என் மலர்tooltip icon

    சமையல்

    மக்ரோனி குருமா சூடான சாதம், நாண், சப்பாத்தி, பூரியுடன் பரிமாற ஏற்றது. இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்
    தேவையான பொருட்கள்  :

    மக்ரோனி - 100 கிராம்
    தக்காளி - 1/4 கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தனியா - 2 டீஸ்பூன்
    இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
    பூண்டு - 6 பல்
    தேங்காய் துருவல் - 1 கப்
    கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்த மல்லி புதினா - சிறிதளவு

    மக்ரோனி குருமா

    செய்முறை :

    வெறும் வாணலியில் மக்ரோனியை லேசாக வறுத்து 2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து வடி கட்டி கொள்ளவும்

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    அத்துடன் கசகசா தனியா சேர்த்து சிவக்க விடவும்.

    .தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பிறகு தேங்காய் துருவலைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.

    அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அத்துடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கறிமசாலா பொடி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் அரைத்த விழுதைப் போட்டு 4 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்ததும் மக்ரோனியை குருமாவில் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் கொதிக்க விடவும்.

    இறக்கி வைத்து அரை மூடி எலுமிச்சம் பழம் பிழியவும்.

    சூப்பரான மக்ரோனி குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாரத்துக்கு ஒருமுறை இந்த பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜூஸை எடுத்துக்கொண்டால் உடலிலுள்ள கழிவுகள் நீங்கும். இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய் - ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்)
    துருவிய பீட்ரூட் - கால் கப்
    நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    ஏலக்காய் - 3.

    பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜூஸ்

    செய்முறை:

    ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் தேங்காய்த் துருவல், பீட்ரூட் துருவல், ஏலக்காய், நாட்டு சர்க்கரை சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.

    பிறகு வடிகட்டியில் வடிகட்டி பிழிந்துகொள்ளவும்.

    மீண்டும் ஒருமுறை பிழிந்த தேங்காய் - பீட்ரூட் விழுதை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.

    அரைத்த விழுதை வடிகட்டி நன்கு பிழிந்து வடிகட்டிக்கொள்ளவும்.

    இந்தச் சாற்றை ஏற்கெனவே எடுத்து வைத்த சாற்றுடன் நன்கு கலந்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வது வழக்கம். ஆனால் சிக்கனிலும் உருண்டை குழம்பு செய்யலாம். இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 1 ஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - 2
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    புளி - சிறிது நெல்லிக்காய் அளவு
    பூண்டு - சிறிது அளவு
    இஞ்சி - சிறிது அளவு
    சோம்பு - 1 டீஸ்பூன்
    கசகசா - 1 டீஸ்பூன்

    உருண்டைக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்:

    சிக்கன் (எலும்பில்லாதது) - கால் கிலோ
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 3
    சோம்பு - 1 ஸ்பூன்
    மிளகு - 1 ஸ்பூன்
    பொட்டுக் கடலை - 2 ஸ்பூன்
    தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    சிக்கன் கோலா உருண்டை குழம்பு

    செய்முறை:

    முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பின்பு தேங்காய் துருவல், சோம்பு கசகசா, இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைக்கவும்.

    பின்பு உருண்டைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.

    வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.

    குழம்பு கொதித்த பின்பு அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சிறு சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

    இப்போது ருசியான சிக்கன் உருண்டை குழம்பு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்று உபாதைகளால் அவதிப்படுபர்கள் நார்த்தங்காய் ரசம் வைத்து சாப்பிடலாம். இன்று இந்த ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இஞ்சி - 1 துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    நார்த்தங்காய் சாறு - 2 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
    பெருங்காயம், மிளகு, சீரகப் பொடி - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
    உப்பு - தேவையான அளவு,
    பருப்பு தண்ணீர் - 1 கப்,
    கடுகு,வெந்தயம் - தாளிப்பதற்கு.

