என் மலர்
சமையல்
கடுகு ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், நார்ச்சத்தும் உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - நான்கு ஆழாக்கு
மிளகாய் வற்றல் - 20
கடலைப்பருப்பு - 40 கிராம்
கடுகு - 20 கிராம்
மஞ்சள் பொடி - சிறிதளவு
பெருங்காயத்துள் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 20 கிராம்
புளி - பெரிய எலுமிச்சம்பழம் அளவு.

செய்முறை
அரிசியை சாதமாக சமைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாது பக்குவத்தில் இறக்கி தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
கடுகை வெறும் கடாயில் போட்டு வெடிக்கும் அளவுக்கு வறுத்துகொள்ளவும்.
மிளகாய் வற்றல், வறுத்த கடுகு, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி, புளி, உப்பு இவற்றை வைத்து வெண்ணெய் போல அரைத்து சாதத்தில் நன்றாக கலக்கவும்
பிறகு நல்லெண்ணையை வாணலியில் விட்டு சூடானதும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து பின்னர் அதில் சாதத்தை கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான கடுகு சாதம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பலாக்கொட்டை குடல் புண்கள் மற்றும் வயிறு தொடர்பான பிர்ச்சனைகள் வராமல் தடுக்கச் செய்கிறது. உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்வதுடன், குளிர்ச்சியையும் உண்டாக்குகிறது.
தேவையான பொருட்கள்
பலாக் கொட்டை - 10 (தோல் நீக்கி, மெலிதாக நறுக்கவும்),
பால் (காய்ச்சி ஆற வைத்தது) - அரை கப்,
எண்ணெய் - அரை டீஸ் பூன்,
நாட்டு சர்க்கரை, தேங்காய்த் துருவல் - தலா 2 டீஸ்பூன்,

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு பலாக்கொட்டை, உப்பு சேர்த்து வதக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் பலாக்கொட்டை, தேங்காய்த் துருவல், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் அரைத்த விழுது, நாட்டு சர்க்கரை, பால் சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும்.

உப்பு - சிறிதளவு.

சூடான பலாக்கொட்டை இனிப்பு கஞ்சி தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். இன்று சேமியாவில் பகாளாபாத் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்
சேமியா - 100 கிராம்
தயிர் - 50 கிராம்
பால் - 50 மில்லி
இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
திராட்சை, மாதுளை முத்துக்கள் - ஒரு கைப்பிடி
ஆப்பிள் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, ஒரு நிமிடம் வைத்திருந்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்.
இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை தாளிப்புடன் சேர்த்துக் கலக்கவும்.
இதை சேமியாவில் சேர்த்துக் கலந்து பால், பழங்களை சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும்.

சுவையான சேமியா பகாளாபாத் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேநீர் பிரியர்களை வசப்படுத்துவதற்காக பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் வெங்காய தேநீரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.
உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் வெங்காயத்தில் உள்ள குர்செடின் கெட்ட கொழுப்பை குறைக்க துணைபுரியும்.

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு பல் - 3
தேன் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
பிரியாணி இலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் வெங்காயம், பூண்டு, பிரியாணி இலை போன்றவற்றை போடவும். அவை நன்றாக வெந்ததும் தண்ணீர் நிறம் மாறத்தொடங்கும்.
அதன்பிறகு பாத்திரத்தை இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.
அதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.
இந்த வெங்காய தேநீரை தினமும் காலையில் பருகலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும்.

வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் ரத்த உறைவை தடுக்கவும் உதவும். வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும் குறிப்பிடுகின்றன. வெங்காய தேநீர் தயாரிப்பது எளி தானது. வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு பல் - 3
தேன் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
பிரியாணி இலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் வெங்காயம், பூண்டு, பிரியாணி இலை போன்றவற்றை போடவும். அவை நன்றாக வெந்ததும் தண்ணீர் நிறம் மாறத்தொடங்கும்.
அதன்பிறகு பாத்திரத்தை இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.
அதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.
இந்த வெங்காய தேநீரை தினமும் காலையில் பருகலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவும்.
சப்பாத்தி, புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மிக்ஸ்டு வெஜ் முட்டை புர்ஜி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நறுக்கிய காய்கறி கலவை (கேரட் பீன்ஸ் கோஸ் பச்சைப் பட்டாணி குடமிளகாய் காலிஃப்ளவர்) - ஒரு கப்
பூண்டு - 10 பல்
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
கரம் மசாலாத்தூள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
காய்கறிகள் வெந்தவுடன் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

உப்பு - தேவையான அளவு.

