஸ்பூன்
    வெனிலா எசென்ஸ் - 5 சொட்டுகள்
    பட்டை - ஒரு சிறிய துண்டு
    ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு - கால் டீஸ்பூன் (விரும்பினால்)

    சாக்லேட் கேக்

    செய்முறை:

    பாதாம், வால்நட், முந்திரி, டூட்டி ஃப்ரூட்டியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெண்ணெய்யை ஃப்ரிட்ஜிலிருந்து  வெளியே எடுத்துக் கொஞ்ச நேரம் அப்படியே வைக்கவும்.

    மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு, கோகோ பவுடர் சேர்த்துச் சலித்து கொள்ளவும்.

    ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் பாதாம், முந்திரி, வால்நட், பேரீச்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சு (அ) எலுமிச்சை தோல் துருவல், உலர்திராட்சை சேர்த்துக் கலக்கவும். கிராம்புடன் பட்டை, ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும் (சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் சுலபமாகப் பொடிக்கலாம்).  

    வாணலியில் கேரமல் செய்யக் கொடுத்துள்ள சர்க்கரையைச் சேர்த்து லேசாகக் கருகும் வரை சிறு தீயில் வைத்துக் கிளறவும். சர்க்கரை பிரவுன் நிறமாக மாறும்போது கவனமாகக் கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (மேலே தெறிக்கும் என்பதால் கவனமாகச் செய்ய வேண்டும்). நன்றாகக் கரைந்ததும் இறக்கி ஆறவிடவும். இதுவே கேரமல் சிரப்.

    பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

    அதனுடன் வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பிளெண்டரால் அடிக்கவும்.

    பிறகு, மைதா கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கரண்டியால் மெதுவாகக் கலக்கவும் (முட்டை அடிக்கும் கரண்டியால் கலக்கவும். பிளெண்டர் உபயோகிக்க வேண்டாம். கேக் எழும்பாது. தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளலாம்).

    பிறகு கேரமல் சிரப், வெனிலா எசென்ஸ்,  நட்ஸ் கலவை, பொடித்த கிராம்பு கலவைச் சேர்த்து மெதுவாகக் கலக்கவும்.

    குக்கரில் ஒரு கப் தூள் உப்பைப் பரப்பவும். உப்பின் மீது தட்டு வைத்து குக்கரை மூடி மூன்று நிமிடங்கள் வரை சூடாக்கவும் (குக்கர் விசில் பயன்படுத்த வேண்டாம். குக்கர் வெடித்துவிடும்).

    பிறகு ஆறு இன்ச் அளவு கேக் பானில் சிறிதளவு வெண்ணெய் தடவி, மைதா மாவைத் தூவவும். (கேக் ஒட்டாமல் வர உதவும்).

    இதனுள் கேக் மாவை முக்கால் பாகம் வரை ஊற்றவும். பிறகு லேசாகத் தட்டி குக்கர் மூடியைத் திறந்து பாத்திரத்தை உள்ளே வைத்து மீண்டும் மூடி, சிறு தீயில் முப்பது நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும். தேவையானால் மீண்டும் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

    பிறகு கேக் பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறவிடவும்.

    பானில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான சாக்லேட் கேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த சிக்கன் ஸ்டார்டரை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    தோல் நீக்கிய எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்

    மசாலா தயாரிக்க:

    எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
    பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    இஞ்சி விழுது - 1 மேஜைக்கரண்டி
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    கோட்டிங் செய்ய:

    பிரெட் தூள் - 1/2 கப்
    முட்டை - 2
    மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    எண்ணெய் - வறுக்க தேவையான அளவு

    சிக்கன் ஃபார்சா

    செய்முறை

    சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும்.

    ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, பூண்டு விழுது, இஞ்சி விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு போட்டு அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.

    இந்த மசாலா கலவையை சிக்கனில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    அதேநேரம் மற்றொரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய சிக்கனை எடுத்து முட்டையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும்.

