search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chocolate cake"

    • பொதுவாகவே பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று கேக்.
    • வீட்டிலேயே ஈசியாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மக் கேக்.

    பொதுவாகவே பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று கேக். வீட்டிலேயே ஈசியாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மக் கேக். இதை கொஞ்சமாக தினமுமே செய்யலாம். மேலும் இதற்கு தேவையான பொருட்களின் விலையும் குறைவாகத் தான் இருக்கும். ஆகவே வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.

    குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் ஒரு மக் கேக் செய்வதற்கு தேவையானவை. எனவே உங்களுக்கு தகுந்தவாறு நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    பிரவுன் சுகர்- 1 ஸ்பூன்

    பீனட் பட்டர்- 2 ஸ்பூன்

    மைதா மாவு- 1 ஸ்பூன்

    கோக்கோ பவுடர்- 1 ஸ்பூன்

    முட்டை-1

    பேக்கிங் பவுடர்- 1/4 ஸ்பூன்

    சாக்லேட் சிப்ஸ்- ஒரு கைப்பிடி

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்க்க வேண்டும். அதில், பிரவுன் சுகர், பீனட் பட்டர், கோக்கோ பவுடர், மைதா மாவு, முட்டை மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து, ஃபோர்க் கரண்டியால் நன்றாக அடித்து கலக்கவும். இறுதியாக அதில் சாக்லேட் சிப்சை சேர்க்க வேண்டும்.

    இந்த கலவையை மக்கின் உள்ளே வைக்க வேண்டும். பாதி அளவு வரை மட்டுமே வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்டு வைத்து 15 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு மக் கேக்கை எடுத்து உள்ளே வைத்து 25 நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும். 25 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான மக் கேக் தயார்.

    ஆறியபின்னர் பரிமாறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். சாக்லேட் கேக் என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். உடனே காலியாகிவிடும். செய்து பார்த்து அசத்துங்கள்.

    குழந்தைகள் விரும்பும் சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மைதா - 250 கிராம்
    சர்க்கரை - 200 கிராம்
    வெண்ணெய் - 150 கிராம்
    முட்டை - 3
    பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
    சூடான நீர் - அரை கப்
    கோக்கோ பவுடர் - 2 ஸ்பூன்

    செய்முறை:

    * கோக்கோ பவுடரை வெந்நீரில் கட்டியில்லாமல் கலக்கவும்.

    * மைதாவையும், பேக்கிங் பவுடரையும் 3 முறை சலித்துக் கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், பொடித்த சர்க்கரையையும் போட்டு நன்கு மிருதுவான அடித்துக் கொள்ளவும்.

    * பின் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடிக்கவும்.

    * அடுத்து மைதா கலவையையும், கோக்கோ கலவையையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய்க்கலவையில் சேர்த்துக்கொண்டே கைவிடாமல் கட்டி இல்லாமல் அடிக்கவும்.

    * பின்னர் கேக் செய்யும் கனமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும். அதன் மேலே கொஞ்சம் மைதா மாவை தூவவும். இப்படி செய்தால் கேக் ஒட்டாமல் வரும்.



    * இப்போது கேக் கலவையை அந்த பாத்திரத்தில் பாதியளவு வரும்படி ஊற்றவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் வெந்தவுடன் மேலே எழும்பி வரும்.

    * மைக்ரோ வேவ் அவனில் 160 டிகிரி C-யில்25 -35 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும்.

    * கேக் நன்கு வெந்ததும் அவனில் இருந்து எடுத்து துண்டங்கள் போடவும்.

    * கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சாக்லேட் கேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.



    ×