என் மலர்
சமையல்
வட மாநிலத்தில் இந்த குஜியா மிகவும் பிரபலம். இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 125 கிராம்
நிரப்புவதற்கு
நெய் - 30 கிராம்
சர்க்கரை - 75 கிராம் தூள்
கொப்பரைத் தேங்காய் - 75 கிராம்
தேங்காய் -75 கிராம்
பிஸ்தா - தேவையான அளவு
பாதாம் - தேவையான அளவு
சேமியா - 30 கிராம்
சிரோஞ்சி (Chironji) - தேவையான அளவு
குங்குமப்பூ - தேவையான அளவு

செய்முறை
பாதாமை துருவிக்கொள்ளவும்.
ஒரு பேனில் நெய் சேர்த்து சேமியாவை சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
அடுத்து அதில் கொப்பரைத் தேங்காய், துருவிய பாதாம், பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
ஒரு பவுலில் மைதா மாவு சேர்த்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நல்லா கலந்து விட்டுக்கோங்க. அப்பறமா இந்த மாவில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதம் வரும் வரை பிசைஞ்சுக்கோங்க. மாவு ரெடியானதும் அதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வெச்சிடுங்க.
வறுத்த சேமியா இருக்கும் கடாயில் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து வறுத்த மாவாவையும் சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்துக்கோங்க.
மாவை உருண்டைகளாக உருட்டிக்கொண்டு மெல்லிய சப்பாத்திக்களா திரட்டிக்கோங்க.
இப்போ அதை குஜியா மேக்கர் மோல்டில் போட்டு சப்பாத்திகளையும் ஃபில்லிங்கையும் வைச்சு மூடுங்க. குஜியாவோட ஓரங்கள் ஈரமா இருக்கான்னு பார்த்துக்கோங்க. அப்பதான் ஃபில்லிங் நல்லா மூடி வெளியே வராம இருக்கும்.
அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்க அவ்வளவு தாங்க.
மைதா மாவு - 125 கிராம்
நிரப்புவதற்கு
நெய் - 30 கிராம்
சர்க்கரை - 75 கிராம் தூள்
கொப்பரைத் தேங்காய் - 75 கிராம்
தேங்காய் -75 கிராம்
பிஸ்தா - தேவையான அளவு
பாதாம் - தேவையான அளவு
சேமியா - 30 கிராம்
சிரோஞ்சி (Chironji) - தேவையான அளவு
குங்குமப்பூ - தேவையான அளவு
பொடியாக்கப்பட்ட ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை
பாதாமை துருவிக்கொள்ளவும்.
ஒரு பேனில் நெய் சேர்த்து சேமியாவை சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
அடுத்து அதில் கொப்பரைத் தேங்காய், துருவிய பாதாம், பிஸ்தா, ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
ஒரு பவுலில் மைதா மாவு சேர்த்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நல்லா கலந்து விட்டுக்கோங்க. அப்பறமா இந்த மாவில் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதம் வரும் வரை பிசைஞ்சுக்கோங்க. மாவு ரெடியானதும் அதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வெச்சிடுங்க.
வறுத்த சேமியா இருக்கும் கடாயில் பொடித்த சர்க்கரையைச் சேர்த்து வறுத்த மாவாவையும் சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்துக்கோங்க.
மாவை உருண்டைகளாக உருட்டிக்கொண்டு மெல்லிய சப்பாத்திக்களா திரட்டிக்கோங்க.
இப்போ அதை குஜியா மேக்கர் மோல்டில் போட்டு சப்பாத்திகளையும் ஃபில்லிங்கையும் வைச்சு மூடுங்க. குஜியாவோட ஓரங்கள் ஈரமா இருக்கான்னு பார்த்துக்கோங்க. அப்பதான் ஃபில்லிங் நல்லா மூடி வெளியே வராம இருக்கும்.
அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்க அவ்வளவு தாங்க.
சுவையான குஜியா சாப்பிடுவதற்கு தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டிரை ஃப்ரூட்ஸ், லெட்டூஸ் இவை இரண்டிலும் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இவை இரண்டையும் வைத்து சுவையான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
லெட்டூஸ் இலைகள் - 4
உலர்திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்,
பாதாம், பிஸ்தா துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
தேன் - சிறிதளவு,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைப் பழம் - ஒன்று,
இளம் ஸ்வீட் கார்ன் முத்துகள் - 2 டேபிள்ஸ்பூன்,

செய்முறை:
லெட்டூஸ் இலைகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் லெட்டூஸ் இலைகளுடன் பாதாம், பிஸ்தா, தேன், மிளகுத்தூள், உலர் திராட்சை, ஸ்வீட் கார்ன் முத்துகள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
கடைசியாக மேலே எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

உப்பு - தேவையான அளவு.

