என் மலர்tooltip icon

    சமையல்

    இத்தாலி உணவு வகைகளில் ஒன்றான பாஸ்தாவை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க, இன்று இந்த ரெசிபியை எப்படி வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்தா - 500 கிராம்
    வெங்காயம் - 1,
    கேரட் - 1,
    குடைமிளகாய் - 1
    பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    கொத்தமல்லி - சிறிதளவு
    தக்காளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
    சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

    இத்தாலியன் பாஸ்தா

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை போட்டு அதனுடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்துக் கொள்ளவும்.

    பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கியபின் வெங்காய், கேரட், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    காய்கள் நன்கு வெந்ததும் தக்காளி சாறு, சில்லி சாஸ், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.

    மசாலா பச்சை வாசனை போனபின்னர் இதில் பாஸ்தாவை போட்டு கிளறிவிடவும்.

    இதன்மேல் கொத்தமல்லிக்தழை தூவி இறக்கினால் சுவையான இத்தாலியன் பாஸ்தா ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் நம் உடலில் நோயால் அழியும் செல்களை பாதுகாத்தல், வயதாகுவதை தடுத்தல், உடல் ரீதியாகவும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
    இந்த எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் நம் உடலில் நோயால் அழியும் செல்களை பாதுகாத்தல், வயதாகுவதை தடுத்தல், உடல் ரீதியாகவும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது உங்க உடலில் உள்ள நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்களுக்கு காரணமான கிருமிகளை எதிர்த்து போராடுவதற்கு உங்க உடலை தயார் செய்கிறது. இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும்.

    தேவையான பொருட்கள்

    இரவில் ஊற வைத்த - 10 பாதாம் பருப்பு (தோல் நீக்கியது)
    இரவில் ஊற வைத்த -  5 பேரீச்சம் பழம் (விதை நீக்கியது)
    பசும் பால் - 1 கப்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    ஏலக்காய் - 1/8 டீஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    தேன் - 1 டீஸ்பூன்

    செய்முறை :

    மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 2-3 தடவை அரைத்து நன்றாக வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரைத்த கலவையை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் தேன் கலந்து கொள்ளுங்கள். இதோ உங்களுக்கான நோயெதிரிப்பு பானம் ரெடி.

    இந்த பானத்தை தினமும் குடித்து வரலாம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஸ்வீட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பத்தே நிமிடத்தில் கோகோ பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
    தேவையான பொருட்கள்

    கோதுமை பிஸ்கட் - 12
    சுண்டக்காய்ச்சிய பால் -     3 தேக்கரண்டி
    கோகோ தூள் -     3 தேக்கரண்டி
    கண்டென்ஸ்ட் மில்க் - தேவையான அளவு
    முந்திரி - விருப்பத்திற்கு ஏற்ப


    கோகோ பர்ஃபி

    செய்முறை

    மிக்ஸி ஜாரில் பிஸ்கெட்டுகளைப் போட்டு பவுடராக பொடித்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தல் பொடித்த பிஸ்கெட் போட்டு அதோடு கோகோ பவுடரை சேர்த்து நன்றாக கலந்துகொள்வும்.

    அடுத்து அதில் கண்டென்ஸ்ட் மில்க்கை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    ஒரு சப்பாத்தி கல்லை எடுத்து அதில் எண்ணெய் தடவிய பின்னர் நன்றாக பிசைந்த மாவை சிறு உருண்டையாக எடுத்து சப்பாத்தி போல தேய்க்க வேண்டும்.

    அடுத்து ஒரு கட்டரை எடுத்து உங்களுக்கு விருப்பமான ஷேப்ல வெட்டிக் கொள்ளவும்.

    கட் பண்ணின பர்ஃபிகளை ஒரு பிளேட்டுக்கு மாற்றிப் அதன் மேலே முந்திரி பருப்புகளை தூவி பிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்திருந்த பின்னர் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

    சூப்பரான கோகோ பர்ஃபி ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமை ரவையில் சத்தான சுவையான ரெசிபிகள் செய்யலாம். இன்று கோதுமை ரவையில் வெஜிடபிள் உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை -  200 கிராம்
    கேரட் - 1
    பீன்ஸ் - 10
    குடைமிளகாய் - 1
    நெய் -  2 டீஸ்பூன்
    புதினா - கால் கட்டு
    பச்சை மிளகாய் - 2
    உப்பு -  சிறிதளவு.

    கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை

    செய்முறை:

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பீன்ஸ், குடை மிளகாய், ப.மிளகாய், புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    உருட்டி வைத்த உருண்டைகளை நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

    கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    சத்தான சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இந்த கேக் பாப்ஸ் மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே உங்கள் குழந்தைகளின் பர்த்டே பார்ட்டி, ஸ்கூல் ஸ்நாக்ஸ் போன்றவற்றிற்கு கூட இதை நீங்கள் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சாக்லேட் ஸ்பான்ஞ் -     1 Numbers
    சாக்லேட் சிரப் -     1/2 கப்
    கேக் கிரீம் -     3 தேக்கரண்டி
    தூளாக்கப்பட்ட முழு கோதுமை பிஸ்கட் -     2 Numbers
    சாக்லேட் சிப்ஸ் -     தேவையான அளவு
    வண்ணமயமான தெளிப்பான் -     தேவையான அளவு

    கேக் பாப்ஸ்

    செய்முறை

    கேக் கிரீமை நன்றாக  அடித்து கொள்ளவும்.

    கோதுமை பிஸ்கட்டை தூளாக்கி கொள்ளவும்.

    சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை தூளாக நொறுக்கி கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் தூளாக்கிய சாக்லேட் ஸ்பான்ஞ் கேக்கை போட்டு அதனுடன் அடித்த க்ரீம், பவுடராக்கிய பிஸ்கட் தூள் சேர்த்து மாவு மாதிரி பிசைந்து கொள்ளுங்கள்.

    மாவு உலர்ந்த தன்மையில் இருந்தால் கூட கொஞ்சம் க்ரீம் சேர்த்து கொள்ளுங்கள்.

    இப்பொழுது பிசைந்த மாவை சிறு சிறு பந்துகளாக உருட்டி ஒரமாக வையுங்கள். இப்பொழுது லாலி பாப் ஸ்டிக்கை எடுத்து அந்த பந்தில் சொருகி உருக்கிய சாக்லேட்டில் முக்கி எடுங்கள்.

    இப்பொழுது குளிரூட்டிய சாக்லேட் ஸ்டிக்கை எடுத்து மறுபடியும் மெல்ட்டடு சாக்லேட்டில் முக்கி அதன் மேல் கலர்புல்லான ஸ்பிரிங்கிள்ஸ்ஸை தூவுங்கள்.

    பிறகு அப்படியே அதை ஒரு தட்டில் வைத்தோ அல்லது அழகாக பர்த்டே டேபிளில் வரிசையாக குத்தி வைத்தோ அழகுபடுத்துங்கள்.

    டேஸ்டியான கேக் பாப்ஸ் லாலிபாப் ரெடி. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இந்த பீட்ரூட் கோதுமை கஞ்சி மிகவும் நல்லது. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - கால் கப்
    கோதுமை கஞ்சி மாவு - 4 டேபிள்ஸ்பூன்
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    தக்காளிச் சாறு - கால் கப்
    இஞ்சி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப.

    கோதுமை கஞ்சி மாவு செய்ய:

    முழு சம்பா கோதுமை - கால் கிலோ
    எள் - 50 கிராம்
    பொட்டுக்கடலை - 150 கிராம்

    (கோதுமை எள்ளை வெறும் வாணலியில் குறைந்த தீயில் வறுத்து எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும். இதை சலித்து வைத்துக்கொண்டு நீண்ட நாள் பயன்படுத்தலாம்).

    பீட்ரூட்

    செய்முறை:

    ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீட்ரூட்டை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    சதுரமாக நறுக்கிய பீட்ரூட்டை உப்பு போட்டு வேகவைக்கவும்.

    கோதுமை கஞ்சி மாவுடன் 3 கப் நீர்விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.

    கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சீரகத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய், இஞ்சி வெந்த பீட்ரூட் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.

    பளபளவென கஞ்சியாக வரும்போது அடுப்பை அணைக்கவும்.

    சத்தான பீட்ரூட் கோதுமை கஞ்சி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு குளிர்பானம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஆரஞ்சு ஸ்குவாஷ் எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆரஞ்சுப் பழச்சாறு - 4 கப் (விதை நீக்கி, வடிகட்டவும்),
    தண்ணீர் - 3 கப்,
    சர்க்கரை - தேவையான அளவு,
    கே.எம்.எஸ் பவுடர் (பொட்டாசியம் மெட்டா பை சல்பேட்) - கால் டீஸ்பூன்,
    ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு துளி,
    சிட்ரிக் ஆசிட் - ஒரு டீஸ்பூன்.

    ஆரஞ்சு ஸ்குவாஷ்

    செய்முறை:

    சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    இதனுடன் சிட்ரிக் ஆசிட், கே.எம்.எஸ் பவுடர் சேர்த்துக் கிளறவும்.

    பிசுக்கு பாகு பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும்.

    இதனுடன் ஆரஞ்சுப் பழச்சாறு, ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றிவைக்கவும்.

    இதுவே ஆரஞ்சு ஸ்குவாஷ். தேவையானபோது ஒரு கப் குளிர்ந்த தண்ணீரில் 3 டேபிள்ஸ்பூன் ஸ்குவாஷ்விட்டுக் கலந்து பருகவும்.

    குறிப்பு: ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் நன்கு குலுக்கிய பிறகு பயன்படுத்தவும். பல மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஃப்ரெஷ்ஷாகப் பருக வேண்டுமானால் ஆரஞ்சு பழச்சாற்றுடன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மிளகுத்தூள், புதினா இலை, ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பருகலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முளைகட்டிய பயறு வகைகளில் அதிகளவு ஊட்டச்சத்து அடங்கியுள்ளது. இன்று முளைகட்டிய பச்சைப்பயறு வைத்து சுவையான டோக்ளா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய பச்சைப்பயறு - ஒரு கப்
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    ஆப்பசோடா - ஒரு சிட்டிகை
    சர்க்கரை நீர் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
    உப்பு, மஞ்சள்தூள் - சிறிதளவு.

    தாளிக்க:

    எண்ணெய் - 3 டீஸ்பூன் க
    டுகு - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
    கீறிய பச்சை மிளகாய் - 2.

    அலங்கரிக்க:

    நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட், தேங்காய்த் துருவல் - தலா ஒரு டீஸ்பூன்.

    பச்சைப்பயறு

    செய்முறை:

    இஞ்சி, ப.மிளகாயை தனித்தனியாக விழுதாக அரைத்து கொள்ளவும்

    முளைகட்டிய பச்சைப்பயறு சிறிது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வடை மாவு போல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    இதனுடன் இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்த பிறகு ஆப்பசோடா, சிறிது உப்பு, சேர்த்து எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஆவியில் 20 நிமிடம் வேகவிடவும் (குக்கரில் வெயிட் போட வேண்டாம்).

    ஆறிய பின் பத்திரத்தைக் கவிழ்த்து எடுத்து உள்ளே இருப்பதை சதுரங்களாக நறுக்கவும். இதுதான் டோக்ளா.

    தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து அதனுடன் சர்க்கரை நீர், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி இதை சதுரமாக நறுக்கிய டோக்ளாக்கள் மீது பரவலாக ஊற்றி நன்கு குலுக்கிவிடவும்.

