search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அத்தோ
    X
    அத்தோ

    பர்மா உணவு அத்தோ செய்யலாம் வாங்க

    வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய அத்தோ என்னும் பர்மீஸ் உணவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
    தேவையான பொருட்கள்:

    நூடுல்ஸ் - 200 கிராம்
    பூண்டு - 10
    பெரிய வெங்காயம் - 2
    முட்டைக்கோஸ் - ஒரு கப்
    கேரட் - ஒரு கப்
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
    புளி கரைசல் - ஒரு டேபிள் ஸ்பூன்
    கேசரி பவுடர் - ஒரு சிட்டகை
    காய்ந்த மிளகாய் துகள் - தேவையான அளவு
    தட்டை - 2
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    அத்தோ

    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டை கோஸ், கேரட்டை மெல்லிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு போட்டு வேகவிடவும். வெந்ததும் தண்ணீர் முழுவதையும் வடித்து விட்டு அதில் எண்ணெய்விட்டு கிளறி தனியாக வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

    அதேபோல் பாதி வெங்காயத்தை வறுத்து தனியாக வைக்கவும்.

    ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், :எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், புளி கரைசல், காய்ந்த மிளகாய் துகள், உப்பு, உடைத்த தட்டு வடை, கொத்தமல்லித்தழை, பொரித்த பூண்டு, வறுத்த வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்.

    சுவையான அத்தோ ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×