    பின் இதனை எண்ணெய் சூடானவுடன் போட்டு பொரித்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான சிக்கன் ஃபார்சா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பிஸ்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சீஸ் பிஸ்கெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்,
    பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
    துருவிய சீஸ் - 1/4 கப்,
    வனஸ்பதி (அ) வெண்ணெய் - 1/4 கப்,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    உப்பு - 1 சிட்டிகை,
    பால் - 1½ டேபிள் ஸ்பூன்.

    சீஸ் பிஸ்கெட்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு  அதனுடன் பேக்கிங் பவுடர், துருவிய சீஸ், வனஸ்பதி (அ) வெண்ணெய், சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் பாலை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை உள்ளங்கையால் 1/4 இன்ச் தனத்திற்கு தட்டி பிஸ்கெட் கட்டரால் வெட்டி வைக்கவும்.

    கடைசியாக வெண்ணெய் தடவிய செய்து வைத்த பிஸ்கெட்டை ட்ரேயில் அடுக்கி 1800C சூட்டில் ஓவனில் 10 நிமிடம் பேக் செய்து எடுத்து பரிமாறவும்.

    சுவையான சீஸ் பிஸ்கெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாரம்பரிய சிக்கன் பிரியாணி செய்முறையில் சிறிது மாற்றம் செய்து அரிசிக்கு பதிலாக இடியாப்பத்தை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு அற்புத உணவு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 300 கிராம்
    சேமியா - 1 கப்
    மலபார் மிளகு - 1 தேக்கரண்டி
    பட்டை - 1
    ஏலக்காய் - 1
    ஸ்டார் அனீஸ் - 1 stick குச்சி
    கிராம்பு - 2
    பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
    நெய் - 2 மேஜைக்கரண்டி
    சீகம் - 1/2 தேக்கரண்டி
    பே இலை - 1
    பச்சை மிளகாய் - 3
    புதினா இலைகள் - 1/2 கப்
    வெங்காயம் - 3
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
    உப்பு - 2 தேக்கரண்டி
    இஞ்சி பேஸ்ட் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
    தக்காளி - 2
    தண்ணீர் - 2 கப்

    இடியாப்பம் பிரியாணி

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, தனியாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில், மலபார் மிளகு, இலவங்கப்பட்டை, பச்சை ஏலக்காய், நட்சத்திர சோம்பு, கிராம்பு, பெருஞ்சீரகத்தை போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    கடாயில் சேமியாவை போட்டு வறுத்து ஆறவைக்கவும்.

    அதே கடாயில் எண்ணெய் விட்டு, கருப்பு சீரக விதைகள், பே இலைகள், பச்சை மிளகாய், புதினா இலைகள், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், அரைத்த மசாலா தூள், சிக்கன் சேர்த்து நன்றாக கலந்து, மூடி போட்டு வேக விடவும்.

    சிக்கன் நன்றாக வெந்ததும்  அதில் தண்ணீர், உப்பு, வறுத்த சேமியா இவற்றை அதில் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் மூடி வைத்து சமைக்கவும்.

    கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடங்கள் தம்மில் வைத்த பிறகு பரிமாறவும்.

    சூப்பரான இடியாப்பம் சிக்கன் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அரிசி வகைகளிலேயே மிகவும் சத்துள்ளது கருப்பு கவுனி அரிசியாகும். இன்று கவுனி அரிசியில் சூப்பரான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கருப்பு கவுனி அரிசி - 1/4 கப்
    கருப்பட்டி - 1 கப்
    தேங்காய்ப்பால் -  1 கப்
    நெய் - தேவையான அளவு
    முந்திரி - 10

    கவுனி அரிசி அல்வா

    செய்முறை


    கருப்பு கவுனி அரிசியைக் கழுவி 6-7 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.

    பின் 1 கப் தேங்காய்ப் பால் ஊற்றி நன்கு நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் கருப்பட்டியைப் போட்டு கரைந்தபின் வடிகட்டி வைக்கவேண்டும்.

    பின் ஒரு அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு துண்டுகளாக நறுக்கிய முந்திரியைப் போட்டு லேசாக நிறம் மாறாமல் வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.