முட்டை வெந்து உதிரியாக வந்ததும் மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த சூப்பை குடிக்கலாம். மேலும் இந்த சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்
தூளாக்கிய பனை வெல்லம் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 டம்ளர்

செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் அதிமதுரம் பொடியை கொட்டவும்.
அது நீரில் கலந்து கொதிக்க தொடங்கியதும் சுக்கு பொடியை தூவவும்.
பின்னர் பனை வெல்லம், உப்பு சேர்க்கவும்.
நன்கு கொதித்து சூப் பதத்துக்கு வந்ததும் எலுமிச்சை சாறை சேர்த்து இறக்கவும்.
அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்
தூளாக்கிய பனை வெல்லம் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 டம்ளர்
உப்பு - சிறிதளவு

செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் அதிமதுரம் பொடியை கொட்டவும்.
அது நீரில் கலந்து கொதிக்க தொடங்கியதும் சுக்கு பொடியை தூவவும்.
பின்னர் பனை வெல்லம், உப்பு சேர்க்கவும்.
நன்கு கொதித்து சூப் பதத்துக்கு வந்ததும் எலுமிச்சை சாறை சேர்த்து இறக்கவும்.
அதிமதுரம் சுக்கு சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்கா மலாய் குல்ஃபியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த குல்ஃபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் - 2 கப்
கிரீம் - 1 கப்
கண்டென்ஸ்டு மில்க் - 1 கப்
ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி
ட்ரை ஃப்ரூட்ஸ் - 1/4 கப்

செய்முறை
பாத்திரத்தில் பால் ஊற்றி, அதனை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
அத்துடன் கிரீம் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
அடுத்து அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.
குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்று கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
கால் பங்காக சுண்டும் வரை இதனை அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
கால் பங்காக சுண்டிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைக்கவும்.
சூடு ஆறியபின் அதனை சிறு மண் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பால் - 2 கப்
கிரீம் - 1 கப்
கண்டென்ஸ்டு மில்க் - 1 கப்
ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி
ட்ரை ஃப்ரூட்ஸ் - 1/4 கப்
குங்குமப்பூ - 10-15

செய்முறை
பாத்திரத்தில் பால் ஊற்றி, அதனை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
அத்துடன் கிரீம் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
அடுத்து அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.
குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்று கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
கால் பங்காக சுண்டும் வரை இதனை அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
கால் பங்காக சுண்டிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைக்கவும்.
சூடு ஆறியபின் அதனை சிறு மண் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பின் அதன் மேல் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சளி இருமல் தொல்லை இருப்பவர்களுக்கு இந்த மிளகு சுக்கு தோசை ஒரு சிறந்த வரப்பிரசாதம். இன்று இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - ஒரு கப்
சுக்குத் தூள் - இரண்டு ஸ்பூன்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
முழு உளுத்தம் பருப்பு - ஒரு கப்
கெட்டித் தயிர் - ஒரு கப்
மிளகு - இரண்டு ஸ்பூன்
சீரகத் தூள் - இரண்டு ஸ்பூன்

செய்முறை
உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை தூசு கல் நீக்கி களைந்து சுமார் நான்கு மணி நேரம் நன்கு ஊறவைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு, தயிர் ஆகிய இவற்றை சேர்த்துப் புளிக்க விடவும்.
தோசையாக ஊற்றும் சமயத்தில் சுக்குத் தூள், மிளகு சீரகத் தூள் ஆகிய இவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

இதோ இப்போது சுவையான மிளகு சுக்கு தோசை தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசியில் செய்யும் பாயாசம் அருமையாக இருக்கும். இதனுடன் தேங்காய் சேர்த்து செய்யும் போது கூடுதல் சுவையுடன் இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்:
பச்சரிசி - 150 கிராம்
வெல்லம் - 200 கிராம்
கசகசா - 50 கிராம்
தேங்காய் - 1 பெரியது
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:
அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் மற்றும் திராட்சையை தூவி பரிமாறவும்.
பச்சரிசி - 150 கிராம்
வெல்லம் - 200 கிராம்
கசகசா - 50 கிராம்
தேங்காய் - 1 பெரியது
ஏலக்காய் தூள் - சிறிதளவு
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு

செய்முறை:
அரிசி மற்றும் கசகசாவை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனுடன் தேங்காய், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் பாயாசப் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். ரொம்பவும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதனை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசி நன்றாக வெந்ததும் இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் மற்றும் திராட்சையை தூவி பரிமாறவும்.
அருமையான அரிசி தேங்காய் பாயாசம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. இன்று ஜவ்வரிசி, காய்கறி சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நைலான் ஜவ்வரிசி - அரை கப்
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 5
கடைந்த மோர் - அரை கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று

செய்முறை:
பீன்ஸ், கேரட், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
குக்கரில் தேவையான நீர் விட்டு உடைத்த ஜவ்வரிசி, பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
நைலான் ஜவ்வரிசி - அரை கப்
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 5
கடைந்த மோர் - அரை கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
பீன்ஸ், கேரட், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
குக்கரில் தேவையான நீர் விட்டு உடைத்த ஜவ்வரிசி, பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
பிறகு இறக்கிவைத்து… கடைந்த மோர் உப்பு சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பக்கூடியது இந்த தயிர் வடை. மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 தேக்கரண்டி தூள்
தயிர் - 250 கிராம்
மிளகாய் பொடி - தேவையான அளவு
வறுத்த சீரகம் பொடி - தேவையான அளவு
கருப்பு உப்பு - தேவையான அளவு
சீரகம் - தேவையான அளவு
பெருங்காயம் - தேவையான அளவு
கிஸ்மிஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கிரீன் சட்னி - 1/2 கப்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
உளுந்தம் பருப்பை கழுவி 2 மணிநேரம் ஊறவைத்த பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து வைத்து கொள்ளவும்
தயிரில் கட்டிகள் இல்லாதபடி நன்கு அடித்து வைத்து கொள்ளவும். பிறகு அதில் சிறிது உப்பு, மற்றும் சர்க்கரை தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள உளுத்தம் மாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அப்பொழுது தான் வடை பஞ்சு போல் நன்றாக வரும். பிறகு அதில் சீரகம் சேர்த்து கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒருபுறம் வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுட்டு எடுத்த வடையை பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரில் நனைக்கவும். இப்போது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து வடையை 5-10 நிமிடங்கள் ஊற விடவும்.
பத்து நிமிடம் கழித்து வடையை தண்ணீரில் இருந்து எடுத்து பிழிந்து வேறு ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
பிறகு அதில் தயிர், கருப்பு உப்பு, சீரகம் பொடி, சிவப்பு மிளகாய் தூள், கிரீன் சட்னி, புளி சட்னி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து பரிமாறவும்.

புளி சட்னி - 1/2 தேக்கரண்டி

மேலே காராபூந்தி அல்லது ஓமப்பொடி சேர்த்தும் பரிமாறலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த ரெசிபியை சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்களும் சாப்பிடலாம். ஓட்ஸ் சேர்த்துச் சாப்பிடுவதால், மதியம் வரை பசிக்காது. ஓமம் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும்.
தேவையான பொருட்கள் :.
கோதுமை ரவை - கால் கப்,
கோதுமை மாவு - ஒரு கப்,
ஓட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் (வேண்டுமெனில்),
ஓமம் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு- தேவையான அளவு,
வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,

செய்முறை :.
அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, கோதுமை ரவை, ஓட்ஸ், ஓமம், உப்பு, மஞ்சள் தூள், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, மிருதுவாகப் பிசைந்து, 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, மெலிதான முக்கோணமாகச் செய்யவும்.
தவாவில் எண்ணெய் விட்டு, சூடானதும் தேப்லாவைப் போட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு, வெந்ததும் தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.
குறிப்பு :.
கோதுமையில் உள்ள பலன்கள் முழுமையாக கிடைக்கும். நார்ச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்களும் சாப்பிடலாம்.

மஞ்சள் தூள் - அரை சிட்டிகை.

ஓட்ஸ் சேர்த்துச் சாப்பிடுவதால், மதியம் வரை பசிக்காது. ஓமம் செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும்.