search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெஜிடபிள் அப்பள பால்ஸ்
    X
    வெஜிடபிள் அப்பள பால்ஸ்

    சூப்பரான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் அப்பள பால்ஸ்

    மாலையில் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று வெஜிடபிள் அப்பள பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய அப்பளம் - 6
    பீன்ஸ் - 4
    கேரட் - 1
    கோஸ் - பொடியாக நறுக்கியது ஒரு கப்
    எண்ணெய்  - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
    கோதுமை மாவு - 2 டீஸ்பூன்

    செய்முறை :

    ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அப்பளத்தை அதனின் நனைக்க வேண்டும்.

    பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    கோதுமை மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், கோஸை போட்டு நன்றாக வதக்கவேண்டும் .

    அதில் சாட் மசாலா, உப்பு, மிளகுத்தூள், ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

    தண்ணீரிலிருந்து அப்பளத்தை நன்றாக நீர் வடித்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அந்த அப்பளத்தினுள் இந்த காய்கறி கலவையை உள்ளே வைத்து கோதுமை மாவு போஸ்டை நான்கு மூலைகளிலும் நன்றாகத் தடவவேண்டும்.

    பின்னர் அதனை ball வடிவில் மடித்து கொண்டு தனியாக ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேறியதும் செய்த அப்பள balls போட்டு பொரித்தெடுத்தால் சூடான சுவையான வெஜிடபிள் அப்பள பால்ஸ் தயார்.

    B. இந்துமதி 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×