    பின் அதே கடாயில் வடிகட்டிய கருப்பட்டியை ஊற்றி நன்கு கொதித்தபின் அதில் கரைத்து வைத்த கவுனி அரிசி கலவையை ஊற்றி குறைந்த தீயில் கட்டியில்லாமல் கைவிடாமல் கிளற வேண்டும்.

    கலவை கெட்டியாகும் போது 1 டேபிள்ஸ்பூன் (இடையிடையே நெய் விட வேண்டும்) நெய் விட்டு கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும்.

    அல்வா பதம் வந்ததும் எடுத்து வைத்த முந்திரியைப் போட்டு கிளறி அடுப்பை அணைக்கவேண்டும்.

    ஆரோக்கியமான சூடான சுவையான கவுனி அரிசி அல்வா தயார்.

    வறுத்த முந்திரி, தேங்காய்த்துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    செல்லரோஜா

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனில் சூப்பரான கால்மி கபாப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் லெக் பீஸ் - அரை கிலோ
    தயிர் - 1/4 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 1/2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    முந்திரி பொடி - 4 தேக்கரண்டி
    ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
    மிளகு - 1/4 தேக்கரண்டி
    ஃபிரஷ் கிரீம் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    கால்மி கபாப்

    செய்முறை :

    சிக்கன் லெக் பீஸை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பௌலில் தயிர் எடுத்து கொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் முந்திரி பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம், கிரீம் ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.

    எலும்பு நீக்கப்பட்ட சிக்கனை இந்த மசாலா கலவையில் தொட்டு எடுத்து 8 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். மசாலா தடவி வைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு 10 -12 நிமிடங்கள் வரை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    அருமையான கால்மி கபாப் ரெடி.

    புதினா சட்னி, வெங்காயம் ஆகியவற்றை தொட்டு சூடாக சாப்பிட ருசியாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாக்லேட், தேங்காய், வெல்லம், ஏலக்காய், பாதாம் மற்றும் நட்ஸ் சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பான ரெசிபியை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாவு தயாரிக்க:

    மைதா - 2 கப்
    நெய் - 1/4 கப்
    தண்ணீர் - 1/2 கப்

    ஸ்டஃப் செய்ய:


    டார்க் சாக்லேட் - 1 கப்
    உலர்ந்த தேங்காய் - 1/4 கப்
    ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
    பாதாம் - 1/2 கப்
    வெல்லம் - 1 மேஜைக்கரண்டி

    சாக்லேட் குஜியா

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு அதனுடன் நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை அரைமணி நேரம் மூடி வைக்கவும்.

    டார்க் சாக்லேட்டை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பௌலில் துருவிய டார்க் சாக்லேட், தேங்காய், பாதாம் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

    பிசைந்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டி போல் தேய்த்து கொள்ளவும்.

    சாக்லேட் தேங்காய் கலவையை தேய்த்து வைத்துள்ள ரொட்டியில் நடுவில் வைத்து ஸ்டஃப் செய்யவும்.

    அதன் ஓரங்களில் தண்ணீர் சேர்த்து நன்கு ஓட்டி வைக்கவும்.

    அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேய்த்து வைத்த குஜியாவை போட்டு பொன்னிறமாக வரும் வரை வைத்திருந்து எடுக்கவும்.

    சூப்பரான சாக்லேட் குஜியா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு முட்டை உருளைக்கிழங்கு சாப்ஸ் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3,
    உருளைக்கிழங்கு (பெரியது) - 2,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - கால் டீஸ்பூன்,
    பட்டை - 1,
    சோம்பு - கால் டீஸ்பூன்,
    இஞ்சி - ஒரு துண்டு,
    பூண்டு - 6 பல்,
    ரஸ்க் தூள் - 4 டீஸ்பூன்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    எண்ணெய் - தேவையான அளவு.

    முட்டை உருளைக்கிழங்கு சாப்ஸ்

    செய்முறை:

    உருளைக்கிழங்கை மண் போகக் கழுவி, தோல் நீக்கி விரல் நீளத்துக்கு நறுக்கிக்கொள்ளுங்கள்.

    மிளகு, சீரகம், பட்டை, சோம்பு, இஞ்சி, பூண்டை மிக்சியில் போட்டு மசாலா தயாரித்துக்கொள்ளுங்கள்.