சூப்பரான லெட்டூஸ் டிரை ஃப்ரூட்ஸ் சாலட் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தயிர் சாதம், சாம்பார் சாதம், புல்கா, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பிச்சி போட்ட சிக்கன் வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கியதும் மசாலா தூள் வகைகள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன் வேகவைத்து உதிர்த்த சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
தண்ணீர் சுண்டி சிக்கன் சுருள வெந்தவுடன் மிளகு தூள் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகு பொடித்தது - 1 ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து உதிர்த்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கியதும் மசாலா தூள் வகைகள் சேர்த்து வதக்கி மசாலா வாசனை போனவுடன் வேகவைத்து உதிர்த்த சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
தண்ணீர் சுண்டி சிக்கன் சுருள வெந்தவுடன் மிளகு தூள் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.
சுவைாயன பிச்சி போட்ட சிக்கன் வறுவல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த ஜூஸ். உடல் சூட்டை தணிக்கும். இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்
கேரட்டை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கேரட், இஞ்சியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
கேரட் - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்
கேரட்டை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கேரட், இஞ்சியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்திய இனிப்பு வகைகளில் ஒன்றான முந்திரி அல்வாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ரெசிபிவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முந்திரி - 1 கப்
சீனி - 1 கப்
நெய் - 1/2 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
நீர் - 3 1/2 கப்
குங்குமப்பூ - தேவையான அளவு
பாதாம் - தேவையான அளவு

செய்முறை
பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு மிக்சியில் முந்திரிப் பருப்பைச் சேர்த்து அதை நன்கு அரைத்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் சர்க்கரை சேர்க்கவும். தண்ணீரை 4-5 நிமிடங்கள் கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரிலே துளி குங்குமப்பூ சேர்க்கவும்.
ஒரு நான்ஸ்டிக் கடாயில் அரை கப் நெய் சேர்க்கவும். நெய் உருகியவுடன் கோதுமை மாவு சேர்த்து நன்கு கிளறவும். கட்டிகள் வராமல் இருக்க கைவிடாமல் கிளறவும்.
ஒரு நிமிடம் கழித்து அதில் முந்திரி தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். நெய் பிரிய தொடங்கும் வரை இதை குறைந்த தீயில் சமைக்கவும்.
பின்பு இதில் சர்க்கரை பாகை சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

கடைசியாக அதில் சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வைட்டமின் 'சி’ நிறைந்த ஹெல்தியானது இந்த நெல்லிக்காய் பொரியல். இதை சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பெரிய நெல்லிக்காய் - 10
இட்லி மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன்
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் - தேவையான அளவு
தாளிக்க
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து... வெந்த நெல்லிக்காய் துண்டுகள், உப்பு இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்துக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பொதுவாக பீட்ரூட்டை விரும்பாத குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இந்த சுவையான பீட்ரூட் பாயாசத்தை விரும்பி சாப்பிடுவர். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 200 கிராம்
பால் - 1 கப்
நெய் - கால் கப்
சீனி - 3/4 கப்
பொடியாக்கப்பட்ட ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை
பீட்ரூட்டை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.
பாதாமை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
பின்பு அதில், அரைத்த பீட்ரூட் சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து அதில் இன்னும் சிறிது நெய், ஏலக்காய் தூள் சேர்த்து நடுத்தர தீயில் சமைக்கவும்.
5 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு கப் கிரீமி பால் சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.. தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து கொள்ளலாம்.
பீட்ரூட் மென்மையாக மாறியதும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
பீட்ரூட் - 200 கிராம்
பால் - 1 கப்
நெய் - கால் கப்
சீனி - 3/4 கப்
பொடியாக்கப்பட்ட ஏலக்காய் - தேவையான அளவு
முந்திரி, திராட்டை, பாதாம் - விருப்பத்திற்கு ஏற்ப

செய்முறை
பீட்ரூட்டை தோல் நீக்கி அரைத்து கொள்ளவும்.
பாதாமை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
பின்பு அதில், அரைத்த பீட்ரூட் சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து அதில் இன்னும் சிறிது நெய், ஏலக்காய் தூள் சேர்த்து நடுத்தர தீயில் சமைக்கவும்.
5 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு கப் கிரீமி பால் சேர்த்து 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.. தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து கொள்ளலாம்.
பீட்ரூட் மென்மையாக மாறியதும், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
சர்க்கரை நன்றாக கரைந்ததும் இரண்டு டீஸ்பூன் நெய், வறுத்த முந்திரி, திராட்டை, பாதாம் சேர்த்து கிளறி இறக்கினால் பீட்ரூட் பாயாசம் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறுதானியங்களில் கம்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கம்பு சேமியா வைத்து சுவையான அதே நேரத்தில் சத்தான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு சேமியா - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கிராம்பு - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டை - 1 இன்ச் அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கேரட் - 100 கிராம்
ஃப்ரஷ் பட்டாணி - 50 கிராம்

