என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே கிரில்டு இறால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    இறால் - 500 கிராம்
    பூண்டு - 4-5 பெரியது
    எலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி
    ஆலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    அரைத்த மிளகு - 1 தேக்கரண்டி
    நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கேற்ப

    செய்முறை:

    கொத்தமல்லி இலையை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
     
    இறாலை நன்றாக சுத்தம் செய்து அதனுடன், நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    கிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும் ஒரே லேயராக பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.

    பாத்திரத்தை கிரில்ன் கீழ் வைக்கவும்.

    இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.

    பாத்திரத்தை வெளியே எடுத்து, இறால்களைத் திருப்பவும். மறுபுறமும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.

    பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கிரில்டு இறால் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெண்டைக்காயில் சர்க்கரை, அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் மருத்துவக் குணம் அதில் உள்ளது.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - 13,
    ஓரளவு புளிப்பு உள்ள மோர் - 500 மில்லி,
    காய்ந்த மிளகாய் - 2,
    தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்,
    மிளகு, தனியா, கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம் - தலா ஒரு தேக்கரண்டி,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெண்டைக்காயை நீள துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும்.

    இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து, மோருடன் கலந்து தேவையான உப்பு சேர்க்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, மோர் கலவையை ஊற்றி, வதக்கிய வெண்டைக்காயும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். 

    சூப்பரான வெண்டைக்காய் மோர்க்குழம்பு தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வேர்க்கடலையில் சட்னி, துவையல் முதலிய ரெசிபிகள் செய்வதுண்டு. இன்று புதிய முறையில் வேர்க்கடலையை வைத்து காரக்குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்..
    தேவையான பொருள்கள்:

    வேர்க்கடலை - 1/2 கப் 
    கத்தரிக்காய் - 1
    தேங்காய் துண்டு - 2 
    கடுகு - 1 ஸ்பூன் 
    உளுந்தம்பருப்பு -1 ஸ்பூன் 
    சீரகத்தூள் - 1 ஸ்பூன் 
    புளிக்கரைசல் - 1 ஸ்பூன் 
    சின்ன வெங்காயம் - 5 
    மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் 
    மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் 
    கறிவேப்பிலை - சிறிதளவு 

    செய்முறை:

    கத்தரிக்காய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் வேர்க்கடலையை நன்றாக அலசி கொண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். 

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், கத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

    பிறகு வேக வைத்த வேர்க்கடலை, புளி கரைசல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த தேங்காய் ஆகியவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 

    தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளவும். 

    குழம்பு பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். 

    சுவையான வேர்க்கடலை கத்தரிக்காய் குழம்பு தயார்.. 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சீஸ் நிறைந்த இந்த லசானியா, காய்கறிகளால் நிரப்பி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு நிச்சயம் அவர்கள் ‘நோ’ சொல்லமாட்டார்கள்.
    தேவையான பொருட்கள்:

    லசான்யா பாஸ்தா ரோல்ஸ் - 9  
    பச்சை குடைமிளகாய் - 1
    மஞ்சள் குடைமிளகாய் - 1
    சிவப்பு குடைமிளகாய் - 1
    பசலைக் கீரை - சிறிதளவு
    மோஸெரெல்லா சீஸ்  - 120 கிராம்
    பார்மீசான் சீஸ் - 40 கிராம்
    காட்டேஜ் சீஸ் - 240 கிராம்
    உப்பு - 5 கிராம்   
    வெங்காயம் - 100 கிராம்
    தாக்காளி கான்சாஸ் - 400 கிராம்
    முட்டை - 1

    செய்முறை

    கீரை, குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில், கீரை, மோஸெரெல்லா, காட்டேஜ் சீஸ், லுகப் பார்மீசான் சீஸ் மற்றும் முட்டை ஆகியவற்றை போட்டு ஒன்றாக கலக்கவும். 

    அதை ஒரு கப்பில் 1/3 பகுதியளவு எடுத்துக் கொண்டு, லசான்யா ஷீட்டில் வைக்கவும். 

    உருட்டி, பற்குத்தும் குச்சியை குத்தி இறுக்கமாக்கவும்.

    இப்படி பிணைக்கப்பட்ட பகுதிகள் கீழே இருக்குமாறு ஒரு பேக்கிங் டிரேவில் குக்கிங் ஸ்ப்ரேவைத் தெளித்து வைக்கவும். அதை மூடி ஒரு இரவு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    பேக் செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக ஃப்ரிட்ஜிலிருந்து எடுக்கவும். 

    ரோல்களின் மேலே தக்காளி சாஸை தாராளமாக ஊற்றவும்.