    இந்த மசாலாவை உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசறி ஒரு பாத்திரத்தில் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து, நன்றாக வேகவிடுங்கள்.

    ஒரு கிண்ணத்தில் தேவையான உப்பு, சிறிது மஞ்சள்தூள் போட்டுக் கரைத்து, முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துவைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலாவுடன் சேர்ந்து வெந்த உருளைக்கிழங்கு துண்டுகளை, முட்டையில் முக்கி, ரஸ்க் தூளில் போட்டுப் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    குழந்தைகளின் வோட்டுகளை அள்ளும் சூப்பர் சாப்ஸ் இது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கார்த்திகை தீபத்திற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பனை ஓலை கொழுக்கட்டை மிகவும் பிரபலம். இன்று இந்த கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    பச்சரிசி - முக்கால் கிலோ
    கருப்பட்டி - அரை கிலோ
    ஏலக்காய் - 8
    தேங்காய் - ஒரு மூடி துருவியது
    பனை ஓலை - தேவையான அளவு

    பனை ஓலை கொழுக்கட்டை

    செய்முறை:

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
     
    பச்சரிசியை ஊறவைத்து களைந்து நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.

    கடாயை காயவைத்து துருவிய தேங்காய் ஈரம்போக வறுத்துக்கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை போடவும்.
     
    கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும்.

    பின் இறக்கி வடிகட்டி மாவுடன் பிசையவும். ஓலையை அரை அடி நீளத்திற்கு நறுக்கி கொள்ளவும்.

    பிசைந்த மாவை சிறிதளவு எடுத்து ஒரு ஓலையில் நடுவில் வைத்து மற்றொரு ஓலையால் மூடி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    செய்து வைத்தவைகளை இட்டித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். 

    அவ்வளவுதான் சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெண்டைக்காய் சாப்ஸ். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - கால் கிலோ
    கடலை மாவு - அரை கப்
    அரிசி மாவு - அரை கப்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

     வெண்டைக்காய் சாப்ஸ்

    செய்முறை:

    வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி உலர வைத்துக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கொட்டி கிளறிக்கொள்ளவும்.

    பின்னர் அந்த கலவையுடன் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு புரட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெண்டைக்காய் கலவையை உதிரியாக போட்டு பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் சாப்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாம்பே அல்வாவை எளிமையான முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளை சோள மாவு - 1 கப்
    சர்க்கரை - 2 கப்
    நெய் - 1/4 கப்
    முந்திரி, பாதாம் நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
    எலுமிச்சை சாறு. - 1 தேக்கரண்டி
    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
    கேசரி பவுடர் - 1 சிட்டிகை

    பாம்பே அல்வா

    செய்முறை:

    முதலில் சோள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.

    பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு சர்க்கரை பாகு கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ளும்.

    சர்க்கரையானது நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து குறைந்த தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். இடையிடையே சிறிது நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

    அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, நெய் கசிந்து அல்வா போன்று வர ஆரம்பிக்கும்.

    அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறி, பின் அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.

    அல்வா பதம் என்பது அல்வாவில் இருந்து நெய் கசிந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, பாதாமை தூவி அதனை துண்டுகளாக்கினால் சுவையான பாம்பே அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு முட்டை ஆம்லெட் செய்யும் போது காய்கறிகள் சேர்த்து செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 6,
    முட்டைகோஸ், குடைமிளகாய் - ஒரு கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    கேரட் - 2
    பச்சை மிளகாய் - 3,
    கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
    உப்பு - சுவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவையான அளவு,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.

    முட்டை வெஜிடபிள் ஆம்லெட்

    செய்முறை:

    வெங்காயம், முட்டைகோஸ், ப.மிளகாய், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், கறிவேப்பிலை மற்றும் காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்கி, ஆறவிடுங்கள்.

    ஆறியதும் முட்டை கலவையில் கொட்டிக் கலந்து, தோசைக்கல்லில் சிறு சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டெடுத்து சுடச் சுடப் பரிமாறுங்கள்.

    சூப்பரான முட்டை வெஜிடபிள் ஆம்லெட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×