செய்முறை :
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சேமியாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை மிளகு சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு இதனைத் தனியே எடுத்து வைக்கவும்.
கடாயில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து சுமார் 5 கப் தண்ணீர் அதனுடன் போதுமான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சேமியாவைச் சேர்த்து வேக
வெந்த சேமியா ஒன்றோடு ஒன்றாக ஒட்டக்கூடாது உடையவும் கூடாது. சேமியா வெந்தவுடன் உதிர்த்து வைக்கவும்.
வதக்கிய கலவையுடன் சேமியாவைச் சேர்த்து நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
கம்பு சேமியா - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கிராம்பு - 5
கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டை - 1 இன்ச் அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கேரட் - 100 கிராம்
ஃப்ரஷ் பட்டாணி - 50 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சேமியாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை மிளகு சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு இதனைத் தனியே எடுத்து வைக்கவும்.
கடாயில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து சுமார் 5 கப் தண்ணீர் அதனுடன் போதுமான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சேமியாவைச் சேர்த்து வேக
வெந்த சேமியா ஒன்றோடு ஒன்றாக ஒட்டக்கூடாது உடையவும் கூடாது. சேமியா வெந்தவுடன் உதிர்த்து வைக்கவும்.
வதக்கிய கலவையுடன் சேமியாவைச் சேர்த்து நன்கு பிரட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சத்தான கம்பு சேமியா கேரட் புலாவ் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருப்பதால், நாம் அனைவரும் விருப்பமான உணவுகளை வெளியே சாப்பிட முடியாமல் உள்ளோம். இன்று கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கனை வீட்டிலே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஊறவைக்க:
சிக்கன் விங்ஸ் (சுத்தம் செய்தது) - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - அரை கப்
சிவப்பு மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
எலுமிச்சை - விருப்பத்திற்கு ஏற்ப
கோட் செய்ய:
மசாலா சிப்ஸ்

செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் விங்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஃபிரிஜில் வைக்கவும்.
இதற்கிடையில், மசாலா சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து, வெறும் கடாயில் வறுக்கவும். சிப்ஸை பொடியாக நசுக்கவும்.
இப்போது ஃபிரிஜில் இருக்கும் சிக்கனை எடுத்து, ஒவ்வொரு பீஸிலும் இந்த மசாலா சிப்ஸை கோட் செய்யவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் இந்த சிக்கனை போட்டு மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
பிறகு இந்த சிக்கன் பீஸ் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து சூடாகப் பரிமாறவும்.

எண்ணெய்

சூப்பரான கேஎஃப்சி ஸ்டைஸ் சிக்கன் விங்க்ஸ் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மிளகு ரசத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள், குறிப்பாகக் கருப்பு மிளகு, பூண்டு மற்றும் மஞ்சள் ஆகியவை நமது நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகின்றன.
தேவையான பொருட்கள் :
புளி கரைச்சல் - 2 மேசைக்கரண்டி
தக்காளி- 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கருப்பு மிளகு - 2 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்க
மஞ்சள் - அரை தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை :
கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்..
2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் தக்காளி குழைய வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும், தீயைக் குறைக்கவும்.
கடாயை மூடி வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அடுத்து அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி சேர்த்து, பரிமாறவும்.
தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்க்கலாம்.
இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது.

சுவையான மிளகு ரசத்தை சூப் ஆகவோ, சதத்துடனோ சாப்பிடலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாம்பார் இட்லி சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் ரசம் இட்லி சாப்பிட்டிருக்கீங்களா...? சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 5
ரசம் வைக்க :
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 6
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
தக்காளி - 1/2 கப்
புளி தண்ணீர் - 1/4 கப்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
பெருங்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தே. அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.
தனியா, காய்ந்த மிளகாய், மிளகு , துவரம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் ஆகியவற்றை கடாயில் வறுத்து ஆற வையுங்கள். பின் மிக்ஸியில் நைசாக பொடித்து கொள்ளவும்.
அடுத்து தக்காளியை கைகளால் நன்றாக மசித்து அதனுடன் புளித் தண்ணீர் சேர்த்து பொடியாக்கி வைத்துள்ள ரசப் பொடி, உப்பு சேர்த்து கலக்குங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு வெடித்த பின்னர் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு பெருங்காயப் பொடி சேர்த்து, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளித்து அதை கலக்கி வைத்துள்ள ரசத்தில் ஊற்றுங்கள்.
அடுப்பில் ரசக் கலவையை வைத்து சிறு தீயில் வையுங்கள். கொதிநிலை வந்ததும் இறக்கிவிடுங்கள். ரசம் தயார்.
பரிமாறும்போது இட்லி வைத்து அதன் மேல் ரசம் ஊற்றி மேலே சிறிது கொத்தமல்லி, காராபூந்தி தூவி கொடுங்கள்.

அருமையாக இருக்கும் இந்த ரசம் இட்லி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எப்போதும் ஒரே மாதிரி தோசை செய்து சாப்பிட்டவர்கள் இன்று மசாலா பொருட்கள் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தே. அளவு
பச்சை மிளகாய் - 1

செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவை போட்டு நன்றாக கலந்து அதில் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலக்கிக்கொள்ளவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து வதங்கியதும் மாவில் சேர்த்து கலக்கவும்.
அடுத்து மாவில் கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

சூப்பரான கோதுமை மசாலா தோசை தயார்.