என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் அடிக்கடி மரவள்ளிக்கிழங்கு பாதாம் கீர் பருகலாம். இந்த கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மரவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
    முந்திரி - 20
    பாதாம் - 25
    பிஸ்தா - 8
    ஏலக்காய் - 3
    ஐஸ் கட்டிகள் - 5
    சர்க்கரை - தேவையான அளவு

    மரவள்ளிக்கிழங்கு

    செய்முறை:

    பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.

    பாதாம், முந்திரியை ஊறவைத்து கொள்ளவும்.

    மிக்ஸியில் ஏலக்காய், ஊறவைத்த முந்திரி, பாதாம், துருவிய மரவள்ளிக்கிழங்கு சேர்த்து நைசாக அரைத்து  கொள்ளவும்.

    அடுத்து அதில் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து ஒரு திருப்புத் திருப்பவும்.

    பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    கீர் பரிமாறும் டம்ளரில் ஊற்றி மேலே பிஸ்தா தூவி பரிமாறவும்.

    சூப்பரான மரவள்ளிக்கிழங்கு பாதாம் கீர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மரவள்ளிக்கிழங்கில் விதவிதமான ரெசிபிகளை செய்யலாம். இன்று மரவள்ளிக்கிழங்கை வைத்து சூப்பரான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
    பச்சரிசி மாவு - முக்கால் கிலோ
    இஞ்சி - ஒரு துண்டு
    பச்சை மிளகாய் - 10
    ஓமம் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    வெண்ணெய் - 100 கிராம்

    மரவள்ளிக்கிழங்கு

    செய்முறை :

    இஞ்சி, பச்சை மிளகாய், ஓமத்தை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் துருவிய  மரவள்ளிக்கிழங்கை போட்டு அதனுடன் அரிசி மாவு, அரைத்த விழுது, உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை முறுக்கு அச்சில் போட்டு சிறு சிறு முறுக்குகளாகப் பிழிந்து பொரித்தெடுக்கவும்.

    இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தரலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாட்டில் அனைத்து விழாக்களிலும் பண்டிகைகளிலும் பணியாரம் தவறாது இடம்பெறும். வாழைப்பூ வைத்துசெய்யும் பணியாரம் பலரின் விருப்ப உணவாகும்.
    தேவையான பொருட்கள்

    புழுங்கல் அரிசி - கால் கிலோ
    வாழைப்பூ - 1
    கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப்
    இஞ்சி - ஒரு துண்டு, மிளகு - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    காய்ந்த மிளகாய் - 2
    தக்காளி - 1
    நெய் - ஒரு கப் (சிறியது)

    வாழைப்பூ பணியாரம்

    செய்முறை

    வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

    இவற்றுடன் இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து அரைக்கவும்.

    நெய்யில் வாழைப்பூவை வதக்கி மாவுடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

    பணியாரக் குழியில் நெய் விட்டு, மாவை ஊற்றி பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.

    சூப்பரான வாழைப்பூ பணியாரம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பூண்டு கார முறுக்கு. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டுப் பல் - 15,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    அரிசி மாவு - மூன்றரை கப்,
    உளுந்தை வறுத்து அரைத்த மாவு - அரை கப்,
    வறுத்த எள் - 2 டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    பூண்டு கார முறுக்கு

    செய்முறை:

    பூண்டுடன் மிளகாய்த்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, பெருங்காயத்தூள், வெண்ணெய், எள், அரைத்த பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும்.

    வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

    சூப்பரான பூண்டு கார முறுக்கு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காயத்தாள் முட்டை பொரியலை சூடான சாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயத்தாள் - 1 கட்டு
    சின்ன வெங்காயம் -  10
    வரமிளகாய் - 4
    கடுகு - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு -  அரை டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
    முட்டை - 3
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் -  தேவைக்கேற்ப

    வெங்காயத்தாள் முட்டை பொரியல்

    செய்முறை :

    வெங்காயம், வெங்காயத்தாளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

     கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

     பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, உப்பு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும்.

     வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும்.

    பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.

