என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கேக் தான் பிரதான இனிப்பு. இந்த கேக்கை கடையில் வாங்குவதைக் காட்டிலும் வீட்டிலேயே ருசியாக செய்து அன்பால் பறிமாறுவதுதான் இதன் சிறப்பு.
தேவையான பொருட்கள்
மைதா - 220 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 220 கிராம்
உலர்ந்த பழங்கள் - தேவையான அளவு
முட்டை - 3
வெண்ணெய் - 220 கிராம்
பாதாம் - தேவையான அளவு
வெண்ணிலா எசன்ஸ் - 1ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோல் சீவியது - 1 ஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை அரைத்த பொடி - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் வெண்ணெய் மற்றும் நாட்டுச் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்குக் கலக்க வேண்டும்.
அடுத்ததாக முட்டைகளை உடைத்து அதையும் நன்குக் கலந்துகொள்ள வேண்டும்.
பின் மைதா மாவு அதோடு உப்பு, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பேக்கிங் சேடா ஆகியவற்றையும் சேர்த்து கிளற வேண்டும்.
இறுதியாக உலர்ந்த பழங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு பழத்தின் தோலை சீவி அதை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு சீராகக் கலக்க வேண்டும்.
பின் அதை ஒரு வட்டமான பாத்திரத்தில் கொட்டி அதன் மேல் பாதாமை தூவவும். மைக்ரோவேவ் அவன் இருந்தால் அதில் வேக வைக்கலாம். குக்கரில் அடியில் உப்பு கொட்டி அதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து மிதமான சூடு பதத்தில் 40 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
பின் திறந்து பார்த்தால் கேக் உப்பி வந்திருக்கும்.

சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயார்.
உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் செய்ய மைக்ரோ ஓவன் இல்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் அடுப்பிலேயே எளிமையாக கேக் செய்யலாம். அதிலும் முட்டை சேர்க்காமல் அருமையாக கேக் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப் + 1 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்
சர்க்கரை பொடி - 1/4 கப்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 கப்
உப்பு - 1 கப்
செய்முறை:
முதலில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் மைதா ஆகியவற்றை சலித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் சர்க்கரை பொடி மற்றும் 1/4 கப் வெண்ணெய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பௌலில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதில் 1/4 கப் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உப்பை பரப்பி விட்டு, குக்கரை சிறிது நேரம் மூடி சூடேற்ற வேண்டும்.
உப்பு சூடாவதற்குள், அடித்து வைத்துள்ள கண்டென்ஸ்டு மில்க் கலவையில் மைதா கலவையை சேர்த்து, மீதமுள்ள பால் ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு அடித்து, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் பேக்கிங் பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் தடவி, பின் 1 டேபிள ஸ்பூன் மைதாவை தூவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி குக்கரை மூடி, விசில் போடாமல், குறைவான தீயில் 30-40 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
பிறகு கேக் நன்கு வெந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். கேக் நன்கு வெந்துவிட்டால், கத்தி கொண்டு குத்தும் போது அதில் மாவு ஒட்டாமல் இருக்கும். பின் அடுப்பை அணைத்து, குக்கரில் உள்ள பேக்கிங் பௌலை வெளியே எடுத்து குளிர வைக்க வேண்டும்.

இறுதியில் அதனை ஒரு தட்டில் போட்டு, கத்தி கொண்டு வெட்டினால், எக்லெஸ் கேக் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நாண், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் இந்த காலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காலிபிளவர் - 1
பச்சை பட்டாணி - கால் கப்
தேங்காய் துருவல் - கால் கப்
உருளைக் கிழங்கு - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காலிபிளவரை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளளவும்.
பட்டாணி, உருளைக் கிழங்கை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய் துருவல், சோம்பு, காய்ந்த மிளகாய் போன்றவற்றை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் காலிபிளவரை கொட்டி வதக்க வேண்டும்.
அதனுடன் உருளைக்கிழங்கை மசித்து போட்டு கிளறி விட வேண்டும்.
அதைத்தொடர்ந்து பட்டாணி, அரைத்த தேங்காய் விழுதை போட்டு கிளற வேண்டும்.
பின்னர் போதுமான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

காலிபிளவர் பட்டாணி உருளைக்கிழங்கு குருமா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த ரெசிபியை சாம்பார், ரசம் ஆகியவற்றிற்கு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன்- 500 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை பழம் - 1/2
கடுகு - 1 1/2 தேக்கரண்டி
வர மல்லி - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
வர மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி தழை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 1/2 மூடி எலுமிச்சை சாறு, 1/2 கப் தயிர், 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளலாம்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முழு தனியா, முழு மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
தேங்காய் பொன்னிறமாக வறுப்பட்டதும் இதனை ஆற வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்குங்கள்.
தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.
இந்த சமயத்தில் நாம் அரைத்து வைத்த மசாலா பேஸ்டை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
மசாலா ஐந்து நிமிடங்கள் வதங்கிய பின் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
இதனோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.
கடைசியில் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூப்பரான குண்டூர் சிக்கன் மசாலா ரெடி.

கேரளாவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். சாப்பிட சூப்பராக இருக்கும். இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் மீன் - 5
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் பால் - சிறிதளவு
வாழை இலை - 1
எலுமிச்சை சாறு - சிறிதளவு
செய்முறை
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
மீன் நன்கு மசாலாவுடன் ஊறியவுடன் தோசைகல்லில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, மிளகாய் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.
பின் வதங்கிய மசாலாவுடன் சிறிதளவு கெட்டியான தேங்காய் பால் சேர்த்து கிளறவும். மசாலா திக்கான பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
வதங்கிய தேங்காய்பால் மசாலாவை சிறிதளவு எடுத்து ஒரு வாழை இலையில் வைக்கவும்.
பின்னர் அதன் மேல் வறுத்து வைத்துள்ள மீன் துண்டை வைத்து அதன் மேல் மீண்டும் சிறிதளவு மசாலாவை வைத்து வாழை இலையை நன்றாக மடித்து வாழை நாரினை கொண்டு கட்டவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் செய்து வைத்த வாழை இலை மீனை வைத்து சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சுவையான வாழை இலை மீன் வறுவல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
திருநெல்வேலி அல்வா என்ற பெயரை கேட்டாலே அனைவரின் வாயிலும் எச்சில் ஊறும். இன்று இந்த அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சம்பா கோதுமை - 1/2 கப்
அஸ்கா சர்க்கரை - 1 1/2 கப் ( வெள்ளை )
முந்திரி பருப்பு - 12
பசு நெய் - 3/4 கப்
செய்முறை :
சம்பா கோதுமையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
கோமை நன்றாக ஊறியதும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து கொள்ளவும்.
அதிலிருந்து கோதுமையை பிழிந்து கோதுமை பால் எடுத்துக் கொள்ளவும். அந்த சக்கையை மறுபடியும் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும், கோதுமை பாலை பிழிந்து எடுத்து கொள்ளவும். இந்த முறையை மறுபடியும் ஒரு முறை பின்பற்றி கோதுமை பாலை சேகரித்து கொள்ளவும்.
இந்த கோதுமை பாலை குறைந்தபட்சம் 30 நிமிடம் அந்த பாத்திரத்தை அசைக்காமல் அப்படியே வைத்து கொள்ளவும். இப்பொழுது அதில் மேலே தேங்கியுள்ள தெளிந்த நீரை மெதுவாக வேறு ஒரு பாத்திரத்துல ஊற்றி எடுத்துக்கொள்ளவும்.
அடியில் தேங்கியுள்ள கோதுமை பால் கரைசலை மற்றும் பயன்படுத்தி கொள்ளவும்.
முந்திரி பருப்பை பொன்னிறமாக நெய்யில் வறுத்து கொள்ளவும்.
ஒரு வடசட்டியில் 1/2 கப் சர்க்கரையை கொட்டி அதில் ஒரு மேஜைக்கரண்டி தண்ணீர் விட்டு கிளறி கொண்டே இருக்கவும். சிறு தீயில் கிளறி கொண்டே இருந்தால் சர்க்கரை உருகி கொஞ்சம் கெட்டியாகி சிறிது நேரத்தில் சர்க்கரை நிறம் மாற தொடங்கும் ( பிரவுன் நிறம் ) அடுப்பு சிம்மில் அல்லது சிறுதீயில் இருப்பது மிக அவசியம்.
சர்க்கரை கரைசல் இப்பொழுது தங்க நிறத்தில் அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். மெதுவாக 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும் இல்லையெனில் வெடித்து சிதறி மேலே எல்லாம் விழும். சர்க்கரை கரைசல் முழுவதுமாக கரைந்ததும் அதில் 1 கப் சர்க்கரையை சேர்த்துகோங்க.
அந்த கோல்டன் பிரவுன் கரைசலை கிளறி கொண்டே இருந்தால் அதை கொஞ்சம் எடுத்து நமது ஆள்காட்டி விரல் மற்றும் நமது கட்டை வரலில் தொட்டு எடுத்தால் ஜவ்வு மிட்டாய் போல் அல்லது ஊசி போன மெதுவடை போல் ஒரு மெல்லிய நூல் வரும் அதுதான் கம்பி பதம். இது வந்தவுடன் கோதுமை பாலை மெதுவாக சர்க்கரை கரைசலில் ஊற்றி கொள்ளவும்.
இதை அனைத்தையும் சிறுதீயில் மட்டுமே செய்ய வேண்டும். கோதுமை பாலை சர்க்கரை கரைசலில் ஊற்றியவுடன் கிளறி கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் கோதுமை பால் வெந்ததும் மறுபடியும் கோல்டன் பிரவுன் கலர் மாறிவிடும்.
இப்பொழுது இந்த சமயத்துல கொஞ்சம் கொஞ்சமாக 1 மேஜைக்கரண்டி நெய்யை சேர்த்து கொண்டே இருக்க வேண்டும். இந்த கரைசலை கிளறி கொண்டே இருக்கவும் கிளறுவதை நிறுத்த கூடாது. இந்த கரைசல் ஊற்றும் நெய்யை உறிந்து கொண்டே இருக்கவும்.
ஒரு பக்குவத்துல இந்த கரைசல் நெய்யை உறிஞ்சாமல் பாத்திரத்தின் ஓரங்களில் நிற்கும் இந்த சமயத்தில் நெய் ஊற்றுவதை நிறுத்தி கொள்ளவும். இப்பொழுது வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து கொள்ளவும். கரைசலை கிளறி கொண்டே இருக்கவும். (முதலில் கிளறும் சமயத்துல கரண்டியில் ஓட்டி கொள்ளும்.)
பாத்திரத்துல அல்வா ஓட்டாமல் வரும் அந்த சமயத்துல அல்வாவின் நிறம் மாறும். அல்வாவின் கலவையில் சின்ன சின்ன சின்னதாக வெள்ளை நிறம் முட்டைகள் அல்லது புள்ளிகள் தோன்றும். இந்த சமயத்தில் அல்வா கிளறும் கரண்டியில் ஓட்டி கொள்ளாமல் வரும். இது தான் சரியான பக்குவம். இந்த பக்குவத்துல அல்வா கலவையை நெய் தடவிய ஒரு அகன்ற ஃட்ரேவில் கொட்டி கொள்ளவும். பிறகு ஆறவைத்து பரிமாறவும்.
குறிப்பு:

கோதுமை மற்றும் சர்க்கரையின் சதவீதம் 1 : 3 அதாவது கோதுமை அரை கப் என்றால் ஒன்று மற்றும் அரை கப் சர்க்கரை எடுத்து கொள்ள வேண்டும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இத்தாலிய உணவில் ரொம்ப சுவையானது ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ். இதை தயாரிப்பதும் எளிது. இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
ஸ்ட்ராபெர்ரி - தேவையான பொருட்கள்
பிஸ்கட் அல்லது கிராக்கர்ஸ் (இதுவும் ஒருவகை பிஸ்கட்தான்)
பிரெஷ் கிரீம்
செய்முறை
ஸ்ட்ராபெர்ரி பழங்களை இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், ஸ்ட்ராபெர்ரியை பொடிதாக நறுக்கி கொள்ளலாம்.
பிறகு பிரெஷ் கிரீமில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.

‘ஜாம்’ மாதிரியில் தயாராகி இருக்கும் கிரீமை, பிஸ்கெட்டில் தடவி, அதன் மீது மற்றொரு பிஸ்கெட்டை ஒட்டினால், சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குறிப்பாக இந்த கபாப் செய்வது மிகவும் ஈஸி. அதிலும் அதனை லக்னோ ஸ்டைலில் செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். இங்கு லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா - 1 கிலோ
பழுக்காத பப்பாளி விழுது - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டன் கீமாவை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பழுக்காத பப்பாளி விழுது, வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள், கடலை மாவு, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்க வேண்டும்.
பின்பு அதனை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதைப் போட்டு, மட்டன் வெந்து, முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் ரெடி!!!
மட்டன் கீமா - 1 கிலோ
பழுக்காத பப்பாளி விழுது - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காய பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டன் கீமாவை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பழுக்காத பப்பாளி விழுது, வெங்காய பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள், கடலை மாவு, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்க வேண்டும்.
பின்பு அதனை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ளதைப் போட்டு, மட்டன் வெந்து, முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான லக்னோ ஸ்டைல் கலூட்டி கபாப் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளில் உடல் வளர்ச்சிக்கு டிரை ஃப்ரூட்ஸ் மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று டிரை ஃப்ரூட்ஸ் வைத்து சுவையான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காய்ச்சாத பால் - 1 லிட்டர்
கண்டன்ஸ்டு மில்க் - கால் கப்
குங்குமப்பூ - சிறிதளவு
பாதாம் - கைப்பிடியளவு
முந்திரி - கைப்பிடியளவு
பிஸ்தா - கைப்பிடியளவு
வால்நட் - கைப்பிடியளவு
உலர்திராட்சை - கைப்பிடியளவு
உலர் அத்திப்பழம் - கைப்பிடியளவு
செய்முறை
பாதாமுடன் முந்திரி, வால்நட், பிஸ்தா, உலர்திராட்சை, உலர் அத்திப்பழம் ஆகியவற்றை வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு பாதாம், பிஸ்தாவின் தோலை நீக்கி விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
சிறிதளவு பாலுடன் குங்குமப்பூ சேர்த்து ஊறவைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள பாலை ஊற்றி அடுப்பை சிறுதீயில் வைத்து காய்ச்சவும்.
இதனுடன் அரைத்த நட்ஸ் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இதனுடன் குங்குமப்பூ சேர்த்து 2 நிமிடங்களுக்கு பிறகு இறக்கவும்.