    நறுக் கிய கொத்தமல்லி, கேரட் துருவல், தேங் காய்த்துருவல் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை வள்ளிக்கிழங்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை தரக் கூடியது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    முக்கிய பொருட்கள்

    சர்க்கரை வள்ளிக் கிழங்கு  - 200 கிராம்
    துருவிய தேங்காய் - 1 கப்
    வெல்லம் - 1/2 கப்
    2 தேக்கரண்டி  - 1 தேக்கரண்டி

    அலங்கரிக்க

    முந்திரி, கிஸ்மிஸ், கருப்பு ஏலக்காய் தூள், பாதாம் பருப்பு

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு

    செய்முறை

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை உரித்து விட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

    மிக்ஸியில் தேங்காய் துருவல், வெல்லம் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். வழுவழுப்பாக அரைக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கிறிஸ்துமஸ் பழம் சேர்த்து சில நிமிடங்கள் பொன்னிறமாக வதக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் .

    அதே கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். தேங்காய் துருவல், வெல்லக் கலவையை இப்பொழுது இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    வறுத்த முந்திரி பருப்பு எல்லாவற்றையும் சேர்த்து அதில் ஏலக்காய் தூளை மேலே தூவி 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும். அப்படியே சுடச்சுட பரிமாறுங்கள்.

    சூப்பரான சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் வரகு, கொள்ளு வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    வரகு அரிசி -1 கப்
    கொள்ளு - கால் கப்
    சீரகம் - 2 டீஸ்பூன்
    மிளகு - 2 டீஸ்பூன்
    நெய் - 3 டீஸ்பூன்
    தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
    தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 3
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
    உப்பு - தேவையான அளவு.

    வரகு, கொள்ளு

    செய்முறை:

    கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.

    குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும்.

    குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    சத்தான வரகு - கொள்ளு பொங்கல் ரெடி.

    குறிப்பு: சாதாரண அரிசியைவிட சிறுதானி யங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொட்டுக்கடலை பர்ஃபி எளிமையாக தயாரிக்கக்கூடிய ஒரு இனிப்பாகும். பொட்டுக்கடலை உருண்டை, பொட்டுக்கடலை பர்பி என்று அழைக்கப்படும் இந்த இனிப்பு புரோட்டீன் நிறைந்தது.
    தேவையான பொருட்கள்

    பொட்டுக்கடலை -  200 கிராம்
    நெய் -     150 கிராம்
    தூள் சர்க்கரை -  150 கிராம்
    பாதாம் -  10
    கருப்பு ஏலக்காய் -  1 தேக்கரண்டி
    குங்குமப்பூ  -   1 தேக்கரண்டி

    பொட்டுக்கடலை

    செய்முறை

    பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து பொட்டுக்கடலை போட்டு, இளம் தீயில் வறுக்கவும். பின்பு அதனை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். கடலை நன்கு ஆறிய பின் மிக்சியில் போட்டு தூளாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் சர்க்கரையை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்ததும் அதில் பொடித்து வைத்துள்ள பொட்டுக்கடலை தூள், ஏலக்காய்தூள், குங்குமப்பூ, நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.

    அடிக்கடி நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி விடவும். மாவு கடாயில் ஒட்டாமல் வரும் போது கிளறிய பர்ஃபி மாவை ஒரு நெய் தடவிய தட்டில் பரப்பி, அதில் நறுக்கிய பாதாம் சேர்க்கவும்.

    சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு ஒரு அரை மணிநேரம் கழித்து , தட்டில் உள்ள மாவை சிறு சிறு சதுர வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் வெட்டி எடுக்கவும்.

    விரும்பினால் இதனை உருண்டையாகவும் உருட்டிக் கொள்ளலாம்.

    சூப்பரான பொட்டுக்கடலை பர்ஃபி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அதிகளவு சத்துக்கள் நிறைந்த தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று 7 வகையான தானியங்களை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராகி, கம்பு, கோதுமை, வரகு - தலா 100 கிராம்
    கொள்ளு - 50 கிராம்
    கருப்பு கொண்டைக்கடலை - ஒரு கைப்பிடி அளவு
    கருப்பு உளுந்து - 100 கிராம்
    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    சத்தான 7 வகை தானிய தோசை

    செய்முறை :

    கருப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

    ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.

    பிறகு அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்துக் களைந்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும்.

    உப்பு சேர்த்துக் கரைத்து மூன்று மணி நேரம் புளிக்கவிடவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான 7 வகை தானிய தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×