    இதை மூடி 350கு இல் 33- & 38 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். 

    மீதமுள்ள பார்மீசான் சீஸை மேலே தூவி, குச்சிகளை அகற்றி விட்டு பரிமாறவும்

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கும்பகோணம் டிகிரி காஃபி என்றால் நறுமணத்துடன் சேர்ந்த சுவை நம் மனதை வருடிச் செல்லும். மணமும் சுவையும் கலந்த கும்பகோணம் டிகிரி காபியை வீட்டிலேயே செய்யலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்:

    தெறிக்க வறுத்து அரைத்த புதிய காஃபி பவுடர் (சிக்கரி கலந்தது) - 3 மேசைக் கரண்டி,
    பால் -  ஒன்றரை கப்,
    சர்க்கரை: - அரை தேக்கரண்டி,
    தண்ணீர் - 1/2 கப்

    செய்முறை

    தண்ணீரை குமிழிகள் வரும் வரை கொதிக்கவிடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் மூன்று மேசைக் கரண்டி காஃபி பவுடரை பில்டரில் போட்டு மெதுவாக அழுத்தவும்.

    உடனடியாக வெந்நீரை அதில் ஊற்றி முடவும்.

    அரை மணி நேரத்திற்குப் பின்பு ஸ்ட்ராங்கான டிகாஷன் தயார்

    ஒன்றரை கப் பாலை தண்ணீர் சேர்க்காமல் கொதிக்க வைக்கவும். 

    அரை கப் டிகாஷனை பித்தளை அல்லது சில்வர் தம்ளரில் விடவும். 

    அதில் 4/3 கப் பாலும், அளவுக்கேற்ப சர்க்கரையும் சேர்த்து பித்தளை அல்லது சில்வர் டவராவில் நுரை பொங்க ஊற்றி கலக்கவும். 

    நறுமணத்துடன் கும்பகோணம் டிகிரி காபி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மீல் மேக்கரில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம். இன்று மீல் மேக்கர் வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீல் மேக்கர் - 100 கிராம்
    பொட்டுக் கடலை மாவு - அரை கப்
    பெரிய வெங்காயம் - 1
    கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
    கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூம் - கால் தேக்கரண்டி
    சோள மாவு - ஒரு தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறதளவு
    புதினா - சிறதளவு
    கறிவேப்பிலை - சிறதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

     மீல் மேக்கரை சுடுதண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில், பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், கறி மசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

    பிறகு, வெந்நீரில் கேவ வைத்து பொடியாக நறுக்கிய மீல் மேக்கர், உப்பு சேர்த்து வடை பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். 

    எண்ணெய் சூடானதும் கலவையில் இருந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைப்போல் தட்டி, சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான மீல் மேக்கர் வடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டிலேயே தயாரிக்ககூடிய ஒரு அருமையான குளிர் பானம் ஐஸ் டீ. இதை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டஸ்ட் டீ -30 கிராம்
    டீ பேக்- 3
    சர்க்கரை -100 கிராம்
    எலுமிச்சை  - 2
    ஏலக்காய் -3
    இஞ்சி - 15 கிராம்
    லவங்கப் பட்டை - 1 அங்குலம்

    செய்முறை

    எலுமிச்சையிலிருந்து ஜூஸ் எடுத்து அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும், அதன் தோலையும் வைத்துக் கொள்ளவும்.

    ஏலக்காய், லவங்கம், எலுமிச்சை தோல் மற்றும் இஞ்சியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் 200 மிலி தண்ணீரை ஊற்றி, லேசாக கொதிக்க வைக்கவும்.

    மசாலாக்கள் தண்ணீரில் கலக்கும் வரை காத்திருந்து, ஐந்து நிமிடங்கள் கழித்து, டீ டஸ்ட், டீ பேக் மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

    சரியாக 2 நிமிடங்கள் கழித்து, பாத்திரத்தை சூட்டிலிருந்து விலக்கி, முழுமையாக குளிர விடவும்.

    நீங்கள் விரும்பும் ஜூஸ் கிளாஸை எடுத்து, அதில் ஐஸ்கட்டியால் நிரப்பவும். அதில் எலுமிச்சை ஜூஸை ஊற்றி, அதன் கால் பங்கு அளவுக்கு தயாரித்த டீயை ஊற்றவும்.

    கிளாஸ் மேல் குளிர்ந்த நீரைச் சேர்க்கவும். உங்கள் சுவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரை மற்றும் எலுமிச்சை ஜூஸைச் சேர்க்கவும்.

    சூப்பரான ஐஸ் டீ ரெடி. 