இதை சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீரில் கிரேவி, பிரை, புலாவ் என பல வகைகளை சமைக்கலாம். இப்பொழுது ஹோட்டல் ஸ்டைலில் எப்படி பன்னீர் ஸ்டப்ஃடு தோசை செய்வதை பற்றி பார்க்கலாம்...
தேவையான பொருள்கள்:
தோசை மாவு - 2 கப்
பன்னீர் - ஒரு கப்
வெங்காயம் - 2
எண்ணெய்-தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மசாலா பொருள்கள்:
தனியா தூள்- 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா- 2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள்- 2 ஸ்பூன்
செய்முறை:
பன்னீரை துருவி அல்லது சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
பிறகு அதில் பன்னீர், தனியா தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் ஆகியவை சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு 15 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் மசாலா ரெடி.
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தோசை மாவை ஊற்றி அதன் மேல் பன்னீர் கிரேவி வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
பொன்னிறமாக மாறியவுடன் தோசையை ரோல் செய்வது போல் செய்தால் சுவையான பன்னீர் ஸ்டப்ஃடு தோசை தயார்..
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சப்பாத்தி, தோசை, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் நண்டு ரிச் மசாலா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
நண்டு - ஒரு கிலோ
தேங்காய் பால் - மூன்று டம்ளர்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 50 மிலி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
அரைக்க:
தேங்காய் துருவல் - 6 தேக்கரண்டி
முந்திரி - 5
பூண்டு - 4
மஞ்சள்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை
நண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருள்களை நைசாக அரைத்து வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப் பால் ஊற்றி அதில் அரைத்த மசாலாவைக் கரைத்து தேவையான உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
அதில் பச்சை மிளகாயைக் கீறியும், கொத்தமல்லித்தழையை போடவும்.
ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய்தூள், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கிவிட்டு கரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
மசாலா நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்திருக்கும் நண்டை மெதுவாக போட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது மூடி போட்டு அடுப்பை மிதமாகவே வைத்து இருபது நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
நண்டு புரண்டார்போல் எண்ணெய்விட்டுக் கொண்டு இருக்கும். அப்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான நண்டு ரிச் மசாலா தயார்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செஸ்வான் சாஸ் செய்வதற்கு
வரமிளகாய் - 6
இஞ்சி - சிறிதளவு
பூண்டு பல் - 3
ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு
உதிரியாக வடித்த சாதம் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு பல் - 2
கேரட் - சிறிதளவு
பீன்ஸ் - சிறிதளவு
குடைமிளகாய் - சிறிதளவு
மிளகு தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
இஞ்சி, பூண்டு, வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முதலில் செஸ்வான் சாஸ் செய்வதற்கு 6 முதல் 7 வரை மிளகாயை சுடுதண்ணியில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரைமணி நேரம் ஊறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கிய பின்பு நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் ஊற்றி நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். செஷ்வான் சாஸ் இப்பொழுது தயாராகிவிட்டது.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ், சேர்த்து நன்கு வதக்கவும்
கேரட், பீன்ஸ் நன்கு வதங்கிய பின்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
சிறிதளவு மிளகு தூளை சேர்த்துக் கொள்ளவும்.
முன்பே தயார் செய்து வைத்திருந்த செஸ்வான் பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறவும்.
கிளறிய பிறகு வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறி எடுத்தால் காரசாரமான செஸ்வான் வெஜ் பிரைடு ரைஸ் தயார்.