    நார்த்தங்காய் ரசம்

    செய்முறை

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து, பின் இஞ்சி, ப.மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகு, சீரகப்பொடி, பருப்பு தண்ணீர் சேர்த்து கொதி வரும் போது கொத்தமல்லி, நார்த்தங்காய் சாறு, உப்பு சேர்த்து இறக்கவும்.

    சூப்பரான நார்த்தங்காய் ரசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாக்லேட் லாவா கேக் செய்வது மிகவும் எளிமையானது. இந்த கேக்கை எப்படி எளிய முறையில் வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டார்க் சாக்லேட் - 135 கிராம்
    வெண்ணெய் - 95 கிராம்
    ஐஸ்ஸிங் சுகர் - 100 கிராம்
    முட்டை - 2
    மைதா - 35 கிராம்

    சாக்லேட் லாவா கேக்

    செய்முறை

    மைக்ரோவேவ் அவனை 200 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்.

    மைக்ரோவேவ் பௌலில் சாக்லேட் மற்றும் பட்டர் சேர்த்து உருக்கி கொள்ளவும்.

    மற்றொரு பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

    சாக்லேட் பட்டர் கலவையுடன் சர்க்கரை முட்டை கலவையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    அத்துடன் மைதா சேர்த்து நன்கு மெதுவாக கலந்து கொள்ளவும்.

    மைதா கட்டியாக இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ளவும்.

    இதனை 5-7 நிமிடங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    க்ரீஸ் செய்யப்பட்ட ரேம்கினில் இந்த கலவையை ஊற்றவும்.

    9-10 நிமிடங்கள் வரை இந்த பேக் செய்யவும்.

    வென்னிலா ஐஸ் க்ரீம் அல்லது பழங்களுடன் சேர்த்து இந்த சாக்லேட் லாவா கேக்கை பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்தத் தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸைக் காலை உணவாக உட்கொள்ளும்போது நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க முடியும். இன்று இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய் - ஒரு மூடி
    கறிவேப்பிலை - 1 கைப்பிடி
    நாட்டு சர்க்கரை - சிறிதளவு
    ஊறவைத்த பாதாம் பருப்பு - 10.

    தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸ்

    செய்முறை:

    தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஊறவைத்த பாதாம்பருப்பு, நாட்டுச்சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    பின்னர் அரைத்த ஜூஸை பெரிய வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக்கொள்ளவும்.

    பிறகு தேங்காய் - கறிவேப்பிலை - பாதாம் விழுதை மீண்டும் சிறிதளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

    இந்தச் சாற்றை ஏற்கெனவே எடுத்து வைத்த சாற்றுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

    தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸ் ரெடி.

    குறிப்பு: இதில் கறிவேப்பிலைக்குப் பதிலாக கொத்தமல்லி இலைகள் அல்லது புதினா இலைகள் சேர்த்து அரைக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளித்த தயிர் - அரை கப்
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 1
    கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    அரைக்க :

    வறுக்காத‌ வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
    சின்ன வெங்காயம் (உரித்தது) - 2
    பூண்டு - 2 பல்
    காய்ந்த மிளகாய் - 3
    தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    சூப்பரான மோர் ரசம்

    செய்முறை:

    தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

    அரைக்க வேண்டிய பொருள்களை தேவையான அளவு தண்ணீர் விட்டு, பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    இதைத் தயிரில் கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள்.

    இந்த மோர் ரசம், திக்கான சாம்பார் போல இருக்க வேண்டும். அதற்கேற்ப தயிரில் தண்ணீரை ஊற்றுங்கள்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்து தயிரில் சேருங்கள்.

    நீங்கள் சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பு இதைச் செய்து வைத்தால், தாளித்தவை எல்லாம் இறங்கி ரசம் சாப்பிட அமிர்தமாக இருக்கும்.