    முட்டை வெந்தது உதிரியாக வந்ததும்  அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வெங்காயத்தாள் முட்டை பொரியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாளை தமிழ் புத்தாண்டிற்கு எளிய முறையில் இனிப்பு செய்ய விரும்பினால் ஜவ்வரிசி பாயாசம் செய்யலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - 200 கிராம்
    சர்க்கரை - 250 கிராம்
    தண்ணீர் - 500 மி.லி.
    தேங்காய் -  அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)
    முந்திரிபருப்பு - தேவையான அளவு
    ஏலக்காய் - தேவையான அளவு

     ஜவ்வரிசி பாயாசம்

    செய்முறை

    அடுப்பில் கொதிக்கும் வெந்நீர் வைத்து, அதில் ஜவ்வரிசியைப் போட்டு கைவிடாமல் கிளறவும்.

    ஜவ்வரிசி வெந்ததும், சர்க்கரை,  ஏலக்காய் சேர்க்கவும்.

    பாயாசம், பாகு வாசனை வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேங்காய்ப் பாலை அதில் சேர்த்துக் கிளறவும்.

    நெய்யில் முந்தரி வறுத்து பாயாசத்தில் போடவும்.

    சுவையான ஜவ்வரிசி பாயாசம் தயார். சூடாக பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் மட்டன் குடல் குழம்பு. இன்று இந்த குழப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஆட்டுக் குடல் - ஒன்று,
    சோம்பு - 2 டேபிள் ஸ்பூன்,
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்,
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
    பட்டை - 4 துண்டு,
    கிராம்பு - 6,
    ஏலக்காய் - 4,
    மிளகு - 1 டேபிள் ஸ்பூன்,
    தேங்காய்த் துருவல் - 1 கப்,
    வெள்ளைப் பூண்டு - எட்டுப் பல்,
    இஞ்சி - 25 கிராம்,
    சின்ன வெங்காயம் நறுக்கியது - ஒரு கப்
    பெரிய வெங்காயம் - 2,
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    தக்காளி - 3,
    மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன்,
    மல்லித் தூள் - 5 டேபிள் ஸ்பூன்,
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு.

    மட்டன் குடல் குழம்பு

    செய்முறை

    மட்டன் குடலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோம்பு, சீரகம், மஞ்சள் தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, தேங்காய்த் துருவல், பூண்டு, இஞ்சி, ஒரு கப் சிறிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

    அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்த பொடியாக நறுக்கி குடலை சேர்த்து வதக்க வேண்டும்.

    குடல் வெந்த பிறகு மிளகாய்த் தூள், மல்லித் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

    தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கலந்து மூடிவைத்து 20 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

    குடல் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும்.

    சூப்பரான மட்டன் குடல் குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    மாலையில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று வெஜிடபிள் அப்பள பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய அப்பளம் - 6
    பீன்ஸ் - 4
    கேரட் - 1
    கோஸ் - பொடியாக நறுக்கியது ஒரு கப்
    எண்ணெய்  - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
    கோதுமை மாவு - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அப்பளத்தை அதனின் நனைக்க வேண்டும்.

    பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    கோதுமை மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், கோஸை போட்டு நன்றாக வதக்கவேண்டும் .

    அதில் சாட் மசாலா, உப்பு, மிளகுத்தூள், ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

    தண்ணீரிலிருந்து அப்பளத்தை நன்றாக நீர் வடித்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அந்த அப்பளத்தினுள் இந்த காய்கறி கலவையை உள்ளே வைத்து கோதுமை மாவு போஸ்டை நான்கு மூலைகளிலும் நன்றாகத் தடவவேண்டும்.

    பின்னர் அதனை ball வடிவில் மடித்து கொண்டு தனியாக ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேறியதும் செய்த அப்பள balls போட்டு பொரித்தெடுத்தால் சூடான சுவையான வெஜிடபிள் அப்பள பால்ஸ் தயார்.

    B. இந்துமதி 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் அனைவருக்கும் மாலையில் சத்தான சிறுதானியங்களில் ரெசிபி செய்து கொடுக்கலாம். இன்று வரகரிசி பாயாசம் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வரகரிசி - 100 கிராம்,
    தேங்காய் பால் - 1 கப்,
    துருவிய வெல்லம் - அரை கப்,
    பாசிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
    முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப,
    ஏலக்காய் தூள் - கால் தேக்கண்டி,
    நெய் அல்லது எண்ணெய் - அரை தேக்கரண்டி.