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பீட்ரூட்டை பொரியல் செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குழம்பு செய்து பார்த்ததுண்டா? இதோ உங்களுக்காக பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்
    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் - 1,
    தக்காளி - 1,
    வெங்காயம் - 1,
    கீறிய பச்சைமிளகாய் - 2,
    குழம்பு மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    கடுகு, கறிவேப்பிலை - சிறிது.

    செய்முறை :

    பீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் பீட்ரூட், உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

    நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும். 

    அருமையான பீட்ரூட் குழம்பு தயார்!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் தேங்காய் பால் மீன் குழம்பு. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீன் - 1 கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 3
    தேங்காய் பால் - 2 கப்
    குழம்பு பொடி - 4 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    வெந்தயம் - அரை தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 4
    பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    புளி தண்ணீர் - 2 கப்
    உப்பு – தேவைக்கேற்ப

    செய்முறை

     மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.

     வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

    பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

     பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்த பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும், பூண்டு விழுது சேர்த்து வதக்கி, குழம்பு பொடி சேர்க்கவும்..

    குழம்பு பொடி சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

    பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

    குழம்பு கொதித்ததும் மீன் சேர்த்து வேக விடவும்.

    மீன் பாதி வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதித்தவுடன் இறக்கினால் சுவையான தேங்காய் பால் மீன் குழம்பு.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சூப்பரான சாக்லேட் புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாக்லெட் - 50 கிராம்,
    சர்க்கரை - 1/2 கப்
    கோகோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
    அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    கார்ன்ஃப்ளோர் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - 1/4 டீஸ்பூன்
    பால் - 2 கப்
    ஹெவி கிரீம் - 40 மி.லி.

    செய்முறை

    சாக்லெட்டை துருவிக் கொள்ளவும். 

    ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, கோகோ பவுடர், அரிசி மாவு, கார்ன்ஃப்ளோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

    மிதமான தீயில், கடாயில் கலவையை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

    சிறிது கெட்டியாக ஆனதும், துருவிய சாக்லெட்டை சேர்த்து கிளறவும். 

    இக்கலவை பாதியாக வரும்வரை கைவிடாமல் கிளறி, ஹெவி கிரீம், வெனிலா எசென்ஸ் சேர்த்து இறக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் போட்டு ஆறவிடவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து, துருவிய வெள்ளை சாக்லெட்டால் அலங்கரித்து பரிமாறவும்.

    சுவையான சாக்லேட் புட்டிங் தயார்…

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்தரிக்காயை வைத்து பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காயை வைத்து சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்திரிக்காய் - 500 கிராம், 
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், 
    புளி - எலுமிச்சம் பழ அளவு, 
    மிளகாய்தூள் - 50 கிராம், 
    வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், 
    எண்ணெய் - 100 கிராம், 
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    வெந்தயம் - அரை டீஸ்பூன், 
    கடுகு - ஒரு டீஸ்பூன், 
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், 
    காய்ந்த மிளகாய் - 2, 
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    செய்முறை: 

    கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, ‘கட்’ செய்யவும்.  

    புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து, கத்திரிக்காயுடன் கலக்கவும். 

    அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும். 

    மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். 

    பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றிக் கலக்கவும். 

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால்… கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.
    இந்த மீன் குழம்பு சோற்றுக்கு மட்டுமல்ல, இட்லி மற்றும் தோசைக்கும் சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாளை மீன் - ½ கிலோ
    சின்ன வெங்காயம் - ¼ கிலோ
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 12
    தேங்காய் - அரை மூடி
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்.
    சோம்பு - 2 டீஸ்பூன்
    கசகசா - 2 டீஸ்பூன்
    கடுகு - ½ டீஸ்பூன்
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வாளை மீனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    2 ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும்.

    10 பச்சை மிளகாய், கசகசா, சோம்பு சேர்த்து மையாக அரையுங்கள்.

    அடுப்பில் மண்சட்டியை வைத்து, அது சூடானதும் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர்  2 பச்சை மிளகாயை போட்டு வதக்குங்கள்.

    அடுத்து சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது உப்புச் சேர்த்து வதக்குங்கள்.

    எண்ணெய் பிரிகையில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

    அடுத்து தக்காளியை போட்டு மேலும் சிறிது உப்புச் சேர்த்து வதக்குங்கள். அது வதங்கும் நேரத்தில், அரைத்த மசாலாவை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

    இப்போது, கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் வாளை மீனைச் சேர்த்து, இன்னொரு 10 நிமிடம் கொதிக்க விட்டால், புளி சேர்க்காத வாளை மீன் குழம்பு ரெடி.

    ×