    சாதம் உருளைக்கிழங்குடன் சேர்த்துச் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தும்மல், மூக்கடைப்பு, தலைபாரம், தலைவலி, சளித்தொல்லை இருப்பவர்கள் இஞ்சி - துளசி டீ அருந்தலாம். இன்று இந்த டீ செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டீத்தூள் - 4 டீஸ்பூன்
    தண்ணீர் - 4 கப் (அ) 5 கப்
    எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
    தேன் - 6 டீஸ்பூன்
    இஞ்சிச் சாறு - சிறிதளவு
    துளசி - 5 இலைகள்

    இஞ்சி - துளசி டீ

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் அல்லது டீ குக்கரில் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.

    தண்ணீர் நன்கு கொதிக்கும்போது டீத்தூள், இஞ்சிச் சாறு, துளசியைச் சேர்க்கவும்.

    உடனே 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.

    பின் ஒரு பெரிய கப்பில் தேன் தேவைக்கேற்ப சேர்த்து டீயை வடிகட்டி கலக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    பால் இல்லாத இந்த டீ சுவையாக இருக்கும்.

    சூடாகவோ, ஜில்லென்றோ பருகலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பருத்திக்கொட்டை, இனிப்பு சேர்த்து பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பருத்திக் கொட்டை - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    வெல்லம் - 1 கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    எண்ணெய் ‌‌ - தேவைக்கேற்ப
    தண்ணீர் - தேவைக்கேற்ப
    உப்பு - தேவைக்கேற்ப

    பருத்திக்கொட்டை

    செய்முறை:


    பருத்திக் கொட்டையை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ள வேண்டும்.

    ஊறவைத்த பருத்திக் கொட்டையை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு கிண்ணத்தில் பருத்திக்கொட்டை விழுது, உப்பு, கோதுமை மாவு, ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த வெல்லம், தண்ணீர் சேர்த்து இவை அனைத்தையும் பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    மாவை வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுத்தால் சூடான சுவையான பருத்திக்கொட்டை கோதுமை இனிப்பு பூரி தயார்.

    B. இந்துமதி 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அதிமதுரம் டீ தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும். இன்று இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 1 டம்ளர்
    நாட்டு சர்க்கரை - தேவைக்கு

    அதிமதுரம்

    செய்முறை:


    அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.

    அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.

    கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை கொட்ட வேண்டும்.

    அது கரைந்ததும் இறக்கி வடிகட்டி பருகலாம்.

    இது தொண்டை வலி மற்றும் புண்ணை ஆற்ற உதவும். சளியையும் போக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரெட் அல்வா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ரஸ்க் வைத்து எளிய முறையில் அருமையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ரஸ்க் தூள் - 1 கப்
    சர்க்கரை - 1 1/2 கப்
    பால் - 2 கப்
    முந்திரி - தேவையான அளவு
    உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
    நெய் - கால் கப்

    ரஸ்க் அல்வா

    செய்முறை

    முந்திரி,  உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ரஸ்க் தூள், பால் சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் சர்க்கரையை சேர்க்கவும்.

    இடைஇடையே நெய்யை சேர்க்கவும்.

    பால் சுண்டி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போதும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்து இறக்கவும்.

    சூப்பரான ரஸ்க் அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் சுகர் ஃப்ரி ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த லட்டு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெல்லப்பாகு - 150 கிராம்,
    பாதாம் - 50 கிராம்,
    உலர்ந்த தேங்காய் துருவல் - 1/2 கிலோ,
    உடைத்த முந்திரி - 30 கிராம்,
    விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 1/4 கிலோ (நறுக்கியது),
    நெய் - 150 கிராம், ஏலக்காய் - சிறிதளவு,
    அத்திப்பழம் - 30 கிராம்.

     சுகர் ஃப்ரி ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு

    செய்முறை

    ஒரு வாணலியில் வெல்லப்பாகை சூடேற்றி மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நெய் ஊற்றி கிளறி ஒன்றாக கூடி வரும்போது இறக்கவும்.

    ஆறியபின் அழகாக லட்டுப் பிடித்து பரிமாறவும்.

    சத்தான சுகர் ஃப்ரி ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு ரெடி.

    இதை பிரிட்ஜில் வைத்திருந்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×