    வரகரிசி பாயாசம்

    செய்முறை:

    வரகு அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    துருவிய வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, ஊற வைத்த அரிசியுடன் சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

    வெந்ததும், அதை நன்கு மசித்து, வெல்லப் பாகு சேர்த்து ஒரு கொதிக்க விடவும்.

    பிறகு தேங்காய் பால் விட்டு கொதி வரும் முன் இறக்கவும்.

    பின்னர், ஏலக்காய் சேர்த்து, நெய் அல்லது எண்ணெயில் வறுத்த முந்திரி, திராட்சை தூவிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காபி பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக, புதியவகை ‘டல்கோனா காபி’ சமூக வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. வீட்டிலேயே டல்கோனா காபியை எளிமையாக தயாரிக்கலாம்.
    காபி பிரியர்களை குஷிப்படுத்தும் விதமாக, புதியவகை காபி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு ‘டல்கோனா காபி’ என்று பெயர். ஏராளமானோர் அந்த காபியின் புகைப்படங்களையும், காபி தயாரிக்கும் முறையையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி இருக்கிறார்கள். வீட்டிலேயே டல்கோனா காபியை எளிமையாக தயாரிக்கலாம்.

    தேவையானவை:


    காபி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
    சுடுநீர் - 2 டேபிள் ஸ்பூன்
    பால் - அரை டம்ளர்
    ஐஸ் கட்டி - சிறிதளவு

    டல்கோனா காபி

    செய்முறை:

    பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து, பின்னர் குளிர்சாதன பெட்டியில் குளிர வைத்துக்கொள்ளுங்கள்.

    அகன்ற கிண்ணத்தில் காபி தூள், சர்க்கரையை போட்டு அதில் சுடுநீரை ஊற்றி நன்கு அடித்து கலக்குங்கள்.

    காபி தூள் நன்றாக கலந்து கிரீம் பதத்தில் இருக்க வேண்டும்.

    தொடர்ந்து குளிரவைத்த பாலை எடுத்து டம்ளரில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும்.

    அதில் ஐஸ்கட்டியை போடவேண்டும்.

    பின்னர் காபி கிரீமை மேல்பரப்பில் ஊற்றி லேசாக கலக்கி பருகலாம்.

    டல்கோனா காபி தயார் செய்யப்படும் வீடியோவை, சமூகவலைத்தளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கிறார்கள். அதனால் குறுகிய காலத்தில் டல்கோனா காபிக்கு தனி மவுசு கிடைத்திருக்கிறது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மரவள்ளிக்கிழங்கில் புட்டு, கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மரவள்ளிக்கிழங்கை வைத்து அருமையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துருவிய மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ
    சர்க்கரை - 300 கிராம்
    நெய் - 300 கிராம்
    முந்திரி, பாதாம் - தலா 40
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை

    மரவள்ளிக்கிழங்கு

    செய்முறை:

    அடிகனமான கடாயில் 4 ஸ்பூன் நெய்விட்டு முந்திரி, பாதாம் வறுத்தெடுத்து வைக்கவும்.

    பின் வாணலியில் 4 ஸ்பூன் நெய்விட்டு துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

    அதே வாணலியில் சர்க்கரையைப் போட்டு, 50 மில்லி தண்ணீர்விட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

    பின்பு அதில் வதக்கி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறவும்.

    நெய் பிரிந்து வந்தவுடன் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து கிளறி எடுக்கவும்.

    சுவையான மரவள்ளிக்கிழங்கு அல்வா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த முட்டை பிரியாணியை செய்வது மிகவும் சுலபம். சுவையும் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பிரியாணி அரிசி - 1/2 கிலோ
    முட்டை - 5
    பட்டை பொடி - 1/4 டீஸ்பூன்
    கிராம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
    பிரியாணி இலை - 2
    தயிர் - 1/2 கப்
    வெங்காயம் -  3
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி, புதினா - 1 கப்
    எலுமிச்சம்பழம் - 1
    நெய் எண்ணெய் - 1 கப்
    உப்பு - தேவைக்கு.

    முட்டை பிரியாணி

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விடவும்.

    குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை பொடி, கிராம்பு பொடி, சோம்பு சேர்த்த பின் பிரியாணி இலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

    பின் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    பின் பிரியாணி மசாலா, பச்சை மிளகாய், கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் பிரியாணி அரிசியை சேர்த்து வேக வைத்த முட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு, நெய் சேர்த்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கினால் சூப்பரான முட்டை பிரியாணி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×